Bible Language
Easy to Read version in Tamil Language

1
:
-

1. பவுலும், சில்வானும், தீமோத்தேயும் பிதாவாகிய தேவனுக்குள்ளும் இயேசு கிறிஸ்துவாகிய கர்த்தருக்குள்ளும் இருக்கும் தெசலோனிக்கேயாவில் உள்ள சபையோருக்கு எழுதுவது. தேவனுடைய கிருபையும் சமாதானமும் உங்களோடு இருப்பதாக. PS
1. Paul G3972 , and G2532 Silvanus G4610 , and G2532 Timothy G5095 , unto the G3588 church G1577 of the Thessalonians G2331 which is in G1722 God G2316 the Father G3962 and G2532 in the Lord G2962 Jesus G2424 Christ G5547 : Grace G5485 be unto you G5213 , and G2532 peace G1515 , from G575 God G2316 our G2257 Father G3962 , and G2532 the Lord G2962 Jesus G2424 Christ G5547 .
2. {வாழ்வும் விசுவாசமும்} PS நாங்கள் பிரார்த்தனை செய்யும்பொழுதெல்லாம் உங்களை நினைவுகூருகிறோம். உங்கள் அனைவருக்காவும் தொடர்ந்து தேவனிடம் நன்றி கூறுகிறோம்.
2. We give thanks G2168 to God G2316 always G3842 for G4012 you G5216 all G3956 , making G4160 mention G3417 of you G5216 in G1909 our G2257 prayers G4335 ;
3. பிதாவாகிய தேவனிடம் பிரார்த்தனை செய்யும்பொழுதெல்லாம் விசுவாசத்தினாலும், அன்பினாலும் நீங்கள் செய்தவற்றுக்காகவும் அவருக்கு நன்றி செலுத்துகிறோம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையில் நீங்கள் உறுதியுடன் இருப்பதற்காக நாங்கள் அவருக்கு நன்றி செலுத்துகிறோம். PEPS
3. Remembering G3421 without ceasing G89 your G5216 work G2041 of faith G4102 , and G2532 labor G2873 of love G26 , and G2532 patience G5281 of hope G1680 in our G2257 Lord G2962 Jesus G2424 Christ G5547 , in the sight G1715 of God G2316 and G2532 our G2257 Father G3962 ;
4. சகோதர சகோதரிகளே, தேவன் உங்களிடம் அன்பாய் இருக்கிறார். அவர் உங்களைத் தமக்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று நாங்கள் அறிவோம்.
4. Knowing G1492 , brethren G80 beloved G25 , your G5216 election G1589 of G5259 God G2316 .
5. உங்களிடம் நற்செய்தியைக் கொண்டு வந்தோம். ஆனால் நாங்கள் வார்த்தையை மட்டும் பயன்படுத்தவில்லை, அதிகாரத்தையும் பயன்படுத்தினோம். பரிசுத்த ஆவியானவரோடும் முழு உறுதியோடும் நாங்கள் அதைக் கொண்டு வந்தோம். உங்களோடு நாங்கள் இருந்தபோது எப்படி வாழ்ந்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்களுக்கு உதவும் வகையிலேயே வாழ்ந்தோம்.
5. For G3754 our G2257 gospel G2098 came G1096 not G3756 unto G1519 you G5209 in G1722 word G3056 only G3440 , but G235 also G2532 in G1722 power G1411 , and G2532 in G1722 the Holy G40 Ghost G4151 , and G2532 in G1722 much G4183 assurance G4136 ; as G2531 ye know G1492 what manner of men G3634 we were G1096 among G1722 you G5213 for your sake G1223 G5209 .
6. நீங்கள் எங்களைப் போலவும், கர்த்தரைப் போலவும் ஆனீர்கள். நீங்கள் மிகவும் துன்புற்றீர்கள், எனினும் மகிழ்ச்சியோடு போதனைகளை ஏற்றுக்கொண்டீர்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு அந்த மகிழ்ச்சியைத் தந்தார். PEPS
6. And G2532 ye G5210 became G1096 followers G3402 of us G2257 , and G2532 of the G3588 Lord G2962 , having received G1209 the G3588 word G3056 in G1722 much G4183 affliction G2347 , with G3326 joy G5479 of the Holy G40 Ghost G4151 :
7. மக்கதோனியா, அகாயா ஆகிய நகரங்களில் உள்ள விசுவாசிகளுக்கு நீங்கள் எடுத்துக்காட்டு ஆனீர்கள்.
7. So that G5620 ye G5209 were G1096 examples G5179 to all G3956 that believe G4100 in G1722 Macedonia G3109 and G2532 Achaia G882 .
8. உங்கள் மூலம் மக்கதோனியாவிலும், அகாயாவிலும் தேவனுடைய போதனை பரவியது. தேவனுடைய பேரில் உள்ள உங்கள் விசுவாசம் எல்லா இடங்களுக்கும் தெரிய வந்தது. எனவே உங்கள் விசுவாசத்தைப் பற்றி நாங்கள் எதுவும் சொல்ல வேண்டியதில்லை.
8. For G1063 from G575 you G5216 sounded out G1837 the G3588 word G3056 of the G3588 Lord G2962 not G3756 only G3440 in G1722 Macedonia G3109 and G2532 Achaia G882 , but G235 also G2532 in G1722 every G3956 place G5117 your G5216 faith G4102 to G4314 God G2316 -ward is spread abroad G1831 ; so that G5620 we G2248 need G2192 G5532 not G3361 to speak G2980 any thing G5100 .
9. நீங்கள் எங்களை ஏற்றுக்கொண்ட நல்வழியைப் பற்றி எல்லா இடத்திலும் இருக்கிற மக்கள் கூறுகிறார்கள். நீங்கள் எப்படி உருவ வழிப்பாட்டை நிறுத்தினீர்கள் என்பதையும், உண்மையான, ஜீவனுள்ள தேவனுக்கு சேவை செய்யும் மாற்றத்தைப் பெற்றீர்கள் என்பதையும் கூறுகிறார்கள்.
9. For G1063 they G846 themselves show G518 of G4012 us G2257 what manner G3697 of entering in G1529 we had G2192 unto G4314 you G5209 , and G2532 how G4459 ye turned G1994 to G4314 God G2316 from G575 idols G1497 to serve G1398 the living G2198 and G2532 true G228 God G2316 ;
10. உருவ வழிபாட்டை நிறுத்திவிட்டு பரலோகத்திலிருந்து வரப்போகும் தேவனுடைய குமாரனுக்காக நீங்கள் காத்திருக்கிறீர்கள். தேவன் தன் குமாரனை மரணத்திலிருந்து உயிர்த்தெழச் செய்தார். இயேசுவாகிய அவரே, நியாயத்தீர்ப்பு அளிக்கப்போகும் தேவனுடைய கோபத்திலிருந்து நம்மை இரட்சிக்கிறவர். PE
10. And G2532 to wait for G362 his G846 Son G5207 from G1537 heaven G3772 , whom G3739 he raised G1453 from G1537 the dead G3498 , even Jesus G2424 , which delivered G4506 us G2248 from G575 the G3588 wrath G3709 to come G2064 .