Bible Language

Ruth 3:16 (TOV) Tamil Old BSI Version

1 பின்பு அவள் மாமியாகிய நகோமி அவளை நோக்கி: என் மகளே, நீ சுகமாய் வாழ்ந்திருக்கும்படி நான் உனக்குச் சவுக்கியத்தைத் தேடாதிருப்பேனோ?
2 நீ போவாசின் வேலைக்காரிகளோடே கூடியிருந்தாயே, அவன் நம்முடைய உறவின் முறையான் அல்லவா? இதோ, அவன் இன்று இராத்திரி களத்திலே வாற்கோதுமை தூற்றுவான்.
3 நீ குளித்து, எண்ணெய் பூசி, உன் வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, அந்தக் களத்திற்குப்போ; அந்த மனுஷன் புசித்துக் குடித்துத் தீருமட்டும் அவன் கண்ணுக்கு எதிர்ப்படாமலிரு.
4 அவன் படுத்துக்கொண்டபோது, அவன் படுத்திருக்கும் இடத்தை நீ பார்த்திருந்து போய், அவன் கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை ஒதுக்கி நீ படுத்துக்கொள்; அப்பொழுது நீ செய்யவேண்டியது இன்னதென்று அவன் உனக்குச் சொல்லுவான் என்றாள்.
5 இதற்கு அவள்: நீர் எனக்குச் சொன்னபடியெல்லாம் செய்வேன் என்றாள்.
6 அவள் களத்திற்குப்போய், தன் மாமி தனக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்தாள்.
7 போவாஸ் புசித்துக் குடித்து, மகிழ்ச்சியாயிருந்து, ஒரு அம்பாரத்து அடியிலே வந்து படுத்துக்கொண்டான். அப்பொழுது அவள்: மெள்ளப்போய், அவன் கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை ஒதுக்கிப் படுத்துக்கொண்டாள்.
8 பாதி ராத்திரியிலே, அந்த மனுஷன் அருண்டு. திரும்பி, ஒரு ஸ்திரீ தன் பாதத்தண்டையிலே படுத்திருக்கிறதைக் கண்டு,
9 நீ யார் என்று கேட்டான்; அவள், நான் உம்முடைய அடியாளாகிய ரூத்; நீர் உம்முடைய அடியாள்மேல் உம்முடைய போர்வையை விரியும்; நீர் சுதந்தரவாளி என்றாள்.
10 அதற்கு அவன்: மகளே, நீ கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவாயாக; நீ தரித்திரரும் ஐசுவரியவான்களுமான வாலிபர்களின் பிறகே போகாததினால், உன் முந்தின நற்குணத்தைப்பார்க்கிலும் உன் பிந்தின நற்குணம் உத்தமமாயிருக்கிறது.
11 இப்போதும் மகளே, நீ பயப்படாதே; உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன்; நீ குணசாலி என்பதை என் ஜனமாகிய ஊராரெல்லாரும் அறிவார்கள்.
12 நான் சுதந்தரவாளி என்பது மெய்தான்; ஆனாலும் என்னிலும் கிட்டின சுதந்தரவாளி ஒருவன் இருக்கிறான்.
13 இராத்திரிக்குத் தங்கியிரு; நாளைக்கு அவன் உன்னைச் சுதந்தரமுறையாய் விவாகம்பண்ணச் சம்மதித்தால் நல்லது, அவன் விவாகம்பண்ணட்டும்; அவன் உன்னை விவாகம்பண்ண மனதில்லாதிருந்தானேயாகில் நான் உன்னைச் சுதந்தரமுறையாய் விவாகம்பண்ணுவேன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிடுகிறேன்; விடியற்காலமட்டும் படுத்துக்கொண்டிரு என்றான்.
14 அவள் விடியற்காலமட்டும் அவன் பாதத்தண்டையில் படுத்திருந்து, களத்திலே ஒரு ஸ்திரீ வந்ததாக ஒருவருக்கும் தெரிவிக்கவேண்டாம் என்று அவன் சொல்லியிருந்தபடியால், ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியாததற்கு முன்னே எழுந்திருந்தாள்.
15 அவன் அவளை நோக்கி: நீ போர்த்துக்கொண்டிருக்கிற போர்வையை விரித்துப்பிடி என்றான்; அவள் அதைப்பிடித்தபோது, அவன் அதிலே ஆறுபடி வாற்கோதுமையை அளந்துபோட்டு, அவள்மேல் தூக்கிவிட்டு, பட்டணத்திற்குப் புறப்பட்டுவந்தான்.
16 அவள் தன் மாமியினிடத்தில் வந்தபோது, அவள்: என் மகளே, உன் செய்தி என்ன என்று கேட்டாள்; அப்பொழுது அவள்: அந்த மனுஷன் தனக்குச் செய்ததையெல்லாம் அவளுக்கு விவரித்தாள்.
17 மேலும் அவர், நீ உன் மாமியாரண்டைக்கு வெறுமையாய்ப் போகவேண்டாம் என்று சொல்லி, இந்த ஆறுபடி வாற்கோதுமையை எனக்குக் கொடுத்தார் என்றாள்.
18 அப்பொழுது அவள்: என் மகளே, இந்தக் காரியம் என்னமாய் முடியும் என்று நீ அறியுமட்டும் பொறுத்திரு; அந்த மனுஷன் இன்றைக்கு இந்தக் காரியத்தை முடிக்குமுன் இளைப்பாற மாட்டான் என்றாள்.
1 Then Naomi H5281 her mother H2545 - in - law said H559 W-VQY3FS unto her , My daughter H1323 , shall I not H3808 I-NADV seek H1245 rest H4494 NMS for thee , that H834 RPRO it may be well H3190 VQY3MS with thee ?
2 And now H6258 W-ADV is not H3808 I-NADV Boaz H1162 of our kindred H4130 , with H854 PREP whose H834 RPRO maidens H5291 thou wast H1961 ? Behold H2009 IJEC , he H1931 PPRO-3MS winnoweth H2219 barley H8184 tonight H3915 in the threshingfloor H1637 .
3 Wash H7364 thyself therefore , and anoint H5480 thee , and put H7760 thy raiment H8071 upon H5921 thee , and get thee down H3381 to the floor H1637 : but make not thyself known H3045 unto the man H376 LD-NMS , until H5704 PREP he shall have done H3615 eating H398 L-VQFC and drinking H8354 .
4 And it shall be H1961 W-VQI3MS , when he lieth down H7901 , that thou shalt mark H3045 the place H4725 D-NMS where H834 RPRO he shall lie H7901 VQY3MS , and thou shalt go in H935 , and uncover H1540 his feet H4772 , and lay thee down H7901 ; and he H1931 W-PPRO-3MS will tell H5046 VHY3MS thee what H834 RPRO thou shalt do H6213 .
5 And she said H559 W-VQY3FS unto H413 PREP-3FS her , All H3605 NMS that H834 RPRO thou sayest H559 unto H413 PREP-3FS me I will do H6213 .
6 And she went down H3381 unto the floor H1637 , and did H6213 according to all H3605 K-NMS that H834 RPRO her mother H2545 - in - law bade H6680 her .
7 And when Boaz H1162 had eaten H398 and drunk H8354 W-VQY3MS , and his heart H3820 CMS-3MS was merry H3190 , he went H935 W-VQY3MS to lie down H7901 at the end H7097 of the heap of corn H6194 : and she came H935 W-VQY3FS softly H3909 , and uncovered H1540 his feet H4772 , and laid her down H7901 .
8 And it came to pass H1961 W-VQY3MS at midnight H2677 , that the man H376 D-NMS was afraid H2729 , and turned himself H3943 : and , behold H2009 IJEC , a woman H802 NFS lay H7901 at his feet H4772 .
9 And he said H559 W-VQY3MS , Who H4310 IPRO art thou H859 ? And she answered H559 W-VQY3MS , I H595 PPRO-1MS am Ruth H7327 thine handmaid H519 : spread H6566 W-VQQ2MS therefore thy skirt H3671 over H5921 PREP thine handmaid H519 ; for H3588 CONJ thou H859 PPRO-2MS art a near kinsman H1350 .
10 And he said H559 W-VQY3MS , Blessed H1288 be thou H859 of the LORD H3068 L-EDS , my daughter H1323 : for thou hast showed more H3190 kindness H2617 in the latter end H314 than H4480 PREP at the beginning H7223 , inasmuch as thou followedst H1980 not H1115 L-NPAR young men H970 , whether H518 PART poor H1800 or H518 PART rich H6223 .
11 And now H6258 W-ADV , my daughter H1323 , fear H3372 not H408 NPAR ; I will do H6213 VQY1MS to thee all H3605 NMS that H834 RPRO thou requirest H559 : for H3588 CONJ all H3605 NMS the city H8179 NMS of my people H5971 doth know H3045 VQPMS that H3588 CONJ thou art a virtuous H2428 NMS woman H802 CFS .
12 And now H6258 W-ADV it is true H551 CONJ that I H595 PPRO-1MS am thy near kinsman H1350 : howbeit H1571 W-CONJ there is H3426 PART a kinsman H1350 nearer H7138 AMS than H4480 PREP-1MS I .
13 Tarry H3885 this night H3915 D-AMS , and it shall be H1961 W-VQQ3MS in the morning H1242 , that if H518 PART he will perform unto thee the part of a kinsman H1350 , well H2896 AMS ; let him do the kinsman\'s part H1350 : but if H518 PART he will H2654 VQY3MS not H3808 NADV do the part of a kinsman H1350 to thee , then will I H595 PPRO-1MS do the part of a kinsman H1350 to thee , as the LORD H3068 EDS liveth H2416 AMS : lie down H7901 until H5704 PREP the morning H1242 .
14 And she lay H7901 at his feet H4772 until H5704 PREP the morning H1242 : and she rose up H6965 before H2958 one H376 NMS could know H5234 VHY3MS another H7453 NMS-3MS . And he said H559 W-VQY3MS , Let it not H408 NPAR be known H3045 that H3588 CONJ a woman H802 D-NFS came H935 into the floor H1637 .
15 Also he said H559 W-VQY3MS , Bring H3051 the veil H4304 that H834 RPRO thou hast upon H5921 thee , and hold H270 it . And when she held H270 it , he measured H4058 six H8337 RFS measures of barley H8184 , and laid H7896 it on H5921 PREP-3FS her : and she went into H935 W-VQY3MS the city H5892 D-GFS .
16 And when she came H935 W-VQY3FS to H413 PREP her mother H2545 - in - law , she said H559 W-VQY3FS , Who H4310 IPRO art thou H859 , my daughter H1323 ? And she told H5046 her all H3605 NMS that H834 RPRO the man H376 had done H6213 to her .
17 And she said H559 W-VQY3FS , These H428 D-DPRO-3MP six H8337 RFS measures of barley H8184 gave H5414 VQQ3MS he me ; for H3588 CONJ he said H559 VQQ3MS to H413 PREP me , Go H935 not H408 NPAR empty H7387 ADV unto H413 PREP thy mother H2545 - in - law .
18 Then said H559 W-VQY3FS she , Sit still H3427 , my daughter H1323 , until H5704 PREP thou know H3045 how H349 the matter H1697 VQPMS will fall H5307 VQY3MS : for H3588 CONJ the man H376 D-NMS will not H3808 NADV be in rest H8252 , until H518 PART he have finished H3615 the thing H1697 D-NMS this day H3117 D-NMS .