|
|
1. இஸ்ரவேல் புத்திரர் கடந்து தீருமளவும், கர்த்தர் யோர்தானின் தண்ணீரை அவர்களுக்கு முன்பாக வற்றிப்போகப்பண்ணினதை, யோர்தானுக்கு மேல்கரையில் குடியிருந்த எமோரியரின் சகல ராஜாக்களும், சமுத்திரத்தருகே குடியிருந்த கானானியரின் சகல ராஜாக்களும் கேட்டதுமுதற்கொண்டு, அவர்கள் இருதயம் கரைந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக சோர்ந்துபோனார்கள்.
|
1. And it came to pass H1961 , when all H3605 the kings H4428 of the Amorites H567 , which H834 were on the side H5676 of Jordan H3383 westward H3220 , and all H3605 the kings H4428 of the Canaanites H3669 , which H834 were by H5921 the sea H3220 , heard H8085 H853 that H834 the LORD H3068 had dried up H3001 H853 the waters H4325 of Jordan H3383 from before H4480 H6440 the children H1121 of Israel H3478 , until H5704 we were passed over H5674 , that their heart H3824 melted H4549 , neither H3808 was H1961 there spirit H7307 in them any more H5750 , because H4480 H6440 of the children H1121 of Israel H3478 .
|
2. அக்காலத்திலே கர்த்தர் யோசுவாவை நோக்கி: நீ கருக்கான கத்திகளை உண்டாக்கி, திரும்ப இரண்டாம்விசை இஸ்ரவேல் புத்திரரை விருத்தசேதனம்பண்ணு என்றார்.
|
2. At that H1931 time H6256 the LORD H3068 said H559 unto H413 Joshua H3091 , Make H6213 thee sharp H6864 knives H2719 , and circumcise H4135 again H7725 H853 the children H1121 of Israel H3478 the second H8145 time.
|
3. அப்பொழுது யோசுவா கருக்கான கத்திகளை உண்டாக்கி, இஸ்ரவேல் புத்திரரை ஆர்லோத் மேட்டிலே விருத்தசேதனம்பண்ணினான்.
|
3. And Joshua H3091 made H6213 him sharp H6864 knives H2719 , and circumcised H4135 H853 the children H1121 of Israel H3478 at H413 the hill H1389 of the foreskins H6190 .
|
4. யோசுவா இப்படி விருத்தசேதனம்பண்ணின முகாந்தரம் என்னவென்றால்: எகிப்திலிருந்து புறப்பட்ட சகல ஆண்மக்களாகிய யுத்த புருஷர் எல்லாரும் எகிப்திலிருந்து புறப்பட்டபின்பு, வழியில் வனாந்தரத்திலே மாண்டுபோனார்கள்.
|
4. And this H2088 is the cause H1697 why H834 Joshua H3091 did circumcise H4135 : All H3605 the people H5971 that came out H3318 of Egypt H4480 H4714 , that were males H2145 , even all H3605 the men H376 of war H4421 , died H4191 in the wilderness H4057 by the way H1870 , after they came out H3318 of Egypt H4480 H4714 .
|
5. எகிப்திலிருந்து புறப்பட்ட எல்லா ஜனங்களும் விருத்தசேதனம் பண்ணப்பட்டிருந்தார்கள்; அவர்கள் எகிப்திலிருந்து புறப்பட்டபின்பு, வழியில் வனாந்தரத்திலே பிறந்த சகல ஜனங்களும் விருத்தசேதனம் பண்ணப்படாதிருந்தார்கள்.
|
5. Now H3588 all H3605 the people H5971 that came out H3318 were H1961 circumcised H4135 : but all H3605 the people H5971 that were born H3209 in the wilderness H4057 by the way H1870 as they came forth H3318 out of Egypt H4480 H4714 , them they had not H3808 circumcised H4135 .
|
6. கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமற்போன எகிப்திலிருந்து புறப்பட்ட யுத்தபுருஷரான யாவரும் மாளுமட்டும், இஸ்ரவேல் புத்திரர் நாற்பதுவருஷம் வனாந்தரத்தில் நடந்து திரிந்தார்கள்; கர்த்தர் எங்களுக்குக் கொடுக்கும்படி அவர்கள் பிதாக்களுக்கு ஆணையிட்ட பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை அவர்கள் காண்பதில்லை என்று கர்த்தர் அவர்களுக்கு ஆணையிட்டிருந்தார்.
|
6. For H3588 the children H1121 of Israel H3478 walked H1980 forty H705 years H8141 in the wilderness H4057 , till H5704 all H3605 the people H1471 that were men H376 of war H4421 , which came out H3318 of Egypt H4480 H4714 , were consumed H8552 , because H834 they obeyed H8085 not H3808 the voice H6963 of the LORD H3068 : unto whom H834 the LORD H3068 swore H7650 that he would not H1115 show H7200 them H853 the land H776 , which H834 the LORD H3068 swore H7650 unto their fathers H1 that he would give H5414 us , a land H776 that floweth H2100 with milk H2461 and honey H1706 .
|
7. அவர்களுக்குப் பதிலாக அவர் எழும்பப்பண்ணின அவர்கள் பிள்ளைகளை யோசுவா விருத்தசேதனம்பண்ணினான்; வழியிலே அவர்களை விருத்தசேதனம்பண்ணாததினால் அவர்கள் விருத்தசேதனம் இல்லாதிருந்தார்கள்.
|
7. And their children H1121 , whom he raised up H6965 in their stead H8478 , them Joshua H3091 circumcised H4135 : for H3588 they were H1961 uncircumcised H6189 , because H3588 they had not H3808 circumcised H4135 them by the way H1870 .
|
8. ஜனங்களெல்லாரும் விருத்தசேதனம்பண்ணப்பட்டுத் தீர்ந்தபின்பு, அவர்கள் குணமாகுமட்டும் தங்கள்தங்கள் இடத்திலே பாளயத்தில் தரித்திருந்தார்கள்.
|
8. And it came to pass H1961 , when H834 they had done H8552 circumcising H4135 all H3605 the people H1471 , that they abode H3427 in their places H8478 in the camp H4264 , till H5704 they were whole H2421 .
|
9. கர்த்தர் யோசுவாவை நோக்கி: இன்று எகிப்தின் நிந்தையை உங்கள்மேல் இராதபடிக்குப் புரட்டிப்போட்டேன் என்றார்; அதனால் அந்த ஸ்தலம் இந்நாள்வரைக்கும் கில்கால் என்னப்படுகிறது.
|
9. And the LORD H3068 said H559 unto H413 Joshua H3091 , This day H3117 have I rolled away H1556 H853 the reproach H2781 of Egypt H4714 from off H4480 H5921 you . Wherefore the name H8034 of the place H4725 is called H7121 Gilgal H1537 unto H5704 this H2088 day H3117 .
|
10. இஸ்ரவேல் புத்திரர் கில்காலில் பாளயமிறங்கியிருந்து, மாதத்தின் பதினாலாம் தேதி அந்திநேரத்திலே எரிகோவின் சமனான வெளிகளிலே பஸ்காவை ஆசரித்தார்கள்.
|
10. And the children H1121 of Israel H3478 encamped H2583 in Gilgal H1537 , and kept H6213 H853 the passover H6453 on the fourteenth H702 H6240 day H3117 of the month H2320 at even H6153 in the plains H6160 of Jericho H3405 .
|
11. பஸ்காவின் மறுநாளாகிய அன்றையதினம் அவர்கள் தேசத்தினுடைய தானியத்தாலாகிய புளிப்பில்லாத அப்பங்களையும் சுட்ட கதிர்களையும் புசித்தார்கள்.
|
11. And they did eat H398 of the old corn H4480 H5669 of the land H776 on the morrow after H4480 H4283 the passover H6453 , unleavened cakes H4682 , and parched H7033 corn in the selfsame H6106 H2088 day H3117 .
|
12. அவர்கள் தேசத்தின் தானியத்திலே புசித்த மறுநாளிலே மன்னா பெய்யாமல் ஒழிந்தது; அதுமுதல் இஸ்ரவேல் புத்திரருக்கு மன்னா இல்லாமற்போய், அவர்கள் கானான்தேசத்துப் பலனை அந்த வருஷத்தில்தானே புசித்தார்கள்.
|
12. And the manna H4478 ceased H7673 on the morrow H4480 H4283 after they had eaten H398 of the old corn H4480 H5669 of the land H776 ; neither H3808 had H1961 the children H1121 of Israel H3478 manna H4478 any more H5750 ; but they did eat H398 of the fruit H4480 H8393 of the land H776 of Canaan H3667 that H1931 year H8141 .
|
13. பின்னும் யோசுவா எரிகோவின் வெளியிலிருந்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, ஒருவர் அவனுக்கு எதிரே நின்றார்; உருவின பட்டயம் அவர் கையில் இருந்தது; யோசுவா அவரிடத்தில் போய்: நீர் எங்களைச் சேர்ந்தவரோ, எங்கள் சத்துருக்களைச் சேர்ந்தவரோ என்று கேட்டான்.
|
13. And it came to pass H1961 , when Joshua H3091 was H1961 by Jericho H3405 , that he lifted up H5375 his eyes H5869 and looked H7200 , and, behold H2009 , there stood H5975 a man H376 over against H5048 him with his sword H2719 drawn H8025 in his hand H3027 : and Joshua H3091 went H1980 unto him H413 , and said H559 unto him, Art thou H859 for us, or H518 for our adversaries H6862 ?
|
14. அதற்கு அவர்: அல்ல, நான் கர்த்தருடைய சேனையின் அதிபதியாய் இப்பொழுது வந்தேன் என்றார்; அப்பொழுது யோசுவா தரையிலே முகங்குப்புற விழுந்து பணிந்துகொண்டு, அவரை நோக்கி: என் ஆண்டவர் தமது அடியேனுக்குச் சொல்லுகிறது என்னவென்று கேட்டான்.
|
14. And he said H559 , Nay H3808 ; but H3588 as captain H8269 of the host H6635 of the LORD H3068 am I H589 now H6258 come H935 . And Joshua H3091 fell H5307 on H413 his face H6440 to the earth H776 , and did worship H7812 , and said H559 unto him, What H4100 saith H1696 my lord H113 unto H413 his servant H5650 ?
|
15. அப்பொழுது கர்த்தருடைய சேனையின் அதிபதி யோசுவாவை நோக்கி: உன் கால்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப்போடு, நீ நிற்கிற இடம் பரிசுத்தமானது என்றார்; யோசுவா அப்படியே செய்தான்.
|
15. And the captain H8269 of the LORD H3068 's host H6635 said H559 unto H413 Joshua H3091 , Loose H5394 thy shoe H5275 from off H4480 H5921 thy foot H7272 ; for H3588 the place H4725 whereon H834 H5921 thou H859 standest H5975 is holy H6944 . And Joshua H3091 did H6213 so H3651 .
|