Bible Versions
Bible Books

Jeremiah 47:4 (TOV) Tamil Old BSI Version

1 பார்வோன் காத்சாவை அழிக்குமுன்னே, பெலிஸ்தருக்கு விரோதமாய்த் தீர்க்கதரிசியாகிய எரேமியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம்:
2 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, வடக்கேயிருந்து ஜலம் பொங்கி பிரவாகமாகித் தேசத்தின்மேலும், அதிலுள்ள எல்லாவற்றின்மேலும், நகரத்தின்மேலும், அதில் குடியிருக்கிறவர்களின்மேலும் புரண்டு ஓடும்; அப்பொழுது மனுஷர் கூக்குரலிட்டு, தேசத்தின் குடிகளெல்லாரும் அலறுவார்கள்.
3 அவர்களுடைய பலத்த குதிரைகளுடைய குளம்புகளின் சத்தத்தையும், அவர்களுடைய இரதங்களின் கடகடப்பையும், அவர்களுடைய உருளைகளின் இரைச்சலையும் கேட்டு, தகப்பன்மார் தங்கள் கை அயர்ந்துபோனதினால் தங்கள் பிள்ளைகளையும் நோக்கிப் பாராதிருப்பார்கள்.
4 பெலிஸ்தரையெல்லாம் பாழாக்கவும், தீருவுக்கும் சீதோனுக்கும், மீதியான சகாயரையெல்லாம் சங்காரம் பண்ணவும் வருகிற நாளிலே இப்படியாகும்; கப்தோர் என்னும் கடற்கரையான தேசத்தாரில் மீதியாகிய பெலிஸ்தரையும் கர்த்தர் பாழாக்குவார்.
5 காத்சா மொட்டையடிக்கப்படும்; அவர்களுடய பள்ளத்தாக்கிலே மீதியாகிய அஸ்கலோன் சங்காரமாகும்; நீ எந்தமட்டுந்தான் உன்னைக் கீறிக்கொள்ளுவாய்.
6 கர்த்தரின் பட்டயமே, எந்தமட்டும் அமராதிருப்பாய்? உன் உறைக்குள் திரும்பிவந்து, ஓய்ந்து அமர்ந்திரு.
7 அது எப்படி அமர்ந்திருக்கும்? அஸ்கலோனுக்கு விரோதமாகவும் கடல்துறை தேசத்துக்கு விரோதமாகவும் கர்த்தர் அதற்குக் கட்டளைகொடுத்து, அவ்விடங்களுக்கென்று அதைக் குறித்தாரே.
1 The word H1697 NMS of the LORD H3068 EDS that H834 RPRO came H1961 VQQ3MS to H413 PREP Jeremiah H3414 the prophet H5030 against H413 PREP the Philistines H6430 TMS , before H2962 B-ADV that Pharaoh H6547 EMS smote H5221 Gaza H5804 .
2 Thus H3541 saith H559 VQQ3MS the LORD H3068 EDS ; Behold H2009 IJEC , waters H4325 OMD rise up H5927 out of the north H6828 M-NFS , and shall be H1961 W-VQQ3MS an overflowing H7857 flood H5158 , and shall overflow H7857 the land H776 GFS , and all H4393 that is therein ; the city H5892 GFS , and them that dwell H3427 therein : then the men H120 D-NMS shall cry H2199 , and all H3605 NMS the inhabitants H3427 VQPMS of the land H776 D-GFS shall howl H3213 .
3 At the noise H6963 of the stamping H8161 of the hooves H6541 of his strong H47 horses , at the rushing H7494 of his chariots H7393 , and at the rumbling H1995 of his wheels H1534 , the fathers H1 shall not H3808 ADV look back H6437 to H413 PREP their children H1121 NMP for feebleness H7510 of hands H3027 ;
4 Because of H5921 PREP the day H3117 D-AMS that cometh H935 to spoil H7703 all H3605 NMS the Philistines H6430 TMS , and to cut off H3772 from Tyrus H6865 and Zidon H6721 every H3605 NMS helper H5826 VQPMS that remaineth H8300 NMS : for H3588 CONJ the LORD H3068 EDS will spoil H7703 the Philistines H6430 TMS , the remnant H7611 of the country H339 of Caphtor H3731 .
5 Baldness H7144 is come H935 VQQ3FS upon H413 PREP Gaza H5804 LFS ; Ashkelon H831 is cut off H1820 with the remnant H7611 of their valley H6010 : how long H5704 PREP wilt thou cut thyself H1413 ?
6 O H1945 thou sword H2719 GFS of the LORD H3068 L-EDS , how long H5704 PREP will it be ere H3808 NADV thou be quiet H8252 ? put up thyself H622 into H413 thy scabbard H8593 , rest H7280 , and be still H1826 .
7 How H349 can it be quiet H8252 , seeing the LORD H3068 W-EDS hath given it a charge H6680 VPQ3MS against H413 PREP Ashkelon H831 , and against H413 W-PREP the sea H3220 D-NMS shore H2348 ? there H8033 ADV hath he appointed H3259 it .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×