1. {யோபின் சொற்களே அவர்க்குத் தீர்ப்பிடல்BR(15:1-21:34)} PS QSSS அதற்குத் தேமானியனான எலிப்பாசுSESS சொன்னான்:SEQE
2. QSSS வெற்று அறிவினால் ஞானிSESS விடையளிக்கக்கூடுமோ?SESS வறண்ட கீழ்க்காற்றினால்SESS வயிற்றை அவன் நிரப்பவோ?SEQE
3. QSSS பயனிலாச் சொற்களாலோ,SESS பொருளிலாப் பொழிவினாலோSESS அவன் வழக்காடத் தகுமோ?SEQE
4. QSSS ஆனால், நீர் இறையச்சத்தை இழந்துவிட்டீர்;SESS இறைச்சிந்தனை இல்லாது போனீர்.SEQE
5. QSSS உம் குற்றம் உம் வாயை உந்துகின்றது;SESS வஞ்சக நாவை நீர் தேர்ந்துகொண்டீர்.SEQE
6. QSSS கண்டனம் செய்தது உம் வாயே;SESS நானல்ல; உம் உதடேSESS உமக்கு எதிராய்ச் சான்றுரைக்கின்றது.SEQE
7. QSSS மாந்தரில் முதல்பிறவி நீர்தாமோ?SESS மலைகளுக்கு முன்பே உதித்தவர் நீர்தாமோ?SEQE
8. QSSS கடவுளின் மன்றத்தில் கவனித்துக் கேட்டீரோ?SESS ஞானம் உமக்கு மட்டுமே உரியதோ?SEQE
9. QSSS எங்களுக்குத் தெரியாத எது உமக்குத் தெரியும்?SESS எங்களுக்குப் புரியாத எது உமக்குப் புரியும்?SEQE
10. QSSS நரைமுடியும் நிறைவயதும்கொண்டு,SESS நாள்களில் உம் தந்தைக்கு மூத்தோர்SESS எங்களிடை உள்ளனர்.SEQE
11. QSSS கடவுளின் ஆறுதலும், கனிவான சொல்லும்SESS உமக்கு அற்பமாயினவோ?SEQE
12. QSSS மனம்போன போக்கில் நீர் செல்வது ஏன்?SESS உம் கண்கள் திருதிருவென விழிப்பது ஏன்?SEQE
13. QSSS அதனால், இறைவனுக்கு எதிராய்SESS உம் கோபத்தைத் திருப்புகின்றீர்;SESS வாயில் வந்தபடிSESS வார்த்தைகளைக் கொட்டுகின்றீர்.SEQE
14. QSSS மாசற்றவராய் இருக்க மானிடர் எம்மாத்திரம்?SESS நேர்மையாளராய் இருக்கப்SESS பெண்ணிடம் பிறந்தவர் எம்மாத்திரம்?SEQE
15. QSSS வான தூதரில் இறைவன் நம்பிக்கை வையார்;SESS வானங்களும் அவர்தம் கண்முன்SESS தூயவையல்ல; * யோபு 25:4-6 SEQE
16. QSSS தீமையை தண்ணீர் போல் குடிக்கும்SESS அருவருப்பும் ஒழுங்கீனமும் நிறைந்த மாந்தர்SESS எத்துணை இழிந்தோர் ஆவர்? * யோபு 25:4-6 SEQE
17. QSSS கேளும்! நான் உமக்கு விளக்குகின்றேன்;SESS நான் பார்த்த இதனை நவில்கின்றேன்; * யோபு 25:4-6 SEQE
18. QSSS ஞானிகள் உரைத்தவை அவை!SESS அவர்கள் தந்தையர் மறைக்காதவை அவை!SEQE
19. QSSS அவர்களுக்கே நாடு வழங்கப்பட்டது;SESS அன்னியர் அவர்களிடையே நடமாடியதில்லை.SEQE
20. QSSS துடிக்கின்றனர் துன்பத்தில் மூர்க்கர்SESS தம் நாளெல்லாம்; துன்பத்தின் ஆண்டுகள்SESS கொடியோர்க்குக் கூட்டப்பட்டுள்ளன.SEQE
21. QSSS திகிலளிக்கும் ஒலிSESS அவர்களின் செவிகளில் கேட்கும்;SESS நலமான காலத்தில் அழிப்பவர் தாக்கலாம்.SEQE
22. QSSS அவர்கள் இருளினின்று தப்பிக்கும்SESS நம்பிக்கை இழப்பர்;SESS வாளுக்கு இரையாகக் குறிக்கப்பட்டனர்.SEQE
23. QSSS எங்கே உணவு என்று ஏங்கி அலைவர்;SESS இருள்சூழ்நாள்SESS அண்மையில் உள்ளதென்று அறிவர்.SEQE
24. QSSS இன்னலும் இடுக்கணும்SESS அவர்களை நடுங்க வைக்கும்;SESS போருக்குப் புறப்படும் அரசன்போல்SESS அவை அவர்களை மேற்கொள்ளும்.SEQE
25. QSSS ஏனெனில், இறைவனுக்கு எதிராகSESS அவர்கள் கையை ஓங்கினர்;SESS எல்லாம் வல்லவரை எதிர்த்து வீரம் பேசினர்.SEQE
26. QSSS வணங்காக் கழுத்தோடும்SESS வலுவான பெரிய கேடயத்தோடும்,SESS அவரை எதிர்த்து வந்தனர்.SEQE
27. QSSS ஏனெனில், அவர்களின் முகத்தைக்SESS கொழுப்பு மூடியுள்ளது;SESS அவர்களின் தொந்தி பருத்துள்ளது.SEQE
28. QSSS பாழான பட்டணங்களிலும்,SESS எவரும் உறைய இயலா இல்லங்களிலும்,SESS இடிபாடுகளுக்குரிய வீடுகளிலும்SESS அவர்கள் குடியிருப்பர்.SEQE
29. QSSS அவர்கள் செல்வர் ஆகார்;SESS அவர்களின் சொத்தும் நில்லாது;SESS அவர்களது உடைமை மண்ணில் பெருகாது.SEQE
30. QSSS இருளுக்கு அவர்கள் தப்புவதில்லை;SESS அவர்களது தளிரை அனல் வாட்டும்.SESS அவர்களது மலர்SESS காற்றில் அடித்துப்போகப்படும்.SEQE
31. QSSS வீணானதை நம்பி ஏமாந்து போகவேண்டாம்;SESS ஏனெனில், வெறுமையேSESS அவர்களது செயலுக்கு வெகுமதியாகும்.SEQE
32. QSSS அவர்களது வாழ்நாள் முடியுமுன்பேSESS அது நடக்கும்;SESS அவர்களது தளிர் உலர்ந்துவிடும்;SEQE
33. QSSS பிஞ்சுகளை உதிர்க்கும்SESS திராட்சைச் செடிபோன்றும்SESS பூக்களை உகுக்கும் ஒலிவமரம் போன்றும்SESS அவர்கள் இருப்பர்.SEQE
34. QSSS ஏனெனில், இறையச்சமிலாரின் கூட்டம்SESS கருகிப்போம்; கையூட்டு வாங்குவோரின்SESS கூடாரம் எரியுண்ணும்.SEQE
35. QSSS இன்னலைக் கருவுற்று அவர்கள்SESS இடுக்கண் ஈன்றெடுப்பர்;SESS வஞ்சகம் அவர்களது வயிற்றில் வளரும்.SEPE