|
|
1. ராஜாவாகிய எசேக்கியா அதைக்கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டு உடுத்திக்கொண்டு, கர்த்தருடைய ஆலயத்தில் பிரவேசித்து,
|
1. And it came to pass H1961 , when king H4428 Hezekiah H2396 heard H8085 it , that he rent H7167 H853 his clothes H899 , and covered himself H3680 with sackcloth H8242 , and went H935 into the house H1004 of the LORD H3068 .
|
2. அரமனை விசாரிப்புக்காரனாகிய எலியாக்கீமையும், சம்பிரதியாகிய செப்னாவையும், ஆசாரியர்களின் மூப்பரையும், ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசியினிடத்திற்கு இரட்டு உடுத்தவர்களாக அனுப்பினான்.
|
2. And he sent H7971 H853 Eliakim H471 , who H834 was over H5921 the household H1004 , and Shebna H7644 the scribe H5608 , and the elders H2205 of the priests H3548 covered H3680 with sackcloth H8242 , unto H413 Isaiah H3470 the prophet H5030 the son H1121 of Amoz H531 .
|
3. இவர்கள் அவனை நோக்கி: இந்த நாள் நெருக்கமும், கண்டிதமும், தூஷணமும் அநுபவிக்கிற நாள்; பிள்ளைப்பேறு நோக்கியிருக்கிறது; பெறவோ பெலன் இல்லை.
|
3. And they said H559 unto H413 him, Thus H3541 saith H559 Hezekiah H2396 , This H2088 day H3117 is a day H3117 of trouble H6869 , and of rebuke H8433 , and of blasphemy H5007 : for H3588 the children H1121 are come H935 to H5704 the birth H4866 , and there is not H369 strength H3581 to bring forth H3205 .
|
4. ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படி, அசீரியா ராஜாவாகிய தன் ஆண்டவனால் அனுப்பப்பட்ட ரப்சாக்கே சொன்ன வார்த்தைகளை உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிறார்; உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிற வார்த்தைகளினிமித்தம் தண்டனை செய்வார்; ஆகையால், இன்னும் மீதியாயிருக்கிறவர்களுக்காக விண்ணப்பஞ்செய்வீராக என்று எசேக்கியா சொல்லச்சொன்னார் என்றார்கள்.
|
4. It may be H194 the LORD H3068 thy God H430 will hear H8085 H853 the words H1697 of Rab H7262 -shakeh, whom H834 the king H4428 of Assyria H804 his master H113 hath sent H7971 to reproach H2778 the living H2416 God H430 , and will reprove H3198 the words H1697 which H834 the LORD H3068 thy God H430 hath heard H8085 : wherefore lift up H5375 thy prayer H8605 for H1157 the remnant H7611 that is left H4672 .
|
5. இவ்விதமாய் எசேக்கியா ராஜாவின் ஊழியக்காரர் ஏசாயாவினிடத்தில் வந்து சொன்னார்கள்.
|
5. So the servants H5650 of king H4428 Hezekiah H2396 came H935 to H413 Isaiah H3470 .
|
6. அப்பொழுது ஏசாயா அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவின் ஊழியக்காரர் என்னைத் தூஷித்ததும் நீர் கேட்டதுமான வார்த்தைகளினாலே பயப்படாதேயும்.
|
6. And Isaiah H3470 said H559 unto H413 them, Thus H3541 shall ye say H559 unto H413 your master H113 , Thus H3541 saith H559 the LORD H3068 , Be not afraid H3372 H408 of H4480 H6440 the words H1697 that H834 thou hast heard H8085 , wherewith H834 the servants H5288 of the king H4428 of Assyria H804 have blasphemed H1442 me.
|
7. இதோ, அவன் ஒரு செய்தியைக் கேட்டு, தன் தேசத்துக்குத் திரும்புவதற்கான ஆவியை நான் அவனுக்குள் அனுப்பி, அவனை அவன் தேசத்திலே பட்டயத்தால் விழப்பண்ணுவேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்பதை உங்கள் ஆண்டவனிடத்தில் சொல்லுங்கள் என்றான்.
|
7. Behold H2009 , I will send H5414 a blast H7307 upon him , and he shall hear H8085 a rumor H8052 , and return H7725 to H413 his own land H776 ; and I will cause him to fall H5307 by the sword H2719 in his own land H776 .
|
8. அசீரியா ராஜா லாகீசை விட்டுப்புறப்பட்டான் என்று கேள்விப்பட்டு, ரப்சாக்கே திரும்பிப்போய், அவன் லிப்னாவின்மேல் யுத்தம்பண்ணுகிறதைக் கண்டான்.
|
8. So Rab H7262 -shakeh returned H7725 , and found H4672 H853 the king H4428 of Assyria H804 warring H3898 against H5921 Libnah H3841 : for H3588 he had heard H8085 that H3588 he was departed H5265 from Lachish H4480 H3923 .
|
9. அப்பொழுது, எத்தியோப்பியாவின் ராஜாவாகிய திராக்கா உம்மோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டான் என்று சொல்லக் கேள்விப்பட்டான்; அதைக் கேட்டபோது அவன் எசேக்கியாவினிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி:
|
9. And he heard H8085 say H559 concerning H5921 Tirhakah H8640 king H4428 of Ethiopia H3568 , He is come forth H3318 to make war H3898 with H854 thee . And when he heard H8085 it , he sent H7971 messengers H4397 to H413 Hezekiah H2396 , saying H559 ,
|
10. நீங்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால், எருசலேம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை என்று நீ நம்பியிருக்கிற உன் தேவன் உன்னை எத்தவொட்டாதே.
|
10. Thus H3541 shall ye speak H559 to H413 Hezekiah H2396 king H4428 of Judah H3063 , saying H559 , Let not H408 thy God H430 , in whom H834 thou H859 trustest H982 , deceive H5377 thee, saying H559 , Jerusalem H3389 shall not H3808 be given H5414 into the hand H3027 of the king H4428 of Assyria H804 .
|
11. இதோ, அசீரியா ராஜாக்கள் சகல தேசங்களையும் சங்கரித்த செய்தியை நீ கேள்விப்பட்டிருக்கிறாய்; நீ தப்புவாயோ?
|
11. Behold H2009 , thou H859 hast heard H8085 what H834 the kings H4428 of Assyria H804 have done H6213 to all H3605 lands H776 by destroying them utterly H2763 ; and shalt thou H859 be delivered H5337 ?
|
12. என் பிதாக்கள் அழித்துவிட்ட கோசானையும், ஆரானையும், ரேத்சேப்பையும், தெலாசாரிலிருந்த ஏதேனின் புத்திரரையும் அவர்களுடைய தேவர்கள் தப்புவித்ததுண்டோ?
|
12. Have the gods H430 of the nations H1471 delivered H5337 them which H834 my fathers H1 have destroyed H7843 , as H853 Gozan H1470 , and Haran H2771 , and Rezeph H7530 , and the children H1121 of Eden H5729 which H834 were in Telassar H8515 ?
|
13. ஆமாத்தின் ராஜாவும், அர்பாத்தின் ராஜாவும், செப்பர்வாயீம் ஏனா ஈவா பட்டணங்களின் ராஜாவும் எங்கே என்று சொல்லுங்கள் என்றார்.
|
13. Where H346 is the king H4428 of Hamath H2574 , and the king H4428 of Arphad H774 , and the king H4428 of the city H5892 of Sepharvaim H5617 , Hena H2012 , and Ivah H5755 ?
|
14. எசேக்கியா ஸ்தானாபதிகளின் கையிலிருந்த நிருபத்தை வாங்கி வாசித்தான்; பின்பு எசேக்கியா கர்த்தருடைய ஆலயத்திற்குப் போய் அதைக் கர்த்தருக்கு முன்பாக விரித்து,
|
14. And Hezekiah H2396 received H3947 H853 the letter H5612 from the hand H4480 H3027 of the messengers H4397 , and read H7121 it : and Hezekiah H2396 went up H5927 unto the house H1004 of the LORD H3068 , and spread H6566 it before H6440 the LORD H3068 .
|
15. கர்த்தரை நோக்கி:
|
15. And Hezekiah H2396 prayed H6419 unto H413 the LORD H3068 , saying H559 ,
|
16. சேனைகளின் கர்த்தாவே, கேருபீன்களின் மத்தியில் வாசம்பண்ணுகிற இஸ்ரவேலின் தேவனே, நீர் ஒருவரே பூமியின் ராஜ்யங்களுக்கெல்லாம் தேவனானவர்; நீர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்.
|
16. O LORD H3068 of hosts H6635 , God H430 of Israel H3478 , that dwellest H3427 between the cherubims H3742 , thou H859 art the God H430 , even thou alone H905 , of all H3605 the kingdoms H4467 of the earth H776 : thou H859 hast made H6213 H853 heaven H8064 and earth H776 .
|
17. கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்துக்கேளும்; கர்த்தாவே, நீர் உமது கண்களைத் திறந்துபாரும், சனகெரிப் ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படிக்குச் சொல்லியனுப்பின வார்த்தைகளையெல்லாம் கேளும்.
|
17. Incline H5186 thine ear H241 , O LORD H3068 , and hear H8085 ; open H6491 thine eyes H5869 , O LORD H3068 , and see H7200 : and hear H8085 H853 all H3605 the words H1697 of Sennacherib H5576 , which H834 hath sent H7971 to reproach H2778 the living H2416 God H430 .
|
18. கர்த்தாவே, அசீரியா ராஜாக்கள் அந்த ஜாதிகளையும், அவர்கள் தேசத்தையும் நாசமாக்கி,
|
18. Of a truth H551 , LORD H3068 , the kings H4428 of Assyria H804 have laid waste H2717 H853 all H3605 the nations H776 , and their countries H776 ,
|
19. அவர்களுடைய தேவர்களை நெருப்பிலே போட்டுவிட்டது மெய்தான்; அவைகள் தேவர்கள் அல்லவே, மனுஷர் கைவேலையான மரமும் கல்லுந்தானே; ஆகையால் அவைகளை நிர்த்தூளியாக்கினார்கள்.
|
19. And have cast H5414 H853 their gods H430 into the fire H784 : for H3588 they H1992 were no H3808 gods H430 , but H3588 H518 the work H4639 of men H120 's hands H3027 , wood H6086 and stone H68 : therefore they have destroyed H6 them.
|
20. இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே கர்த்தர் என்று பூமியின் ராஜ்யங்களெல்லாம் அறியும்படிக்கு, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம் பண்ணினான்.
|
20. Now H6258 therefore , O LORD H3068 our God H430 , save H3467 us from his hand H4480 H3027 , that all H3605 the kingdoms H4467 of the earth H776 may know H3045 that H3588 thou H859 art the LORD H3068 , even thou only H905 .
|
21. அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா, எசேக்கியாவுக்குச் சொல்லியனுப்பினது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், அசீரியா ராஜாவாகிய சனகெரிபினிமித்தம் நீ என்னை நோக்கி விண்ணப்பம்பண்ணினாயே.
|
21. Then Isaiah H3470 the son H1121 of Amoz H531 sent H7971 unto H413 Hezekiah H2396 , saying H559 , Thus H3541 saith H559 the LORD H3068 God H430 of Israel H3478 , Whereas H834 thou hast prayed H6419 to H413 me against H413 Sennacherib H5576 king H4428 of Assyria H804 :
|
22. அவனைக்குறித்துக் கர்த்தர் சொல்லுகிற வசனமாவது: சீயோன் குமாரத்தியாகிய கன்னியாஸ்திரீ உன்னை இகழ்ந்து, உன்னைப் பரிகாசம்பண்ணுகிறாள்; எருசலேம் குமாரத்தி உன் பின்னாலே தலையைத் துலுக்குகிறாள்.
|
22. This H2088 is the word H1697 which H834 the LORD H3068 hath spoken H1696 concerning H5921 him ; The virgin H1330 , the daughter H1323 of Zion H6726 , hath despised H936 thee, and laughed thee to scorn H3932 ; the daughter H1323 of Jerusalem H3389 hath shaken H5128 her head H7218 at H310 thee.
|
23. யாரை நிந்தித்துத் தூஷித்தாய்? யாருக்கு விரோதமாய் உன் சத்தத்தை உயர்த்தினாய்? நீ இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாய் அல்லவோ உன் கண்களை மேட்டிமையாய் ஏறெடுத்தாய்.
|
23. H853 Whom H4310 hast thou reproached H2778 and blasphemed H1442 ? and against H5921 whom H4310 hast thou exalted H7311 thy voice H6963 , and lifted up H5375 thine eyes H5869 on high H4791 ? even against H413 the Holy One H6918 of Israel H3478 .
|
24. உன் ஊழியக்காரரைக்கொண்டு நீ ஆண்டவரை நிந்தித்து: என் இரதங்களின் திரளினாலே நான் மலைகளின் கொடுமுடிகளுக்கும் லீபனோனின் சிகரங்களுக்கும் வந்து ஏறினேன்; அதின் உயரமான கேதுருமரங்களையும், உச்சிதமான தேவதாரு விருட்சங்களையும் நான் வெட்டி, உயர்ந்த அதின் கடைசி எல்லைமட்டும், அதின் செழுமையான வனமட்டும் வருவேன் என்றும்,
|
24. By H3027 thy servants H5650 hast thou reproached H2778 the Lord H136 , and hast said H559 , By the multitude H7230 of my chariots H7393 am I H589 come up H5927 to the height H4791 of the mountains H2022 , to the sides H3411 of Lebanon H3844 ; and I will cut down H3772 the tall H6967 cedars H730 thereof, and the choice H4005 fir trees H1265 thereof : and I will enter H935 into the height H4791 of his border H7093 , and the forest H3293 of his Carmel H3759 .
|
25. நான் கிணறு வெட்டித் தண்ணீர் குடித்தேன்; என் உள்ளங்காலினால் அரணிப்பான இடங்களின் அகழிகளையெல்லாம் வறளவும்பண்ணினேன் என்றும் சொன்னாய்.
|
25. I H589 have digged H6979 , and drunk H8354 water H4325 ; and with the sole H3709 of my feet H6471 have I dried up H2717 all H3605 the rivers H2975 of the besieged places H4693 .
|
26. நான் வெகுகாலத்துக்குமுன் அதை நியமித்து, பூர்வநாட்கள்முதல் அதைத் திட்டம்பண்ணினேன் என்பதை நீ கேட்டதில்லையோ? இப்பொழுது நீ அரணான பட்டணங்களைப் பாழான மண்மேடுகளாக்கும்படி நானே அதைச் சம்பவிக்கப்பண்ணினேன்.
|
26. Hast thou not H3808 heard H8085 long ago H4480 H7350 , how I have done H6213 it; and of ancient H6924 times H4480 H3117 , that I have formed H3335 it? now H6258 have I brought it to pass H935 , that thou shouldest be H1961 to lay waste H7582 defensed H1219 cities H5892 into ruinous H5327 heaps H1530 .
|
27. அதினாலே அவைகளின் குடிகள் கையிளைத்தவர்களாகி, கலங்கி வெட்கப்பட்டு, வெளியின் பூண்டுக்கும், பச்சிலைக்கும், வீடுகளின்மேல் முளைக்கும் புல்லுக்கும், ஓங்கி வளருமுன் தீய்ந்துபோகும் பயிருக்கும் சமானமானார்கள்.
|
27. Therefore their inhabitants H3427 were of small H7116 power H3027 , they were dismayed H2865 and confounded H954 : they were H1961 as the grass H6212 of the field H7704 , and as the green H3419 herb H1877 , as the grass H2682 on the housetops H1406 , and as corn blasted H7711 before H6440 it be grown up H7054 .
|
28. உன் இருப்பையும், உன் போக்கையும், உன் வரவையும், நீ எனக்கு விரோதமாய்க் கொந்தளிக்கிறதையும் அறிவேன்.
|
28. But I know H3045 thy abode H3427 , and thy going out H3318 , and thy coming in H935 , and thy rage H7264 against H413 me.
|
29. நீ எனக்கு விரோதமாய்த் கொந்தளித்து, வீரியம்பேசினது என் செவிகளில் ஏறினபடியினாலே, நான் என் துறட்டை உன் மூக்கிலும் என் கடிவாளத்தை உன் வாயிலும் போட்டு, நீ வந்த வழியே உன்னைத் திரும்பப்பண்ணுவேன்.
|
29. Because H3282 thy rage H7264 against H413 me , and thy tumult H7600 , is come up H5927 into mine ears H241 , therefore will I put H7760 my hook H2397 in thy nose H639 , and my bridle H4964 in thy lips H8193 , and I will turn thee back H7725 by the way H1870 by which H834 thou camest H935 .
|
30. உனக்கு அடையாளமாயிருப்பது என்னவென்றால்: இந்த வருஷத்திலே தப்பிப் பயிராகிறதையும், இரண்டாம் வருஷத்திலே தானாய் விளைகிறதையும் சாப்பிடுவீர்கள்; மூன்றாம் வருஷத்திலோ விதைத்து அறுத்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனிகளைப் புசிப்பீர்கள்.
|
30. And this H2088 shall be a sign H226 unto thee , Ye shall eat H398 this year H8141 such as groweth of itself H5599 ; and the second H8145 year H8141 that which springeth of the same H7823 : and in the third H7992 year H8141 sow H2232 ye , and reap H7114 , and plant H5193 vineyards H3754 , and eat H398 the fruit H6529 thereof.
|
31. யூதா வம்சத்தாரில் தப்பி மீந்திருக்கிறவர்கள் மறுபடியும் கீழே வேர்பற்றி மேலே கனிகொடுப்பார்கள்.
|
31. And the remnant H7604 that is escaped H6413 of the house H1004 of Judah H3063 shall again H3254 take root H8328 downward H4295 , and bear H6213 fruit H6529 upward H4605 :
|
32. மீதியாயிருக்கிறவர்கள் எருசலேமிலும், தப்பினவர்கள் சீயோன் மலையிலுமிருந்து புறப்படுவார்கள்; சேனைகளுடைய கர்த்தரின் வைராக்கியம் இதைச் செய்யும்.
|
32. For H3588 out of Jerusalem H4480 H3389 shall go forth H3318 a remnant H7611 , and they that escape H6413 out of mount H4480 H2022 Zion H6726 : the zeal H7068 of the LORD H3068 of hosts H6635 shall do H6213 this H2063 .
|
33. ஆகையால் கர்த்தர் அசீரியா ராஜாவைக்குறித்து: அவன் இந்த நகரத்துக்குள் பிரவேசிப்பதில்லை; இதின்மேல் அம்பு எய்வதுமில்லை; இதற்கு முன்பாகக் கேடகத்தோடே வருவதுமில்லை; இதற்கு எதிராகக் கொத்தளம் போடுவதுமில்லை.
|
33. Therefore H3651 thus H3541 saith H559 the LORD H3068 concerning H413 the king H4428 of Assyria H804 , He shall not H3808 come H935 into H413 this H2063 city H5892 , nor H3808 shoot H3384 an arrow H2671 there H8033 , nor H3808 come before H6923 it with shields H4043 , nor H3808 cast H8210 a bank H5550 against H5921 it.
|
34. அவன் இந்த நகரத்துக்குள் பிரவேசியாமல், தான் வந்தவழியே திரும்பிப்போவான்.
|
34. By the way H1870 that H834 he came H935 , by the same shall he return H7725 , and shall not H3808 come H935 into H413 this H2063 city H5892 , saith H5002 the LORD H3068 .
|
35. என்னிமித்தமும் என் தாசனாகிய தாவீதினிமித்தமும், நான் இந்த நகரத்தை இரட்சிக்கும்படிக்கு இதற்கு ஆதரவாயிருப்பேன் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லியனுப்பினான்.
|
35. For I will defend H1598 H5921 this H2063 city H5892 to save H3467 it for mine own sake H4616 , and for my servant H5650 David H1732 's sake H4616 .
|
36. அப்பொழுது கர்த்தருடைய தூதன் புறப்பட்டு, அசீரியரின் பாளயத்தில் லட்சத்தெண்பத்தையாயிரம் பேரைச் சங்கரித்தான்; அதிகாலமே எழுந்திருக்கும்போது, இதோ, அவர்களெல்லாரும் செத்த பிரேதங்களாய்க் கிடந்தார்கள்.
|
36. Then the angel H4397 of the LORD H3068 went forth H3318 , and smote H5221 in the camp H4264 of the Assyrians H804 a hundred H3967 and fourscore H8084 and five H2568 thousand H505 : and when they arose early H7925 in the morning H1242 , behold H2009 , they were all H3605 dead H4191 corpses H6297 .
|
37. அப்பொழுது அசீரியா ராஜாவாகிய சனகெரிப் பிராயணப்பட்டுத் திரும்பிப்போய், நினிவேயில் இருந்துவிட்டான்.
|
37. So Sennacherib H5576 king H4428 of Assyria H804 departed H5265 , and went H1980 and returned H7725 , and dwelt H3427 at Nineveh H5210 .
|
38. அவன் தன் தேவனாகிய நிஸ்ரோகின் கோவிலிலே பணிந்துகொள்ளுகிறபோது, அவன் குமாரராகிய அத்ரமலேக்கும் சரேத்சேரும் அவனைப் பட்டயத்தினால் வெட்டிப்போட்டு, அரராத் தேசத்துக்குத் தப்பி ஓடிப்போனார்கள்; அவன் குமாரனாகிய எசரத்தோன் அவன் பட்டத்திற்கு வந்து அரசாண்டான்.
|
38. And it came to pass H1961 , as he H1931 was worshiping H7812 in the house H1004 of Nisroch H5268 his god H430 , that Adrammelech H152 and Sharezer H8272 his sons H1121 smote H5221 him with the sword H2719 ; and they H1992 escaped H4422 into the land H776 of Armenia H780 : and Esar H634 -haddon his son H1121 reigned H4427 in his stead H8478 .
|