Bible Versions
Bible Books

Nahum 1 (TOV) Tamil Old BSI Version

1 நினிவேயின் பாரம். எல்கோசானாகிய நாகூமின் தரிசனப் புஸ்தகம்.
2 கர்த்தர் எரிச்சலுள்ளவரும் நீதியைச் சரிக்கட்டுகிறவருமான தேவன்; கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவர், உக்கிரகோபமுள்ளவர்; கர்த்தர் தம்முடைய சத்துருக்களுக்குப் பிரதிபலன் அளிக்கிறவர் அவர் தம்முடைய பகைஞருக்காகக் கோபத்தை வைத்துவைக்கிறவர்.
3 கர்த்தர் நீடிய சாந்தமும், மிகுந்த வல்லமையுமுள்ளவர்; அவர்களை ஆக்கினையில்லாமல் தப்புவிக்கமாட்டார்; கர்த்தருடைய வழி சுழல்காற்றிலும் பெருங்காற்றிலும் இருக்கிறது; மேகங்கள் அவருடைய பாதத்தூளாயிருக்கிறது.
4 அவர் சமுத்திரத்தை அதட்டி, அதை வற்றிப்போகப்பண்ணி, சகல ஆறுகளையும் வறட்சியாக்குகிறார்; பாசானும் கர்மேலும் சோர்ந்து, லீபனோனின் செழிப்பு வாடிப்போகும்.
5 அவர் சமுகத்தில் பர்வதங்கள் அதிர்ந்து மலைகள் கரைந்துபோகும்; அவர் பிரசன்னத்தினால் பூமியும் பூச்சக்கரமும் அதில் குடியிருக்கிற அனைவரோடும் எடுபட்டுப்போகும்.
6 அவருடைய கோபத்துக்கு முன்பாக நிற்பவன் யார்? அவருடைய உக்கிரகோபத்திலே தரிப்பவன் யார்? அவருடைய எரிச்சல் அக்கினியைப்போல இறைக்கப்படுகிறது; அவராலே கன்மலைகள் பேர்க்கப்படும்.
7 கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்.
8 ஆனாலும் நினிவேயின் ஸ்தானத்தை, புரண்டுவருகிற வெள்ளத்தினால் சர்வசங்காரம்பண்ணுவார்; இருள் அவர் சத்துருக்களைப் பின்தொடரும்.
9 நீங்கள் கர்த்தருக்கு விரோதமாகச் செய்ய நினைக்கிறதென்ன? அவர் சர்வசங்காரம்பண்ணுவார்; இடுக்கம் மறுபடியும் உண்டாகாது.
10 அவர்கள் சன்னபின்னலாயிருக்கிற முட்செடிகளுக்கு ஒப்பாயிருக்கையிலும், தங்கள் மதுபானத்தினால் வெறிகொண்டிருக்கையிலும், அவர்கள் முழுதும் காய்ந்துபோன செத்தையைப்போல எரிந்துபோவார்கள்.
11 கர்த்தருக்கு விரோதமாகப் பொல்லாத நினைவுகொண்டிருக்கிற துராலோசனைக்காரன் ஒருவன் உன்னிடத்திலிருந்து புறப்பட்டான்.
12 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: அவர்கள் சம்பூரணமடைந்து அநேகராயிருந்தாலும் அறுப்புண்டுபோவார்கள்; அவன் ஒழிந்துபோவான்; உன்னை நான் சிறுமைப்படுத்தினேன், இனி உன்னைச் சிறுமைப்படுத்தாதிருப்பேன்.
13 இப்போதும் நான் உன்மேல் இருக்கிற அவன் நுகத்தை முறித்து, உன் கட்டுகளை அறுப்பேன்.
14 உன்னைக்குறித்துக் கர்த்தர் கட்டளைகொடுத்திருக்கிறார்; இனி உன் பேருக்கு வித்து விதைக்கப்படுவதில்லை; உன் தேவர்களின் கோவிலில் இருக்கிற வெட்டப்பட்ட விக்கிரகத்தையும், வார்க்கப்பட்ட விக்கிரகத்தையும், நான் நிர்மூலம்பண்ணுவேன்; நீ கனவீனனானபடியால் அதை உனக்குப் பிரேதக்குழியாக்குவேன்.
15 இதோ, சமாதானத்தைக் கூறுகிற சுவிசேஷகனுடைய கால்கள் மலைகளின்மேல் வருகிறது; யூதாவே, உன் பண்டிகைகளை ஆசரி; உன் பொருத்தனைகளைச் செலுத்து; துஷ்டன் இனி உன் வழியாய்க் கடந்துவருவதில்லை, அவன் முழுவதும் சங்கரிக்கப்பட்டான்.
1 The burden H4853 of Nineveh H5210 LFS . The book H5612 CMS of the vision H2377 of Nahum H5151 the Elkoshite H512 .
2 God H410 EDS is jealous H7072 , and the LORD H3068 EDS revengeth H5358 ; the LORD H3068 EDS revengeth H5358 , and is furious H1167 ; the LORD H3068 EDS will take vengeance H5358 on his adversaries H6862 , and he H1931 PPRO-3MS reserveth H5201 wrath for his enemies H341 .
3 The LORD H3068 NAME-4MS is slow H750 JMS to anger H639 NMD , and great H1419 in power H3581 , and will not at all acquit H5352 the wicked : the LORD H3068 EDS hath his way H1870 CMS-3MS in the whirlwind H5492 and in the storm H8183 , and the clouds H6051 are the dust H80 of his feet H7272 .
4 He rebuketh H1605 the sea H3220 BD-NMS , and maketh it dry H3001 , and drieth up H2717 all H3605 W-CMS the rivers H5104 : Bashan H1316 languisheth H535 , and Carmel H3760 , and the flower H6525 of Lebanon H3844 languisheth H535 .
5 The mountains H2022 NMP quake H7493 at H4480 M-PREP-3MS him , and the hills H1389 melt H4127 , and the earth H776 D-GFS is burned H5375 at his presence H6440 M-CMP-3MS , yea , the world H8398 , and all H3605 W-CMS that dwell H3427 therein .
6 Who H4310 W-IPRO can stand H5975 before H6440 L-CMP his indignation H2195 ? and who H4310 W-IPRO can abide H6965 VQY3MS in the fierceness H2740 of his anger H639 CMS-3MS ? his fury H2534 is poured out H5413 like fire H784 , and the rocks H6697 are thrown down H5422 by H4480 M-PREP-3MS him .
7 The LORD H3068 EDS is good H2896 AMS , a stronghold H4581 in the day H3117 B-NMS of trouble H6869 NFS ; and he knoweth H3045 them that trust H2620 in him .
8 But with an overrunning H5674 flood H7858 he will make H6213 VQY3MS an utter end H3617 of the place H4725 thereof , and darkness H2822 NMS shall pursue H7291 his enemies H341 .
9 What H4100 IPRO do ye imagine H2803 against H413 PREP the LORD H3068 EDS ? he H1931 PPRO-3MS will make H6213 VQPMS an utter end H3617 : affliction H6869 NFS shall not H3808 ADV rise up H6965 VQY3FS the second time H6471 NFD .
10 For H3588 CONJ while H5704 PREP they be folded together H5440 as thorns H5518 , and while they are drunken H5435 as drunkards H5433 , they shall be devoured H398 as stubble H7179 K-NMS fully H4390 dry H3002 AMS .
11 There is one come out H3318 VQQ3MS of H4480 thee , that imagineth H2803 evil H7451 AFS against H5921 PREP the LORD H3068 EDS , a wicked H1100 counselor H3289 .
12 Thus H3541 saith H559 VQQ3MS the LORD H3068 EDS ; Though H518 PART they be quiet H8003 , and likewise H3651 many H7227 AMP , yet thus H3651 shall they be cut down H1494 , when he shall pass through H5674 . Though I have afflicted H6031 thee , I will afflict H6031 thee no H3808 NADV more H5750 ADV .
13 For now H6258 W-ADV will I break H7665 his yoke H4132 from off H5921 thee , and will burst thy bonds in sunder H5423 .
14 And the LORD H3068 EDS hath given a commandment H6680 concerning H5921 PREP-2MS thee , that no H3808 ADV more H5750 ADV of thy name H8034 be sown H2232 : out of the house H1004 of thy gods H430 CMP-2MS will I cut off H3772 the graven image H6459 and the molten image H4541 : I will make H7760 VQY1MS thy grave H6913 ; for H3588 CONJ thou art vile H7043 .
15 Behold H2009 IJEC upon H5921 PREP the mountains H2022 the feet H7272 of him that bringeth good tidings H1319 , that publisheth H8085 peace H7965 NMS ! O Judah H3063 , keep H2287 thy solemn feasts H2282 , perform H7999 thy vows H5088 : for H3588 CONJ the wicked H1100 shall no H3808 NADV more H3254 pass through H5674 thee ; he is utterly H3605 cut off H3772 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×