|
|
1. {ஆகாரும் இஸ்மயேலும்} PS ஆபிராமின் மனைவி சாராய்க்கு மகப்பேறு இல்லை. சாராய்க்கு ஆகார் என்ற எகிப்திய பணிப்பெண் ஒருத்தி இருந்தாள்.
|
1. Now Sarai H8297 Abram H87 's wife H802 bore him no children H3205 H3808 : and she had an handmaid H8198 , an Egyptian H4713 , whose name H8034 was Hagar H1904 .
|
2. சாராய் ஆபிராமிடம், “ஆண்டவர் என்னைப் பிள்ளை பெறாதபடி செய்துவிட்டார். நீர் என் பணிப்பெண்ணிடம் உறவு கொள்ளும். ஒருவேளை அவள் எனக்காகப் பிள்ளை பெற்றுத் தரக்கூடும்” என்றார். ஆபிராம் சாராயின் சொல்லைக் கேட்டார்.
|
2. And Sarai H8297 said H559 unto H413 Abram H87 , Behold H2009 now H4994 , the LORD H3068 hath restrained H6113 me from bearing H4480 H3205 : I pray thee H4994 , go in H935 unto H413 my maid H8198 ; it may be H194 that I may obtain children H1129 by H4480 her . And Abram H87 hearkened H8085 to the voice H6963 of Sarai H8297 .
|
3. ஆபிராம் கானான் நாட்டில் பத்து ஆண்டுகள் வாழ்ந்தபின், அவர் மனைவி சாராய் எகிப்தியப் பணிப்பெண் ஆகாரைத் தம் கணவருக்கு மனைவியாகக் கொடுத்தார்.
|
3. And Sarai H8297 Abram H87 's wife H802 took H3947 H853 Hagar H1904 her maid H8198 the Egyptian H4713 , after H4480 H7093 Abram H87 had dwelt H3427 ten H6235 years H8141 in the land H776 of Canaan H3667 , and gave H5414 her to her husband H376 Abram H87 to be his wife H802 .
|
4. அவர் ஆகாருடன் உறவு கொண்டபின் அவள் கருவுற்றாள். தான் கருவுற்றிருப்பதைக் கண்டதும் தன் தலைவியை அவள் ஏளனத்துடன் நோக்கினாள்.
|
4. And he went in H935 unto H413 Hagar H1904 , and she conceived H2029 : and when she saw H7200 that H3588 she had conceived H2029 , her mistress H1404 was despised H7043 in her eyes H5869 .
|
5. அப்பொழுது சாராய் ஆபிராமிடம், “எனக்கு இழைக்கப்பட்ட தீங்கு உம்மேல் இருக்கட்டும். நீர் தழுவும்படி நானே கொடுத்த என் பணிப்பெண், அவள் கருவுற்றிருக்கிறாள் என்பதைக் கண்டதிலிருந்து என்னை ஏளனமாக நோக்குகிறாள். ஆண்டவரே எனக்கும் உமக்கும் நீதி வழங்கட்டும்” என்றார்.
|
5. And Sarai H8297 said H559 unto H413 Abram H87 , My wrong H2555 be upon H5921 thee: I H595 have given H5414 my maid H8198 into thy bosom H2436 ; and when she saw H7200 that H3588 she had conceived H2029 , I was despised H7043 in her eyes H5869 : the LORD H3068 judge H8199 between H996 me and thee.
|
6. ஆபிராம் சாராயிடம், “உன் பணிப்பெண் உன் அதிகாரத்தின்கீழ் இருக்கின்றாள். உனக்கு நல்லதாகப் படுவதை அவளுக்குச் செய்” என்றார். இதற்குப்பின் சாராய் அவளைக் கொடுமைப்படுத்தினார். ஆகவே, ஆகார் சாராயிடமிருந்து தப்பி ஓடினாள்.PE
|
6. But Abram H87 said H559 unto H413 Sarai H8297 , Behold H2009 , thy maid H8198 is in thy hand H3027 ; do H6213 to her as it pleaseth H2896 H5869 thee . And when Sarai H8297 dealt hardly H6031 with her , she fled H1272 from her face H4480 H6440 .
|
7. PS ஆண்டவரின் தூதர் அவளைப் பாலைநிலத்தில் இருந்த ஒரு நீரூற்றுக்கு அருகில் கண்டார். அந்த ஊற்று சூருக்குச் செல்லும் வழியில் இருந்தது.
|
7. And the angel H4397 of the LORD H3068 found H4672 her by H5921 a fountain H5869 of water H4325 in the wilderness H4057 , by H5921 the fountain H5869 in the way H1870 to Shur H7793 .
|
8. அவர் அவளை நோக்கி, “சாராயின் பணிப்பெண் ஆகார், நீ எங்கிருந்து வருகின்றாய்? எங்கே போகின்றாய்?” என்று கேட்டார். அதற்கு அவள், “என் தலைவி சாராயிடமிருந்து நான் தப்பி ஓடுகிறேன்” என்றாள்.
|
8. And he said H559 , Hagar H1904 , Sarai H8297 's maid H8198 , whence H335 H4480 H2088 camest H935 thou? and whither H575 wilt thou go H1980 ? And she said H559 , I H595 flee H1272 from the face H4480 H6440 of my mistress H1404 Sarai H8297 .
|
9. ஆண்டவரின் தூதர் அவளிடம், “நீ உன் தலைவியிடம் திரும்பிச் சென்று அவளுக்குப் பணிந்து நட” என்றார்.
|
9. And the angel H4397 of the LORD H3068 said H559 unto her, Return H7725 to H413 thy mistress H1404 , and submit thyself H6031 under H8478 her hands H3027 .
|
10. பின்பு, ஆண்டவரின் தூதர் அவளிடம், “உன் வழி மரபினரை யாரும் எண்ண முடியாத அளவுக்குப் பெருகச் செய்வேன்” என்றார்.
|
10. And the angel H4397 of the LORD H3068 said H559 unto her , I will multiply thy seed exceedingly H7235 H7235 H853 H2233 , that it shall not H3808 be numbered H5608 for multitude H4480 H7230 .
|
11. மீண்டும் ஆண்டவரின் தூதர் அவளிடம், “இதோ! கருவுற்றிருக்கும் நீ ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். அவனுக்கு ‘இஸ்மயேல்’ எனப் பெயரிடுவாய். ஏனெனில், உன் துயரத்தில் ஆண்டவர் உனக்குச் செவிசாய்த்தார்.
|
11. And the angel H4397 of the LORD H3068 said H559 unto her, Behold H2009 , thou art with child H2030 , and shalt bear H3205 a son H1121 , and shalt call H7121 his name H8034 Ishmael H3458 ; because H3588 the LORD H3068 hath heard H8085 H413 thy affliction H6040 .
|
12. ஆனால், அவன் காட்டுக் கழுதை போல் வாழ்பவனாக இருப்பான். எல்லோரையும் அவன் எதிர்ப்பான் எல்லோரும் அவனை எதிர்ப்பார்கள். தன் உறவினருக்கு எதிரியாக அவன் வாழ்வான்” என்றார்.PE
|
12. And he H1931 will be H1961 a wild H6501 man H120 ; his hand H3027 will be against every man H3605 , and every man H3605 's hand H3027 against him ; and he shall dwell H7931 in the presence H5921 H6440 of all H3605 his brethren H251 .
|
13. PS அப்பொழுது, ‘என்னைக் காண்பவரை நானும் இங்கே கண்டேன் அல்லவா?’ என்று அவள் சொல்லித் தன்னுடன் பேசிய ஆண்டவரை, ‘காண்கின்ற இறைவன் நீர்’ என்று பெயரிட்டழைத்தாள்.
|
13. And she called H7121 the name H8034 of the LORD H3068 that spoke H1696 unto H413 her, Thou H859 God H410 seest H7210 me: for H3588 she said H559 , Have I also H1571 here H1988 looked H7200 after H310 him that seeth H7200 me?
|
14. ஆகவே, அந்தக் கிணற்றிற்கு ‘பெயேர் லகாய்ரோயி’* என்ற பெயர் வழங்கலாயிற்று. அது காதேசுக்கும் பெரேதுக்கும் இடையே இருக்கின்றது.
|
14. Wherefore H5921 H3651 the well H875 was called H7121 Beer H883 -lahai-roi; behold H2009 , it is between H996 Kadesh H6946 and Bered H1260 .
|
15. ஆகார் ஆபிராமுக்கு மகன் ஒருவனைப் பெற்றெடுத்தாள். ஆகார் பெற்ற தம் மகனுக்கு ஆபிராம் ‘இஸ்மயேல்’ என்று பெயரிட்டார்.
|
15. And Hagar H1904 bore H3205 Abram H87 a son H1121 : and Abram H87 called H7121 his son H1121 's name H8034 , which H834 Hagar H1904 bore H3205 , Ishmael H3458 .
|
16. ஆகார் ஆபிராமுக்கு இஸ்மயேலைப் பெற்றெடுத்த பொழுது அவருக்கு வயது எண்பத்தாறு. * கலா 4:22 PE
|
16. And Abram H87 was fourscore H8084 and six H8337 years H8141 old H1121 , when Hagar H1904 bore H3205 H853 Ishmael H3458 to Abram H87 .
|