|
|
1. தாவீது அவ்விடத்தைவிட்டுத் தப்பி, அதுல்லாம் என்னும் கெபிக்குப் போனான்; அதை அவன் சகோதரரும் அவன் தகப்பன் வீட்டார் அனைவரும் கேட்டு, அங்கே அவனிடத்துக்குப் போனார்கள்.
|
1. David H1732 therefore departed H1980 thence H4480 H8033 , and escaped H4422 to H413 the cave H4631 Adullam H5725 : and when his brethren H251 and all H3605 his father H1 's house H1004 heard H8085 it , they went down H3381 thither H8033 to H413 him.
|
2. ஒடுக்கப்பட்டவர்கள், கடன்பட்டவர்கள், முறுமுறுக்கிறவர்கள் யாவரும் அவனோடே கூடிக்கொண்டார்கள்; அவன் அவர்களுக்குத் தலைவனானான்; இந்தப் பிரகாரமாக ஏறக்குறைய நானூறு பேர் அவனோடிருந்தார்கள்.
|
2. And every H3605 one H376 that was in distress H4689 , and every H3605 one H376 that H834 was in debt H5378 , and every H3605 one H376 that was discontented H4751 H5315 , gathered themselves H6908 unto H413 him ; and he became H1961 a captain H8269 over H5921 them : and there were H1961 with H5973 him about four H702 hundred H3967 men H376 .
|
3. தாவீது அவ்விடத்தைவிட்டு மோவாபியரைச் சேர்ந்த மிஸ்பேக்குப் போய், மோவாபின் ராஜாவைப் பார்த்து: தேவன் என்னை எப்படி நடத்துவார் என்று நான் அறியுமட்டும், என் தகப்பனும் என் தாயும் உங்களிடத்திலே தங்கியிருக்கும்படி தயவு செய்யும் என்று சொல்லி,
|
3. And David H1732 went H1980 thence H4480 H8033 to Mizpeh H4708 of Moab H4124 : and he said H559 unto H413 the king H4428 of Moab H4124 , Let my father H1 and my mother H517 , I pray thee H4994 , come forth H3318 , and be with H854 you, till H5704 H834 I know H3045 what H4100 God H430 will do H6213 for me.
|
4. அவர்களை மோவாபின் ராஜாவினிடத்தில் அழைத்துக்கொண்டு போய்விட்டான்; தாவீது அரணில் இருந்த நாளெல்லாம் அவர்கள் அங்கே அவனோடிருந்தார்கள்.
|
4. And he brought H5148 them H853 before H6440 the king H4428 of Moab H4124 : and they dwelt H3427 with H5973 him all H3605 the while H3117 that David H1732 was H1961 in the hold H4686 .
|
5. பின்பு காத் என்னும் தீர்க்கதரிசி தாவீதைப் பார்த்து: நீர் அரணில் இராமல் யூதா தேசத்திற்குப் புறப்பட்டு வாரும் என்றான்; அப்பொழுது தாவீது புறப்பட்டு ஆரேத் என்னும் காட்டிலே போனான்.
|
5. And the prophet H5030 Gad H1410 said H559 unto H413 David H1732 , Abide H3427 not H3808 in the hold H4686 ; depart H1980 , and get H935 thee into the land H776 of Judah H3063 . Then David H1732 departed H1980 , and came H935 into the forest H3293 of Hareth H2802 .
|
6. தாவீதும் அவனோடிருந்த மனுஷரும் காணப்பட்ட செய்தியைச் சவுல் கேள்விப்பட்டான்; சவுல் கிபியாவைச் சேர்ந்த ராமாவில் ஒரு தோப்பிலே உட்கார்ந்து, தன்னுடைய ஊழியக்காரர் எல்லாரும் தன்னைச் சூழ்ந்து நிற்க, தன் ஈட்டியைத் தன் கையிலே பிடித்துக்கொண்டிருக்கும்போது,
|
6. When Saul H7586 heard H8085 that H3588 David H1732 was discovered H3045 , and the men H376 that H834 were with H854 him, (now Saul H7586 abode H3427 in Gibeah H1390 under H8478 a tree H815 in Ramah H7414 , having his spear H2595 in his hand H3027 , and all H3605 his servants H5650 were standing H5324 about H5921 him;)
|
7. சவுல் தன்னண்டையில் நிற்கிற தன் ஊழியக்காரரைப் பார்த்து: பென்யமீன் புத்திரரே, கேளுங்கள்; ஈசாயின் மகன் உங்களெல்லாருக்கும் வயல்களையும் திராட்சத்தோட்டங்களையும் கொடுப்பானோ? உங்களெல்லாரையும் ஆயிரத்துக்கு அதிபதிகளும் நூற்றுக்கு அதிபதிகளுமாக வைப்பானோ?
|
7. Then Saul H7586 said H559 unto his servants H5650 that stood H5324 about H5921 him, Hear H8085 now H4994 , ye Benjamites H1145 ; will the son H1121 of Jesse H3448 give H5414 every one H3605 of you fields H7704 and vineyards H3754 , and make H7760 you all H3605 captains H8269 of thousands H505 , and captains H8269 of hundreds H3967 ;
|
8. நீங்களெல்லாரும் எனக்கு விரோதமாகக் கட்டுப்பாடுபண்ணிக்கொண்டது என்ன? ஈசாயின் மகனுடனே என் குமாரன் உடன்படிக்கைபண்ணும்போது, என் செவிக்கு அதை ஒருவனும் வெளிப்படுத்தவில்லை; எனக்காகப் பரிதாபப்பட்டு, என் செவிக்கு அதை வெளிப்படுத்த உங்களில் ஒருவனாகிலும் இல்லையா? இந்நாளில் இருக்கிறபடி எனக்குச் சதிபண்ண, என் குமாரன் என் வேலைக்காரனை எனக்கு விரோதமாக எடுத்துவிட்டானே என்றான்.
|
8. That H3588 all H3605 of you have conspired H7194 against H5921 me , and there is none H369 that showeth H1540 H853 H241 me that my son H1121 hath made a league H3772 with H5973 the son H1121 of Jesse H3448 , and there is none H369 of H4480 you that is sorry H2470 for H5921 me , or showeth unto H1540 H853 H241 me that H3588 my son H1121 hath stirred up H6965 H853 my servant H5650 against H5921 me , to lie in wait H693 , as at this H2088 day H3117 ?
|
9. அப்பொழுது சவுலின் ஊழியக்காரரோடே நின்ற ஏதோமியனாகிய தோவேக்கு பிரதியுத்தரமாக: ஈசாயின் மகனை நோபிலிருக்கிற அகிதூபின் குமாரனாகிய அகிமெலேக்கிடத்தில் வரக்கண்டேன்.
|
9. Then answered H6030 Doeg H1673 the Edomite H130 , which H1931 was set H5324 over H5921 the servants H5650 of Saul H7586 , and said H559 , I saw H7200 H853 the son H1121 of Jesse H3448 coming H935 to Nob H5011 , to H413 Ahimelech H288 the son H1121 of Ahitub H285 .
|
10. இவன் அவனுக்காகக் கர்த்தரிடத்தில் விசாரித்து, அவனுக்கு வழிக்கு போஜனத்தைக் கொடுத்து, பெலிஸ்தனாகிய கோலியாத்தின் பட்டயத்தையும் அவனுக்குக் கொடுத்தான் என்றான்.
|
10. And he inquired H7592 of the LORD H3068 for him , and gave H5414 him victuals H6720 , and gave H5414 him the sword H2719 of Goliath H1555 the Philistine H6430 .
|
11. அப்பொழுது ராஜா: அகிதூபின் குமாரனாகிய அகிமெலேக் என்னும் ஆசாரியனையும், நோபிலிருக்கிற அவன் தகப்பன் வீட்டாராகிய எல்லா ஆசாரியரையும் அழைப்பித்தான்; அவர்களெல்லாரும் ராஜாவினிடத்தில் வந்தார்கள்.
|
11. Then the king H4428 sent H7971 to call H7121 H853 Ahimelech H288 the priest H3548 , the son H1121 of Ahitub H285 , and all H3605 his father H1 's house H1004 , the priests H3548 that H834 were in Nob H5011 : and they came H935 all H3605 of them to H413 the king H4428 .
|
12. அப்பொழுது சவுல்: அகிதூபின் குமாரனே கேள் என்று சொல்ல, அவன்: இதோ, இருக்கிறேன் என் ஆண்டவனே என்றான்.
|
12. And Saul H7586 said H559 , Hear H8085 now H4994 , thou son H1121 of Ahitub H285 . And he answered H559 , Here H2009 I am , my lord H113 .
|
13. அப்பொழுது சவுல் அவனை நோக்கி: நீயும் ஈசாயின் மகனும் எனக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, இந்நாளில் இருக்கிறபடி எனக்குச் சதிபண்ண அவன் எனக்கு விரோதமாக எழும்பும்படிக்கு, நீ அவனுக்கு அப்பமும் பட்டயமும் கொடுத்து, தேவசந்நிதியில் அவனுக்காக விசாரித்தது என்ன என்றான்.
|
13. And Saul H7586 said H559 unto H413 him, Why H4100 have ye conspired H7194 against H5921 me, thou H859 and the son H1121 of Jesse H3448 , in that thou hast given H5414 him bread H3899 , and a sword H2719 , and hast inquired H7592 of God H430 for him , that he should rise H6965 against H413 me , to lie in wait H693 , as at this H2088 day H3117 ?
|
14. அகிமெலேக் ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: உம்முடைய எல்லா ஊழியக்காரரிலும் தாவீதைப் போல, ராஜாவுக்கு மருமகனும், உம்முடைய கட்டளைகளின்படி செய்து வருகிறவனும், உம்முடைய வீட்டிலே கனமுள்ளவனுமாயிருக்கிற உண்மையுள்ளவன் யார்?
|
14. Then Ahimelech H288 answered H6030 H853 the king H4428 , and said H559 , And who H4310 is so faithful H539 among all H3605 thy servants H5650 as David H1732 , which is the king H4428 's son H2860 -in-law , and goeth H5493 at H413 thy bidding H4928 , and is honorable H3513 in thine house H1004 ?
|
15. இன்றையதினம் அவனுக்காக தேவசந்நிதியில் விசாரிக்கத் தொடங்கினேனோ? அது எனக்குத் தூரமாயிருப்பதாக; ராஜா தம்முடைய அடியானாகிய என்மேலாகிலும் என் தகப்பன் வீட்டாரில் எவன் மேலாகிலும் குற்றம் சுமத்தவேண்டாம்; உம்முடைய அடியான் இவைகளிலெல்லாம் ஒரு சிறிய காரியமாகிலும் பெரிய காரியமாகிலும் அறிந்திருந்ததில்லை என்றான்.
|
15. Did I then H3117 begin H2490 to inquire H7592 of God H430 for him? be it far H2486 from me : let not H408 the king H4428 impute H7760 any thing H1697 unto his servant H5650 , nor to all H3605 the house H1004 of my father H1 : for H3588 thy servant H5650 knew H3045 nothing H3808 of all H3605 this H2063 , less H6996 or H176 more H1419 .
|
16. ராஜாவோ: அகிமெலேக்கே, நீயும் உன் தகப்பன் வீட்டார் அனைவரும் சாகவே சாகவேண்டும் என்றான்.
|
16. And the king H4428 said H559 , Thou shalt surely die H4191 H4191 , Ahimelech H288 , thou H859 , and all H3605 thy father H1 's house H1004 .
|
17. பின்பு ராஜா தன்னண்டையிலே நிற்கிற சேவகரை நோக்கி: நீங்கள் போய், கர்த்தருடைய ஆசாரியர்களைக் கொல்லுங்கள்; அவர்கள் கையும் தாவீதோடே இருக்கிறது; அவன் ஓடிப்போகிறதை அவர்கள் அறிந்திருந்தும், அதை எனக்கு வெளிப்படுத்தவில்லை என்றான்; ராஜாவின் வேலைக்காரரோ, கர்த்தருடைய ஆசாரியர்களைக் கொல்லத் தங்கள் கைகளை நீட்ட சம்மதிக்கவில்லை.
|
17. And the king H4428 said H559 unto the footmen H7323 that stood H5324 about H5921 him, Turn H5437 , and slay H4191 the priests H3548 of the LORD H3068 ; because H3588 their hand H3027 also H1571 is with H5973 David H1732 , and because H3588 they knew H3045 when H3588 he H1931 fled H1272 , and did not H3808 show H1540 H853 it to me H241 . But the servants H5650 of the king H4428 would H14 not H3808 put forth H7971 H853 their hand H3027 to fall H6293 upon the priests H3548 of the LORD H3068 .
|
18. அப்பொழுது ராஜா தோவேக்கை நோக்கி: நீ போய் ஆசாரியர்களைக் கொன்றுபோடு என்றான்; ஏதோமியனாகிய தோவேக்கு ஆசாரியர்கள்மேல்விழுந்து, சணல் நூல் ஏபோத்தைத் தரித்திருக்கும் எண்பத்தைந்துபேரை அன்றையதினம் கொன்றான்.
|
18. And the king H4428 said H559 to Doeg H1673 , Turn H5437 thou H859 , and fall H6293 upon the priests H3548 . And Doeg H1673 the Edomite H130 turned H5437 , and he H1931 fell H6293 upon the priests H3548 , and slew H4191 on that H1931 day H3117 fourscore H8084 and five H2568 persons H376 that did wear H5375 a linen H906 ephod H646 .
|
19. ஆசாரியர்களின் பட்டணமாகிய நோபிலுமுள்ள புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், கழுதைகளையும், ஆடுகளையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டான்.
|
19. And Nob H5011 , the city H5892 of the priests H3548 , smote H5221 he with the edge H6310 of the sword H2719 , both men H4480 H376 and women H802 , children H4480 H5768 and sucklings H3243 , and oxen H7794 , and asses H2543 , and sheep H7716 , with the edge H6310 of the sword H2719 .
|
20. அகிதூபின் குமாரனாகிய அகிமெலேக்கின் குமாரரில் அபியத்தார் என்னும் பேருள்ள ஒருவன் தப்பி, தாவீது இருக்கும் புறமாக ஓடிப்போய்,
|
20. And one H259 of the sons H1121 of Ahimelech H288 the son H1121 of Ahitub H285 , named H8034 Abiathar H54 , escaped H4422 , and fled H1272 after H310 David H1732 .
|
21. சவுல் கர்த்தருடைய ஆசாரியர்களைக் கொன்றுபோட்ட செய்தியை தாவீதுக்கு அறிவித்தான்.
|
21. And Abiathar H54 showed H5046 David H1732 that H3588 Saul H7586 had slain H2026 H853 the LORD H3068 's priests H3548 .
|
22. அப்பொழுது தாவீது அபியத்தாரைப் பார்த்து: ஏதோமியனாகிய தோவேக்கு அங்கே இருந்தபடியினாலே, அவன் எவ்விதத்திலும் சவுலுக்கு அதை அறிவிப்பான் என்று அன்றையதினமே அறிந்திருந்தேன்; உன் தகப்பன் வீட்டாராகிய எல்லாருடைய மரணத்துக்கும் காரணம் நானே.
|
22. And David H1732 said H559 unto Abiathar H54 , I knew H3045 it that H1931 day H3117 , when H3588 Doeg H1673 the Edomite H130 was there H8033 , that H3588 he would surely tell H5046 H5046 Saul H7586 : I H595 have occasioned H5437 the death of all H3605 the persons H5315 of thy father H1 's house H1004 .
|
23. நீ என்னிடத்தில் இரு, பயப்படவேண்டாம்; என் பிராணனை வாங்கத்தேடுகிறவனே உன் பிராணனையும் வாங்கத்தேடுகிறான்; நீ என் ஆதரவிலே இரு என்றான்.
|
23. Abide H3427 thou with H854 me, fear H3372 not H408 : for H3588 he that H834 seeketh H1245 H853 my life H5315 seeketh H1245 H853 thy life H5315 : but H3588 with H5973 me thou H859 shalt be in safeguard H4931 .
|