Bible Versions
Bible Books

Isaiah 27:1 (TOV) Tamil Old BSI Version

1 அக்காலத்திலே கர்த்தர் லிவியாதான் என்னும் நீண்ட பாம்பை, லிவியாதான் என்னும் கோணலான சர்ப்பத்தையே, கடிதும் பெரிதும் பலத்ததுமான தமது பட்டயத்தால் தண்டிப்பார்; சமுத்திரத்தில் இருக்கிற வலுசர்ப்பத்தைக் கொன்றுபோடுவார்.
2 அக்காலத்திலே நல்ல திராட்சரசத்தைத் தரும் திராட்சத்தோட்டம் உண்டாயிருக்கும்; அதைக் குறித்துப் பாடுங்கள்.
3 கர்த்தராகிய நான் அதைக் காப்பாற்றி, அடிக்கடி அதற்குத் தண்ணீர்ப்பாய்ச்சி, ஒருவரும் அதைச் சேதப்படுத்தாதபடிக்கு அதை இரவும்பகலும் காத்துக்கொள்வேன்.
4 உக்கிரம் என்னிடத்தில் இல்லை; முட்செடியையும் நெரிஞ்சிலையும் எனக்கு விரோதமாய் யுத்தத்தில் கொண்டுவருகிறவன் யார்? நான் அவைகள்மேல் வந்து, அவைகளை ஏகமாய்க் கொளுத்திவிடுவேன்;
5 இல்லாவிட்டால் அவன் என்பெலனைப் பற்றிக்கொண்டு என்னோடே ஒப்புரவாகட்டும்; அவன் என்னோடே ஒப்புரவாவான்.
6 யாக்கோபு வேர்பற்றி, இஸ்ரவேல் பூத்துக்காய்த்து உலகத்தைப் பலனால் நிரப்பும் நாட்கள் வரும்.
7 அவர் அவனை அடித்தவர்களை அடித்ததுபோல இவனை அடிக்கிறாரோ? அவர்கள் கொல்லப்படும் கொலையாய் இவன் கொல்லப்படுகிறானோ?
8 தேவரீர் ஜனத்தைத் துரத்திவிடுகையில் மட்டாய் அதனோடே வழக்காடுகிறீர்; கொண்டல் காற்றடிக்கிற நாளிலே அவர் தம்முடைய கடுங்காற்றினால் அதை விலக்கிவிடுகிறார்.
9 ஆகையால், அதினால் யாக்கோபின் அக்கிரமம் நிக்கிரகம்பண்ணப்படும்; தோப்புவிக்கிரகங்களும் சிலைகளும் இனி நிற்காதபடி அவர்கள் பலிபீடங்களின் கல்லுகளையெல்லாம் நொறுக்கப்பட்ட சுண்ணாம்பு கல்லுகளாக்கிவிடும்போது, அவர்களுடைய பாவத்தை அவர் அகற்றுவாரென்பதே அதினால் உண்டாகும் பலன்.
10 அரணான நகரம் அவாந்தரையாகும், அந்த வாசஸ்தலம் தள்ளுண்டு வனாந்தரத்தைப்போல விட்டுவிடப்பட்டதாயிருக்கும்; கன்றுக்குட்டிகள் அங்கே மேய்ந்து, அங்கே படுத்துக்கொண்டு, அதின் தழைகளைத் தின்னும்.
11 அதின் கொப்புகள் உலரும்போது ஒடிந்துபோகும்; ஸ்திரீகள் வந்து அவைகளைக் கொளுத்திவிடுவார்கள்; அது உணர்வுள்ள ஜனமல்ல; ஆகையால் அதை உண்டாக்கினவர் அதற்கு இரங்காமலும், அதை உருவாக்கினவர் அதற்குக் கிருபைசெய்யாமலும் இருப்பார்.
12 அக்காலத்திலே, கர்த்தர் ஆற்றங்கரையின் விளைவுதொடங்கி எகிப்தின் நதிமட்டும் போரடிப்பார்; இஸ்ரவேல் புத்திரரே, நீங்கள் ஒவ்வொருவராய்ச் சேர்க்கப்படுவீர்கள்.
13 அக்காலத்திலே பெரிய எக்காளம் ஊதப்படும்; அப்பொழுது, அசீரியா தேசத்திலே சிதறடிக்கப்பட்டவர்களும், எகிப்துதேசத்திலே துரத்திவிடப்பட்டவர்களும் வந்து, எருசலேமிலுள்ள பரிசுத்த பர்வதத்திலே கர்த்தரைப் பணிந்துகொள்ளுவார்கள்.
1 In that H1931 D-PPRO-3MS day H3117 B-AMS the LORD H3068 EDS with his sore H7186 and great H1419 and strong H2389 sword H2719 shall punish H6485 VQY3MS leviathan H3882 NMS the piercing H1281 serpent H5175 NMS , even leviathan H3882 NMS that crooked H6129 serpent H5175 NMS ; and he shall slay H2026 the dragon H8577 that H834 RPRO is in the sea H3220 .
2 In that H1931 D-PPRO-3MS day H3117 B-AMS sing H6031 ye unto her , A vineyard H3754 of red wine H2531 .
3 I H589 PPRO-1MS the LORD H3068 EDS do keep H5341 it ; I will water H8248 it every moment H7281 L-NMP : lest H6435 CONJ any hurt H6485 VQY3MS it , I will keep H5341 it night H3915 GMS and day H3117 .
4 Fury H2534 NFS is not H369 NPAR in me : who H4310 IPRO would set H5414 VQY3MS-1MS the briers H8068 and thorns H7898 against me in battle H4421 ? I would go H6585 through them , I would burn H6702 them together H3162 .
5 Or H176 CONJ let him take hold H2388 VHI3MS of my strength H4581 , that he may make H6213 VQY3MS peace H7965 NMS with me ; and he shall make H6213 peace H7965 NMS with me .
6 He shall cause them that come H935 of Jacob H3290 to take root H8327 : Israel H3478 shall blossom H6692 and bud H6524 , and fill H4390 the face H6440 CMP of the world H8398 NFS with fruit H8570 .
7 Hath he smitten H5221 him , as he smote H4347 those that smote H5221 him ? or is he slain H2026 according to the slaughter H2027 of them that are slain H2026 by him ?
8 In measure H5432 , when it shooteth forth H7971 , thou wilt debate H7378 with it : he stayeth H1898 his rough H7186 wind H7307 B-CMS-3MS in the day H3117 B-NMS of the east wind H6921 .
9 By this H2063 therefore H3651 L-ADV shall the iniquity H5771 of Jacob H3290 be purged H3722 ; and this H2088 W-PMS is all H3605 NMS the fruit H6529 NMS to take away H5493 his sin H2403 CFS-3MS ; when he maketh H7760 all H3605 NMS the stones H68 CMP of the altar H4196 NMS as chalkstones H68 that are beaten in sunder H5310 , the groves H842 and images H2553 shall not H3808 ADV stand up H6965 .
10 Yet H3588 CONJ the defensed H1219 city H5892 GFS shall be desolate H910 , and the habitation H5116 forsaken H7971 , and left H5800 like a wilderness H4057 : there H8033 ADV shall the calf H5695 feed H7462 , and there H8033 W-ADV shall he lie down H7257 , and consume H3615 the branches H5585 thereof .
11 When the boughs H7105 thereof are withered H3001 , they shall be broken off H7665 : the women H802 GFP come H935 , and set them on fire H215 : for H3588 CONJ it is a people H5971 NMS of no H3808 NADV understanding H998 : therefore H3651 ADV he H1931 PPRO-3MS that made H6213 them will not H3808 ADV have mercy H7355 on them , and he that formed H3335 them will show them no favor H2603 .
12 And it shall come to pass H1961 W-VQQ3MS in that H1931 D-PPRO-3MS day H3117 B-AMS , that the LORD H3068 EDS shall beat off H2251 from the channel H7641 of the river H5104 D-NMS unto H5704 PREP the stream H5158 NMS of Egypt H4714 , and ye H859 W-PPRO-2MP shall be gathered H3950 one H259 by one H259 MMS , O ye children H1121 of Israel H3478 LMS .
13 And it shall come to pass H1961 W-VQQ3MS in that H1931 D-PPRO-3MS day H3117 B-AMS , that the great H1419 AMS trumpet H7782 shall be blown H8628 , and they shall come H935 which were ready to perish H6 in the land H776 B-GFS of Assyria H804 GFS , and the outcasts H5080 in the land H776 B-GFS of Egypt H4714 , and shall worship H7812 the LORD H3068 L-EDS in the holy H6944 mount H2022 at Jerusalem H3389 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×