Bible Versions
Bible Books

Zechariah 11:14 (TOV) Tamil Old BSI Version

1 லீபனோனே, அக்கினி உன் கேதுருமரங்களைப் பட்சிக்கும்படி உன் வாசல்களைத் திற.
2 தேவதாரு விருட்சங்களே, புலம்புங்கள்; கேதுமரங்கள் விழுந்ததே; பிரபலமானவைகள் பாழாக்கப்பட்டன. பாசானின் கர்வாலிமரங்களே, புலம்புங்கள்; அரணுள்ள சோலை கீழே தள்ளப்பட்டது.
3 மேய்ப்பர்களின் மகிமை அழிந்துபோனபடியால், அவர்கள் அலறுகிற சத்தம் கேட்கப்படுகிறது; யோர்தானின் பெருமை அழிந்துபோனபடியால், பாலசிங்கங்கள் கர்ச்சிக்கிற சத்தம் கேட்கப்படுகிறது.
4 என் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், கொலையுண்கிற ஆடுகளை மேய்க்கக்கடவாய்.
5 அவைகளை உடையவர்கள், அவைகளைக் கொன்றுபோட்டுத் தங்களுக்குக் குற்றமில்லையென்று எண்ணுகிறார்கள். அவைகளை விற்கிறவர்கள், கர்த்தருக்கு ஸ்தோத்திரம், நாங்கள் ஐசுவரியமுள்ளவர்களானோம் என்கிறார்கள்; அவைகளை மேய்க்கிறவர்கள், அவைகள்மேல் இரக்கம் வைக்கிறதில்லை.
6 நான் இனி தேசத்துக் குடிகளின்மேல் இரக்கம் வையாமல் மனுஷரில் யாவரையும் அவனவனுடைய அயலான் கையிலும், அவனவனுடைய ராஜாவின் கையிலும் அகப்படப்பண்ணுவேன்; அவர்கள் தேசத்தை அழித்தும், நான் இவர்களை அவர்கள் கைக்குத் தப்புவிப்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.
7 கொலையுண்கிற மந்தையாகிய சிறுமைப்பட்ட உங்களை நான் மேய்ப்பேன்; நான் இரண்டு கோல்களை எடுத்து, ஒன்றிற்கு அநுக்கிரகம் என்றும், ஒன்றிற்கு நிக்கிரகம் என்றும் பேரிட்டு மந்தையை மேய்த்து,
8 ஒரே மாதத்திலே மூன்று மேய்ப்பரையும் அதம்பண்ணினேன்; என் ஆத்துமா அவர்களை அரோசித்தது; அவர்கள் ஆத்துமா என்னையும் வெறுத்தது.
9 இனி நான் உங்களை மேய்ப்பதில்லை; சாகிறது சாகட்டும், அதமாகிறது அதமாகட்டும்; மீதியானவைகளோவென்றால், ஒன்றின் மாம்சத்தை ஒன்று தின்னக்கடவது என்று நான் சொல்லி,
10 அநுக்கிரகம் என்னப்பட்ட என் கோலை எடுத்து, நான் அந்த ஜனங்களெல்லாரோடும் பண்ணியிருந்த என் உடன்படிக்கை அற்றுப்போகும்படிக்கு அதை முறித்துப்போட்டேன்.
11 அந்நாளிலே அது அற்றுப்போயிற்று; அப்படியே மந்தையில் எனக்குக் காத்திருந்த சிறுமைப்பட்டவைகள் அது கர்த்தருடைய வார்த்தையென்று அறிந்துகொண்டன.
12 உங்கள் பார்வைக்கு நன்றாய்க் கண்டால், என் கூலியைத் தாருங்கள்; இல்லாவிட்டால் இருக்கட்டும் என்று அவர்களோடே சொன்னேன்; அப்பொழுது எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசை நிறுத்தார்கள்.
13 கர்த்தர் என்னை நோக்கி: அதைக் குயவனிடத்தில் எறிந்துவிடு என்றார்; இதுவே நான் அவர்களால் மதிக்கப்பட்ட மேன்மையான மதிப்பு; நான் அந்த முப்பது வெள்ளிக்காசை எடுத்து, அவைகளைக் குயவனுக்கென்று கர்த்தருடைய ஆலயத்திலே எறிந்துவிட்டேன்.
14 நான் யூதாவுக்கும் இஸ்ரவேலுக்கும் இருக்கிற சகோதரக்கட்டை அற்றுப்போகப்பண்ணும்படிக்கு, நிக்கிரகம் என்னப்பட்ட என் இரண்டாம் கோலையும் முறித்தேன்.
15 கர்த்தர் என்னை நோக்கி: நீ மதியற்ற ஒரு மேய்ப்பனுடைய ஆயுதங்களை இன்னும் எடுத்துக்கொள்.
16 இதோ, நான் தேசத்திலே ஒரு மேய்ப்பனை எழும்பப்பண்ணுவேன்; அவன் அதமாகிறவைகளைப் பராமரிக்காமலும், சிதறுண்டதைத் தேடாமலும், நொறுங்குண்டதைக் குணமாக்காமலும், இளைத்திருக்கிறதை ஆதரிக்காமலும், கொழுத்ததின் மாம்சத்தைத் தின்று, அவைகளுடைய குளம்புகளை உடைத்துப்போடுவான்.
17 மந்தையைக் கைவிடுகிற அபத்தமான மேய்ப்பனுக்கு ஐயோ! பட்டயம் அவன் புயத்தின்மேலும் அவன் வலது கண்ணின்மேலும் வரும்; அவன் புயமுழுதும் சூம்பிப்போகும்; அவன் வலது கண் முற்றிலும் இருள் அடையும் என்றார்.
1 Open H6605 thy doors H1817 , O Lebanon H3844 , that the fire H784 CMS may devour H398 thy cedars H730 .
2 Howl H3213 , fir tree H1265 ; for H3588 CONJ the cedar H730 is fallen H5307 ; because H834 RPRO the mighty H117 are spoiled H7703 : howl H3213 , O ye oaks H437 of Bashan H1316 ; for H3588 CONJ the forest H3293 of the vintage H1208 is come down H3381 VQQ3MS .
3 There is a voice H6963 CMS of the howling H3215 of the shepherds H7462 ; for H3588 CONJ their glory H155 is spoiled H7703 : a voice H6963 CMS of the roaring H7581 CFS of young lions H3715 NMP ; for H3588 CONJ the pride H1347 CMS of Jordan H3383 is spoiled H7703 .
4 Thus H3541 saith H559 VQQ3MS the LORD H3068 EDS my God H430 ; Feed H7462 the flock H6629 NMS of the slaughter H2028 ;
5 Whose H834 RPRO possessors H7069 slay H2026 them , and hold themselves not guilty H816 : and they that sell H4376 them say H559 VQY3MS , Blessed H1288 VWQ3MS be the LORD H3068 EDS ; for I am rich H6238 : and their own shepherds H7462 pity H2550 VQY3MS them not H3808 W-NPAR .
6 For H3588 CONJ I will no H3808 NADV more H5750 ADV pity H2550 the inhabitants H3427 of the land H776 D-GFS , saith H5002 the LORD H3068 EDS : but , lo H2009 IJEC , I H595 PPRO-1MS will deliver H4672 the men H120 D-NMS every one H376 NMS into his neighbor H7453 NMS-3MS \'s hand H3027 B-CFS , and into the hand H3027 of his king H4428 : and they shall smite H3807 the land H776 D-GFS , and out of their hand H3027 I will not H3808 W-NADV deliver H5337 them .
7 And I will feed H7462 the flock H6629 NMS of slaughter H2028 , even you , O poor H6041 of the flock H6629 . And I took H3947 unto me two H8147 ONUM staves H4731 ; the one H259 I called H7121 VQQ1CS Beauty H5278 , and the other H259 I called H7121 VQQ1CS Bands H2256 ; and I fed H7462 the flock H6629 .
8 Three H7969 BMS shepherds H7462 also I cut off H3582 in one H259 MMS month H3391 ; and my soul H5315 CFS-1MS loathed H7114 them , and their soul H5315 CFS-3MP also H1571 W-CONJ abhorred H973 me .
9 Then said H559 W-VQY1MS I , I will not H3808 NADV feed H7462 you : that that dieth H4191 , let it die H4191 ; and that that is to be cut off H3582 , let it be cut off H3582 ; and let the rest H7604 eat H398 every one H802 NFS the flesh H1320 CMS of another H7468 .
10 And I took H3947 my staff H4731 , even Beauty H5278 , and cut it asunder H1438 , that I might break H6565 my covenant H1285 B-CFS-1MS which H834 RPRO I had made H3772 VQQ1MS with H854 PREP all H3605 NMS the people H5971 .
11 And it was broken H6565 in that H1931 D-PPRO-3MS day H3117 B-AMS : and so H3651 ADV the poor H6041 of the flock H6629 that waited upon H8104 me knew H3045 W-VQY3MP that H3588 CONJ it H1931 PPRO-3MS was the word H1697 NMS of the LORD H3068 EDS .
12 And I said H559 W-VQY1MS unto H413 PREP-3MP them , If H518 PART ye think good H2895 , give H3051 VQI2MP me my price H7939 ; and if H518 PART not H3808 NADV , forbear H2308 . So they weighed for my price H7939 thirty H7970 MMP pieces of silver H3701 NMS .
13 And the LORD H3068 EDS said H559 W-VQY3MS unto H413 PREP me , Cast H7993 it unto H413 PREP the potter H3335 : a goodly H145 price H3366 that H834 RPRO I was prised at H3365 of M-PREP-3MP them . And I took H3947 the thirty H7970 MMP pieces of silver H3701 , and cast H7993 them to H413 PREP the potter H3335 in the house H1004 CMS of the LORD H3068 EDS .
14 Then I cut asunder H1438 mine other H8145 D-ONUM staff H4731 , even Bands H2256 , that I might break H6565 the brotherhood H264 between H996 PREP Judah H3063 and Israel H3478 LMS .
15 And the LORD H3068 EDS said H559 W-VQY3MS unto H413 me , Take H3947 VQI2MS unto thee yet H5750 ADV the instruments H3627 CMS of a foolish H196 shepherd H7462 VQPMS .
16 For H3588 CONJ , lo H2009 IJEC , I H595 PPRO-1MS will raise H6965 VHPMS up a shepherd H7462 VQPMS in the land H776 B-NFS , which shall not H3808 ADV visit H6485 VQY3MS those that be cut off H3582 , neither H3808 ADV shall seek H1245 the young one H5289 , nor H3808 NADV heal H7495 that that is broken H7665 , nor H3808 NADV feed H3557 that that standeth still H5324 : but he shall eat H398 VQY3MS the flesh H1320 of the fat H1277 , and tear their claws in pieces H6561 .
17 Woe H1945 to the idol H457 shepherd H7473 that leaveth H5800 the flock H6629 ! the sword H2719 GFS shall be upon H5921 PREP his arm H2220 , and upon H5921 PREP his right H3225 CFS-3MS eye H5869 CMS : his arm H2220 shall be clean dried up H3001 , and his right H3225 CFS-3MS eye H5869 W-CMS shall be utterly darkened H3543 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×