|
|
1. தாவீது மலையுச்சியிலிருந்து சற்றப்புறம் நடந்துபோனபோது, இதோ, மேவிபோசேத்தின் காரியக்காரனாகிய சீபா, பொதிகளைச் சுமக்கிற இரண்டு கழுதைகளை ஓட்டிக்கொண்டுவந்து, அவனைச் சந்தித்தான்; அவைகளில் இருநூறு அப்பங்களும், வற்றலான நூறு திராட்சப்பழக்குலைகளும், வசந்தகாலத்துப் பலனான நூறு குலைகளும், ஒரு துருத்தி திராட்சரசமும் இருந்தது.
|
1. And when David H1732 was a little H4592 past H5674 the top H4480 H7218 of the hill , behold H2009 , Ziba H6717 the servant H5288 of Mephibosheth H4648 met H7125 him , with a couple H6776 of asses H2543 saddled H2280 , and upon H5921 them two hundred H3967 loaves of bread H3899 , and a hundred H3967 bunches of raisins H6778 , and a hundred H3967 of summer fruits H7019 , and a bottle H5035 of wine H3196 .
|
2. ராஜா சீபாவைப்பார்த்து: இவைகள் என்னத்திற்கு என்று கேட்டதற்கு, சீபா: கழுதைகள் ராஜாவின் வீட்டார் ஏறுகிறதற்கும், அப்பங்களும் பழங்களும், வாலிபர் புசிக்கிறதற்கும், திராட்சரசம் வனாந்தரத்தில் விடாய்த்துப்போனவர்கள் குடிக்கிறதற்குமே என்றான்.
|
2. And the king H4428 said H559 unto H413 Ziba H6717 , What H4100 meanest thou by these H428 ? And Ziba H6717 said H559 , The asses H2543 be for the king H4428 's household H1004 to ride on H7392 ; and the bread H3899 and summer fruit H7019 for the young men H5288 to eat H398 ; and the wine H3196 , that such as be faint H3287 in the wilderness H4057 may drink H8354 .
|
3. அப்பொழுது ராஜா: உன் ஆண்டவனுடைய குமாரன் எங்கே என்று கேட்டதற்கு, சீபா ராஜாவை நோக்கி: எருசலேமில் இருக்கிறான்; இன்று இஸ்ரவேல் வீட்டார் என் தகப்பனுடைய ராஜ்யத்தை என் வசமாய்த் திரும்பப்பண்ணுவார்கள் என்றான் என்று சொன்னான்.
|
3. And the king H4428 said H559 , And where H346 is thy master H113 's son H1121 ? And Ziba H6717 said H559 unto H413 the king H4428 , Behold H2009 , he abideth H3427 at Jerusalem H3389 : for H3588 he said H559 , Today H3117 shall the house H1004 of Israel H3478 restore H7725 me H853 the kingdom H4468 of my father H1 .
|
4. அப்பொழுது ராஜா சீபாவை நோக்கி: மேவிபோசேத்திற்கு உண்டானதெல்லாம் உன்னுடையதாயிற்று என்றான். அதற்குச் சீபா: ராஜாவாகிய என் ஆண்டவனே, உம்முடைய கண்களில் எனக்குத் தயை கிடைக்கவேண்டும் என்று நான் பணிந்து கேட்டுக்கொள்ளுகிறேன் என்றான்.
|
4. Then said H559 the king H4428 to Ziba H6717 , Behold H2009 , thine are all H3605 that H834 pertained unto Mephibosheth H4648 . And Ziba H6717 said H559 , I humbly beseech H7812 thee that I may find H4672 grace H2580 in thy sight H5869 , my lord H113 , O king H4428 .
|
5. தாவீது ராஜா பகூரிம்மட்டும் வந்தபோது, இதோ, சவுல் வீட்டு வம்சத்தானாயிருக்கிற கேராவின் குமாரனாகிய சீமேயி என்னும் பேருள்ள ஒரு மனுஷன் அங்கேயிருந்து புறப்பட்டு, தூஷித்துக்கொண்டே நடந்துவந்து,
|
5. And when king H4428 David H1732 came H935 to H5704 Bahurim H980 , behold H2009 , thence H4480 H8033 came out H3318 a man H376 of the family H4480 H4940 of the house H1004 of Saul H7586 , whose name H8034 was Shimei H8096 , the son H1121 of Gera H1617 : he came forth H3318 , and cursed H7043 still as he came H3318 .
|
6. சகல ஜனங்களும், சகல பலசாலிகளும், தாவீதின் வலதுபுறமாகவும் இடதுபுறமாகவும் நடக்கையில், தாவீதின்மேலும், தாவீது ராஜாவுடைய சகல ஊழியக்காரர்மேலும் கற்களை எறிந்தான்.
|
6. And he cast H5619 stones H68 at H853 David H1732 , and at all H3605 the servants H5650 of king H4428 David H1732 : and all H3605 the people H5971 and all H3605 the mighty men H1368 were on his right hand H4480 H3225 and on his left H4480 H8040 .
|
7. சீமேயி அவனைத் தூஷித்து: இரத்தப்பிரியனே, பேலியாளின் மனுஷனே, தொலைந்துபோ, தொலைந்துபோ.
|
7. And thus H3541 said H559 Shimei H8096 when he cursed H7043 , Come out H3318 , come out H3318 , thou bloody H1818 man H376 , and thou man H376 of Belial H1100 :
|
8. சவுலின் ஸ்தலத்தில் ராஜாவான உன்மேல் கர்த்தர் சவுல் வீட்டாரின் இரத்தப்பழியைத் திரும்பப்பண்ணினார்; கர்த்தர் ராஜ்யபாரத்தை உன் குமாரனாகிய அப்சலோமின் கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்போதும் இதோ, உன் அக்கிரமத்தில் அகப்பட்டாய்; நீ இரத்தப்பிரியனான மனுஷன் என்றான்.
|
8. The LORD H3068 hath returned H7725 upon H5921 thee all H3605 the blood H1818 of the house H1004 of Saul H7586 , in whose H834 stead H8478 thou hast reigned H4427 ; and the LORD H3068 hath delivered H5414 H853 the kingdom H4410 into the hand H3027 of Absalom H53 thy son H1121 : and, behold H2009 , thou art taken in thy mischief H7451 , because H3588 thou H859 art a bloody H1818 man H376 .
|
9. அப்பொழுது செருயாவின் குமாரன் அபிசாய் ராஜாவை நோக்கி: அந்தச் செத்த நாய் ராஜாவாகிய என் ஆண்டவனை தூஷிப்பானேன்? நான் போய் அவன் தலையை வாங்கிப்போடட்டுமே என்றான்.
|
9. Then said H559 Abishai H52 the son H1121 of Zeruiah H6870 unto H413 the king H4428 , Why H4100 should this H2088 dead H4191 dog H3611 curse H7043 H853 my lord H113 the king H4428 ? let me go over H5674 , I pray thee H4994 , and take off H5493 H853 his head H7218 .
|
10. அதற்கு ராஜா: செருயாவின் குமாரரே, எனக்கும் உங்களுக்கும் என்ன? அவன் என்னைத் தூஷிக்கட்டும்; தாவீதைத் தூஷிக்கவேண்டும் என்று கர்த்தர் அவனுக்குச் சொன்னார்; ஆகையால் ஏன் இப்படிச் செய்கிறாய் என்று கேட்கத்தக்கவன் யார் என்றான்.
|
10. And the king H4428 said H559 , What H4100 have I to do with you , ye sons H1121 of Zeruiah H6870 ? so H3541 let him curse H7043 , because H3588 the LORD H3068 hath said H559 unto him, Curse H7043 H853 David H1732 . Who H4310 shall then say H559 , Wherefore H4069 hast thou done H6213 so H3651 ?
|
11. பின்னும் தாவீது அபிசாயையும் தன் ஊழியக்காரர் எல்லாரையும் பார்த்து: இதோ, என் கர்ப்பப்பிறப்பான என் குமாரனே என் பிராணனை வாங்கத் தேடும்போது, இந்தப் பென்யமீனன் எத்தனை அதிகமாய்ச் செய்வான், அவன் தூஷிக்கட்டும்; அப்படிச் செய்ய கர்த்தர் அவனுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.
|
11. And David H1732 said H559 to H413 Abishai H52 , and to H413 all H3605 his servants H5650 , Behold H2009 , my son H1121 , which H834 came forth H3318 of my bowels H4480 H4578 , seeketh H1245 H853 my life H5315 : how much more H637 H3588 now H6258 may this Benjamite H1145 do it ? let him alone H5117 , and let him curse H7043 ; for H3588 the LORD H3068 hath bidden H559 him.
|
12. ஒருவேளை கர்த்தர் என் சிறுமையைப் பார்த்து, இந்த நாளில் அவன் நிந்தித்த நிந்தனைக்குப் பதிலாக எனக்கு நன்மையைச் சரிக்கட்டுவார் என்றான்.
|
12. It may be H194 that the LORD H3068 will look H7200 on mine affliction H6040 , and that the LORD H3068 will requite H7725 me good H2896 for H8478 his cursing H7045 this H2088 day H3117 .
|
13. அப்படியே தாவீதும் அவன் மனுஷரும் வழியே நடந்துபோனார்கள்; சீமேயியும் மலையின் பக்கத்திலே அவனுக்கு எதிராக நடந்து தூஷித்து, அவனுக்கு எதிராகக் கற்களை எறிந்து, மண்ணைத் தூற்றிக்கொண்டே வந்தான்.
|
13. And as David H1732 and his men H376 went H1980 by the way H1870 , Shimei H8096 went along H1980 on the hill H2022 's side H6763 over against H5980 him , and cursed H7043 as he went H1980 , and threw H5619 stones H68 at H5980 him , and cast H6080 dust H6083 .
|
14. ராஜாவும் அவனோடிருந்த சகல ஜனங்களும் விடாய்த்தவர்களாய், தங்குமிடத்திலே சேர்ந்து, இளைப்பாறினார்கள்.
|
14. And the king H4428 , and all H3605 the people H5971 that H834 were with H854 him, came H935 weary H5889 , and refreshed themselves H5314 there H8033 .
|
15. அப்சலோமும் இஸ்ரவேல் மனுஷராகிய சகல ஜனங்களும் அவனோடேகூட அகித்தோப்பேலும் எருசலேமுக்கு வந்தார்கள்.
|
15. And Absalom H53 , and all H3605 the people H5971 the men H376 of Israel H3478 , came H935 to Jerusalem H3389 , and Ahithophel H302 with H854 him.
|
16. அற்கியனாகிய ஊசாய் என்னும் தாவீதின் சிநேகிதன் அப்சலோமிடத்தில் வந்தபோது, ஊசாய் அப்சலோமை நோக்கி: ராஜாவே வாழ்க, ராஜாவே வாழ்க என்றான்.
|
16. And it came to pass H1961 , when H834 Hushai H2365 the Archite H757 , David H1732 's friend H7463 , was come H935 unto H413 Absalom H53 , that Hushai H2365 said H559 unto H413 Absalom H53 , God save H2421 the king H4428 , God save H2421 the king H4428 .
|
17. அப்பொழுது அப்சலோம் ஊசாயைப் பார்த்து: உன் சிநேகிதன்மேல் உனக்கு இருக்கிற தயை இதுதானோ? உன் சிநேகிதனோடே நீ போகாதே போனது என்ன என்று கேட்டான்.
|
17. And Absalom H53 said H559 to H413 Hushai H2365 , Is this H2088 thy kindness H2617 to H853 thy friend H7453 ? why H4100 wentest H1980 thou not H3808 with H854 thy friend H7453 ?
|
18. அதற்கு ஊசாய் அப்சலோமை நோக்கி: அப்படி அல்ல, கர்த்தரும் இந்த ஜனங்களும் இஸ்ரவேல் மனுஷர் அனைவரும் தெரிந்துகொள்ளுகிறவரையே நான் சேர்ந்து அவரோடே இருப்பேன்.
|
18. And Hushai H2365 said H559 unto H413 Absalom H53 , Nay H3808 ; but H3588 whom H834 the LORD H3068 , and this H2088 people H5971 , and all H3605 the men H376 of Israel H3478 , choose H977 , his will I be H1961 , and with H854 him will I abide H3427 .
|
19. இதுவும் அல்லாமல், நான் யாரிடத்தில் சேவிப்பேன்? அவருடைய குமாரனிடத்தில் அல்லவா? உம்முடைய தகப்பனிடத்தில் எப்படி சேவித்தேனோ, அப்படியே உம்மிடத்திலும் சேவிப்பேன் என்றான்.
|
19. And again H8145 , whom H4310 should I H589 serve H5647 ? should I not H3808 serve in the presence H6440 of his son H1121 ? as H834 I have served H5647 in thy father H1 's presence H6440 , so H3651 will I be H1961 in thy presence H6440 .
|
20. அப்சலோம் அகித்தோப்பேலைப் பார்த்து, நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று ஆலோசனை சொல்லும் என்றான்.
|
20. Then said H559 Absalom H53 to H413 Ahithophel H302 , Give H3051 counsel H6098 among you what H4100 we shall do H6213 .
|
21. அப்பொழுது அகித்தோப்பேல் அப்சலோமை நோக்கி: வீட்டைக்காக்க உம்முடைய தகப்பன் பின்வைத்த அவருடைய மறுமனையாட்டிகளிடத்தில் பிரவேசியும், அப்பொழுது உம்முடைய தகப்பனுக்கு நாற்றமாய்போனீர் என்பதை இஸ்ரவேலர் எல்லாரும் கேள்விப்பட்டு, உம்மோடிருக்கிற எல்லாருடைய கைகளும் பலக்கும் என்றான்.
|
21. And Ahithophel H302 said H559 unto H413 Absalom H53 , Go H935 in unto H413 thy father H1 's concubines H6370 , which H834 he hath left H5117 to keep H8104 the house H1004 ; and all H3605 Israel H3478 shall hear H8085 that H3588 thou art abhorred H887 of H854 thy father H1 : then shall the hands H3027 of all H3605 that H834 are with H854 thee be strong H2388 .
|
22. அப்படியே அப்சலோமுக்கு உப்பரிகையின்மேல் ஒரு கூடாரத்தைப் போட்டார்கள்; அங்கே அப்சலோம் சகல இஸ்ரவேலரின் கண்களுக்கு முன்பாக, தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளிடத்தில் பிரவேசித்தான்.
|
22. So they spread H5186 Absalom H53 a tent H168 upon H5921 the top H1406 of the house ; and Absalom H53 went H935 in unto H413 his father H1 's concubines H6370 in the sight H5869 of all H3605 Israel H3478 .
|
23. அந்நாட்களில் அகித்தோப்பேல் சொல்லும் ஆலோசனை தேவனுடைய வாக்கைப்போல இருந்தது; அப்படி அகித்தோப்பேலின் ஆலோசனையெல்லாம் தாவீதுக்கும் இருந்தது, அப்சலோமுக்கும் அப்படியே இருந்தது.
|
23. And the counsel H6098 of Ahithophel H302 , which H834 he counseled H3289 in those H1992 days H3117 , was as H834 if a man H376 had inquired H7592 at the oracle H1697 of God H430 : so H3651 was all H3605 the counsel H6098 of Ahithophel H302 both H1571 with David H1732 and H1571 with Absalom H53 .
|