|
|
1. {மன்னா, காடை} PS இஸ்ரயேல் மக்களின் கூட்டமைப்பினர் அனைவரும் ஏலிமிலிருந்து புறப்பட்டு ஏலிம், சீனாய் இவற்றிற்கிடையேயுள்ள சீன் பாலைநிலத்தை வந்தடைந்தனர். இவர்கள் எகிப்து நாட்டினின்று வெளியேறி வந்த இரண்டாம் மாதம் பதினைந்தாம் நாள் அது.
|
1. And they took their journey H5265 from Elim H4480 H362 , and all H3605 the congregation H5712 of the children H1121 of Israel H3478 came H935 unto H413 the wilderness H4057 of Sin H5512 , which H834 is between H996 Elim H362 and Sinai H5514 , on the fifteenth H2508 H6240 day H3117 of the second H8145 month H2320 after their departing out H3318 of the land H4480 H776 of Egypt H4714 .
|
2. இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும் அந்தப் பாலைநிலத்தில் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முறுமுறுத்தனர்.
|
2. And the whole H3605 congregation H5712 of the children H1121 of Israel H3478 murmured H3885 against H5921 Moses H4872 and Aaron H175 in the wilderness H4057 :
|
3. இஸ்ரயேல் மக்கள் அவர்களை நோக்கி, “இறைச்சிப் பாத்திரத்தின் அருகில் அமர்ந்து, அப்பம் உண்டு நிறைவடைந்து, எகிப்து நாட்டிலேயே ஆண்டவர் கையால் நாங்கள் இறந்திருந்தால் எத்துணை நலமாயிருந்திருக்கும்! ஆனால், இந்தச் சபையினர் அனைவரும் பசியால் மாண்டு போகவோ இப்பாலைநிலத்திற்குள் நீங்கள் எங்களைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறீர்கள்” என்றனர்.PE
|
3. And the children H1121 of Israel H3478 said H559 unto H413 them , Would to God H4310 H5414 we had died H4191 by the hand H3027 of the LORD H3068 in the land H776 of Egypt H4714 , when we sat H3427 by H5921 the flesh H1320 pots H5518 , and when we did eat H398 bread H3899 to the full H7648 ; for H3588 ye have brought us forth H3318 H853 into H413 this H2088 wilderness H4057 , to kill H4191 H853 this H2088 whole H3605 assembly H6951 with hunger H7458 .
|
4. PS அப்போது ஆண்டவர் மோசேயை நோக்கி, “இதோ பார்! நான் உங்களுக்காக வானத்திலிருந்து அப்பத்தைப் பொழியப் போகிறேன். மக்கள் வெளியே போய்த் தேவையானதை அன்றன்று சேகரித்துக்கொள்ள வேண்டும். என் கட்டளைப்படி நடப்பார்களா இல்லையா என்பதை நான் இவ்வாறு சோதித்தறியப் போகிறேன்.
|
4. Then said H559 the LORD H3068 unto H413 Moses H4872 , Behold H2009 , I will rain H4305 bread H3899 from H4480 heaven H8064 for you ; and the people H5971 shall go out H3318 and gather H3950 a certain rate every day H1697 H3117 H3117 , that H4616 I may prove H5254 them , whether they will walk H1980 in my law H8451 , or H518 no H3808 .
|
5. ஆனால் ஆறாம் நாளில், நாள்தோறும் அவர்கள் சேகரித்து வந்ததைவிட இருமடங்கு சேகரித்துத் தயாரித்து வைத்துக் கொள்ளவேண்டும்” என்றார். * யோவா 6:31
|
5. And it shall come to pass H1961 , that on the sixth H8345 day H3117 they shall prepare H3559 H853 that which H834 they bring in H935 ; and it shall be H1961 twice H4932 as much as H5921 H834 they gather H3950 daily H3117 H3117 .
|
6. மோசேயும் ஆரோனும் இஸ்ரயேல் மக்கள் அனைவரையும் நோக்கி, “நீங்கள், எகிப்து நாட்டினின்று உங்களை வெளியேறச் செய்தவர் ஆண்டவர் தாமே என்பதை இன்று மாலையில் உணர்ந்து கொள்ளப்போகிறீர்கள்.
|
6. And Moses H4872 and Aaron H175 said H559 unto H413 all H3605 the children H1121 of Israel H3478 , At even H6153 , then ye shall know H3045 that H3588 the LORD H3068 hath brought you out H3318 H853 from the land H4480 H776 of Egypt H4714 :
|
7. காலையில், நீங்கள் ஆண்டவரின் மாட்சியைக் காண்பீர்கள். ஏனெனில், ஆண்டவருக்கு எதிரான உங்கள் முறையீடுகளை அவர் கேட்டுள்ளார். இவ்வாறிருக்க, எங்களை எதிர்த்து நீங்கள் முறுமுறுக்க நாங்கள் யார்” என்றனர்.
|
7. And in the morning H1242 , then ye shall see H7200 H853 the glory H3519 of the LORD H3068 ; for that he heareth H8085 H853 your murmurings H8519 against H5921 the LORD H3068 : and what H4100 are we H5168 , that H3588 ye murmur H3885 against H5921 us?
|
8. பின் மோசே, “ஆண்டவருக்கு எதிராக நீங்கள் முறுமுறுக்கும் முறையீடுகளை அவர் கேட்டதால்தான் உண்பதற்கு மாலையில் இறைச்சியையும், நிறைவடைவதற்குக் காலையில் அப்பத்தையும் ஆண்டவர் உங்களுக்குத் தருகிறார். அப்படியிருக்க, நாங்கள் யார்? உங்கள் முறுமுறுப்புகள் எங்களுக்கு எதிரானவை அல்ல; ஆண்டவருக்கே எதிரானவை” என்றார்.PE
|
8. And Moses H4872 said H559 , This shall be , when the LORD H3068 shall give H5414 you in the evening H6153 flesh H1320 to eat H398 , and in the morning H1242 bread H3899 to the full H7646 ; for that the LORD H3068 heareth H8085 H853 your murmurings H8519 which H834 ye H859 murmur H3885 against H5921 him : and what H4100 are we H5168 ? your murmurings H8519 are not H3808 against H5921 us, but H3588 against H5921 the LORD H3068 .
|
9. PS மோசே ஆரோனிடம், “நீர் இஸ்ரயேல், மக்கள் கூட்டமைப்பு முழுவதையும் நோக்கி, ஆண்டவர் திருமுன் அணுகிச் செல்லுங்கள்; ஏனெனில், அவர் உங்கள் முறுமுறுப்புகளைக் கேட்டுள்ளார் என்று சொல்லும்” என்றார்.
|
9. And Moses H4872 spoke H559 unto H413 Aaron H175 , Say H559 unto H413 all H3605 the congregation H5712 of the children H1121 of Israel H3478 , Come near H7126 before H6440 the LORD H3068 : for H3588 he hath heard H8085 H853 your murmurings H8519 .
|
10. அவ்வாறே ஆரோனும் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதையும் நோக்கிப் பேசிக் கொண்டிருக்கையில், அவர்கள் பாலை நிலப்பக்கமாய்த் திரும்பினார்கள். அப்போது ஆண்டவரின் மாட்சி மேகத்தில் தோன்றியது.
|
10. And it came to pass H1961 , as Aaron H175 spoke H1696 unto H413 the whole H3605 congregation H5712 of the children H1121 of Israel H3478 , that they looked H6437 toward H413 the wilderness H4057 , and, behold H2009 , the glory H3519 of the LORD H3068 appeared H7200 in the cloud H6051 .
|
11. ஆண்டவர் மோசேயை நோக்கி,
|
11. And the LORD H3068 spoke H1696 unto H413 Moses H4872 , saying H559 ,
|
12. “இஸ்ரயேல் மக்களின் முறையீடுகளை நான் கேட்டுள்ளேன். நீ அவர்களிடம், ‘மாலையில் நீங்கள் இறைச்சி உண்ணலாம். காலையில் அப்பம் உண்டு நிறைவடையலாம். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் என்பதை இதனால் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்’ என்று சொல்” என்றார்.PE
|
12. I have heard H8085 H853 the murmurings H8519 of the children H1121 of Israel H3478 : speak H1696 unto H413 them, saying H559 , At H996 even H6153 ye shall eat H398 flesh H1320 , and in the morning H1242 ye shall be filled H7646 with bread H3899 ; and ye shall know H3045 that H3588 I H589 am the LORD H3068 your God H430 .
|
13. PS மாலையில் காடைகள் பறந்து வந்து கூடாரங்களை மூடிக்கொண்டன. காலையில் பனிப்படலம் கூடாரத்தைச் சுற்றிப் படிந்திருந்தது.
|
13. And it came to pass H1961 , that at even H6153 the quails H7958 came up H5927 , and covered H3680 H853 the camp H4264 : and in the morning H1242 the dew H2919 lay H1961 H7902 round about H5439 the host H4264 .
|
14. பனிப்படலம் மறைந்தபோது பாலைநிலப்பரப்பின்மேல் மென்மையான, தட்டையான, மெல்லிய உறைபனி போன்ற சிறிய பொருள் காணப்பட்டது.
|
14. And when the dew H2919 that lay H7902 was gone up H5927 , behold H2009 , upon H5921 the face H6440 of the wilderness H4057 there lay a small H1851 round thing H2636 , as small H1851 as the hoar frost H3713 on H5921 the ground H776 .
|
15. இஸ்ரயேல் மக்கள் அதைப் பார்த்துவிட்டு, ஒருவரை ஒருவர் நோக்கி ‘மன்னா’* என்றனர். ஏனெனில், அது என்ன என்று அவர்களுக்குத் தெரியவில்லை. அப்போது மோசே அவர்களை நோக்கி, “ஆண்டவர் உங்களுக்கு உணவாகத் தந்த அப்பம் இதுவே:
|
15. And when the children H1121 of Israel H3478 saw H7200 it , they said H559 one H376 to H413 another H251 , It H1931 is manna H4478 : for H3588 they knew H3045 not H3808 what H4100 it H1931 was . And Moses H4872 said H559 unto H413 them, This H1931 is the bread H3899 which H834 the LORD H3068 hath given H5414 you to eat H402 .
|
16. மேலும், ஆண்டவர் இட்ட கட்டளையாவது: உங்களில் ஒவ்வொருவனும் தான் உண்ணும் அளவுக்கு இதினின்று சேகரித்துக் கொள்வானாக. அதாவது தலைக்கு இரண்டு படி* வீதம் அவரவர் கூடாரத்திலுள்ள ஆள்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்” என்றார். * 1 கொரி 10:3
|
16. This H2088 is the thing H1697 which H834 the LORD H3068 hath commanded H6680 , Gather H3950 of H4480 it every man H376 according to H6310 his eating H400 , an omer H6016 for every man H1538 , according to the number H4557 of your persons H5315 ; take H3947 ye every man H376 for them which H834 are in his tents H168 .
|
17. இஸ்ரயேல் மக்களும் அவ்வாறே சேகரிக்கையில் மிகுதியாகச் சேகரித்தவரும் உண்டு; குறைவாகச் சேகரித்தவரும் உண்டு.
|
17. And the children H1121 of Israel H3478 did H6213 so H3651 , and gathered H3950 , some more H7235 , some less H4591 .
|
18. ஆனால், இரண்டு படி அளவீட்டில் அதனை அளந்து பார்த்தபோது மிகுதியாகச் சேகரித்தவருக்கு எதுவும் மிஞ்சவில்லை; குறைவாகச் சேகரித்தவருக்கும் எதுவும் குறைவுபடவில்லை. ஒவ்வொருவரும் தாம் உண்ணும் அளவுக்கே சேகரித்திருந்தனர்.
|
18. And when they did mete H4058 it with an omer H6016 , he that gathered much H7235 had nothing over H5736 H3808 , and he that gathered little H4591 had no H3808 lack H2637 ; they gathered H3950 every man H376 according to H6310 his eating H400 .
|
19. மோசே அவர்களைப் பார்த்து, “இதில் யாருமே எதையும் காலைவரை மீதி வைக்கக்கூடாது” என்றார். * 2 கொரி 8:15
|
19. And Moses H4872 said H559 , Let no H408 man H376 leave H3498 of H4480 it till H5704 the morning H1242 .
|
20. ஆயினும், மோசேக்குக் கீழ்ப்படியாமல் ஒருசிலர் காலைவரை அதில் மீதி வைத்தனர். அது புழுவைத்து நாற்றமெடுத்தது. மோசே அவர்கள்மேல் சினம் கொண்டார்.
|
20. Notwithstanding they hearkened H8085 not H3808 unto H413 Moses H4872 ; but some H376 of them left H3498 of H4480 it until H5704 the morning H1242 , and it bred H7311 worms H8438 , and stank H887 : and Moses H4872 was wroth H7107 with H5921 them.
|
21. மக்கள் தாம் உண்ணும் அளவிற்கேற்பக் காலைதோறும் அதனைச் சேகரித்தார்கள். ஏனெனில், வெயில் ஏறஏற அது உருகிவிடும்.PE
|
21. And they gathered H3950 it every morning H1242 H1242 , every man H376 according to H6310 his eating H400 : and when the sun H8121 waxed hot H2552 , it melted H4549 .
|
22. PS ஆனால், ஆறாம் நாளில் அப்பத்தை இரட்டிப்பாக, அதாவது தலைக்கு நான்கு படி வீதம் சேகரித்துக் கொண்டனர். கூட்டமைப்பின் தலைவர்கள் அனைவரும் மோசேயிடம் வந்து இதுபற்றி அறிவித்தனர்.
|
22. And it came to pass H1961 , that on the sixth H8345 day H3117 they gathered H3950 twice as much H4932 bread H3899 , two H8147 omers H6016 for one H259 man : and all H3605 the rulers H5387 of the congregation H5712 came H935 and told H5046 Moses H4872 .
|
23. அப்போது அவர் அவர்களை நோக்கி, “கடவுள் அறிவித்தபடி, நாளையதினம் ஓய்வு நாள்; ஆண்டவரின் புனிதமான ‘சாபத்து’*. எனவே நீங்கள் சுட்டு வைத்துக்கொள்ள வேண்டியதைச் சுட்டு வைத்துக்கொள்ளுங்கள். வேகவைக்க வேண்டியதை வேக வைத்துக்கொள்ளுங்கள்; எஞ்சியிருப்பவை அனைத்தையும் நாளைக் காலை மட்டும் உங்களுக்காக வைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.
|
23. And he said H559 unto H413 them, This H1931 is that which H834 the LORD H3068 hath said H1696 , Tomorrow H4279 is the rest H7677 of the holy H6944 sabbath H7676 unto the LORD H3068 : bake H644 that H853 which H834 ye will bake H644 today , and seethe H1310 that H834 ye will seethe H1310 ; and that which H3605 remaineth over H5736 lay up H5117 for you to be kept H4931 until H5704 the morning H1242 .
|
24. மோசே கட்டளையிட்டபடி அவர்கள் அதனைக் காலை வரை வைத்திருந்தபோது அதில் நாற்றம்வீசவும் இல்லை; புழு வைக்கவும் இல்லை. * விப 20:8-11
|
24. And they laid it up H5117 H853 till H5704 the morning H1242 , as H834 Moses H4872 bade H6680 : and it did not H3808 stink H887 , neither H3808 was H1961 there any worm H7415 therein.
|
25. மோசே அவர்களிடம், “இன்று நீங்கள் அதனை உண்ணுங்கள்; இன்று ஆண்டவரின் ஓய்வுநாள். எனவே இன்று அதனை வெளியில் காண முடியாது.
|
25. And Moses H4872 said H559 , Eat H398 that today H3117 ; for H3588 today H3117 is a sabbath H7676 unto the LORD H3068 : today H3117 ye shall not H3808 find H4672 it in the field H7704 .
|
26. ஆறு நாள்கள் நீங்கள் அதனைச் சேகரிக்கலாம்; ஆனால் ஏழாம் நாளாகிய ஓய்வு நாளில் ஒன்றும் கிடைக்காது” என்று அறிவித்தார்.PE
|
26. Six H8337 days H3117 ye shall gather H3950 it ; but on the seventh H7637 day H3117 , which is the sabbath H7676 , in it there shall be H1961 none H3808 .
|
27. PS ஆயினும், ஏழாம் நாளில் மக்கள் சிலர் உணவு சேகரிப்பதற்காக வெளியில் சென்றனர். ஆனால் எதையும் காணவில்லை.
|
27. And it came to pass H1961 , that there went out H3318 some of H4480 the people H5971 on the seventh H7637 day H3117 for to gather H3950 , and they found H4672 none H3808 .
|
28. ஆண்டவர் மோசேயை நோக்கி, “எவ்வளவு காலம் என் கட்டளைகளையும் சட்டங்களையும் கடைப்பிடிக்காதிருப்பீர்கள்?
|
28. And the LORD H3068 said H559 unto H413 Moses H4872 , How long H5704 H575 refuse H3985 ye to keep H8104 my commandments H4687 and my laws H8451 ?
|
29. கவனியுங்கள், ஆண்டவர் ஓய்வுநாளை உங்களுக்கு அளித்துள்ளார். அதனால், ஆறாம் நாளிலேயே இரு நாள்களுக்குரிய உணவையும் உங்களுக்கு அளிக்கிறார். எனவே, ஒவ்வொருவரும் தம் தம் உறைவிடத்தில் தங்கிவிட வேண்டும்; ஏழாம் நாளில் தம்தம் இடத்திலிருந்து எவரும் வெளியில் செல்லலாகாது” என்றார்.
|
29. See H7200 , for H3588 that the LORD H3068 hath given H5414 you the sabbath H7676 , therefore H5921 H3651 he H1931 giveth H5414 you on the sixth H8345 day H3117 the bread H3899 of two days H3117 ; abide H3427 ye every man H376 in his place H8478 , let no H408 man H376 go out H3318 of his place H4480 H4725 on the seventh H7637 day H3117 .
|
30. ஆகவே, மக்கள் ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தனர்.PE
|
30. So the people H5971 rested H7673 on the seventh H7637 day H3117 .
|
31. PS இஸ்ரயேல் குடும்பத்தார் அதனை ‘மன்னா’ என்று பெயரிட்டழைத்தனர். அது கொத்தமல்லி போன்று வெண்ணிறமாயும், தேன் கலந்து ஆக்கிய பணியாரம் போன்று சுவையாயும் இருந்தது.
|
31. And the house H1004 of Israel H3478 called H7121 H853 the name H8034 thereof Manna H4478 : and it H1931 was like coriander H1407 seed H2233 , white H3836 ; and the taste H2940 of it was like wafers H6838 made with honey H1706 .
|
32. ஆண்டவர் இட்ட ஆணையை மோசே எடுத்துரைத்தார்; நீங்கள் தலைமுறைதோறும் அழியாமல் காப்பதற்காக அதில் இரண்டு படி அளவு எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இவ்வாறாக, நான் உங்களை எகிப்து நாட்டினின்று வெளியேறச் செய்தபோது, பாலைநிலத்தில் உங்களுக்குத் தந்த உணவை இதன்மூலம் அவர்கள் கண்டுகொள்வர். * எண் 11:7-8
|
32. And Moses H4872 said H559 , This H2088 is the thing H1697 which H834 the LORD H3068 commandeth H6680 , Fill H4393 an omer H6016 of H4480 it to be kept H4931 for your generations H1755 ; that H4616 they may see H7200 H853 the bread H3899 wherewith H834 I have fed H398 you in the wilderness H4057 , when I brought you forth H3318 H853 from the land H4480 H776 of Egypt H4714 .
|
33. பின்பு மோசே ஆரோனை நோக்கி, “நீர் ஒரு கலசத்தை எடுத்து அதில் இரண்டுபடி அளவு மன்னாவை எடுத்து வையும். தலைமுறைதோறும் அழியாமல் காக்குமாறு அதனை ஆண்டவர் திருமுன் எடுத்து வையும்” என்றார்.
|
33. And Moses H4872 said H559 unto H413 Aaron H175 , Take H3947 a H259 pot H6803 , and put H5414 an omer H6016 full H4393 of manna H4478 therein H8033 , and lay it up H5117 H853 before H6440 the LORD H3068 , to be kept H4931 for your generations H1755 .
|
34. ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி, ஆரோன் அதனை உடன்படிக்கைப் பேழையில் பாதுகாப்பாக வைத்தார். * எபி 9:4
|
34. As H834 the LORD H3068 commanded H6680 H413 Moses H4872 , so Aaron H175 laid it up H5117 before H6440 the Testimony H5715 , to be kept H4931 .
|
35. இஸ்ரயேல் மக்கள், நாற்பது ஆண்டளவாக, குடியேறவேண்டிய நாட்டினைச் சென்றடையும்வரை, மன்னா உண்டனர். கானான் நாட்டு எல்லைக்குள் புகும்வரை அவர்கள் மன்னா உண்டுவந்தனர்.
|
35. And the children H1121 of Israel H3478 did eat H398 H853 manna H4478 forty H705 years H8141 , until H5704 they came H935 to H413 a land H776 inhabited H3427 ; they did eat H398 H853 manna H4478 , until H5704 they came H935 unto H413 the borders H7097 of the land H776 of Canaan H3667 .
|
36. இரண்டு படி** என்பது ‘ஏப்பா’ என்பதில் பத்தில் ஒரு பங்கு ஆகும். * யோசு 5:12 PE
|
36. Now an omer H6016 is the tenth H6224 part of an ephah H374 .
|