|
|
1. {மோசேயின் பிறப்பு} PS இவ்வாறிருக்க, லேவி குலத்தவர் ஒருவர் லேவி குலப்பெண்ணொருத்தியை மணம் செய்து கொண்டார்.
|
1. And there went H1980 a man H376 of the house H4480 H1004 of Levi H3878 , and took H3947 to wife a H853 daughter H1323 of Levi H3878 .
|
2. அவள் கருவுற்று ஓர் ஆண்மகவை ஈன்றெடுத்தாள்; அது அழகாயிருந்தது என்று கண்டாள்; மூன்று மாதங்களாக அதனை மறைத்து வைத்திருந்தாள்.
|
2. And the woman H802 conceived H2029 , and bore H3205 a son H1121 : and when she saw H7200 him that H3588 he H1931 was a goodly H2896 child , she hid H6845 him three H7969 months H3391 .
|
3. இதற்கு மேல் அதனை மறைத்து வைக்க இயலாததால், அதனுக்காகக் கோரைப்புல்லால் பேழை ஒன்று செய்து அதன்மீது நிலக்கீல், கீல் இவற்றைப் பூசினாள்; குழந்தையை அதனுள் வைத்து நைல்நதிக் கரையிலுள்ள நாணல்களுக்கிடையில் விட்டுவைத்தாள். * திப 7:20; எபி 11:23
|
3. And when she could H3201 not H3808 longer H5750 hide H6845 him , she took H3947 for him an ark H8392 of bulrushes H1573 , and daubed H2560 it with slime H2564 and with pitch H2203 , and put H7760 H853 the child H3206 therein ; and she laid H7760 it in the flags H5488 by H5921 the river H2975 's brink H8193 .
|
4. அதற்கு என்ன ஆகுமோ என்பதை அறிந்துகொள்ளக் குழந்தையின் சகோதரி தூரத்தில் நின்று கொண்டிருந்தாள்.PE
|
4. And his sister H269 stood H3320 afar off H4480 H7350 , to know H3045 what H4100 would be done H6213 to him.
|
5. PS அப்போது பார்வோனின் மகள் நைல்நதியில் நீராட இறங்கிச் சென்றாள். அவள் தோழியரோ நைல் நதிக்கரையில் உலாவிக்கொண்டிருந்தனர். அவள் நாணலிடையே பேழையைக் கண்டு தன் தோழி ஒருத்தியை அனுப்பி அதை எடுத்தாள்; அதைத் திறந்தபோது ஓர் ஆண் குழந்தையைக் கண்டாள்; அது அழுதுகொண்டிருந்தது.
|
5. And the daughter H1323 of Pharaoh H6547 came down H3381 to wash H7364 herself at H5921 the river H2975 ; and her maidens H5291 walked along H1980 by H5921 the river H2975 's side H3027 ; and when she saw H7200 H853 the ark H8392 among H8432 the flags H5488 , she sent H7971 H853 her maid H519 to fetch H3947 it.
|
6. அதன் மேல் அவள் இரக்கம் கொண்டாள். “இது எபிரேயக் குழந்தைகளுள் ஒன்று” என்றாள் அவள். உடனே குழந்தையின் சகோதரி பார்வோனின் மகளை நோக்கி,
|
6. And when she had opened H6605 it , she saw H7200 H853 the child H3206 : and, behold H2009 , the babe H5288 wept H1058 . And she had compassion H2550 on H5921 him , and said H559 , This H2088 is one of the Hebrews' children H4480 H3206 H5680 .
|
7. “உமக்குப் பதிலாகப் பாலூட்டி இக்குழந்தையை வளர்க்க, எபிரேயச் செவிலி ஒருத்தியை நான் சென்று அழைத்து வரட்டுமா?” என்று கேட்டாள்.
|
7. Then said H559 his sister H269 to H413 Pharaoh H6547 's daughter H1323 , Shall I go H1980 and call H7121 to thee a nurse H802 H3243 of H4480 the Hebrew women H5680 , that she may nurse H3243 H853 the child H3206 for thee?
|
8. பார்வோனின் மகள் அவளை நோக்கி, “சரி. சென்று வா” என்றாள். அந்தப் பெண் சென்று குழந்தையின் தாயையே அழைத்து வந்தாள்.
|
8. And Pharaoh H6547 's daughter H1323 said H559 to her, Go H1980 . And the maid H5959 went H1980 and called H7121 the child H3206 's H853 mother H517 .
|
9. பார்வோனின் மகள் அவளை நோக்கி, “இந்தக் குழந்தையை நீ எடுத்துச் செல். எனக்குப் பதிலாக நீ பாலூட்டி அதனை வளர்த்திடு. உனக்குக் கூலி கொடுப்பேன்” என்றாள். எனவே, குழந்தையை எடுத்துச் சென்று அதனைப் பாலூட்டி வளர்த்தாள் அப்பெண்.
|
9. And Pharaoh H6547 's daughter H1323 said H559 unto her , Take this child away H1980 H853 H2088 H3206 , and nurse H3243 it for me , and I H589 will give H5414 thee H853 thy wages H7939 . And the woman H802 took H3947 the child H3206 , and nursed H5134 it.
|
10. குழந்தை வளர்ந்தபின் அவள் பார்வோனின் மகளிடம் அவனைக் கொண்டுபோய் விட்டாள். அவள் அவனைத் தன் மகன் எனக்கொண்டாள். ‘நீரிலிருந்து நான் இவனை எடுத்தேன்’ என்று கூறி அவள் அவனுக்கு ‘மோசே’* என்று பெயரிட்டாள்.PE
|
10. And the child H3206 grew H1431 , and she brought H935 him unto Pharaoh H6547 's daughter H1323 , and he became H1961 her son H1121 . And she called H7121 his name H8034 Moses H4872 : and she said H559 , Because H3588 I drew H4871 him out of H4480 the water H4325 .
|
11. {மோசே மிதியானுக்குத் தப்பியோடல்} PS அக்காலத்தில் மோசே வளர்ந்துவிட்டபோது தம் இனத்தவரிடம் சென்றிருந்தார்; அவர்களுடைய பாரச் சுமைகளையும் பார்த்தார்; மேலும், தம் இனத்தவனான எபிரேயன் ஒருவனை எகிப்தியன் ஒருவன் அடிப்பதையும் கண்டார்; * திப 7:21
|
11. And it came to pass H1961 in those H1992 days H3117 , when Moses H4872 was grown H1431 , that he went out H3318 unto H413 his brethren H251 , and looked H7200 on their burdens H5450 : and he spied H7200 an Egyptian H376 H4713 smiting H5221 a Hebrew H376 H5680 , one of his brethren H4480 H251 .
|
12. சுற்றுமுற்றும் பார்த்து, யாருமே இல்லையெனக் கண்டு, அந்த எகிப்தியனை அடித்துக் கொன்று மணலுக்குள் புதைத்து விட்டார். * எபி 11:24; திப 7:23-28
|
12. And he looked H6437 this way H3541 and that way H3541 , and when he saw H7200 that H3588 there was no H369 man H376 , he slew H5221 H853 the Egyptian H4713 , and hid H2934 him in the sand H2344 .
|
13. அடுத்த நாள் அவர் வெளியே சென்றபோது, எபிரேயர் இருவருக்கிடையே கைகலப்பு நடந்து கொண்டிருந்ததைக் கண்டார்; குற்றவாளியை நோக்கி “உன் இனத்தவனை ஏன் அடிக்கிறாய்?” என்று கேட்டார். * திப 7:23-28
|
13. And when he went out H3318 the second H8145 day H3117 , behold H2009 , two H8147 men H376 of the Hebrews H5680 strove together H5327 : and he said H559 to him that did the wrong H7563 , Wherefore H4100 smitest H5221 thou thy fellow H7453 ?
|
14. அதற்கு அவன், “எங்கள்மேல் உன்னைத் தலைவனாகவும் நடுவனாகவும் நியமித்தவன் எவன்? எகிப்தியனைக் கொன்றதுபோல் என்னையும் கொல்லவா நீ இப்படிப் பேசுகிறாய்?” என்று சொன்னான். இதனால் மோசே அச்சமுற்றார்; “நடந்தது தெரிந்துவிட்டது உறுதியே” என்று சொல்லிக் கொண்டார்! * திப 7:23-28
|
14. And he said H559 , Who H4310 made H7760 thee a prince H8269 and a judge H8199 over H5921 us? intendest H559 thou H859 to kill H2026 me, as H834 thou killedst H2026 H853 the Egyptian H4713 ? And Moses H4872 feared H3372 , and said H559 , Surely H403 this thing H1697 is known H3045 .
|
15. இச்செய்தியைப் பார்வோன் கேள்வியுற்றபோது மோசேயைக் கொல்லத் தேடினான்.PEPS எனவே, மோசே பார்வோனிடமிருந்து தப்பியோடி, மிதியான் நாட்டில் குடியிருக்க வேண்டியதாயிற்று. * திப 7:23-28
|
15. Now when Pharaoh H6547 heard H8085 this H2088 H853 thing H1697 , he sought H1245 to slay H2026 H853 Moses H4872 . But Moses H4872 fled H1272 from the face H4480 H6440 of Pharaoh H6547 , and dwelt H3427 in the land H776 of Midian H4080 : and he sat down H3427 by H5921 a well H875 .
|
16. அவர் ஒரு கிணற்றருகில் அமர்ந்திருக்க, மிதியானின் அர்ச்சகருடைய ஏழு புதல்வியரும் வந்து, தம் தந்தையின் ஆட்டு மந்தைக்குத் தண்ணீர் காட்ட நீர் மொண்டு தொட்டிகளை நிரப்பினர். * திப 7:29; எபி 11:27
|
16. Now the priest H3548 of Midian H4080 had seven H7651 daughters H1323 : and they came H935 and drew H1802 water , and filled H4390 H853 the troughs H7298 to water H8248 their father H1 's flock H6629 .
|
17. அங்கு வந்த இடையர்கள் அவர்களை விரட்டினர். உடனே மோசே எழுந்து அவர்களுக்குப் பாதுகாப்பளித்தார். அவர்கள் ஆட்டு மந்தைக்குத் தண்ணீர் காட்டவும் செய்தார்.
|
17. And the shepherds H7462 came H935 and drove them away H1644 : but Moses H4872 stood up H6965 and helped H3467 them , and watered H8248 H853 their flock H6629 .
|
18. அவர்கள் தம் தந்தையான இரகுவேலிடம் சென்றபோது அவர், “என்ன, இன்று விரைவாக வந்துவிட்டீர்களே?” என்றார்.
|
18. And when they came H935 to H413 Reuel H7467 their father H1 , he said H559 , How H4069 is it that ye are come H935 so soon H4116 today H3117 ?
|
19. அவர்கள், “எகிப்தியன் ஒருவன் இடையர்களின் தொல்லையிலிருந்து எங்களை விடுவித்ததோடு, எங்களுக்குப் பதிலாகத் தண்ணீர் இறைத்தான்; ஆட்டு மந்தைக்கும் தண்ணீர் காட்டினான்” என்றார்கள்.
|
19. And they said H559 , An Egyptian H376 H4713 delivered H5337 us out of the hand H4480 H3027 of the shepherds H7462 , and also H1571 drew water enough H1802 H1802 for us , and watered H8248 H853 the flock H6629 .
|
20. அவர் தம் புதல்வியரிடம், “எங்கே அவன்? ஏன் அம்மனிதனைப் போகவிட்டீர்கள்? சாப்பிட அவனை அழைத்து வாருங்கள்” என்று கூறினார்.
|
20. And he said H559 unto H413 his daughters H1323 , And where H346 is he? why H4100 is it H2088 that ye have left H5800 H853 the man H376 ? call H7121 him , that he may eat H398 bread H3899 .
|
21. அவரோடு குடியிருக்க மோசே சம்மதிக்க, அவரும் மோசேக்குத் தம்மகள் சிப்போராவை மணமுடித்துக் கொடுத்தார்.
|
21. And Moses H4872 was content H2974 to dwell H3427 with H854 the man H376 : and he gave H5414 Moses H4872 H853 Zipporah H6855 his daughter H1323 .
|
22. அவள் ஒரு மகனை ஈன்றெடுத்தாள். ‘நான் வேற்று நாட்டில் அந்நியனாய் உள்ளேன்’ என்று கூறி மோசே அவனைக் ‘கேர்சோம்’ என்று பெயரிட்டழைத்தார்.PE
|
22. And she bore H3205 him a son H1121 , and he called H7121 H853 his name H8034 Gershom H1648 : for H3588 he said H559 , I have been H1961 a stranger H1616 in a strange H5237 land H776 .
|
23. PS இந்த நீண்ட காலத்தில் எகிப்திய மன்னன் இறந்துவிட்டான். இஸ்ரயேல் மக்களோ அடிமைத்தனத்தால் அழுது புலம்பினர். அடிமைத்தனத்தால் ஏற்பட்ட அவர்களது முறையீடு கடவுளை நோக்கி எழும்பிற்று.
|
23. And it came to pass H1961 in process of time H3117 H7227 H1992 , that the king H4428 of Egypt H4714 died H4191 : and the children H1121 of Israel H3478 sighed H584 by reason of H4480 the bondage H5656 , and they cried H2199 , and their cry H7775 came up H5927 unto H413 God H430 by reason of H4480 the bondage H5656 .
|
24. அவர்களது புலம்பலைக் கடவுள் கேட்டார். ஆபிரகாமுடனும், ஈசாக்குடனும், யாக்கோபுடனும் தாம் செய்திருந்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார்.
|
24. And God H430 heard H8085 H853 their groaning H5009 , and God H430 remembered H2142 H853 his covenant H1285 with H854 Abraham H85 , with H854 Isaac H3327 , and with H854 Jacob H3290 .
|
25. கடவுள் இஸ்ரயேல் மக்களைக் கண்ணோக்கினார். அவர்களது நிலைமைகளையும் கடவுள் அறிந்து கொண்டார். * தொநூ 15:13-14 PE
|
25. And God H430 looked upon H7200 H853 the children H1121 of Israel H3478 , and God H430 had respect H3045 unto them .
|