|
|
1. {ஆண்டவரின் கட்டளை} PS ஆண்டவர் மோசேயை நோக்கி, “எகிப்து நாட்டிலிருந்து நீ நடத்தி வந்த மக்களுடன் இங்கிருந்து புறப்பட்டுச் செல். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, ஆகியோருடன் அவர்கள் வழிமரபினருக்குத் தருவதாக நான் வாக்களித்த அந்த நாட்டிற்குச் செல்.
|
1. And the LORD H3068 said H1696 unto H413 Moses H4872 , Depart H1980 , and go up H5927 hence H4480 H2088 , thou H859 and the people H5971 which H834 thou hast brought up H5927 out of the land H4480 H776 of Egypt H4714 , unto H413 the land H776 which H834 I swore H7650 unto Abraham H85 , to Isaac H3327 , and to Jacob H3290 , saying H559 , Unto thy seed H2233 will I give H5414 it:
|
2. நான் ஒரு தூதரை உனக்குமுன் அனுப்பிக் கானானியர், எமோரியர், இத்தியர், பெரிசியர், இவ்வியர், எபூசியர் ஆகியோரைத் துரத்தி விடுவேன். * தொநூ 12:7; 26:3; 28:13
|
2. And I will send H7971 an angel H4397 before H6440 thee ; and I will drive out H1644 H853 the Canaanite H3669 , the Amorite H567 , and the Hittite H2850 , and the Perizzite H6522 , the Hivite H2340 , and the Jebusite H2983 :
|
3. பாலும் தேனும் பொழியும் நாட்டுக்குப் போங்கள். நான் உங்களோடு வரப்போவதில்லை. ஏனெனில், நீங்கள் வணங்காக் கழுத்துள்ள மக்கள், ஆதலால், வழியில் நான் உங்களை அழித்தொழிக்க நேரிடும்” என்றார்.
|
3. Unto H413 a land H776 flowing H2100 with milk H2461 and honey H1706 : for H3588 I will not H3808 go up H5927 in the midst H7130 of thee; for H3588 thou H859 art a stiffnecked H7186 H6203 people H5971 : lest H6435 I consume H3615 thee in the way H1870 .
|
4. இத்துயரச் செய்தியைக் கேட்டபோது மக்கள் அழுது புலம்பினர். யாருமே அணிகலன்கள் அணிந்துகொள்ளவில்லை.
|
4. And when the people H5971 heard H8085 H853 these H2088 evil H7451 tidings H1697 , they mourned H56 : and no H3808 man H376 did put H7896 on H5921 him his ornaments H5716 .
|
5. ஏனெனில், ஆண்டவர் மோசேயிடம், “நீங்கள் வணங்காக் கழுத்துள்ள மக்கள், நொடிப்பொழுதில் நான் உங்களிடையே வந்து, உங்களை அழித்தொழிக்கப்போகிறேன். உடனடியாக உங்கள் அணிகலன்களைக் கழற்றிவிடுங்கள். உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்பது எனக்குத் தெரியும் என இஸ்ரயேல் மக்களுக்கு அறிவி” என்று கூறியிருந்தார்.
|
5. For the LORD H3068 had said H559 unto H413 Moses H4872 , Say H559 unto H413 the children H1121 of Israel H3478 , Ye H859 are a stiffnecked H7186 H6203 people H5971 : I will come up H5927 into the midst H7130 of thee in a H259 moment H7281 , and consume H3615 thee : therefore now H6258 put off H3381 thy ornaments H5716 from H4480 H5921 thee , that I may know H3045 what H4100 to do H6213 unto thee.
|
6. அவ்வாறே, இஸ்ரயேல் மக்கள் ஓரேபு மலையை விட்டுப் புறப்பட்டபின் தங்கள் அணிகலன்களை அணியவே இல்லை.PE
|
6. And the children H1121 of Israel H3478 stripped themselves H5337 of H853 their ornaments H5716 by the mount H4480 H2022 Horeb H2722 .
|
7. {சந்திப்புக் கூடாரம்} PS மோசே பாளையத்துக்கு வெளியே கூடாரத்தைத் தூக்கிச் செல்வதும் பாளையத்திற்கு வெகு தூரத்தில் கூடாரம் அடிப்பதும் வழக்கம். அதற்கு அவர் சந்திப்புக் கூடாரம் என்று பெயரிட்டார். ஆண்டவரைத் தேடும் யாவரும் பாளையத்துக்கு வெளியேயுள்ள சந்திப்புக் கூடாரத்திற்குச் செல்வர்.
|
7. And Moses H4872 took H3947 H853 the tabernacle H168 , and pitched H5186 it without H4480 H2351 the camp H4264 , afar off H7368 from H4480 the camp H4264 , and called H7121 it the Tabernacle H168 of the congregation H4150 . And it came to pass H1961 , that every one H3605 which sought H1245 the LORD H3068 went out H3318 unto H413 the tabernacle H168 of the congregation H4150 , which H834 was without H4480 H2351 the camp H4264 .
|
8. மோசே கூடாரத்துக்குச் செல்லும் போதெல்லாம் மக்கள் அனைவரும் அவரவர் கூடார நுழைவாயிலில் எழுந்து நின்றுகொண்டு, அவர் கூடாரத்தில் நுழையும்வரை அவரைப் பார்த்துக் கொண்டேயிருப்பர்.
|
8. And it came to pass H1961 , when Moses H4872 went out H3318 unto H413 the tabernacle H168 , that all H3605 the people H5971 rose up H6965 , and stood H5324 every man H376 at his tent H168 door H6607 , and looked H5027 after H310 Moses H4872 , until H5704 he was gone H935 into the tabernacle H168 .
|
9. மோசே கூடாரத்தில் நுழைந்ததும், மேகத்தூண் இறங்கி வந்து கூடார நுழைவாயிலில் நின்று கொள்ளும். அப்போது கடவுள் மோசேயிடம் பேசுவார்.
|
9. And it came to pass H1961 , as Moses H4872 entered into H935 the tabernacle H168 , the cloudy H6051 pillar H5982 descended H3381 , and stood H5975 at the door H6607 of the tabernacle H168 , and the LORD talked H1696 with H5973 Moses H4872 .
|
10. கூடார நுழை வாயிலில் மேகத்தூண் நின்று கொண்டிருப்பதை மக்கள் அனைவரும் காண்பர். அப்போது அவரவர் கூடார நுழை வாயிலில் நின்றுகொண்டே மக்கள் அனைவரும் வணங்கித்தொழுவர்.
|
10. And all H3605 the people H5971 saw H7200 H853 the cloudy H6051 pillar H5982 stand H5975 at the tabernacle H168 door H6607 : and all H3605 the people H5971 rose up H6965 and worshiped H7812 , every man H376 in his tent H168 door H6607 .
|
11. ஒருவன் தன் நண்பனிடம் பேசுவது போலவே ஆண்டவரும் முகமுகமாய் மோசேயிடம் பேசுவார். பின்னர் மோசே பாளையத்துக்குத் திரும்புவார். இளைஞனும் நூனின் மகனுமான யோசுவா என்ற அவருடைய உதவியாளர் கூடாரத்தை விட்டகலாமல் இருப்பார்.PE
|
11. And the LORD H3068 spoke H1696 unto H413 Moses H4872 face H6440 to H413 face H6440 , as H834 a man H376 speaketh H1696 unto H413 his friend H7453 . And he turned again H7725 into H413 the camp H4264 : but his servant H8334 Joshua H3091 , the son H1121 of Nun H5126 , a young man H5288 , departed H4185 not H3808 out of H4480 H8432 the tabernacle H168 .
|
12. {ஆண்டவரின் வாக்குறுதி} PS மோசே ஆண்டவரிடம், “‘இம்மக்களை நடத்திச்செல்’ என்று நீரே என்னிடம் கூறியிருந்தும் என்னோடு அனுப்பப்போகும் ஆளைப்பற்றி ஒன்றும் தெரிவிக்கவில்லை. ‘பெயர் உட்பட உன்னை எனக்குத் தெரியும்’ என்றும் ‘நீ என் பார்வையில் தயை பெற்றுள்ளாய்’ என்றும் கூறியுள்ளீர்.
|
12. And Moses H4872 said H559 unto H413 the LORD H3068 , See H7200 , thou H859 sayest H559 unto H413 me , Bring up H5927 H853 this H2088 people H5971 : and thou H859 hast not H3808 let me know H3045 H853 whom H834 thou wilt send H7971 with H5973 me . Yet thou H859 hast said H559 , I know H3045 thee by name H8034 , and thou hast also H1571 found H4672 grace H2580 in my sight H5869 .
|
13. இப்போதும் உம் பார்வையில் நான் தயைபெற்றிருந்தால், உம்வழிகளை எனக்குக் காட்டியருளும். உம்மை இதனால் அறிந்துகொள்வேன். உம் பார்வையிலும் தொடர்ந்து தயைபெறுவேன். மேலும், இந்த இனம் உம்மக்கள் என்பதையும் கருத்தில் கொள்ளும்” என்றார்.
|
13. Now H6258 therefore , I pray thee H4994 , if H518 I have found H4672 grace H2580 in thy sight H5869 , show H3045 me now H4994 H853 thy way H1870 , that H4616 I may know H3045 thee , that I may find H4672 grace H2580 in thy sight H5869 : and consider H7200 that H3588 this H2088 nation H1471 is thy people H5971 .
|
14. அதற்கு ஆண்டவர், “எனது பிரசன்னம் உன்னோடு செல்லும். நான் உனக்கு இளைப்பாறுதல் அளிப்பேன்” என்று கூற,
|
14. And he said H559 , My presence H6440 shall go H1980 with thee , and I will give thee rest H5117 .
|
15. மோசே அவரிடம், “உமது பிரசன்னம் கூடவரவில்லையெனில் எங்களை இங்கிருந்து போகச்செய்யாதீர்.
|
15. And he said H559 unto H413 him, If H518 thy presence H6440 go H1980 not H369 with me , carry us not up H5927 H408 hence H4480 H2088 .
|
16. நானும் உம் மக்களும் உம் பார்வையில் தயை பெற்றுள்ளோம் என்பதை எப்படி அறிவோம்? நீர் எங்களோடு வருவதாலும் நானும் உம் மக்களும் மண்ணுலகில் உள்ள அனைத்து மக்களினங்களினின்றும் வேறுபட்டு நிற்பதாலும் அன்றோ?” என்றார்.PE
|
16. For wherein H4100 shall it be known H3045 here H645 that H3588 I H589 and thy people H5971 have found H4672 grace H2580 in thy sight H5869 ? is it not H3808 in that thou goest H1980 with H5973 us? so shall we be separated H6395 , I H589 and thy people H5971 , from all H4480 H3605 the people H5971 that H834 are upon H5921 the face H6440 of the earth H127 .
|
17. PS அதற்கு ஆண்டவர் மோசேயிடம், “நீ கூறியபடியே நான் செய்வேன். ஏனெனில், நீ என் பார்வையில் தயைபெற்றுள்ளாய். மேலும் பெயர் உட்பட உன்னை எனக்குத் தெரியும்” என்றார்.
|
17. And the LORD H3068 said H559 unto H413 Moses H4872 , I will do H6213 H853 this H2088 thing H1697 also H1571 that H834 thou hast spoken H1696 : for H3588 thou hast found H4672 grace H2580 in my sight H5869 , and I know H3045 thee by name H8034 .
|
18. அப்போது மோசே, “உம்மாட்சியை எனக்குக் காட்டும்படி வேண்டுகிறேன்” என்று கூற,
|
18. And he said H559 , I beseech thee H4994 , show H7200 me H853 thy glory H3519 .
|
19. அவர், “என் நிறை அழகை உன்முன் கடந்து போகச் செய்து ஆண்டவர் என்ற பெயரை உன்முன் அறிவிப்பேன். யார்யாருக்கு நான் பரிவு காட்ட விரும்புகிறேனோ அவர்களுக்குப் பரிவுகாட்டுவேன். யார் யாருக்கு இரக்கம் காட்ட விரும்புகிறேனோ அவர்களுக்கு இரக்கம் காட்டுவேன்” என்றார்.
|
19. And he said H559 , I H589 will make all H3605 my goodness H2898 pass H5674 before H5921 H6440 thee , and I will proclaim H7121 the name H8034 of the LORD H3068 before H6440 thee ; and will be gracious H2603 H853 to whom H834 I will be gracious H2603 , and will show mercy H7355 H853 on whom H834 I will show mercy H7355 .
|
20. மேலும் அவர், “என் முகத்தையோ உன்னால் பார்க்க இயலாது. ஏனெனில், என்னைப் பார்த்த எவரும் உயிரோடிருக்க முடியாது” என்றார். * உரோ 9:15.
|
20. And he said H559 , Thou canst H3201 not H3808 see H7200 H853 my face H6440 : for H3588 there shall no H3808 man H120 see H7200 me , and live H2425 .
|
21. பின்பு, ஆண்டவர் “இதோ, எனக்கருகில் ஓர் இடம். இங்கிருக்கும் பாறையின் மேல் நீ நின்று கொள்.
|
21. And the LORD H3068 said H559 , Behold H2009 , there is a place H4725 by H854 me , and thou shalt stand H5324 upon H5921 a rock H6697 :
|
22. என் மாட்சி கடந்து செல்கையில், நான் உன்னைப் பாறைப்பிளவில் நிறுத்திவைப்பேன். நான் கடந்து செல்லும்வரை என் கையால் உன்னை மூடிமறைப்பேன்.
|
22. And it shall come to pass H1961 , while my glory H3519 passeth by H5674 , that I will put H7760 thee in a cleft H5366 of the rock H6697 , and will cover H5526 H5921 thee with my hand H3709 while H5704 I pass by H5674 :
|
23. பின்பு, நான் என் கையை அகற்றுவேன். நீ என் பின்புறத்தைக் காண்பாய். என் முகத்தையோ காணமாட்டாய்” என்றார்.PE
|
23. And I will take away H5493 H853 mine hand H3709 , and thou shalt see H7200 H853 my back parts H268 : but my face H6440 shall not H3808 be seen H7200 .
|