|
|
1. {பார்வோன்முன் மோசேயும் ஆரோனும்} PS பின்னர், மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் வந்து அவனை நோக்கி, “பாலைநிலத்தில் எனக்கொரு விழா எடுக்குமாறு என் மக்களைப் போகவிடு என இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் உரைத்துள்ளார்” என்று அறிவித்தனர்.
|
1. And afterward H310 Moses H4872 and Aaron H175 went in H935 , and told H559 H413 Pharaoh H6547 , Thus H3541 saith H559 the LORD H3068 God H430 of Israel H3478 , Let H853 my people H5971 go H7971 , that they may hold a feast H2287 unto me in the wilderness H4057 .
|
2. அதற்குப் பார்வோன், “யார் அந்த ஆண்டவர்? அவரது பேச்சைக் கேட்டு இஸ்ரயேலை நான் ஏன் அனுப்ப வேண்டும்? அந்த ஆண்டவரை நான் அறியேன்; இஸ்ரயேலரை நான் போகவிடவும் மாட்டேன்” என்று கூறினான்.
|
2. And Pharaoh H6547 said H559 , Who H4310 is the LORD H3068 , that H834 I should obey H8085 his voice H6963 to let H853 Israel H3478 go H7971 ? I know H3045 not H3808 H853 the LORD H3068 , neither H1571 H3808 will I let H853 Israel H3478 go H7971 .
|
3. அதற்கு அவர்கள், “எபிரேயரின் கடவுள் எங்களைச் சந்தித்தார். பாலை நிலத்தில் மூன்றுநாள் வழிப்பயணம் செய்து எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலியிடுமாறு எங்களை நீர் போகவிடும். இல்லையெனில், கொள்ளை நோயாலோ வாளாலோ அவர் எங்களைத் தாக்கிவிடுவார்” என்று கூறினர்.
|
3. And they said H559 , The God H430 of the Hebrews H5680 hath met H7122 with H5921 us : let us go H1980 , we pray thee H4994 , three H7969 days H3117 ' journey H1870 into the desert H4057 , and sacrifice H2076 unto the LORD H3068 our God H430 ; lest H6435 he fall upon H6293 us with pestilence H1698 , or H176 with the sword H2719 .
|
4. எகிப்திய மன்னன் அவர்களை நோக்கி, “மோசே! ஆரோன்! நீங்கள் இம்மக்களை அவர்களின் வேலையைச் செய்ய விடாமல் ஏன் குழப்புகிறீர்கள்? உங்கள் வேலைகளுக்குச் செல்லுங்கள்” என்று கூறினான்.PE
|
4. And the king H4428 of Egypt H4714 said H559 unto H413 them, Wherefore H4100 do ye, Moses H4872 and Aaron H175 , let H6544 H853 the people H5971 from their works H4480 H4639 ? get H1980 you unto your burdens H5450 .
|
5. PS மேலும் பார்வோன், “பாருங்கள், நாட்டில் உங்கள் மக்கள் இப்போது பெருந்திரளாயுள்ளனர். அப்படியிருக்க, அவர்களைத் தம் வேலையிலிருந்து ஓய்ந்திருக்கச் செய்கிறீர்கள்” என்றான்.
|
5. And Pharaoh H6547 said H559 , Behold H2005 , the people H5971 of the land H776 now H6258 are many H7227 , and ye make them rest H7673 H853 from their burdens H4480 H5450 .
|
6. அதே நாளில், பார்வோன் மக்களிடம் அடிமைவேலை வாங்கும் அதிகாரிகளுக்கும் மேற்பார்வையாளருக்கும் ஆணைவிடுத்து,
|
6. And Pharaoh H6547 commanded H6680 the same H1931 day H3117 H853 the taskmasters H5065 of the people H5971 , and their officers H7860 , saying H559 ,
|
7. “செங்கல் செய்வதற்காக இம்மக்களுக்கு இதுவரை வைக்கோல் கொடுத்துவந்ததுபோல் இனிச் செய்யவேண்டாம்! அவர்களே போய் வைக்கோல் சேகரித்துக் கொள்ளட்டும்.
|
7. Ye shall no H3808 more H3254 give H5414 the people H5971 straw H8401 to make H3835 brick H3843 , as heretofore H8543 H8032 : let them H1992 go H1980 and gather H7197 straw H8401 for themselves.
|
8. ஆயினும், இதுவரை அவர்கள் அறுத்துக் கொடுத்த அளவு செங்கல் தயாரித்துக் கொடுப்பது அவர்கள் கடமை. அதிலிருந்து எதுவும் குறையக்கூடாது. ஏனெனில், அவர்கள் சோம்பேறிகள். இதனால்தான், “நாங்கள் போகவேண்டும்; எங்கள் கடவுளுக்குப் பலியிடவேண்டும்” என்று அவர்கள் கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
|
8. And the tale H4971 of the bricks H3843 , which H834 they H1992 did make H6213 heretofore H8543 H8032 , ye shall lay H7760 upon H5921 them ; ye shall not H3808 diminish H1639 aught thereof H4480 : for H3588 they H1992 be idle H7503 ; therefore H5921 H3651 they H1992 cry H6817 , saying H559 , Let us go H1980 and sacrifice H2076 to our God H430 .
|
9. அந்த ஆள்களுக்கு வேலைப்பளுவை இன்னும் மிகுதியாக்குங்கள். வெற்றுப் பேச்சுகளை நம்பாமல் அங்கே அவர்கள் வேலை செய்யட்டும்” என்றான்.PE
|
9. Let there more work be laid H3513 H5656 upon H5921 the men H376 , that they may labor H6213 therein ; and let them not H408 regard H8159 vain H8267 words H1697 .
|
10. PS எனவே, வேலைவாங்கும் அதிகாரிகளும் மேற்பார்வையாளர்களும் மக்களிடம் சென்று அவர்களை நோக்கி, “பார்வோன் கூறுவது இதுவே; நான் உங்களுக்கு வைக்கோல் கொடுக்கமாட்டேன்.
|
10. And the taskmasters H5065 of the people H5971 went out H3318 , and their officers H7860 , and they spoke H559 to H413 the people H5971 , saying H559 , Thus H3541 saith H559 Pharaoh H6547 , I will not H369 give H5414 you straw H8401 .
|
11. நீங்களே போய், உங்களுக்குத் தேவையான வைக்கோலைக் கிடைக்கும் இடத்திலிருந்து சேகரித்துக்கொள்ளுங்கள்” என்று அறிவித்தனர்.
|
11. Go H1980 ye H859 , get H3947 you straw H8401 where H4480 H834 ye can find H4672 it: yet H3588 not H369 aught H1697 of your work H4480 H5656 shall be diminished H1639 .
|
12. எனவே, வைக்கோலுக்குப் பதிலாகத் தாளடி சேகரிப்பதற்காக மக்கள் எகிப்து நாடெங்கும் அலைந்து திரிந்தனர்.
|
12. So the people H5971 were scattered abroad H6327 throughout all H3605 the land H776 of Egypt H4714 to gather H7197 stubble H7179 instead of straw H8401 .
|
13. “வைக்கோல் உள்ளபோது செய்துவந்த அளவில் ஒவ்வொரு நாளுக்கும் உரிய வேலையை அன்றே முடித்துவிடுங்கள்” என்று கூறி, வேலை வாங்கும் அதிகாரிகள் அவசரப்படுத்தினர்.
|
13. And the taskmasters H5065 hasted H213 them , saying H559 , Fulfill H3615 your works H4639 , your daily H3117 H3117 tasks H1697 , as when H834 there was H1961 straw H8401 .
|
14. “முன்பு நீங்கள் செய்து வந்த அளவுக்குச் செங்கல் அறுப்பு வேலையை நேற்றும் இன்றும் ஏன் செய்துமுடிக்கவில்லை?” என்று கேட்டு, பார்வோனின் வேலைவாங்கும் அதிகாரிகள் தாங்கள் இஸ்ரயேல் மக்களுள் மேற்பார்வையாளராக நியமித்திருந்தவர்கள் அடித்தனர்.PE
|
14. And the officers H7860 of the children H1121 of Israel H3478 , which H834 Pharaoh H6547 's taskmasters H5065 had set H7760 over H5921 them , were beaten H5221 , and demanded H559 , Wherefore H4069 have ye not H3808 fulfilled H3615 your task H2706 in making brick H3835 both H1571 yesterday H8543 and H1571 today H3117 , as heretofore H8543 H8032 ?
|
15. PS இஸ்ரயேல் மக்களின் மேற்பார்வையாளர் பார்வோனிடம் வந்து, “ஏன் உம் பணியாளர்களை இவ்வாறு நடத்துகிறீர்?
|
15. Then the officers H7860 of the children H1121 of Israel H3478 came H935 and cried H6817 unto H413 Pharaoh H6547 , saying H559 , Wherefore H4100 dealest H6213 thou thus H3541 with thy servants H5650 ?
|
16. உம் பணியாளர்களாகிய எங்களுக்கு வைக்கோல் தராமலேயே ‘செங்கல் அறுங்கள்’ என்று வேலை வாங்கும் அதிகாரிகள் கூறுகிறார்கள். குற்றம் உம் மக்களுடையதாய் இருக்க, உம் பணியாளர்களாகிய நாங்கள் அடிக்கப்படுகிறோம்” என்று கதறினர்.
|
16. There is no H369 straw H8401 given H5414 unto thy servants H5650 , and they say H559 to us, Make H6213 brick H3843 : and, behold H2009 , thy servants H5650 are beaten H5221 ; but the fault H2398 is in thine own people H5971 .
|
17. அதற்கு அவன், “சோம்பேறிகள்; நீங்கள் சோம்பேறிகள்; அதனால்தான் ‘நாங்கள் போய் ஆண்டவருக்குப் பலியிட வேண்டும்’ என்று கூறிக் கொண்டிருக்கிறீர்கள்.
|
17. But he said H559 , Ye H859 are idle H7503 , ye are idle H7503 : therefore H5921 H3651 ye H859 say H559 , Let us go H1980 and do sacrifice H2076 to the LORD H3068 .
|
18. எனவே, இப்போதே வேலைக்குச் செல்லுங்கள். வைக்கோல் உங்களுக்குத் தரப்படமாட்டாது. எனினும் வழக்கமான எண்ணிக்கையின்படி செங்கல் அறுத்துக் கொடுக்க வேண்டும்” என்று கூறினான்.
|
18. Go H1980 therefore now H6258 , and work H5647 ; for there shall no H3808 straw H8401 be given H5414 you , yet shall ye deliver H5414 the tale H8506 of bricks H3843 .
|
19. “அந்தந்த நாளுக்குரிய செங்கல் தொகையிலிருந்து எதுவும் குறைக்கப்படமாட்டாது” என்று சொல்லக் கேட்டபோது, தாங்கள் இக்கட்டில் மாட்டிக்கொண்டதாக இஸ்ரயேல் மக்களின் மேற்பார்வையாளர் கண்டனர்.
|
19. And the officers H7860 of the children H1121 of Israel H3478 did see H7200 that they were in evil H7451 case , after it was said H559 , Ye shall not H3808 minish H1639 aught from your bricks H4480 H3843 of your daily H3117 H3117 task H1697 .
|
20. பார்வோனிடமிருந்து திரும்பி வரும்போது, தங்களைச் சந்திப்பதற்காக நின்று கொண்டிருந்த மோசேயையும் ஆரோனையும் அவர்கள் சந்தித்து அவர்களை நோக்கி,
|
20. And they met H6293 H853 Moses H4872 and Aaron H175 , who stood H5324 in the way H7125 , as they came forth H3318 from H4480 H854 Pharaoh H6547 :
|
21. “ஆண்டவர் உங்களைக் கவனித்துக் கொள்ளட்டும்! உங்களுக்குத் தீர்ப்பு வழங்கட்டும்! ஏனெனில், பார்வோன் முன்னிலையிலும் அவனுடைய அலுவலர் முன்னிலையிலும் நம்மவர் வாடையே பிடிக்காதவாறு நீங்கள் செய்து விட்டீர்கள்! நம்மைக் கொல்வதற்கான வாளை அவர்கள் கையில் வைத்துவிட்டீர்கள்” என்றனர்.PE
|
21. And they said H559 unto H413 them , The LORD H3068 look H7200 upon H5921 you , and judge H8199 ; because H834 ye have made H853 our savor H7381 to be abhorred H887 in the eyes H5869 of Pharaoh H6547 , and in the eyes H5869 of his servants H5650 , to put H5414 a sword H2719 in their hand H3027 to slay H2026 us.
|
22. {மோசேயின் முறையீடு} PS அப்போது மோசே ஆண்டவரிடம் திரும்பிச் சென்று, “என் தலைவரே! இம்மக்களுக்கு நீர் ஏன்தொல்லை கொடுக்கிறீர்? எதற்காக இப்படி என்னை அனுப்பிவைத்தீர்?
|
22. And Moses H4872 returned H7725 unto H413 the LORD H3068 , and said H559 , Lord H136 , wherefore H4100 hast thou so evil entreated H7489 this H2088 people H5971 ? why H4100 is it H2088 that thou hast sent H7971 me?
|
23. உமது பெயரால் பேசுவதற்காகப் பார்வோனிடம் வந்ததிலிருந்தே இம்மக்களுக்கு அவனால் இடர்பாடுதான் ஏற்பட்டுள்ளது. அத்துடன் நீர் உம் மக்களுக்கு விடுதலையளிக்கவும் இல்லை” என்று கூறினார்.PE
|
23. For since H4480 H227 I came H935 to H413 Pharaoh H6547 to speak H1696 in thy name H8034 , he hath done evil H7489 to this H2088 people H5971 ; neither H3808 hast thou delivered H5337 H853 thy people H5971 at all H5337 .
|