Bible Versions
Bible Books

Psalms 20:1 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 தொல்லைகள் சூழ்ந்திருக்கையில் நீ கர்த்தரை நோக்கிக் கூப்பிடும்போது கர்த்தர் பதிலளிக்கட்டும். யாக்கோபின் தேவன் உன் பெயரை முக்கியமாக்கட்டும்.
2 அவரது பரிசுத்த இடத்திலிருந்து தேவன் உதவி அனுப்பட்டும். சீயோனிலிருந்து அவர் உனக்குத் துணை நிற்கட்டும்.
3 நீ அளித்த அன்பளிப்புகளை தேவன் நினைவு கூரட்டும். உன் பலிகளையெல்லாம் அவர் ஏற்றுக்கொள்ளட்டும்.
4 தேவன் உனக்குத் தேவையான எல்லாவற்றையும் தருவார் என நம்புகிறேன். உன் எல்லாத் திட்டங்களையும் நிறைவேற்றுவார் என நம்புகிறேன்.
5 தேவன் உனக்கு உதவும்போது நாம் மகிழ்வடைவோம். நாம் தேவனுடைய நாமத்தைத் துதிப்போம். நீ கேட்பவற்றை யெல்லாம் கர்த்தர் தருவார் என்று நான் நம்புகிறேன்.
6 கர்த்தர் தான் தேர்ந்தெடுத்த அரசனுக்கு உதவுகிறார் என இப்போது அறிகிறேன். தேவன் அவரது பரிசுத்த பரலோகத்தில் இருந்தார். அவர் தேர்ந்தெடுத்த அரசனுக்குப் பதில் தந்தார். அவனைப் பாதுகாக்க தேவன் தன் உயர்ந்த வல்லமையைப் பயன்படுத்தினார்.
7 சிலர் தங்கள் இரதங்களை நம்புகின்றனர். மற்றோர் தங்கள் வீரர்களை நம்புகின்றனர். ஆனால் நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தரை நினைக்கின்றோம். அவரின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுவோம்.
8 அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். அவர்கள் யுத்தத்தில் மடிந்தனர். ஆனால் நாங்கள் வென்றோம்! நாங்கள் வெற்றிபெற்றவர்கள்.
9 கர்த்தர் தாம் தேர்ந்தெடுத்த அரசனை மீட்டார்! தேவன் தேர்ந்தெடுத்த அரசன் உதவி வேண்டினான். தேவன் பதில் தந்தார்!
1 To the chief Musician, H5329 A Psalm H4210 of David. H1732 The LORD H3068 hear H6030 thee in the day H3117 of trouble; H6869 the name H8034 of the God H430 of Jacob H3290 defend H7682 thee;
2 Send H7971 thee help H5828 from the sanctuary H4480 H6944 , and strengthen H5582 thee out of Zion H4480 H6726 ;
3 Remember H2142 all H3605 thy offerings, H4503 and accept H1878 thy burnt sacrifice; H5930 Selah. H5542
4 Grant H5414 thee according to thine own heart, H3824 and fulfill H4390 all H3605 thy counsel. H6098
5 We will rejoice H7442 in thy salvation, H3444 and in the name H8034 of our God H430 we will set up our banners: H1713 the LORD H3068 fulfill H4390 all H3605 thy petitions. H4862
6 Now H6258 know H3045 I that H3588 the LORD H3068 saveth H3467 his anointed; H4899 he will hear H6030 him from his holy H6944 heaven H4480 H8064 with the saving H3468 strength H1369 of his right hand. H3225
7 Some H428 trust in chariots, H7393 and some H428 in horses: H5483 but we H587 will remember H2142 the name H8034 of the LORD H3068 our God. H430
8 They H1992 are brought down H3766 and fallen: H5307 but we H587 are risen, H6965 and stand upright. H5749
9 Save H3467 , LORD: H3068 let the king H4428 hear H6030 us when H3117 we call. H7121
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×