|
|
1. சாலொமோன் ஜெபம்பண்ணி முடிக்கிறபோது, அக்கினி வானத்திலிருந்து இறங்கி, சர்வாங்க தகனபலியையும் மற்றப் பலிகளையும் பட்சித்தது; கர்த்தருடைய மகிமையும் ஆலயத்தை நிரப்பிற்று.
|
1. Now when Solomon H8010 had made an end H3615 of praying H6419 , the fire H784 came down H3381 from heaven H4480 H8064 , and consumed H398 the burnt offering H5930 and the sacrifices H2077 ; and the glory H3519 of the LORD H3068 filled H4390 H853 the house H1004 .
|
2. கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பினதினால், ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கக்கூடாதிருந்தது.
|
2. And the priests H3548 could H3201 not H3808 enter H935 into H413 the house H1004 of the LORD H3068 , because H3588 the glory H3519 of the LORD H3068 had filled H4390 H853 the LORD H3068 's house H1004 .
|
3. அக்கினி இறங்குகிறதையும், கர்த்தருடைய மகிமை ஆலயத்தின்மேல் தங்கியிருக்கிறதையும், இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் கண்டபோது, தளவரிசைமட்டும் தரையிலே முகங்குப்புறக் குனிந்து பணிந்து, கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றுமுள்ளது என்று சொல்லி, அவரைத் துதித்தார்கள்.
|
3. And when all H3605 the children H1121 of Israel H3478 saw H7200 how the fire H784 came down H3381 , and the glory H3519 of the LORD H3068 upon H5921 the house H1004 , they bowed H3766 themselves with their faces H639 to the ground H776 upon H5921 the pavement H7531 , and worshiped H7812 , and praised H3034 the LORD H3068 , saying , For H3588 he is good H2896 ; for H3588 his mercy H2617 endureth forever H5769 .
|
4. அப்பொழுது ராஜாவும் சகல ஜனங்களும் கர்த்தருடைய சந்நிதியில் பலிகளைச் செலுத்தினார்கள்.
|
4. Then the king H4428 and all H3605 the people H5971 offered H2076 sacrifices H2077 before H6440 the LORD H3068 .
|
5. ராஜாவாகிய சாலொமோன் இருபத்தீராயிரம் மாடுகளையும், லட்சத்திருபதினாயிரம் ஆடுகளையும் பலியிட்டான்; இவ்விதமாய் ராஜாவும் சகல ஜனங்களும் தேவனுடைய ஆலயத்தைப் பிரதிஷ்டை பண்ணினார்கள்.
|
5. And king H4428 Solomon H8010 offered H2076 H853 a sacrifice H2077 of twenty H6242 and two H8147 thousand H505 oxen H1241 , and a hundred H3967 and twenty H6242 thousand H505 sheep H6629 : so the king H4428 and all H3605 the people H5971 dedicated H2596 H853 the house H1004 of God H430 .
|
6. ஆசாரியர்கள் தங்கள் பணிவிடைகளைச் செய்து நின்றார்கள்; தாவீது ராஜா லேவியரைக்கொண்டு, கர்த்தருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைத் துதித்துப் பாடும்படியாக செய்வித்த கர்த்தரின் கீதவாத்தியங்களை அவர்களும் வாசித்து சேவித்து நின்றார்கள்; ஆசாரியர்கள் அவர்களுக்கு எதிராக நின்று பூரிகைகளை ஊதினார்கள்; இஸ்ரவேலர் எல்லாரும் நின்றுகொண்டிருந்தார்கள்.
|
6. And the priests H3548 waited H5975 on H5921 their offices H4931 : the Levites H3881 also with instruments H3627 of music H7892 of the LORD H3068 , which H834 David H1732 the king H4428 had made H6213 to praise H3034 the LORD H3068 , because H3588 his mercy H2617 endureth forever H5769 , when David H1732 praised H1984 by their ministry H3027 ; and the priests H3548 sounded H2690 trumpets before H5048 them , and all H3605 Israel H3478 stood H5975 .
|
7. சாலொமோன் உண்டாக்கின வெண்கலப்பலிபீடம் சர்வாங்க தகனபலிகளையும் போஜன பலிகளையும் நிணத்தையும் கொள்ளமாட்டாதிருந்தபடியினால், கர்த்தருடைய ஆலயத்துக்கு முன்னிருக்கிற பிராகாரத்தின் நடுமையத்தைச் சாலொமோன் பரிசுத்தப்படுத்தி, அங்கே சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளின் நிணத்தையும் செலுத்தினான்.
|
7. Moreover Solomon H8010 hallowed H6942 H853 the middle H8432 of the court H2691 that H834 was before H6440 the house H1004 of the LORD H3068 : for H3588 there H8033 he offered H6213 burnt offerings H5930 , and the fat H2459 of the peace offerings H8002 , because H3588 the brazen H5178 altar H4196 which H834 Solomon H8010 had made H6213 was not able H3201 H3808 to receive H3557 H853 the burnt offerings H5930 , and the meat offerings H4503 , and the fat H2459 .
|
8. அக்காலத்தில்தானே சாலொமோனும், ஆமாத்தின் எல்லையிலிருந்து எகிப்தின் நதிமட்டும் வந்து, அவனோடேகூட இருந்த மகா பெரிய கூட்டமாகிய இஸ்ரவேல் அனைத்தும் ஏழுநாளளவும் பண்டிகையை ஆசரித்து,
|
8. Also at the same H1931 time H6256 Solomon H8010 kept H6213 H853 the feast H2282 seven H7651 days H3117 , and all H3605 Israel H3478 with H5973 him , a very H3966 great H1419 congregation H6951 , from the entering in H4480 H935 of Hamath H2574 unto H5704 the river H5158 of Egypt H4714 .
|
9. எட்டாம் நாளை விசேஷித்த ஆசரிப்பு நாளாய்க் கொண்டாடினார்கள்; ஏழுநாள் பலிபீடத்துப் பிரதிஷ்டையையும், ஏழு நாள் பண்டிகையையும் ஆசரித்தார்கள்.
|
9. And in the eighth H8066 day H3117 they made H6213 a solemn assembly H6116 : for H3588 they kept H6213 the dedication H2598 of the altar H4196 seven H7651 days H3117 , and the feast H2282 seven H7651 days H3117 .
|
10. ஏழாம் மாதத்தின் இருபத்துமூன்றாம் தேதியிலே தங்கள் தங்கள் கூடாரங்களுக்குப் போக ஜனங்களுக்கு விடை கொடுத்தான்; கர்த்தர் தாவீதுக்கும், சாலொமோனுக்கும், தமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கும் செய்த நன்மைக்காகச் சந்தோஷமும் மனமகிழ்ச்சியுமாய்ப் போனார்கள்.
|
10. And on the three H7969 and twentieth H6242 day H3117 of the seventh H7637 month H2320 he sent H7971 H853 the people H5971 away into their tents H168 , glad H8056 and merry H2896 in heart H3820 for H5921 the goodness H2896 that H834 the LORD H3068 had showed H6213 unto David H1732 , and to Solomon H8010 , and to Israel H3478 his people H5971 .
|
11. இவ்விதமாய் சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தையும், ராஜ அரமனையையும் கட்டித் தீர்த்தான்; கர்த்தருடைய ஆலயத்திலும், தன் அரமனையிலும் சாலொமோன் செய்ய மனதாயிருந்ததெல்லாம் அனுகூலமாயிற்று.
|
11. Thus Solomon H8010 finished H3615 H853 the house H1004 of the LORD H3068 , and the king H4428 's house H1004 : and all H3605 that came H935 into H5921 Solomon H8010 's heart H3820 to make H6213 in the house H1004 of the LORD H3068 , and in his own house H1004 , he prosperously effected H6743 .
|
12. கர்த்தர் இரவிலே சாலொமோனுக்குத் தரிசனமாகி: நான் உன் விண்ணப்பத்தைக் கேட்டு, இந்த ஸ்தலத்தை எனக்குப் பலியிடும் ஆலயமாகத் தெரிந்துகொண்டேன்.
|
12. And the LORD H3068 appeared H7200 to H413 Solomon H8010 by night H3915 , and said H559 unto him , I have heard H8085 H853 thy prayer H8605 , and have chosen H977 this H2088 place H4725 to myself for a house H1004 of sacrifice H2077 .
|
13. நான் மழையில்லாதபடிக்கு வானத்தை அடைத்து, அல்லது தேசத்தை அழிக்க வெட்டுக்கிளிகளுக்குக் கட்டளையிட்டு, அல்லது என் ஜனத்திற்குள் கொள்ளை நோயை அனுப்பும்போது,
|
13. If H2005 I shut up H6113 heaven H8064 that there be H1961 no H3808 rain H4306 , or if H2005 I command H6680 H5921 the locusts H2284 to devour H398 the land H776 , or if H518 I send H7971 pestilence H1698 among my people H5971 ;
|
14. என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்.
|
14. If my people H5971 , which H834 are called H7121 H5921 by my name H8034 , shall humble themselves H3665 , and pray H6419 , and seek H1245 my face H6440 , and turn H7725 from their wicked H7451 ways H4480 H1870 ; then will I H589 hear H8085 from H4480 heaven H8064 , and will forgive H5545 their sin H2403 , and will heal H7495 H853 their land H776 .
|
15. இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் ஜெபத்திற்கு, என் கண்கள் திறந்தவைகளும், என் செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருக்கும்.
|
15. Now H6258 mine eyes H5869 shall be H1961 open H6605 , and mine ears H241 attent H7183 unto the prayer H8605 that is made in this H2088 place H4725 .
|
16. என் நாமம் இந்த ஆலயத்தில் என்றென்றைக்கும் இருக்கும்படி, நான் இதைத் தெரிந்துகொண்டு பரிசுத்தப்படுத்தினேன்; என் கண்களும் என் இருதயமும் எந்நாளும் இங்கே இருக்கும்.
|
16. For now H6258 have I chosen H977 and sanctified H6942 H853 this H2088 house H1004 , that my name H8034 may be H1961 there H8033 forever H5704 H5769 : and mine eyes H5869 and mine heart H3820 shall be H1961 there H8033 perpetually H3605 H3117 .
|
17. உன் தகப்பனாகிய தாவீது நடந்ததுபோல, நீ எனக்கு முன்பாக நடந்து, நான் உனக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்து, என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்வாயானால்,
|
17. And as for thee H859 , if H518 thou wilt walk H1980 before H6440 me, as H834 David H1732 thy father H1 walked H1980 , and do H6213 according to all H3605 that H834 I have commanded H6680 thee , and shalt observe H8104 my statutes H2706 and my judgments H4941 ;
|
18. அப்பொழுது இஸ்ரவேலை அரசாளும் புருஷன் உனக்கு இல்லாமற்போவதில்லை என்று நான் உன் தகப்பனாகிய தாவீதோடே உடன்படிக்கைபண்ணினபடியே, உன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை நிலைக்கப்பண்ணுவேன்.
|
18. Then will I establish H6965 H853 the throne H3678 of thy kingdom H4438 , according as H834 I have covenanted H3772 with David H1732 thy father H1 , saying H559 , There shall not H3808 fail H3772 thee a man H376 to be ruler H4910 in Israel H3478 .
|
19. நீங்கள் வழிவிலகி, நான் உங்களுக்கு முன்வைத்த என் கட்டளைகளையும் என் கற்பனைகளையும் விட்டுப்போய், வேறே தேவர்களைச் சேவித்து, அவர்களைப் பணிந்துகொள்வீர்களேயாகில்,
|
19. But if H518 ye H859 turn away H7725 , and forsake H5800 my statutes H2708 and my commandments H4687 , which H834 I have set H5414 before H6440 you , and shall go H1980 and serve H5647 other H312 gods H430 , and worship H7812 them;
|
20. நான் அவர்களுக்குக் கொடுத்த என் தேசத்தில் இருந்து அவர்களைப் பிடுங்கி, என் நாமத்திற்கென்று நான் பரிசுத்தப்படுத்தின இந்த ஆலயத்தை என் சமுகத்தினின்று தள்ளி, அதை எல்லா ஜனசதளங்களுக்குள்ளும் பழமொழியாகவும் வசைச்சொல்லாகவும் வைப்பேன்.
|
20. Then will I pluck them up by the roots H5428 out of H4480 H5921 my land H127 which H834 I have given H5414 them ; and this H2088 house H1004 , which H834 I have sanctified H6942 for my name H8034 , will I cast out H7993 of H4480 H5921 my sight H6440 , and will make H5414 it to be a proverb H4912 and a byword H8148 among all H3605 nations H5971 .
|
21. அப்பொழுது உன்னதமாயிருக்கிற இந்த ஆலயத்தைக் கடந்துபோகிறவன் எவனும் பிரமித்து: கர்த்தர் இந்த தேசத்திற்கும் இந்த ஆலயத்திற்கும் இப்படிச் செய்தது என்ன என்று கேட்பான்.
|
21. And this H2088 house H1004 , which H834 is H1961 high H5945 , shall be an astonishment H8074 to every one H3605 that passeth H5674 by H5921 it ; so that he shall say H559 , Why H4100 hath the LORD H3068 done H6213 thus H3602 unto this H2063 land H776 , and unto this H2088 house H1004 ?
|
22. அதற்கு அவர்கள்: தங்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின தங்கள் தேவனாகிய கர்த்தரை விட்டு, வேறே தேவர்களைப் பற்றிக்கொண்டு, அவைகளை நமஸ்கரித்து, சேவித்தபடியினால், கர்த்தர் இந்தத் தீங்கையெல்லாம் அவர்கள்மேல் வரப்பண்ணினார் என்று சொல்லுவார்கள் என்றார்.
|
22. And it shall be answered H559 , Because H5921 H834 they forsook H5800 H853 the LORD H3068 God H430 of their fathers H1 , which H834 brought them forth H3318 out of the land H4480 H776 of Egypt H4714 , and laid hold H2388 on other H312 gods H430 , and worshiped H7812 them , and served H5647 them: therefore H5921 H3651 hath he brought H935 H853 all H3605 this H2063 evil H7451 upon H5921 them.
|