|
|
1. இதோ, ஒரு ராஜா நீதியாக அரசாளுவார்; பிரபுக்களும் நியாயமாகத் துரைத்தனம்பண்ணுவார்கள்.
|
1. Behold H2005 , a king H4428 shall reign H4427 in righteousness H6664 , and princes H8269 shall rule H8323 in judgment H4941 .
|
2. அவர் காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும், வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும், விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும் இருப்பார்.
|
2. And a man H376 shall be H1961 as a hiding place H4224 from the wind H7307 , and a covert H5643 from the tempest H2230 ; as rivers H6388 of water H4325 in a dry place H6724 , as the shadow H6738 of a great H3515 rock H5553 in a weary H5889 land H776 .
|
3. அப்பொழுது காண்கிறவர்களின் கண்கள் மங்கலாயிராது; கேட்கிறவர்களின் செவிகள் கவனித்தே இருக்கும்.
|
3. And the eyes H5869 of them that see H7200 shall not H3808 be dim H8159 , and the ears H241 of them that hear H8085 shall hearken H7181 .
|
4. பதற்றமுள்ளவர்களின் இருதயம் அறிவை உணர்ந்துகொள்ளும், தெற்றுவாயருடைய நாவு தடையின்றித் தெளிவாய்ப் பேசும்.
|
4. The heart H3824 also of the rash H4116 shall understand H995 knowledge H3045 , and the tongue H3956 of the stammerers H5926 shall be ready H4116 to speak H1696 plainly H6703 .
|
5. மூடன் இனி தயாளன் என்று மதிக்கப்படான்; லோபி இனி உதாரன் என்று சொல்லப்படுவதுமில்லை.
|
5. The vile person H5036 shall be no H3808 more H5750 called H7121 liberal H5081 , nor H3808 the churl H3596 said H559 to be bountiful H7771 .
|
6. ஏனென்றால் மூடன், மூடத்தனத்தைப் பேசுகிறான்; அவன் இருதயம் அநியாயத்தை நடப்பிக்கும்; அவன் மாயம்பண்ணி, கர்த்தருக்கு விரோதமாய் விபரீதம் பேசி, பசியுள்ள ஆத்துமாவை வெறுமையாக வைத்து, தாகமுள்ளவனுக்குத் தாகந்தீர்க்காதிருக்கிறான்.
|
6. For H3588 the vile person H5036 will speak H1696 villainy H5039 , and his heart H3820 will work H6213 iniquity H205 , to practice H6213 hypocrisy H2612 , and to utter H1696 error H8442 against H413 the LORD H3068 , to make empty H7324 the soul H5315 of the hungry H7457 , and he will cause the drink H4945 of the thirsty H6771 to fail H2637 .
|
7. லோபியின் எத்தனங்களும் பொல்லாதவைகள்; ஏழைகள் நியாயமாய்ப் பேசும்போது, அவன் கள்ளவார்த்தைகளாலே எளியவர்களைக் கெடுக்கும்படி தீவினைகளை யோசிக்கிறான்.
|
7. The instruments H3627 also of the churl H3596 are evil H7451 : he H1931 deviseth H3289 wicked devices H2154 to destroy H2254 the poor H6041 with lying H8267 words H561 , even when the needy H34 speaketh H1696 right H4941 .
|
8. தயாளகுணமுள்ளவன் தயாளமானவைகளை யோசிக்கிறான், தயாளமானவைகளிலே நிலைத்தும் இருக்கிறான்.
|
8. But the liberal H5081 deviseth H3289 liberal things H5081 ; and by H5921 liberal things H5081 shall he stand H6965 .
|
9. சுகஜீவிகளாகிய ஸ்திரீகளே, எழுந்திருந்து என் வார்த்தைகளைக் கேளுங்கள்; நிர்விசாரமான குமாரத்திகளே, என் வசனத்துக்குச் செவிகொடுங்கள்.
|
9. Rise up H6965 , ye women H802 that are at ease H7600 ; hear H8085 my voice H6963 , ye careless H982 daughters H1323 ; give ear H238 unto my speech H565 .
|
10. நிர்விசாரிகளே, ஒரு வருஷமும் சில நாட்களுமாய்த் தத்தளிப்பீர்கள்; திராட்சப்பலன் அற்றுப்போகும்; அறுப்புக்காலம் வராது.
|
10. Many days H3117 and years H8141 shall ye be troubled H7264 , ye careless women H982 : for H3588 the vintage H1210 shall fail H3615 , the gathering H625 shall not H1097 come H935 .
|
11. சுகஜீவிகளே, நடுங்குங்கள்; நிர்விசாரிகளே, தத்தளியுங்கள்; உடையை உரிந்து களைந்துபோட்டு, அரையில் இரட்டைக் கட்டிக்கொள்ளுங்கள்.
|
11. Tremble H2729 , ye women that are at ease H7600 ; be troubled H7264 , ye careless ones H982 : strip H6584 you , and make you bare H6209 , and gird H2290 sackcloth upon H5921 your loins H2504 .
|
12. செழிப்பான வயல்களினிமித்தமும் கனிதரும் திராட்சச் செடிகளினிமித்தமும் மாரடித்துப் புலம்புவார்கள்.
|
12. They shall lament H5594 for H5921 the teats H7699 , for H5921 the pleasant H2531 fields H7704 , for H5921 the fruitful H6509 vine H1612 .
|
13. என் ஜனத்தினுடைய நிலத்திலும், களிகூர்ந்திருந்த நகரத்திலுள்ள சந்தோஷம் நிறைந்த எல்லா வீடுகளிலும், முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும்.
|
13. Upon H5921 the land H127 of my people H5971 shall come up H5927 thorns H6975 and briers H8068 ; yea H3588 , upon H5921 all H3605 the houses H1004 of joy H4885 in the joyous H5947 city H7151 :
|
14. அரமனை பாழாக விடப்படும், ஜனம் நிறைந்த நகரம் வெறுமையாகும், மேடும் துருக்கமும் என்றைக்கும் கெபிகளாகும், அவைகள் காட்டுக்கழுதைகள் களிக்கும் இடமாயும் மந்தைகளுக்கு மேய்ச்சலிடமாயும் இருக்கும்.
|
14. Because H3588 the palaces H759 shall be forsaken H5203 ; the multitude H1995 of the city H5892 shall be left H5800 ; the forts H6076 and towers H975 shall be H1961 for H1157 dens H4631 forever H5704 H5769 , a joy H4885 of wild asses H6501 , a pasture H4829 of flocks H5739 ;
|
15. உன்னதத்திலிருந்து நம்மேல் ஆவி ஊற்றப்படுமட்டும் அப்படியே இருக்கும்; அப்பொழுது வனாந்தரம் செழிப்பான வயல்வெளியாகும்; செழிப்பான வயல்வெளி காடாக எண்ணப்படும்.
|
15. Until H5704 the spirit H7307 be poured H6168 upon H5921 us from on high H4480 H4791 , and the wilderness H4057 be H1961 a fruitful field H3759 , and the fruitful field H3759 be counted H2803 for a forest H3293 .
|
16. வனாந்தரத்திலே நியாயம் வாசமாயிருக்கும், செழிப்பான வயல்வெளியிலே நீதி தங்கித்தரிக்கும்.
|
16. Then judgment H4941 shall dwell H7931 in the wilderness H4057 , and righteousness H6666 remain H3427 in the fruitful field H3759 .
|
17. நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம்.
|
17. And the work H4639 of righteousness H6666 shall be H1961 peace H7965 ; and the effect H5656 of righteousness H6666 quietness H8252 and assurance H983 forever H5704 H5769 .
|
18. என் ஜனம் சமாதான தாபரங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருக்கும்.
|
18. And my people H5971 shall dwell H3427 in a peaceable H7965 habitation H5116 , and in sure H4009 dwellings H4908 , and in quiet H7600 resting places H4496 ;
|
19. ஆனாலும் காடு அழிய கல்மழை பெய்யும், அந்த நகரம் மகா தாழ்வாய்த் தாழ்ந்துபோகும்.
|
19. When it shall hail H1258 , coming down H3381 on the forest H3293 ; and the city H5892 shall be low H8213 in a low place H8218 .
|
20. மாடுகளையும் கழுதைகளையும் நடத்திக்கொண்டுபோய், நீர்வளம் பொருந்திய இடங்களிலெல்லாம் விதை விதைக்கிற நீங்கள் பாக்கியவான்கள்.
|
20. Blessed H835 are ye that sow H2232 beside H5921 all H3605 waters H4325 , that send forth H7971 thither the feet H7272 of the ox H7794 and the ass H2543 .
|