|
|
1. என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி! என் தேவனாகிய கர்த்தாவே, நீர் மிக மேன்மையானவர்! நீர் மகிமையையும், கனத்தையும் அணிந்திருக்கிறீர்.
|
1. Bless H1288 H853 the LORD H3068 , O my soul H5315 . O LORD H3068 my God H430 , thou art very H3966 great H1431 ; thou art clothed H3847 with honor H1935 and majesty H1926 .
|
2. ஒருவன் அங்கியைத் தரித்திருப்பதைப் போல நீர் ஒளியை அணிந்துகொண்டிருக்கிறீர். நீர் வானங்களைத் திரைச் சீலையைப்போல விரிக்கிறீர்.
|
2. Who coverest H5844 thyself with light H216 as with a garment H8008 : who stretchest out H5186 the heavens H8064 like a curtain H3407 :
|
3. தேவனே நீர் அவற்றிற்கு மேலாக உமது வீட்டைக் கட்டியிருக்கிறீர். அடர்த்தியான மேகங்களை இரதமாக நீர் பயன்படுத்திக் காற்றின் சிறகுகளின் மீது அமர்ந்து வானத்தின் குறுக்காகச் செல்கிறீர்.
|
3. Who layeth the beams H7136 of his chambers H5944 in the waters H4325 : who maketh H7760 the clouds H5645 his chariot H7398 : who walketh H1980 upon H5921 the wings H3671 of the wind H7307 :
|
4. தேவனே, உமது தூதர்களைக் காற்றைப் போல் உண்டாக்கினீர். *தேவனே...உண்டாக்கினீர் அல்லது “உமது தூதர்களை ஆவியாக உருவாக்கினீர்” எனப்படும். உமது ஊழியக்காரரை அக்கினிப்போல் உருவாக்கினீர்.
|
4. Who maketh H6213 his angels H4397 spirits H7307 ; his ministers H8334 a flaming H3857 fire H784 :
|
5. தேவனே, நீர் பூமியை அதன் அஸ்திபாரங்களின் மீது ஸ்தாபித்தீர். எனவே அது ஒருபோதும் அழிக்கப்படுவதில்லை.
|
5. Who laid H3245 H5921 the foundations H4349 of the earth H776 , that it should not H1077 be removed H4131 forever H5769 H5703 .
|
6. நீர் அதனைத் தண்ணீரால் போர்வையைப் போன்று மூடினீர். தண்ணீர் மலைகளை மூடிற்று.
|
6. Thou coveredst H3680 it with the deep H8415 as with a garment H3830 : the waters H4325 stood H5975 above H5921 the mountains H2022 .
|
7. நீர் கட்டளையிட்டபோது, தண்ணீர் விலகியோடிற்று. தேவனே, நீர் தண்ணீரைப் பார்த்துச் சத்தமிட்டீர், அது விலகியோடிற்று.
|
7. At H4480 thy rebuke H1606 they fled H5127 ; at H4480 the voice H6963 of thy thunder H7482 they hasted away H2648 .
|
8. தண்ணீர் பர்வதங்களிலிருந்து கீழே பாய்ந்து பள்ளத்தாக்குகளில் சென்று, பின்பு நீர் அவற்றிற்கென வைத்த இடங்களுக்கெல்லாம் சென்றது.
|
8. They go up H5927 by the mountains H2022 ; they go down H3381 by the valleys H1237 unto H413 the place H4725 which H2088 thou hast founded H3245 for them.
|
9. நீர் கடல்களுக்கு எல்லையை வைத்தீர். தண்ணீர் மீண்டும் ஒருபோதும் பூமியை மூடுவதற்கென எழும்பாது.
|
9. Thou hast set H7760 a bound H1366 that they may not H1077 pass over H5674 ; that they turn not again H7725 H1077 to cover H3680 the earth H776 .
|
10. தேவனே, நீரூற்றுகளிலிருந்து நீரோடைகளாக நீர் ஓடும்படி செய்தீர். பர்வதங்களின் நீரோடைகளினூடே அது கீழே பாய்கிறது.
|
10. He sendeth H7971 the springs H4599 into the valleys H5158 , which run H1980 among H996 the hills H2022 .
|
11. நீரோடைகள் எல்லா காட்டு மிருகங்களுக்கும் தண்ணீரைத் தருகின்றன. காட்டுக் கழுதைகளும் அங்கு வந்து தண்ணீரைப் பருகுகின்றன.
|
11. They give drink H8248 to every H3605 beast H2416 of the field H7704 : the wild asses H6501 quench H7665 their thirst H6772 .
|
12. வனத்தின் பறவைகள் குளங்களின் அருகே வாழவரும். அருகேயுள்ள மரங்களின் கிளைகளில் அவை பாடும்.
|
12. By H5921 them shall the fowls H5775 of the heaven H8064 have their habitation H7931 , which sing H5414 H6963 among H4480 H996 the branches H6073 .
|
13. மலைகளின்மேல் தேவன் மழையைப் பெய்யப்பண்ணுகிறார். தேவன் செய்த பொருட்கள் பூமிக்குத் தேவையான எல்லாவற்றையும் கொடுக்கின்றன.
|
13. He watereth H8248 the hills H2022 from his chambers H4480 H5944 : the earth H776 is satisfied H7646 with the fruit H4480 H6529 of thy works H4639 .
|
14. மிருகங்கள் உண்ணும்படியாக தேவன் புல்லை முளைத்தெழச் செய்கிறார். அவர் நமக்குத் தாவரங்களைத் தருகிறார். நம் உழைப்பில் அவற்றை வளர்க்கிறோம். அத்தாவரங்கள் பூமியிலிருந்து நமக்கு உணவைத் தருகின்றன.
|
14. He causeth the grass H2682 to grow H6779 for the cattle H929 , and herb H6212 for the service H5656 of man H120 : that he may bring forth H3318 food H3899 out of H4480 the earth H776 ;
|
15. நம்மை மகிழ்விக்கும் திராட்சைரசத்தையும் நமது தோலை மிருதுவாக்கும் எண்ணெயையும், நம்மை வலுவாக்கும் உணவையும் தேவன் நமக்குத் தருகிறார்.
|
15. And wine H3196 that maketh glad H8055 the heart H3824 of man H582 , and oil H4480 H8081 to make his face H6440 to shine H6670 , and bread H3899 which strengtheneth H5582 man H582 's heart H3824 .
|
16. லீபனோனின் பெரிய கேதுரு மரங்கள் கர்த்தருக்குரியவை. கர்த்தர் அம்மரங்களை நாட்டி, அவற்றிற்குத் தேவையான தண்ணீரைக் கொடுக்கிறார்.
|
16. The trees H6086 of the LORD H3068 are full H7646 of sap ; the cedars H730 of Lebanon H3844 , which H834 he hath planted H5193 ;
|
17. அம்மரங்களில் பறவைகள் தங்கள் கூடுகளைக் கட்டும். பெரிய கொக்குகள் தேவதாரு மரங்களில் வாழும்.
|
17. Where H834 H8033 the birds H6833 make their nests H7077 : as for the stork H2624 , the fir trees H1265 are her house H1004 .
|
18. காட்டு ஆடுகளுக்கு உயர்ந்த பர்வதங்கள் இருப்பிடமாகும். குழிமுயல்களுக்குக் கன்மலைகள் மறைவிடமாகும்.
|
18. The high H1364 hills H2022 are a refuge H4268 for the wild goats H3277 ; and the rocks H5553 for the conies H8227 .
|
19. தேவனே, விடுமுறை காலம் தொடங்குவதை அறிவிக்கும்படி எங்களுக்கு சந்திரனைத் தந்தீர். எப்போது மறைய வேண்டுமென்பதை சூரியன் எப்போதும் அறியும்.
|
19. He appointed H6213 the moon H3394 for seasons H4150 : the sun H8121 knoweth H3045 his going down H3996 .
|
20. எல்லா காட்டு மிருகங்களும் வெளியே வந்து சுற்றித்திரிகிற காலமாகிய இரவாகும்படி இருளை நீர் உண்டாக்கினீர்.
|
20. Thou makest H7896 darkness H2822 , and it is H1961 night H3915 : wherein all H3605 the beasts H2416 of the forest H3293 do creep H7430 forth .
|
21. தேவன் கொடுக்கிற உணவிற்காக வேண்டுகிறது போல தாக்கும் சிங்கங்கள் கெர்ச்சிக்கும்.
|
21. The young lions H3715 roar H7580 after their prey H2964 , and seek H1245 their meat H400 from God H4480 H410 .
|
22. அப்போது சூரியன் எழும்பும், மிருகங்கள் தங்கள் இருப்பிடங்களுக்குப் போய் ஓய்வெடுக்கும்.
|
22. The sun H8121 ariseth H2224 , they gather themselves together H622 , and lay them down H7257 in H413 their dens H4585 .
|
23. அப்போது ஜனங்கள் தங்கள் வேலைகளுக்காகச் செல்வார்கள், அவர்கள் மாலைவரை பணிபுரிவார்கள்.
|
23. Man H120 goeth forth H3318 unto his work H6467 and to his labor H5656 until H5704 the evening H6153 .
|
24. கர்த்தாவே, நீர் பல அற்புதமான காரியங்களைச் செய்திருக்கிறீர். பூமி, நீர் உண்டாக்கின பல பொருள்களால் நிரம்பியிருக்கிறது. நீர் செய்யும் ஒவ்வொன்றிலும் உமது ஞானத்தைக் காண்கிறோம்.
|
24. O LORD H3068 , how H4100 manifold H7231 are thy works H4639 ! in wisdom H2451 hast thou made H6213 them all H3605 : the earth H776 is full H4390 of thy riches H7075 .
|
25. சமுத்திரத்தைப் பாருங்கள், அது எவ்வளவு பெரியது! பல உயிர்கள் அங்கு வாழ்கின்றன! எண்ணமுடியாத சிறியதும் பெரியதுமான உயிரினங்கள் அங்கு வாழ்கின்றன.
|
25. So is this H2088 great H1419 and wide H7342 H3027 sea H3220 , wherein H8033 are things creeping H7431 innumerable H369 H4557 , both small H6996 and H5973 great H1419 beasts H2416 .
|
26. நீர் உண்டாக்கின கடல் விலங்கான லிவியாதான் கடலில் விளையாடும்போது கப்பல்கள் சமுத்திரத்தின் மேல் பயணம் செய்கின்றன.
|
26. There H8033 go H1980 the ships H591 : there is that leviathan H3882 , whom thou H2088 hast made H3335 to play H7832 therein.
|
27. தேவனே, எல்லாக்காரியங்களும் உம்மைச் சார்ந்திருக்கின்றன. தக்கநேரத்தில் நீர் அவற்றிற்கு உணவைக் கொடுக்கிறீர்.
|
27. These wait H7663 all H3605 upon H413 thee ; that thou mayest give H5414 them their meat H400 in due season H6256 .
|
28. தேவனே, எல்லா உயிரினங்களுக்கும் அவை உண்ணும் உணவை நீர் கொடுக்கிறீர். நல்ல உணவால் நிரம்பிய உமது கைகளை நீர் திறக்கிறீர், அவை வயிறு நிரம்பும்வரை அவற்றை உண்ணும்.
|
28. That thou givest H5414 them they gather H3950 : thou openest H6605 thine hand H3027 , they are filled H7646 with good H2896 .
|
29. நீர் அவற்றை விட்டு விலகும்போது அவை அஞ்சும். அவற்றின் சுவாசம் அவற்றைவிட்டு நீங்கும். அவை சோர்ந்து மரிக்கும். அவற்றின் உடல்கள் மீண்டும் புழுதியாகிவிடும்.
|
29. Thou hidest H5641 thy face H6440 , they are troubled H926 : thou takest away H622 their breath H7307 , they die H1478 , and return H7725 to H413 their dust H6083 .
|
30. ஆனால் கர்த்தாவே, நீர் உமது ஆவியை அனுப்பும்போது அவை ஆரோக்கியம் பெறும்! நீர் மீண்டும் நிலத்தைப் புதிதாகமாற்றுவீர்.
|
30. Thou sendest forth H7971 thy spirit H7307 , they are created H1254 : and thou renewest H2318 the face H6440 of the earth H127 .
|
31. கர்த்தருடைய மகிமை என்றென்றும் தொடரட்டும்! கர்த்தர் தாம் உண்டாக்கின பொருள்களைக் கண்டு களிப்படையட்டும்.
|
31. The glory H3519 of the LORD H3068 shall endure H1961 forever H5769 : the LORD H3068 shall rejoice H8055 in his works H4639 .
|
32. கர்த்தர் பூமியைச்சற்றே பார்த்தால் அது அதிரும். அவர் மலைகளைத் தொட நேர்ந்தால் அவற்றிலிருந்து புகையெழத் தொடங்கும்.
|
32. He looketh H5027 on the earth H776 , and it trembleth H7460 : he toucheth H5060 the hills H2022 , and they smoke H6225 .
|
33. என் ஆயுள் முழுவதும் நான் கர்த்தரைப் பாடுவேன். நான் வாழும்வரை கர்த்தரைத் துதித்துப் பாடுவேன்.
|
33. I will sing H7891 unto the LORD H3068 as long as I live H2416 : I will sing praise H2167 to my God H430 while I have my being H5750 .
|
34. நான் கூறுபவை அவரை மகிழ்ச்சியாக்கும் என நம்புகிறேன். நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருக்கிறேன்.
|
34. My meditation H7879 of H5921 him shall be sweet H6149 : I H595 will be glad H8055 in the LORD H3068 .
|
35. பூமியிலிருந்து பாவம் மறைந்து போகட்டும். தீயோர் என்றென்றும் அழிந்து போவார்களாக. என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி! கர்த்தரை துதியுங்கள்! PE
|
35. Let the sinners H2400 be consumed H8552 out of H4480 the earth H776 , and let the wicked H7563 be no H369 more H5750 . Bless H1288 thou H853 the LORD H3068 , O my soul H5315 . Praise H1984 ye the LORD H3050 .
|