Bible Versions
Bible Books

2 Corinthians 1:23 (ERVTA) Easy to Read version in Tamil Language

1 இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுவது, நான் அப்போஸ்தலன் ஆனேன். ஏனென்றால் நான் அவ்விதம் ஆவதையே தேவன் விரும்பினார். கிறிஸ்துவில் நமது சகோதரனாகிய தீமோத்தேயுவிடமிருந்தும். கொரிந்து நகரின் தேவனுடைய சபைக்கும் அகாயா நாடெங்கும் உள்ள எல்லா பரிசுத்தவான்களுக்கும் எழுதுகிறதாவது,
2 நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
3 நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை வாழ்த்துங்கள். தேவனே இரக்கம் நிறைந்த பிதா. எல்லா விதமான ஆறுதல்களுக்கும் உறைவிடம் அவர் தான்.
4 நாம் துன்பத்தில் இருக்கும் ஒவ்வொரு முறையும் அவர் ஆறுதல் வழங்குகிறார். இது எந்த வகையிலாவது மற்றவர்கள் துன்பத்தில் இருக்கும்போது நாம் ஆறுதல் வழங்கத் துணையாயிருக்கும். நம்மை தேவன் ஆறுதல்படுத்துவதைப் போலவே நாம் அவர்களையும் ஆறுதல்படுத்த வேண்டும்.
5 கிறிஸ்துவின் அநேக துன்பங்களில் நாம் பங்கு கொண்டால் கிறிஸ்துவிடமிருந்து நமக்கு மிகுந்த ஆறுதலும் கிடைக்கும்.
6 நாங்கள் தொல்லைக்குட்பட்டால் அது உங்களின் இரட்சிப்புக்காகவும் ஆறுதலுக்காகவும் தான். நாங்கள் ஆறுதல் பெற்றால் அது உங்களின் ஆறுதலுக்காகத்தான். எங்களுக்கு நேரும் தொல்லைகள் போல உங்களுக்கு நேரும் தொல்லைகளை நீங்கள் பொறுமையுடன் தாங்கிக்கொள்ள இது உதவும்.
7 உங்களுக்கான எங்கள் நம்பிக்கை பலமானது. எங்கள் துன்பங்களில் நீங்களும் பங்கு கொள்வீர்கள் என்பதை அறிவோம். எனவே, எங்கள் ஆறுதலிலும் உங்களுக்குப் பங்கு உண்டு என்பதை நாங்கள் அறிவோம்.
8 சகோதர சகோதரிகளே, ஆசியா நாட்டில் நாங்கள் பட்ட துன்பங்களைப் பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளவேண்டும் என விரும்புகிறோம். அங்கே எங்களுக்குப் பெரும் பாரங்கள் இருந்தன. அந்த பாரங்கள் எங்கள் பலத்தைவிட பெரிது. வாழ்க்கைப் பற்றிய நம்பிக்கையையே நாங்கள் இழந்துவிட்டோம்.
9 உண்மையாகவே நாங்கள் இறந்து போவோம் என மனதிற்குள் எண்ணினோம். நம்மீது நம்பிக்கை வைக்காமல் தேவன் மீது நம்பிக்கை வைப்பதை நாம் உணரும் பொருட்டு இது இவ்வகையில் நடந்தது. அவர் மரணத்திலிருந்து மக்களை எழுப்பியவர்.
10 இது போன்ற மரண ஆபத்துகளில் இருந்து தேவன் எங்களைக் காப்பாற்றினார். அவர் தொடர்ந்து நம்மைக் காப்பாற்றுவார். நாங்கள் அவர் மீது தான் நம்பிக்கையை வைத்திருக்கிறோம். அவரே தொடர்ந்து நம்மைக் காப்பாற்றுவார்.
11 நீங்கள் உங்களது பிரார்த்தனைகள் மூலம் எங்களுக்கு உதவலாம். ஏராளமான மக்கள் எங்களுக்காக நன்றி சொல்வர். அவர்களின் பிரார்த்தனைகளால் தேவன் எங்களை ஆசீர்வதிப்பார்.
12 இதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். நான் இதனை மனப்பூர்வமாகக் கூறுவேன். இது உண்மையானது. நாங்கள் இந்த உலகத்தில் செய்த அனைத்தையும் தேவன் தந்த நேர்மையும் சுத்தமும் கொண்ட இதயத்தோடு செய்தோம். நாங்கள் உங்களிடம் செய்த காரியங்களில் இது மேலும் உண்மையானது. இவற்றை நாங்கள் தேவனுடைய கிருபையால் செய்தோம். உலகிலுள்ள ஞானத்தால் செய்யவில்லை.
13 உங்களால் வாசித்து புரிந்துகொள்ளத்தக்கவற்றை மட்டுமே உங்களுக்கு எழுதுகிறோம்.
14 எங்களைப் பற்றி ஏற்கெனவே சில காரியங்களை நீங்கள் புரிந்து கொண்டிருப்பதைப் போல இதையும் நீங்கள் புரிந்துகொள்ள முடியும் என்று நம்புகிறோம். எங்களுக்காகப் பெருமை அடைய முடியும் என்பதைப் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். இது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மீண்டும் வரும்போது உங்களுக்காக நாங்கள் பெருமைப்படுவதைப் போன்றிருக்கும்.
15 நான் இவற்றைப் பற்றியெல்லாம் மிகவும் உறுதியாக இருந்தேன். அதனால் தான் முதலில் உங்களைச் சந்திக்கத் திட்டமிட்டேன். பிறகு நீங்கள் இரண்டு முறை ஆசீர்வதிக்கப்பட்டவர்களாவீர்கள்.
16 மக்கதோனியாவுக்குப் போகிற வழியில் உங்களைச் சந்திக்கத் திட்டமிட்டேன். பிறகு திரும்பும் வழியில் மீண்டும் உங்களைச் சந்திக்கத் திட்டமிட்டேன். யூதேயாவுக்குப் போகும்போது உங்கள் உதவியைப் பெற விரும்பினேன்.
17 நான் சிந்தித்துப் பார்க்காமலேயே இத்திட்டங்களை வகுத்தேன் என்று நினைக்கிறீர்களா? அல்லது நான் ஆமாம், ஆமாம் என்றும் அதே நேரத்தில் இல்லை, இல்லை என்றும் சொல்லும்படியான இந்த உலகத்தின் திட்டங்களைப் போன்றே இத்திட்டங்களும் இருக்கின்றன என்று நினைக்கிறீர்களா?
18 ஆனால் தேவனை நம்ப முடியுமானால், பிறகு நாங்கள் சொல்பவை ஒரே நேரத்தில் ஆமாம் என்றும் இல்லை என்றும் இருக்காது என நம்பமுடியும்.
19 என்னாலும், சில்வானுவினாலும், தீமோத் தேயுவினாலும் போதிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து வெறும் ஆமாம் மற்றும் இல்லை போல அல்லர். கிறிஸ்துவுக்குள் அது எல்லா காலத்திலும் ஆமாம் மட்டும்தான்.
20 தேவனுடைய வாக்குறுதிகள் எல்லாம் இயேசு கிறிஸ்துவுக்குள் ஆம் என்றுள்ளது. ஆகவேதான் தேவனுடைய மகிமையை கிறிஸ்துவின் வழியாகச் சொல்லும்போது ஆமென் என்கிறோம்.
21 நீங்களும் நாங்களும் கிறிஸ்துவுக்கு உரியவர்களே என்பதை தேவனே உறுதியாக்கினார். நமக்கு ஞானஸ்நானம் வழங்கியவரும் அவரே.
22 நாம் அவரைச் சார்ந்தவர் என்பதைக் காட்ட அவரே முத்திரையிட்டார். அவர் தம்முடைய ஆவியை நம் இதயத்தில் நிரப்பினார். அது அவர் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்பதற்கான உறுதிப்பத்திரமும் நிரூபணமுமாயிற்று.
23 நான் சொல்வதெல்லாம் உண்மை. இதற்கு தேவனே சாட்சி. நான் கொரிந்து நகருக்கு வராததற்குக் காரணம் உங்களைத் தண்டிக்கக் கூடாது என்பதும் உங்களைப் புண்படுத்திவிடக்கூடாது என்பதும்தான்.
24 நாங்கள் உங்கள் விசுவாசத்தைக் கட்டுப்படுத்துகிறோம் என்று நான் எண்ணவில்லை. நீங்கள் உங்கள் விசுவாசத்தில் பலமாய் இருக்கிறீர்கள். உங்கள் மகிழ்ச்சிக்காக உங்களோடு பணிபுரிபவர்களாக இருக்கிறோம்.
1 Paul G3972 N-NSM , an apostle G652 N-NSM of Jesus G2424 N-GSM Christ G5547 N-GSM by G1223 PREP the will G2307 N-GSN of God G2316 N-GSM , and G2532 CONJ Timothy G5095 N-NSM our brother G80 N-NSM , unto the G3588 T-DSF church G1577 N-DSF of G3588 T-DSF God G2316 N-GSM which is G5607 V-PXP-DSF at G1722 PREP Corinth G2882 N-DSF , with G4862 PREP all G3956 A-DPM the G3588 T-DPM saints G40 A-DPM which are G5607 V-PXP-DPM in G1722 PREP all G3650 A-DSF Achaia G882 N-DSF :
2 Grace G5485 N-NSF be to you G5213 P-2DP and G2532 CONJ peace G1515 N-NSF from G575 PREP God G2316 N-GSM our G2257 P-1GP Father G3962 N-GSM , and G2532 CONJ from the Lord G2962 N-GSM Jesus G2424 N-GSM Christ G5547 N-GSM .
3 Blessed G2128 A-NSM be God G2316 N-NSM , even G2532 CONJ the Father G3962 N-NSM of G3588 T-GSM our G3588 T-GSM Lord G2962 N-GSM Jesus G2424 N-GSM Christ G5547 N-GSM , the G3588 T-NSM Father G3962 N-NSM of mercies G3628 N-GPM , and G2532 CONJ the God G2316 N-NSM of all G3956 A-GSF comfort G3874 N-GSF ;
4 Who G3588 T-NSM comforteth G3870 V-PAP-NSM us G2248 P-1AP in G1909 PREP all G3956 A-DSF our G3588 T-DSF tribulation G2347 N-DSF , that G3588 T-ASN we G3588 T-ASN may be able G1410 V-PNN to comfort G3870 V-PAN them G3588 T-APM which are in G1722 PREP any G3956 A-DSF trouble G2347 N-DSF , by G1223 PREP the G3588 T-GSF comfort G3874 N-GSF wherewith G3739 R-GSF we G848 ourselves are comforted G3870 V-PPI-1P of G3588 T-GSM God G2316 N-GSM .
5 For G3754 CONJ as G2531 ADV the G3588 T-NPN sufferings G3804 N-NPN of Christ G5547 N-GSM abound G4052 V-PAI-3S in G1519 PREP us G2248 P-1AP , so G3779 ADV our G3588 T-NSF consolation G3874 N-NSF also G2532 CONJ aboundeth G4052 V-PAI-3S by G1223 PREP Christ G5547 N-GSM .
6 And G1161 CONJ whether G1535 CONJ we be afflicted G2346 V-PPI-1P , it G3588 T-GSF is for G3588 T-GSF your G5216 P-2GP consolation G3874 N-GSF and G2532 CONJ salvation G4991 N-GSF , which is effectual G1754 V-PMP-GSF in G1722 PREP the enduring G5281 N-DSF of G3588 T-GPN the G3588 T-GPN same G846 P-GPN sufferings G3804 N-GPN which G3739 R-GPN we G2249 P-1NP also G2532 CONJ suffer G3958 V-PAI-1P : or whether G1535 CONJ we be comforted G3870 V-PPI-1P , it is for G5228 PREP your G5216 P-2GP consolation G3874 N-GSF and G2532 CONJ salvation G4991 N-GSF .
7 And G2532 CONJ our G2257 hope G1680 of G5228 you G5216 is steadfast G949 , knowing G1492 V-RAP-NPM , that G3754 CONJ as G5618 ADV ye are G2075 V-PXI-2P partakers G2844 A-NPM of G3588 T-GPN the G3588 T-GPN sufferings G3804 N-GPN , so G3779 ADV shall ye be also G2532 CONJ of G3588 T-GSF the G3588 T-GSF consolation G3874 N-GSF .
8 For G1063 CONJ we would G2309 V-PAI-1P not G3756 PRT-N , brethren G80 N-VPM , have you ignorant G50 V-PAN of G5228 PREP our G3588 T-GSF trouble G2347 N-GSF which came G1096 V-2ADP-GSF to us G2254 P-1DP in G1722 PREP Asia G773 N-DSF , that G3754 CONJ we were pressed G916 V-API-1P out of measure G2596 PREP , above G5228 PREP strength G1411 N-ASF , insomuch that G5620 CONJ we G2248 P-1AP despaired G1820 V-APN even G2532 CONJ of life G2198 V-PAN :
9 But G235 CONJ we G848 had G2192 V-RAI-1P the G3588 T-ASN sentence G610 N-ASN of death G2288 N-GSM in G1722 PREP ourselves G1438 F-3DPM , that G2443 CONJ we should G5600 V-PXS-1P not G3361 PRT-N trust G3982 V-2RAP-NPM in G1909 PREP ourselves G1438 F-3DPM , but G235 CONJ in G1909 PREP God G2316 N-DSM which raiseth G1453 V-PAP-DSM the G3588 T-APM dead G3498 A-APM :
10 Who G3739 R-NSM delivered G4506 V-ANI-3S us G2248 P-1AP from G1537 PREP so great G5082 D-GSM a death G2288 N-GSM , and G2532 CONJ doth deliver G4506 V-PNI-3S : in G1519 PREP whom G3739 R-ASM we trust G1679 V-RAI-1P that G3754 CONJ he will G2532 CONJ yet G2089 ADV deliver G4506 V-FDI-3S us ;
11 Ye G5216 P-2GP also G2532 CONJ helping together G4943 V-PAP-GPM by prayer G1162 N-DSF for G5228 PREP us G2257 P-1GP , that G2443 CONJ for G3588 T-NSN the G3588 T-NSN gift G5486 N-NSN bestowed upon G1519 PREP us G2248 P-1AP by the means of G1537 PREP many G4183 A-GPN persons G4383 N-GPN thanks may be given G2168 V-APS-3S by G1223 PREP many G4183 A-GPN on our behalf G5228 PREP .
12 For G1063 CONJ our G2257 P-1GP rejoicing G2746 N-NSF is G2076 V-PXI-3S this G3778 D-NSF , the G3588 T-NSN testimony G3142 N-NSN of G3588 T-GSF our G3588 T-GSF conscience G4893 N-GSF , that G3754 CONJ in G1722 PREP simplicity G572 N-DSF and G2532 CONJ godly G2316 N-GSM sincerity G1505 N-DSF , not G3756 PRT-N with G1722 PREP fleshly G4559 A-DSF wisdom G4678 N-DSF , but G235 CONJ by G1722 PREP the grace G5485 N-DSF of God G2316 N-GSM , we have had our conversation G390 V-2API-1P in G1722 PREP the G3588 T-DSM world G2889 N-DSM , and G1161 CONJ more abundantly G4056 ADV to G4314 PREP you G5209 P-2AP - ward .
13 For G1063 CONJ we write G1125 V-PAI-1P none G3756 PRT-N other things G243 A-APN unto you G5213 P-2DP , than G235 CONJ what G3739 R-APN ye read G314 V-PAI-2P or G2228 PRT acknowledge G1921 V-PAI-2P ; and G1161 CONJ I trust G1679 V-PAI-1S ye shall G3754 CONJ acknowledge G1921 V-FDI-2P even G2532 CONJ to G2193 CONJ the end G5056 N-GSN ;
14 As G2531 ADV also G2532 CONJ ye have acknowledged G1921 V-2AAI-2P us G2248 P-1AP in G575 PREP part G3313 N-GSN , that G3754 CONJ we are G2070 V-PXI-1P your G5216 P-2GP rejoicing G2745 N-NSN , even as G2509 ADV ye G5210 P-2NP also G2532 CONJ are ours G2257 P-1GP in G1722 PREP the G3588 T-DSF day G2250 N-DSF of G3588 T-GSM the G3588 T-GSM Lord G2962 N-GSM Jesus G2424 N-GSM .
15 And G2532 CONJ in this G3588 T-DSF confidence G4006 N-DSF I was minded G1014 V-INI-1S to come G2064 V-2AAN unto G4314 PREP you G3588 T-ASN before G4386 ADV , that G2443 CONJ ye might have G2192 V-PAS-2P a second G1208 A-ASF benefit G5485 N-ASF ;
16 And G2532 CONJ to pass G1330 V-2AAN by G1223 PREP you G5216 P-2GP into G1519 PREP Macedonia G3109 N-ASF , and G2532 CONJ to come G2064 V-2AAN again G3825 ADV out of G575 PREP Macedonia G3109 N-GSF unto G4314 PREP you G5209 P-2AP , and G2532 CONJ of G5259 PREP you G5216 P-2GP to be brought on my way G4311 V-APN toward G1519 PREP Judea G2449 N-ASF .
17 When I therefore G3767 CONJ was thus minded G1011 V-PNP-NSM , did I G686 use G5530 V-ADI-1S lightness G1644 N-DSF ? or G2228 PRT the things that G3739 R-APN I purpose G1011 V-PNI-1S , do I purpose G1011 V-PNI-1S according G2596 PREP to the flesh G4561 N-ASF , that G2443 CONJ with G3844 PREP me G1698 P-1DS there should be G5600 V-PXS-3S yea G3483 PRT yea G3483 PRT , and G2532 CONJ nay G3756 PRT-N nay G3756 PRT-N ?
18 But G1161 CONJ as God G2316 N-NSM is true G4103 A-NSM , our G3588 T-NSM word G3056 N-NSM toward G4314 PREP you G5209 P-2AP was G1096 V-2ADI-3S not G3756 PRT-N yea and nay G3483 PRT .
19 For G1063 CONJ the G3588 T-NSM Son G5207 N-NSM of God G2316 N-GSM , Jesus G2424 N-NSM Christ G5547 N-NSM , who G3588 T-NSM was preached G2784 V-APP-NSM among G1722 PREP you G5213 P-2DP by G1223 PREP us G2257 P-1GP , even by G1223 PREP me G1700 P-1GS and G2532 CONJ Silvanus G4610 N-GSM and G2532 CONJ Timothy G5095 N-GSM , was G1096 V-2ADI-3S not G3756 PRT-N yea and nay G3483 PRT , but G235 CONJ in G1722 PREP him G846 P-DSM was G1096 V-2RAI-3S yea G3483 PRT .
20 For G1063 CONJ all G3745 K-NPF the promises G1860 N-NPF of God G2316 N-GSM in G1722 PREP him G3588 T-NSN are PRT yea G3483 PRT , and G2532 CONJ in G1722 PREP him G3588 T-NSN Amen G281 HEB , unto G4314 PREP the G3588 T-DSM glory G1391 N-ASF of God G2316 N-DSM by G1223 PREP us G2257 P-1GP .
21 Now G1161 CONJ he which establisheth G950 V-PAP-NSM us G2248 P-1AP with G4862 PREP you G5213 P-2DP in G1519 PREP Christ G5547 N-ASM , and G2532 CONJ hath anointed G5548 V-AAP-NSM us G2248 P-1AP , is God G2316 N-NSM ;
22 Who hath also sealed G4972 V-AMP-NSM us G3588 T-NSM , and G2532 CONJ given G1325 V-2AAP-NSM the G3588 T-ASM earnest G728 N-ASM of G3588 T-GSN the G3588 T-GSN Spirit G4151 N-GSN in G1722 PREP our G3588 T-DPF hearts G2588 N-DPF .
23 Moreover G1161 CONJ I G1473 P-1NS call G1941 V-PMI-1S God G2316 N-ASM for a record G3144 N-ASM upon G1909 PREP my G1699 S-1ASF soul G5590 N-ASF , that G3754 CONJ to spare G5339 V-PNP-NSM you G5216 P-2GP I came G2064 V-2AAI-1S not as yet G3765 ADV unto G1519 PREP Corinth G2882 N-ASF .
24 Not G3756 PRT-N for that G3754 CONJ we have dominion over G2961 V-PAI-1P your G3588 T-GSF faith G4102 N-GSF , but G235 CONJ are G2070 V-PXI-1P helpers G4904 A-NPM of G3588 T-GSF your G3588 T-GSF joy G5479 N-GSF : for G1063 CONJ by faith G4102 N-DSF ye stand G2476 V-RAI-2P .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×