|
|
1. “யோபுவே, உன்னால் லிவியாதானை ஒரு தூண்டிலினால் பிடிக்க முடியுமா? அதன் நாவை உன்னால் ஒரு கயிற்றினால் கட்ட முடியுமா?
|
1. Canst thou draw out H4900 leviathan H3882 with a hook H2443 ? or his tongue H3956 with a cord H2256 which thou lettest down H8257 ?
|
2. யோபுவே, லிவியாதானின் மூக்கில் ஒரு கயிற்றை நுழைக்கமுடியுமா? அல்லது, அதன் தாடையில் ஒரு ஆணியைச் செருகமுடியுமா?
|
2. Canst thou put H7760 a hook H100 into his nose H639 ? or bore H5344 his jaw H3895 through with a thorn H2336 ?
|
3. யோபுவே, அதனை விடுதலைச் செய்யுமாறு லிவியாதான் உன்னை இரந்து வேண்டுமா? மென்மையான சொற்களால் அது உன்னோடு பேசுமா?
|
3. Will he make many H7235 supplications H8469 unto H413 thee? will he speak H1696 soft H7390 words unto H413 thee?
|
4. யோபுவே, லிவியாதான் உன்னோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டு என்றென்றும் உனக்குச் சேவை புரிய வாக்குறுதி தருமா?
|
4. Will he make H3772 a covenant H1285 with H5973 thee? wilt thou take H3947 him for a servant H5650 forever H5769 ?
|
5. யோபுவே, நீ லிவியாதானோடு ஒரு பறவையிடம் விளையாடுவதைப்போன்று விளையாடுவாயா? உன் பணிப்பெண்கள் அதனோடு விளையாடுமாறு அதனை ஒரு கயிற்றால் கட்டுவாயா?
|
5. Wilt thou play H7832 with him as with a bird H6833 ? or wilt thou bind H7194 him for thy maidens H5291 ?
|
6. யோபுவே, மீன் பிடிப்போர் உன்னிடமிருந்து லிவியாதானை வாங்க முயல்வார்களா? அவர்கள் அதைத் துண்டுகளாக்கி, வியாபாரிகளுக்கு அதை விற்பார்களா?
|
6. Shall the companions H2271 make a banquet H3738 of H5921 him? shall they part H2673 him among H996 the merchants H3669 ?
|
7. யோபுவே, நீ லிவியாதானின் தோலோ அல்லது தலையிலோ ஈட்டியை எறிய (வீச) முடியுமா?
|
7. Canst thou fill H4390 his skin H5785 with barbed irons H7905 ? or his head H7218 with fish H1709 spears H6767 ?
|
8. “யோபுவே, நீ லிவியாதானைத் தாக்க ஒரு முறை முயன்றால், பின்பு ஒருபோதும் அதனைச் செய்யமாட்டாய்! எத்தகைய யுத்தம் நடக்கும் என்பதைச் சற்றே யோசித்துப்பார்!
|
8. Lay H7760 thine hand H3709 upon H5921 him, remember H2142 the battle H4421 , do no H408 more H3254 .
|
9. நீ லிவியாதானைத் தோற்கடிக்க முடியுமென எண்ணினால் அதை மறந்துவிடு! எந்த நம்பிக்கையும் இல்லை! (நம்பிக்கையற்றுப்போவாய்)! அதைப் பார்த்தாலே பீதி (அச்சம்) விளையும்!
|
9. Behold H2005 , the hope H8431 of him is in vain H3576 : shall not one be cast down H2904 even H1571 at H413 the sight H4758 of him?
|
10. அதனை எழுப்பிக் கோபமுறுத்த எந்த மனிதனுக்கும் தைரியம் (துணிவு) இல்லை. “ஒருவனும் என்னை எதிர்த்து நிற்கமுடியாது!
|
10. None H3808 is so fierce H393 that H3588 dare stir him up H5782 : who H4310 then is able to stand H3320 before H6440 me?
|
11. நான் (தேவன்) ஒருவனுக்கும் கடமைப்பட்டவன் அல்லன். பரலோகத்தின் கீழ் உள்ளவை அனைத்தும் எனக்குரியன.
|
11. Who H4310 hath prevented H6923 me , that I should repay H7999 him? whatsoever is under H8478 the whole H3605 heaven H8064 is mine.
|
12. “யோபுவே, லிவியாதானின் கால்களைப் பற்றியும் அதன் வலிமை, அழகிய வடிவம் ஆகியற்றைப் பற்றியும் நான் உனக்குக் கூறுவேன்.
|
12. I will not H3808 conceal H2790 his parts H905 , nor H1697 his power H1369 , nor his comely H2433 proportion H6187 .
|
13. ஒருவனும் அதன் தோலைக் குத்திப் பிளக்க முடியாது. அதன் தோல் ஒரு கேடயத்தைப் போன்றது!
|
13. Who H4310 can discover H1540 the face H6440 of his garment H3830 ? or who H4310 can come H935 to him with his double H3718 bridle H7448 ?
|
14. லிவியாதானின் தாடையைத் திறக்குமாறு செய்ய ஒருவனும் அதனை வற்புறுத்த முடியாது. அதன் வாயிலுள்ள பற்கள் ஜனங்களைப் பயமுறுத்தும்.
|
14. Who H4310 can open H6605 the doors H1817 of his face H6440 ? his teeth H8127 are terrible H367 round about H5439 .
|
15. லிவியாதானின் முதுகில் இறுக்கமாக இணைக்கப்பட்டுள்ள கேடய வரிசைகள் காணப்படும்.
|
15. His scales H650 H4043 are his pride H1346 , shut up together H5462 as with a close H6862 seal H2368 .
|
16. அக்கேடயங்கள் காற்றும் நுழைய முடியாதபடி இறுகிப் பிணைந்திருக்கும்,
|
16. One H259 is so near H5066 to another H259 , that no H3808 air H7307 can come H935 between H996 them.
|
17. கேடயங்கள் ஒன்றோடொன்று இணைந்திருக்கும். அவை பிரிக்க முடியாதபடி ஒன்றோடொன்று இறுக்கமாக இணைக்கப்பட்டிருக்கும்.
|
17. They are joined H1692 one H376 to another H251 , they stick together H3920 , that they cannot H3808 be sundered H6504 .
|
18. லிவியாதான் தும்மும்போது, மின்னல் மின்னுவதைப் போன்றிருக்கும். அதன் கண்கள் உதயகால ஒளிபோல் பிரகாசிக்கும்.
|
18. By his sneezes H5846 a light H216 doth shine H1984 , and his eyes H5869 are like the eyelids H6079 of the morning H7837 .
|
19. அதன் வாயிலிருந்து தீப்பந்தங்கள் வெளிவரும். நெருப்புப் பொறிகள் வெளிப்படும்.
|
19. Out of his mouth H4480 H6310 go H1980 burning lamps H3940 , and sparks H3590 of fire H784 leap out H4422 .
|
20. கொதிக்கும் பானையின் அடியில் எரியும் புதரைப்போல் லிவியாதானின் மூக்கிலிருந்து புகை கிளம்பும்.
|
20. Out of his nostrils H4480 H5156 goeth H3318 smoke H6227 , as out of a seething H5301 pot H1731 or caldron H100 .
|
21. லிவியாதானின் மூச்சு நிலக்கரியை எரிக்கும், அதன் வாயிலிருந்து நெருப்பு எழும்பும்.
|
21. His breath H5315 kindleth H3857 coals H1513 , and a flame H3851 goeth out H3318 of his mouth H4480 H6310 .
|
22. லிவியாதானின் கழுத்து மிகுந்த வல்லமை கொண்டது. ஜனங்கள் பயந்து அதனிடமிருந்து ஓடிப்போகிறார்கள்.
|
22. In his neck H6677 remaineth H3885 strength H5797 , and sorrow H1670 is turned into joy H1750 before H6440 him.
|
23. அதன் தோலில் மிருதுவான பகுதி கிடையாது. அது இரும்பைப்போல கடினமானது.
|
23. The flakes H4651 of his flesh H1320 are joined together H1692 : they are firm H3332 in H5921 themselves ; they cannot H1077 be moved H4131 .
|
24. லிவியாதானின் இருதயம் பாறையைப் போன்றது. அதற்கு அச்சம் கிடையாது. (அது அஞ்சுவதில்லை). அது எந்திரத்தின் அடிக்கல்லைப்போல் கடினமாயிருக்கும்.
|
24. His heart H3820 is as firm H3332 as H3644 a stone H68 ; yea , as hard H3332 as a piece H6400 of the nether H8482 millstone .
|
25. லிவியாதான் எழுகையில் வலியோர் அஞ்சுவார். லிவியாதான் வாலை வீசும்போது அவர்கள் ஓடிவிடுவர்.
|
25. When he raiseth up H4480 H7613 himself , the mighty H410 are afraid H1481 : by reason of breakings H4480 H7667 they purify themselves H2398 .
|
26. வாட்கள், ஈட்டிகள், மற்றும் வல்லயம் லிவியாதானைத் தாக்கும். ஆனால் அவையே எகிறிவிழும். அக்கருவிகள் அதைக் காயப்படுத்துவதேயில்லை!
|
26. The sword H2719 of him that layeth H5381 at him cannot H1097 hold H6965 : the spear H2595 , the dart H4551 , nor the habergeon H8302 .
|
27. லிவியாதான் இரும்பைப் புல்லைப் போல் உடைக்கும். உளுத்துப்போன (அரித்துப்போன) மரத்தைப்போன்று அது வெண்கலத்தை உடைக்கும்.
|
27. He esteemeth H2803 iron H1270 as straw H8401 , and brass H5154 as rotten H7539 wood H6086 .
|
28. அம்புகள் லிவியாதானை ஓடச்செய்யாது, உலர்ந்த புல்லாய் பாறைகள் அதனின்று விலகிவீழும்.
|
28. The arrow H1121 H7198 cannot H3808 make him flee H1272 : slingstones H68 H7050 are turned H2015 with him into stubble H7179 .
|
29. பெருந்தடிகள் லிவியாதானைத் தாக்கும்போது, அவற்றை அது புல்லாய் உணரும். மனிதர் அதன் மீது ஈட்டிகளை எறியும்போது, அது சிரிக்கும்.
|
29. Darts H8455 are counted H2803 as stubble H7179 : he laugheth H7832 at the shaking H7494 of a spear H3591 .
|
30. கடினமாக, கூரிய, உடைந்த, மட்பாண்டத்தின் துண்டுகளைப்போல், லிவியாதானின் உடம்பின் அடியிலுள்ள தோல் இருக்கும். தாற்றுக்கோலைப் போன்று அது சேற்றின் மீது அடையாளமிட்டுச் செல்லும்.
|
30. Sharp H2303 stones H2789 are under H8478 him : he spreadeth H7502 sharp pointed things H2742 upon H5921 the mire H2916 .
|
31. கொதிக்கும் பானையைப்போன்று லிவியாதான் தண்ணீரைக் கலக்குகிறது. பானையின் கொதிக்கும் எண்ணெயைப் போன்று அது குமிழிகளை எழுப்பும்.
|
31. He maketh the deep H4688 to boil H7570 like a pot H5518 : he maketh H7760 the sea H3220 like a pot of ointment H4841 .
|
32. லிவியாதான் நீந்தும்போது, அதன் பின்னே ஒரு பாதையை விட்டுச்செல்லும். அது தண்ணீரைக் கலக்கும், அதன் பின்னே வெண்மையான நுரையைத் தள்ளிச் செல்லும்.
|
32. He maketh a path H5410 to shine H215 after H310 him; one would think H2803 the deep H8415 to be hoary H7872 .
|
33. லிவியாதானைப்போன்று உலகில் வேறெந்த மிருகமும் இல்லை. அச்சமின்றி படைக்கப்பட்ட மிருகம் அது.
|
33. Upon H5921 earth H6083 there is not H369 his like H4915 , who is made H6213 without H1097 fear H2844 .
|
34. கர்வம் மிக்க மிருகங்களையும் லிவியாதான் நகைப்போடு பார்க்கும். அது எல்லா காட்டுமிருகங்களுக்கும் அரசன். கர்த்தராகிய நான் லிவியாதானைப் படைத்தேன்!” என்றார். PE
|
34. He beholdeth H7200 H853 all H3605 high H1364 things : he H1931 is a king H4428 over H5921 all H3605 the children H1121 of pride H7830 .
|