Bible Books

:
-

1. {கோராகின் மகன்களுடைய பாடல்.} அவர் அஸ்திபாரம் பரிசுத்த மலைகளில் இருக்கிறது.
2. யெகோவா யாக்கோபின் தங்குமிடங்கள் எல்லாவற்றைவிட
சீயோனின் வாசல்களில் பிரியமாக இருக்கிறார்.
3. தேவனுடைய நகரமே! உன்னைக் குறித்து மகிமையான விசேஷங்கள் பேசப்படும். (சேலா)
4. என்னை அறிந்தவர்களுக்குள்ளே ராகாபையும் பாபிலோனையும் குறித்துப் பேசுவேன்;
இதோ, பெலிஸ்தியர்களிலும், தீரியர்களிலும்,
எத்தியோப்பியர்களிலுங்கூட, இன்னான் அங்கே பிறந்தான் என்றும்;
5. சீயோனைக் குறித்து, இன்னான் இன்னான் அதிலே பிறந்தானென்றும் சொல்லப்படும்;
உன்னதமான தேவன் தாமே அதை உறுதிப்படுத்துவார்.
6. யெகோவா மக்களைப் பெயரெழுதும்போது,
இன்னான் அதிலே பிறந்தான் என்று அவர்களைக் கணக்கெடுப்பார். (சேலா)
7. எங்களுடைய ஊற்றுகளெல்லாம் உன்னில் இருக்கிறது என்று
பாடுவாரும் ஆடுவாரும் ஒன்றாக சொல்லுவார்கள். PE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×