|
|
1. {பெலிஸ்தியர் மத்தியில் தாவீது} PS அதன்பின் தாவீது, “நான் சவுலின் கையினால் எந்த நாளிலாகிலும் ஒரு நாள் அழிக்கப்படுவேன். எனவே பெலிஸ்தியரின் நாட்டுக்குத் தப்பி ஓடிப்போவது தான் நான் செய்யக்கூடிய புத்தியான செயல். அப்பொழுது சவுல் இஸ்ரயேலில் எங்கேயும் என்னைத் தேடுவதைக் கைவிடுவான். நான் அவனுடைய கையிலிருந்து தப்பிவிடலாம்” என நினைத்தான். PEPS
|
1. And David H1732 said H559 in H413 his heart H3820 , I shall now H6258 perish H5595 one H259 day H3117 by the hand H3027 of Saul H7586 : there is nothing H369 better H2896 for me than H3588 that I should speedily escape H4422 H4422 into H413 the land H776 of the Philistines H6430 ; and Saul H7586 shall despair H2976 of H4480 me , to seek H1245 me any more H5750 in any H3605 coast H1366 of Israel H3478 : so shall I escape H4422 out of his hand H4480 H3027 .
|
2. எனவே தாவீதும் அவனுடன் இருந்த அறுநூறு மனிதரும் காத் அரசனான மாயோகின் மகன் ஆகீஸிடம் போனார்கள்.
|
2. And David H1732 arose H6965 , and he H1931 passed over H5674 with the six H8337 hundred H3967 men H376 that H834 were with H5973 him unto H413 Achish H397 , the son H1121 of Maoch H4582 , king H4428 of Gath H1661 .
|
3. தாவீதும் அவன் மனிதரும் ஆகீஸுடன் காத் பட்டணத்தில் தங்கியிருந்தார்கள். ஒவ்வொருவனும் தன்தன் குடும்பத்துடன் இருந்தான். தாவீது தன் இரு மனைவிகளான யெஸ்ரயேல் ஊராளான அகினோவாமுடனும், கர்மேல் ஊராளான நாபாலின் விதவையான அபிகாயிலுடனும் இருந்தான்.
|
3. And David H1732 dwelt H3427 with H5973 Achish H397 at Gath H1661 , he H1931 and his men H376 , every man H376 with his household H1004 , even David H1732 with his two H8147 wives H802 , Ahinoam H293 the Jezreelitess H3159 , and Abigail H26 the Carmelitess H3761 , Nabal H5037 's wife H802 .
|
4. தாவீது காத் ஊருக்குப் போனதைக் கேள்விப்பட்டவுடன் சவுல் அவனைத் தேடுவதை நிறுத்தினான். PEPS
|
4. And it was told H5046 Saul H7586 that H3588 David H1732 was fled H1272 to Gath H1661 : and he sought H1245 no H3808 more H5750 again H3254 for him.
|
5. அப்பொழுது தாவீது ஆகீஸிடம், “என்னிடம் உமக்குத் தயவு இருந்தால் நான் வாழ்வதற்கு உம்முடைய நாட்டுப்புறப் பட்டணங்களில் ஒன்றை ஒதுக்கித் தாரும். உமது அடியானாகிய நான் உமது அரசருக்குரிய நகரத்தில் உம்முடன் ஏன் வாழவேண்டும்” என்றான். PEPS
|
5. And David H1732 said H559 unto H413 Achish H397 , If H518 I have now H4994 found H4672 grace H2580 in thine eyes H5869 , let them give H5414 me a place H4725 in some H259 town H5892 in the country H7704 , that I may dwell H3427 there H8033 : for why H4100 should thy servant H5650 dwell H3427 in the royal H4467 city H5892 with H5973 thee?
|
6. அன்றையதினம் ஆகீஸ் சிக்லாக் என்னுமிடத்தை அவனுக்குக் கொடுத்தான். அதனால் சிக்லாக் அன்றிலிருந்து யூதாவின் அரசர்களுக்கு சொந்தமாயிற்று.
|
6. Then Achish H397 gave H5414 him H853 Ziklag H6860 that H1931 day H3117 : wherefore H3651 Ziklag H6860 pertaineth H1961 unto the kings H4428 of Judah H3063 unto H5704 this H2088 day H3117 .
|
7. இவ்விதமாகத் தாவீது பெலிஸ்தியரின் பிரதேசத்தில் ஒரு வருடமும், நாலு மாதங்களும் தங்கியிருந்தான். PEPS
|
7. And the time H3117 that H834 David H1732 dwelt H3427 in the country H7704 of the Philistines H6430 was H1961 a full H4557 year H3117 and four H702 months H2320 .
|
8. அப்பொழுது தாவீதும், அவன் மனிதரும் கேசூரியர், கெஸ்ரியர், அமலேக்கியர் என்பவர்களைச் சூறையாடினார்கள். இவர்கள் பண்டையக் காலத்திலிருந்து, சூர் தொடங்கி எகிப்துவரைக்கும் பரந்து கிடந்த இந்நாட்டில் வாழ்ந்தவர்கள்.
|
8. And David H1732 and his men H376 went up H5927 , and invaded H6584 H413 the Geshurites H1651 , and the Gezrites H1511 , and the Amalekites H6003 : for H3588 those H2007 nations were of old H834 H4480 H5769 the inhabitants H3427 of the land H776 , as thou goest H935 to Shur H7793 , even unto H5704 the land H776 of Egypt H4714 .
|
9. தாவீது ஒரு பகுதியை தாக்கும் போதெல்லாம் ஒரு ஆணையோ, பெண்ணையோ உயிரோடே விடவில்லை. அவர்களுடைய செம்மறியாடுகள், மாடுகள், கழுதைகள், ஒட்டகங்கள், உடைகள் அனைத்தையும் கொள்ளையடித்துக்கொண்டு ஆகீஸிடம் திரும்பிப் போவான். PEPS
|
9. And David H1732 smote H5221 H853 the land H776 , and left H2421 neither H3808 man H376 nor woman H802 alive , and took away H3947 the sheep H6629 , and the oxen H1241 , and the asses H2543 , and the camels H1581 , and the apparel H899 , and returned H7725 , and came H935 to H413 Achish H397 .
|
10. அப்பொழுது ஆகீஸ் அவனிடம், “இன்று எங்கே சென்று கொள்ளையடித்தீர்கள்” என்று கேட்பான். அதற்குத் தாவீது, “யூதாவின் நெகேவுக்கு எதிராகவும்” அல்லது, “யெரோமியேல் நெகேவுக்கு எதிராகவும்” அல்லது, “கேனியர் நெகேவுக்கு எதிராகவும்” என்று சொல்வான்.
|
10. And Achish H397 said H559 , Whither H408 have ye made a road H6584 today H3117 ? And David H1732 said H559 , Against H5921 the south H5045 of Judah H3063 , and against H5921 the south H5045 of the Jerahmeelites H3397 , and against H413 the south H5045 of the Kenites H7017 .
|
11. தாவீது ஒரு ஆணையோ, பெண்ணையோ உயிருடன் காத்திற்கு கொண்டுவரவில்லை. ஏனெனில் அவர்கள் தங்களைப் பற்றி ஆகீஸிற்குத் தகவல் கொடுத்து, “இதுவே தாவீது செய்தது” என்று சொல்வார்கள் என நினைத்தான். அவன் பெலிஸ்தியரின் பிரதேசத்தில் வாழ்ந்த காலம் முழுவதும் இவ்வாறாகவே செய்தான்.
|
11. And David H1732 saved H2421 neither H3808 man H376 nor woman H802 alive , to bring H935 tidings to Gath H1661 , saying H559 , Lest H6435 they should tell H5046 on H5921 us, saying H559 , So H3541 did H6213 David H1732 , and so H3541 will be his manner H4941 all H3605 the while H3117 he dwelleth H3427 in the country H7704 of the Philistines H6430 .
|
12. ஆகீஸ் தாவீதை நம்பினான். எனவே, “தாவீது தன் சொந்த மக்களான இஸ்ரயேலருக்கு வெறுப்புக்குரியவனாகி விட்டான். இதனால் இவன் என்றென்றும் என் பணியாளனாய் இருப்பான்” என தனக்குள் சொல்லிக்கொண்டான். PE
|
12. And Achish H397 believed H539 David H1732 , saying H559 , He hath made his people H5971 Israel H3478 utterly to abhor H887 H887 him ; therefore he shall be H1961 my servant H5650 forever H5769 .
|