|
|
1. {மனாசேயும் எப்பிராயீமும்} PS சிறிது காலத்தின் பின்னர், “உம்முடைய தகப்பன் உடல் நலமில்லாமல் இருக்கிறார்” என்று யோசேப்புக்கு அறிவிக்கப்பட்டது. அவன் தன் இரு மகன்களான மனாசேயையும் எப்பிராயீமையும் தன்னுடன் கூட்டிக்கொண்டு போனான்.
|
1. And it came to pass H1961 after H310 these H428 things H1697 , that one told H559 Joseph H3130 , Behold H2009 , thy father H1 is sick H2470 : and he took H3947 with H5973 him H853 his two H8147 sons H1121 , H853 Manasseh H4519 and Ephraim H669 .
|
2. “உம்முடைய மகன் யோசேப்பு வந்திருக்கிறான்” என்று யாக்கோபுக்கு அறிவிக்கப்பட்டது. உடனே இஸ்ரயேல் தன் பலத்தை ஒன்றுசேர்த்து எழுந்து கட்டிலில் உட்கார்ந்தான். PEPS
|
2. And one told H5046 Jacob H3290 , and said H559 , Behold H2009 , thy son H1121 Joseph H3130 cometh H935 unto H413 thee : and Israel H3478 strengthened himself H2388 , and sat H3427 upon H5921 the bed H4296 .
|
3. யாக்கோபு யோசேப்பிடம், “கானானிலுள்ள லூஸ் என்னும் இடத்திலே எல்லாம் வல்ல இறைவன் எனக்குமுன் தோன்றி, என்னை ஆசீர்வதித்தார்.
|
3. And Jacob H3290 said H559 unto H413 Joseph H3130 , God H410 Almighty H7706 appeared H7200 unto H413 me at Luz H3870 in the land H776 of Canaan H3667 , and blessed H1288 me,
|
4. அவர் என்னிடம், ‘நான் உன்னை இனவிருத்தியில் பெருகப்பண்ணி எண்ணிக்கையில் அதிகரிப்பேன். அத்துடன் நான் உன்னை பல மக்கள் கூட்டமாக்கி, இந்த நாட்டை உனக்குப்பின் உன் சந்ததிகளுக்கும் நித்திய உடைமையாகக் கொடுப்பேன்’ என்றார். PEPS
|
4. And said H559 unto H413 me, Behold H2009 , I will make thee fruitful H6509 , and multiply H7235 thee , and I will make H5414 of thee a multitude H6951 of people H5971 ; and will give H5414 H853 this H2063 land H776 to thy seed H2233 after H310 thee for an everlasting H5769 possession H272 .
|
5. “எனவே, நான் இங்கே உன்னிடம் எகிப்திற்கு வருவதற்குமுன், உனக்குப் பிறந்த இரண்டு பிள்ளைகளும் இப்பொழுதிலிருந்து என்னுடைய மகன்களாக எண்ணப்படுவார்கள்; ரூபனும், சிமியோனும் என் மகன்களாய் இருப்பதுபோல், எப்பிராயீமும் மனாசேயும் என் மகன்களாய் இருப்பார்கள்.
|
5. And now H6258 thy two H8147 sons H1121 , Ephraim H669 and Manasseh H4519 , which were born H3205 unto thee in the land H776 of Egypt H4714 before H5704 I came H935 unto H413 thee into Egypt H4714 , are mine ; as Reuben H7205 and Simeon H8095 , they shall be H1961 mine.
|
6. அவர்களுக்குப்பின் உனக்குப் பிறக்கும் பிள்ளைகள் எல்லோரும் உன்னுடையவர்களாய் இருப்பார்கள்; அந்த பிள்ளைகள் சொத்துரிமையாகப் பெற்றுக்கொள்ளும் இடங்கள், தங்கள் சகோதரரான மனாசே, எப்பிராயீம் ஆகியோரின் இடங்களிலிருந்தே கிடைக்கும்.
|
6. And thy issue H4138 , which H834 thou begettest H3205 after H310 them , shall be H1961 thine, and shall be called H7121 after H5921 the name H8034 of their brethren H251 in their inheritance H5159 .
|
7. நான் பதானைவிட்டுத் திரும்பி வருகையில், எப்பிராத்தாவுக்குச் சற்று தூரத்தில், கானான் நாட்டில் நாங்கள் வழியில் இருக்கும்போதே, ராகேல் இறந்தாள்; பெத்லெகேம் எனப்படும் எப்பிராத்தாவுக்குப் போகும் வழியின் அருகே நான் அவளை அடக்கம் செய்தேன்” என்றான். PEPS
|
7. And as for me H589 , when I came H935 from Padan H4480 H6307 , Rachel H7354 died H4191 by H5921 me in the land H776 of Canaan H3667 in the way H1870 , when yet H5750 there was but a little H3530 way H776 to come H935 unto Ephrath H672 : and I buried H6912 her there H8033 in the way H1870 of Ephrath H672 ; the same H1931 is Bethlehem H1035 .
|
8. இஸ்ரயேல் யோசேப்பின் மகன்களை கண்டபோது, “இவர்கள் யார்?” என்று அவனிடம் கேட்டான். PEPS
|
8. And Israel H3478 beheld H7200 Joseph H3130 's H853 sons H1121 , and said H559 , Who H4310 are these H428 ?
|
9. அதற்கு யோசேப்பு தன் தகப்பனிடம், “இவர்கள்தான் இறைவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகள்” என்றான். PEPS அப்பொழுது இஸ்ரயேல் யோசேப்பிடம், “நான் அவர்களை ஆசீர்வதிக்கும்படி அவர்களை என்னிடம் கொண்டுவா” என்றான். PEPS
|
9. And Joseph H3130 said H559 unto H413 his father H1 , They H1992 are my sons H1121 , whom H834 God H430 hath given H5414 me in this H2088 place . And he said H559 , Bring H3947 them , I pray thee H4994 , unto H413 me , and I will bless H1288 them.
|
10. வயது சென்றபடியால் இஸ்ரயேலின் கண்பார்வை மங்கியிருந்தது, அதனால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. ஆகையால் யோசேப்பு அவர்களை அவனுக்கு அருகில் கொண்டுவந்தான்; யாக்கோபு அவர்களைக் கட்டி அணைத்து முத்தமிட்டான். PEPS
|
10. Now the eyes H5869 of Israel H3478 were dim H3513 for age H4480 H2207 , so that he could H3201 not H3808 see H7200 . And he brought them near H5066 H853 unto H413 him ; and he kissed H5401 them , and embraced H2263 them.
|
11. அதன்பின் இஸ்ரயேல் யோசேப்பிடம், “திரும்பவும் உன் முகத்தைப் பார்ப்பேனென்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. இப்பொழுதோ இறைவன் நான் உன்னுடைய பிள்ளைகளையும் காணும்படி செய்தாரே” என்றான். PEPS
|
11. And Israel H3478 said H559 unto H413 Joseph H3130 , I had not H3808 thought H6419 to see H7200 thy face H6440 : and, lo H2009 , God H430 hath showed H7200 me also H1571 H853 thy seed H2233 .
|
12. யோசேப்பு இஸ்ரயேலின் முழங்கால்கள் நடுவிலிருந்த தன் பிள்ளைகளை விலக்கிவிட்டு செய்து தரைமட்டும் குனிந்து தன் தகப்பனை வணங்கினான்.
|
12. And Joseph H3130 brought them out H3318 H853 from between H4480 H5973 his knees H1290 , and he bowed himself H7812 with his face H639 to the earth H776 .
|
13. பின்பு யோசேப்பு அவர்கள் இருவரையும் பிடித்து, எப்பிராயீமை தன் வலதுகையினால் இஸ்ரயேலின் இடப்பக்கத்திலும், மனாசேயைத் தன் இடது கையினால் இஸ்ரயேலின் வலதுபக்கத்திலுமாகத் தன் தகப்பன் அருகே கொண்டுவந்தான்.
|
13. And Joseph H3130 took H3947 H853 them both H8147 , H853 Ephraim H669 in his right hand H3225 toward Israel H3478 's left hand H4480 H8040 , and Manasseh H4519 in his left hand H8040 toward Israel H3478 's right hand H4480 H3225 , and brought them near H5066 unto H413 him.
|
14. ஆனால் இஸ்ரயேல், தன் இரு கைகளையும் குறுக்காக நீட்டி, எப்பிராயீம் இளையவனாயிருந்தபோதிலும் அவன் தலையின்மேல் தன் வலதுகையை வைத்தான்; மனாசே மூத்தவனாய் இருந்தபோதிலும், அவன் தலையின்மேல் இடதுகையை வைத்தான். PEPS
|
14. And Israel H3478 stretched out H7971 H853 his right hand H3225 , and laid H7896 it upon H5921 Ephraim H669 's head H7218 , who H1931 was the younger H6810 , and his left hand H8040 upon H5921 Manasseh H4519 's head H7218 , guiding his hands wittingly H7919 H853 H3027 ; for H3588 Manasseh H4519 was the firstborn H1060 .
|
15. அதன்பின் இஸ்ரயேல் யோசேப்பை ஆசீர்வதித்து சொன்னது: “என் தந்தையர்களான ஆபிரகாம், ஈசாக்கு ஆகியோர் வழிபட்ட இறைவனும், என் வாழ்நாள் முழுவதும் இன்றுவரை என் மேய்ப்பராயிருந்த இறைவனும்,
|
15. And he blessed H1288 H853 Joseph H3130 , and said H559 , God H430 , before H6440 whom H834 my fathers H1 Abraham H85 and Isaac H3327 did walk H1980 , the God H430 which fed H7462 me all my life long H4480 H5750 unto H5704 this H2088 day H3117 ,
|
16. எல்லா தீங்குகளிலிருந்தும் என்னை விடுவித்த தூதனுமானவர் இந்தப் பிள்ளைகளை ஆசீர்வதிப்பாராக. இவர்கள் என்னுடைய பெயராலும், என் தந்தையர்களான ஆபிரகாமினுடைய, ஈசாக்கினுடைய பெயர்களாலும் அழைக்கப்படுவார்களாக. இவர்கள் பூமியில் மிகுதியாய்ப் பெருகுவார்களாக.” PEPS
|
16. The Angel H4397 which redeemed H1350 me from all H4480 H3605 evil H7451 , bless H1288 H853 the lads H5288 ; and let my name H8034 be named H7121 on them , and the name H8034 of my fathers H1 Abraham H85 and Isaac H3327 ; and let them grow H1711 into a multitude H7230 in the midst H7130 of the earth H776 .
|
17. தனது தகப்பன் அவருடைய வலதுகையை எப்பிராயீமுடைய தலையில் வைத்ததை யோசேப்பு கண்டான், அது அவனுக்கு விருப்பமில்லாதிருந்தது; அதனால் எப்பிராயீமுடைய தலையிலிருந்த யாக்கோபின் வலதுகையை மனாசேயின் தலையில் வைப்பதற்காகப் பிடித்தான்.
|
17. And when Joseph H3130 saw H7200 that H3588 his father H1 laid H7896 his right H3225 hand H3027 upon H5921 the head H7218 of Ephraim H669 , it displeased H7489 H5869 him : and he held up H8551 his father H1 's hand H3027 , to remove H5493 it from H4480 H5921 Ephraim H669 's head H7218 unto H5921 Manasseh H4519 's head H7218 .
|
18. யோசேப்பு தன் தகப்பனிடம், “அப்படியல்ல அப்பா, இவனே என் மூத்த மகன்; இவன் தலைமேல் உங்களுடைய வலதுகையை வையுங்கள்” என்றான். PEPS
|
18. And Joseph H3130 said H559 unto H413 his father H1 , Not H3808 so H3651 , my father H1 : for H3588 this H2088 is the firstborn H1060 ; put H7760 thy right hand H3225 upon H5921 his head H7218 .
|
19. ஆனால் யாக்கோபோ அப்படிச் செய்ய மறுத்து, “எனக்குத் தெரியும், என் மகனே, எனக்குத் தெரியும். மனாசேயும் ஒரு பெரிய மக்கள் கூட்டமாவான், இவனும் பெரியவனாவான். எனினும் இவனுடைய இளைய சகோதரன் இவனிலும் பெரியவனாவான்; இவனுடைய சந்ததி பெருகி பல நாடுகளின் கூட்டமாகும்” என்றான்.
|
19. And his father H1 refused H3985 , and said H559 , I know H3045 it , my son H1121 , I know H3045 it : he H1931 also H1571 shall become H1961 a people H5971 , and he H1931 also H1571 shall be great H1431 : but truly H199 his younger H6996 brother H251 shall be greater H1431 than H4480 he , and his seed H2233 shall become H1961 a multitude H4393 of nations H1471 .
|
20. அன்றையதினம் அவன் அவர்களை ஆசீர்வதித்துச் சொன்னது: “ ‘எப்பிராயீம், மனாசேயைப்போல் உங்களையும் இறைவன் பெருகப்பண்ணுவாராக’ என்று இஸ்ரயேலர் உங்கள் பெயரால் ஆசீர்வாதத்தைச் சொல்வார்கள்.” இவ்வாறு அவன் மனாசேயைவிட எப்பிராயீமுக்கு முதலிடம் கொடுத்தான். PEPS
|
20. And he blessed H1288 them that H1931 day H3117 , saying H559 , In thee shall Israel H3478 bless H1288 , saying H559 , God H430 make H7760 thee as Ephraim H669 and as Manasseh H4519 : and he set H7760 H853 Ephraim H669 before H6440 Manasseh H4519 .
|
21. பின்பு இஸ்ரயேல் யோசேப்பிடம், “நான் சாகும் தருவாயில் இருக்கிறேன்; ஆனால் இறைவன் உங்களுடன் இருந்து, அவர் உங்களை உங்கள் முற்பிதாக்களின் நாட்டிற்குத் திரும்பவும் கூட்டிக்கொண்டு போவார்.
|
21. And Israel H3478 said H559 unto H413 Joseph H3130 , Behold H2009 , I H595 die H4191 : but God H430 shall be H1961 with H5973 you , and bring you again H7725 H853 unto H413 the land H776 of your fathers H1 .
|
22. உன் சகோதரருக்கு மேலானவனாக இருக்கிற உனக்கோ, எமோரியரிடமிருந்து நான் வாளினாலும் வில்லினாலும் கைப்பற்றிய மேட்டு நிலத்தைக் கொடுக்கிறேன்” என்றான். PE
|
22. Moreover I H589 have given H5414 to thee one H259 portion H7926 above H5921 thy brethren H251 , which H834 I took H3947 out of the hand H4480 H3027 of the Amorite H567 with my sword H2719 and with my bow H7198 .
|