Bible Books

12
:

1. செயல்தியேலின் மகன் செருபாபேலுடனும், யெசுவாவுடனும் திரும்பி வந்த ஆசாரியரும், லேவியர்களும் இவர்களே: செராயா, எரேமியா, எஸ்றா,
1. Now these H428 are the priests H3548 and the Levites H3881 that H834 went up H5927 with H5973 Zerubbabel H2216 the son H1121 of Shealtiel H7597 , and Jeshua H3442 : Seraiah H8304 , Jeremiah H3414 , Ezra H5830 ,
2. அமரியா, மல்லூக், அத்தூஸ்,
2. Amariah H568 , Malluch H4409 , Hattush H2407 ,
3. செக்கனியா, ரேகூம், மெரெமோத்,
3. Shechaniah H7935 , Rehum H7348 , Meremoth H4822 ,
4. இத்தோ, கிநேதோன், அபியா,
4. Iddo H5714 , Ginnetho H1599 , Abijah H29 ,
5. மியாமின், மாதியா, பில்கா,
5. Miamin H4326 , Maadiah H4573 , Bilgah H1083 ,
6. செமாயா, யோயாரிப், யெதாயா,
6. Shemaiah H8098 , and Joiarib H3114 , Jedaiah H3048 ,
7. சல்லு, ஆமோக், இல்க்கியா, யெதாயா ஆகியோர். இவர்களே யெசுவாவின் நாட்களில் ஆசாரியர்களின் தலைவர்களாகவும், உடன்வேலையாட்களாகவும் இருந்தவர்கள். PS
7. Sallu H5543 , Amok H5987 , Hilkiah H2518 , Jedaiah H3048 . These H428 were the chief H7218 of the priests H3548 and of their brethren H251 in the days H3117 of Jeshua H3442 .
8. யெசுவா, பின்னூயி, கத்மியேல், செரெபியா, யூதா ஆகிய லேவியரோடு, மத்தனியா தன் உடன்வேலையாட்களுடன் நன்றி செலுத்தும் பாடலுக்குப் பொறுப்பாயிருந்தான்.
8. Moreover the Levites H3881 : Jeshua H3442 , Binnui H1131 , Kadmiel H6934 , Sherebiah H8274 , Judah H3063 , and Mattaniah H4983 , which was over H5921 the thanksgiving H1960 , he H1931 and his brethren H251 .
9. அவர்களுடைய உடன்வேலையாட்களான பக்பூக்கியாவும், உன்னியும் ஆராதனையில் அவர்களுக்கு எதிர்ப்பக்கமாக நின்றார்கள்.
9. Also Bakbukiah H1229 and Unni H6042 , their brethren H251 , were over against H5048 them in the watches H4931 .
10. யெசுவாவின் மகன் யோயாக்கீம், யொயாக்கிமின் மகன் எலியாசீப், எலியாசீப்பின் மகன் யோயதா,
10. And Jeshua H3442 begot H3205 H853 Joiakim H3113 , Joiakim H3113 also begot H3205 H853 Eliashib H475 , and Eliashib H475 begot H3205 H853 Joiada H3111 ,
11. யோயதாவின் மகன் யோனத்தான், யோனத்தானின் மகன் யதுவா.
11. And Joiada H3111 begot H3205 H853 Jonathan H3129 , and Jonathan H3129 begot H3205 H853 Jaddua H3037 .
12. யோயாக்கீமின் நாட்களில் ஆசாரியர்களின் குடும்பங்களுக்குத் தலைவர்களாயிருந்தவர்கள்: செராயாவின் குடும்பத்தைச் சேர்ந்த மெராயா, எரேமியாவின் குடும்பத்தைச் சேர்ந்த அனனியா,
12. And in the days H3117 of Joiakim H3113 were H1961 priests H3548 , the chief H7218 of the fathers H1 : of Seraiah H8304 , Meraiah H4811 ; of Jeremiah H3414 , Hananiah H2608 ;
13. எஸ்றாவின் குடும்பத்தைச் சேர்ந்த மெசுல்லாம், அமரியாவின் குடும்பத்தைச் சேர்ந்த யோகனான்,
13. Of Ezra H5830 , Meshullam H4918 ; of Amariah H568 , Jehohanan H3076 ;
14. மல்லூக்கின் குடும்பத்தைச் சேர்ந்த யோனத்தான், செபனியாவின் குடும்பத்தைச் சேர்ந்த யோசேப்பு,
14. Of Melicu H4409 , Jonathan H3129 ; of Shebaniah H7645 , Joseph H3130 ;
15. ஆரீமின் குடும்பத்தைச் சேர்ந்த அத்னா, மெராயோத் குடும்பத்தைச் சேர்ந்த எல்காய்,
15. Of Harim H2766 , Adna H5733 ; of Meraioth H4812 , Helkai H2517 ;
16. இத்தோ குடும்பத்தைச் சேர்ந்த சகரியா, கிநேதோன் குடும்பத்தைச் சேர்ந்த மெசுல்லாம்,
16. Of Iddo H5714 , Zechariah H2148 ; of Ginnethon H1599 , Meshullam H4918 ;
17. அபியா குடும்பத்தைச் சேர்ந்த சிக்ரி, மினியாமீன் மற்றும் மொவதியாவின் குடும்பத்தைச் சேர்ந்த பில்தாய்,
17. Of Abijah H29 , Zichri H2147 ; of Miniamin H4509 , of Moadiah H4153 , Piltai H6408 ;
18. பில்கா குடும்பத்தைச் சேர்ந்த சம்மூவா, செமாயாவின் குடும்பத்தைச் சேர்ந்த யோனத்தான்,
18. Of Bilgah H1083 , Shammua H8051 ; of Shemaiah H8098 , Jehonathan H3083 ;
19. யோயாரிப் குடும்பத்தைச் சேர்ந்த மத்தனாய், யெதாயா குடும்பத்தைச் சேர்ந்த ஊசி,
19. And of Joiarib H3114 , Mattenai H4982 ; of Jedaiah H3048 , Uzzi H5813 ;
20. சல்லு குடும்பத்தைச் சேர்ந்த கல்லாய், ஆமோக்கின் குடும்பத்தைச் சேர்ந்த ஏபேர்,
20. Of Sallai H5543 , Kallai H7040 ; of Amok H5987 , Eber H5677 ;
21. இல்க்கியா குடும்பத்தைச் சேர்ந்த அசபியா, யெதாயா குடும்பத்தைச் சேர்ந்த நெதனெயேல் ஆகியோரே. PS
21. Of Hilkiah H2518 , Hashabiah H2811 ; of Jedaiah H3048 , Nethaneel H5417 .
22. பெர்சியனான தரியுவின் ஆட்சியின்போது எலியாசீப், யோயதா, யோகனான், யதுவா ஆகியோருடைய நாட்களில் லேவியர்களின் குடும்பத்தலைவர்களும், ஆசாரியர்களின் குடும்பத்தலைவர்களும் பதிவு செய்யப்பட்டார்கள்.
22. The Levites H3881 in the days H3117 of Eliashib H475 , Joiada H3111 , and Johanan H3110 , and Jaddua H3037 , were recorded H3789 chief H7218 of the fathers H1 : also the priests H3548 , to H5921 the reign H4438 of Darius H1867 the Persian H6542 .
23. எலியாசீப்பின் மகனான யோகனானின் காலம் வரையும் உள்ள லேவியர்களின் சந்ததிகளைச் சேர்ந்த குடும்பத் தலைவர்கள், வரலாற்றுப் புத்தகத்தில் எழுதப்பட்டார்கள்.
23. The sons H1121 of Levi H3878 , the chief H7218 of the fathers H1 , were written H3789 in H5921 the book H5612 of the chronicles H1697 , even until H5704 the days H3117 of Johanan H3110 the son H1121 of Eliashib H475 .
24. அந்நாட்களில் லேவியருக்குத் தலைவர்களாயிருந்த அசபியா, செரெபியா, கத்மியேலின் மகன் யெசுவா ஆகியோரும் அவர்களுக்கு எதிரில் அவர்கள் கூட்டாளிகளும் நின்றுகொண்டு, இறைவனுடைய மனிதனான தாவீதின் கட்டளைப்படியே, துதியும் நன்றியும் முறைமுறையாகச் செலுத்திவந்தார்கள். PEPS
24. And the chief H7218 of the Levites H3881 : Hashabiah H2811 , Sherebiah H8274 , and Jeshua H3442 the son H1121 of Kadmiel H6934 , with their brethren H251 over against H5048 them , to praise H1984 and to give thanks H3034 , according to the commandment H4687 of David H1732 the man H376 of God H430 , ward H4929 over against H5980 ward H4929 .
25. மத்தனியா, பக்பூக்கியா, ஒபதியா, மெசுல்லாம், தல்மோன், அக்கூப் ஆகியோர் வாசல் காவலர்களாய் இருந்தார்கள். அவர்கள் வாசலிலுள்ள களஞ்சிய அறைகளைக் காவல் செய்தனர்.
25. Mattaniah H4983 , and Bakbukiah H1229 , Obadiah H5662 , Meshullam H4918 , Talmon H2929 , Akkub H6126 , were porters H7778 keeping H8104 the ward H4929 at the thresholds H624 of the gates H8179 .
26. இவர்கள் யோசதாக்கின் மகனான யெசுவாவின் மகன் யோயாக்கீமின் நாட்களிலும் ஆளுநன் நெகேமியா, ஆசாரியனாகவும் மோசேயின் சட்ட ஆசிரியனுமான எஸ்றாவின் நாட்களிலும் பணிபுரிந்தார்கள். PS
26. These H428 were in the days H3117 of Joiakim H3113 the son H1121 of Jeshua H3442 , the son H1121 of Jozadak H3136 , and in the days H3117 of Nehemiah H5166 the governor H6346 , and of Ezra H5830 the priest H3548 , the scribe H5608 .
27. {எருசலேமின் மதில் அர்ப்பணிக்கப்படல்} PS எருசலேமில் கட்டப்பட்ட மதிலின் அர்ப்பண நாளுக்கு, லேவியர்கள் அவர்கள் வாழ்ந்த இடங்களிலிருந்து மக்கள் அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து கொண்டுவந்தார்கள். நன்றி செலுத்தும் பாடல்களுடனும், வீணை முதலியவற்றின் இசையுடனும் அந்த அர்ப்பணம் மகிழ்ச்சியுடன் கொண்டாடும்படி இவர்களைக் கொண்டுவந்தார்கள்.
27. And at the dedication H2598 of the wall H2346 of Jerusalem H3389 they sought H1245 H853 the Levites H3881 out of all H4480 H3605 their places H4725 , to bring H935 them to Jerusalem H3389 , to keep H6213 the dedication H2598 with gladness H8057 , both with thanksgivings H8426 , and with singing H7892 , with cymbals H4700 , psalteries H5035 , and with harps H3658 .
28. எருசலேமைச் சுற்றியிருந்த பகுதிகளிலிருந்தும் பாடகர்கள் ஒன்றுகூட்டிச் சேர்க்கப்பட்டார்கள். நெத்தோபாத்தியரின் கிராமங்களிலிருந்தும்,
28. And the sons H1121 of the singers H7891 gathered themselves together H622 , both out of H4480 the plain country H3603 round about H5439 Jerusalem H3389 , and from H4480 the villages H2691 of Netophathi H5200 ;
29. பெத்கில்காலிலும், கேபாவின் பிரதேசத்திலும், அஸ்மாவேத்திலும் இருந்தும் பாடகர்கள் வந்திருந்தார்கள். ஏனெனில் இந்தப் பாடகர்கள் எருசலேமைச் சுற்றிலும் தங்களுக்குச் சொந்தமான கிராமங்களை அமைத்திருந்தார்கள்.
29. Also from the house H4480 H1004 of Gilgal H1537 , and out of the fields H4480 H7704 of Geba H1387 and Azmaveth H5820 : for H3588 the singers H7891 had built H1129 them villages H2691 round about H5439 Jerusalem H3389 .
30. லேவியரும், ஆசாரியரும் முதலில் தங்களைச் சம்பிரதாய முறைப்படி சுத்திகரித்துக்கொண்ட பின்பு அங்குள்ள மக்களையும், வாசல்களையும், மதிலையும் சுத்திகரித்தார்கள். PEPS
30. And the priests H3548 and the Levites H3881 purified themselves H2891 , and purified H2891 H853 the people H5971 , and the gates H8179 , and the wall H2346 .
31. பின்பு நான் யூதாவின் தலைவர்களை மதிலின்மேல் ஏறச்செய்தேன். அங்கு நன்றி செலுத்துவதற்கு இரண்டு பெரிய பாடல் குழுவினரையும் நியமித்தேன். ஒரு குழு மதிலின்மேல் வலப்பக்கமாகக் குப்பைமேட்டு வாசலை நோக்கிப் போகும்படி செய்தேன்.
31. Then I brought up H5927 H853 the princes H8269 of Judah H3063 upon H4480 H5921 the wall H2346 , and appointed H5975 two H8147 great H1419 companies of them that gave thanks H8426 , whereof one H259 went H1980 on the right hand H3225 upon H4480 H5921 the wall H2346 toward the dung H830 gate H8179 :
32. ஓசாயாவும், யூதாவின் தலைவர்களில் பாதிப் பேரும் அவர்களின் பின்சென்றார்கள்.
32. And after H310 them went H1980 Hoshaiah H1955 , and half H2677 of the princes H8269 of Judah H3063 ,
33. அவர்களுடன் அசரியா, எஸ்றா, மெசுல்லாம்,
33. And Azariah H5838 , Ezra H5830 , and Meshullam H4918 ,
34. யூதா, பென்யமீன், செமாயா, எரேமியா ஆகியோரும் போனார்கள்.
34. Judah H3063 , and Benjamin H1144 , and Shemaiah H8098 , and Jeremiah H3414 ,
35. அவர்களுடன் எக்காளம் வைத்திருந்த ஆசாரியரும் இருந்தனர். சகரியாவும் அவர்களுடன் இருந்தான். இவன் யோனத்தானின் மகன், யோனத்தான் செமாயாவின் மகன், செமாயா மத்தனியாவின் மகன், மத்தனியா மிகாயாவின் மகன், மிகாயா சக்கூரின் மகன், சக்கூர் ஆசாப்பின் மகன்.
35. And certain of the priests' sons H4480 H1121 H3548 with trumpets H2689 ; namely , Zechariah H2148 the son H1121 of Jonathan H3129 , the son H1121 of Shemaiah H8098 , the son H1121 of Mattaniah H4983 , the son H1121 of Michaiah H4320 , the son H1121 of Zaccur H2139 , the son H1121 of Asaph H623 :
36. சகரியாவின் கூட்டாளிகளான செமாயா, அசரெயேல், மிலாலாய், கிலாலாய், மகாய், நெதனெயேல், யூதா, அனானி ஆகியோரும் இறைவனின் மனிதனான தாவீதின் இசைக்கருவிகளையே வைத்துக் கொண்டிருந்தார்கள். சட்ட ஆசிரியனான எஸ்றாவே இந்த ஊர்வலத்தை தலைமைதாங்கி நடத்தினான்.
36. And his brethren H251 , Shemaiah H8098 , and Azarael H5832 , Milalai H4450 , Gilalai H1562 , Maai H4597 , Nethaneel H5417 , and Judah H3063 , Hanani H2607 , with the musical H7892 instruments H3627 of David H1732 the man H376 of God H430 , and Ezra H5830 the scribe H5608 before H6440 them.
37. அவர்கள் ஊற்று வாசலின் அருகே மேட்டிலுள்ள தாவீதின் நகரத்தின் படிகளில் தொடர்ந்து மதிலின்மேல் ஏறி, தாவீதின் வீட்டுக்கு மேலாகக் கடந்து கிழக்கிலிருந்த தண்ணீர் வாசலுக்குப் போனார்கள். PEPS
37. And at H5921 the fountain H5869 gate H8179 , which was over against H5048 them , they went up H5927 by H5921 the stairs H4609 of the city H5892 of David H1732 , at the going up H4608 of the wall H2346 , above H4480 H5921 the house H1004 of David H1732 , even unto H5704 the water H4325 gate H8179 eastward H4217 .
38. இரண்டாவது பாடகர் குழு எதிர்த்திசை நோக்கிச்சென்றது. நான் மக்களில் பாதிப் பேருடன் மதிலின்மேல் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றேன். நாங்கள் சூளைகளின் கோபுரத்திலிருந்து அகன்ற மதில்வரை போய்,
38. And the other H8145 company of them that gave thanks H8426 went H1980 over against H4136 them , and I H589 after H310 them , and the half H2677 of the people H5971 upon H4480 H5921 the wall H2346 , from beyond H4480 H5921 the tower H4026 of the furnaces H8574 even unto H5704 the broad H7342 wall H2346 ;
39. எப்பிராயீம் வாசலையும், பழைய வாசலையும், மீன் வாசலையும், அனானயேலின் கோபுரத்தையும், நூறுபேரின் கோபுரத்தையும் கடந்து, அங்கிருந்து செம்மறியாட்டு வாசல்வரை தொடர்ந்து சென்று காவல்வாசலில் போய் நின்றோம். PEPS
39. And from above H4480 H5921 the gate H8179 of Ephraim H669 , and above H5921 the old H3465 gate H8179 , and above H5921 the fish H1709 gate H8179 , and the tower H4026 of Hananeel H2606 , and the tower H4026 of Meah H3968 , even unto H5704 the sheep H6629 gate H8179 : and they stood still H5975 in the prison H4307 gate H8179 .
40. நன்றி செலுத்துவதற்கு அந்த இரண்டு பாடகர் குழுக்களும் இறைவனுடைய ஆலயத்தில் தங்கள் இடங்களில் நின்றார்கள்; நானும் என்னுடன் நின்ற அதிகாரிகளில் பாதிப் பேரும் அப்படியே செய்தோம்.
40. So stood H5975 the two H8147 companies of them that gave thanks H8426 in the house H1004 of God H430 , and I H589 , and the half H2677 of the rulers H5461 with H5973 me:
41. அத்துடன் ஆசாரியர்களான எலியாக்கீம், மாசெயா, மினியாமீன், மிகாயா, எலியோனாய், சகரியா, அனனியா ஆகியோரும் தங்கள் எக்காளங்களைப் பிடித்துக்கொண்டு நின்றார்கள்.
41. And the priests H3548 ; Eliakim H471 , Maaseiah H4641 , Miniamin H4509 , Michaiah H4320 , Elioenai H454 , Zechariah H2148 , and Hananiah H2608 , with trumpets H2689 ;
42. மாசெயா, செமாயா, எலெயாசார், ஊசி, யோகனான், மல்கியா, ஏலாம், ஏசேர் ஆகியோரும் நின்றார்கள். இந்தப் பாடகர் குழுக்கள் யெஷரகியாவின் தலைமையின்கீழ் பாடினார்கள்.
42. And Maaseiah H4641 , and Shemaiah H8098 , and Eleazar H499 , and Uzzi H5813 , and Jehohanan H3076 , and Malchijah H4441 , and Elam H5867 , and Ezer H5829 . And the singers H7891 sang loud H8085 , with Jezrahiah H3156 their overseer H6496 .
43. இறைவன் அவர்களுக்கு அதிக சந்தோஷத்தை அந்த நாளில் கொடுத்தபடியால், பெரும் பலிகளைச் செலுத்தி, சந்தோஷப்பட்டார்கள். பெண்களும் குழந்தைகளும்கூட சந்தோஷப்பட்டார்கள். எருசலேமிலிருந்து மகிழ்ச்சியின் சத்தம் வெகுதூரம்வரை கேட்கக் கூடியதாயிருந்தது. PEPS
43. Also that H1931 day H3117 they offered H2076 great H1419 sacrifices H2077 , and rejoiced H8055 : for H3588 God H430 had made them rejoice H8055 with great H1419 joy H8057 : the wives H802 also H1571 and the children H3206 rejoiced H8055 : so that the joy H8057 of Jerusalem H3389 was heard H8085 even afar off H4480 H7350 .
44. அந்நாட்களில் நன்கொடைகளுக்கும், முதற்பலன்களுக்கும், தசமபாகங்களுக்கும் உரிய களஞ்சியங்களுக்கு பொறுப்பாயிருக்கும்படி மனிதர் நியமிக்கப்பட்டார்கள். பட்டணத்தைச் சுற்றியுள்ள வயல்களிலிருந்து லேவியருக்கும் ஆசாரியருக்கும் கொடுக்கும்படி, மோசேயின் சட்டத்தில் கட்டளையிட்டிருந்தபடி பங்கைச் சேகரித்து களஞ்சியங்களுக்கு கொண்டுவர வேண்டியது அவர்களுடைய பொறுப்பாயிருந்தது. ஏனெனில் யூதா மக்கள் பணிசெய்யும் ஆசாரியர்களிலும், லேவியரிலும் மகிழ்ச்சியடைந்தனர்.
44. And at that H1931 time H3117 were some H376 appointed H6485 over H5921 the chambers H5393 for the treasures H214 , for the offerings H8641 , for the firstfruits H7225 , and for the tithes H4643 , to gather H3664 into them out of the fields H7704 of the cities H5892 the portions H4521 of the law H8451 for the priests H3548 and Levites H3881 : for H3588 Judah H3063 rejoiced H8057 for H5921 the priests H3548 and for H5921 the Levites H3881 that waited H5975 .
45. தாவீதும் அவனுடைய மகன் சாலொமோனும் கட்டளையிட்டபடி, பாடகரும் வாசல் காவலரும் தங்கள் இறைவனின் பணியையும், சுத்திகரிக்கும் பணியையும் செய்தார்கள்.
45. And both the singers H7891 and the porters H7778 kept H8104 the ward H4931 of their God H430 , and the ward H4931 of the purification H2893 , according to the commandment H4687 of David H1732 , and of Solomon H8010 his son H1121 .
46. ஏனெனில், வெகுகாலத்துக்கு முன்பே தாவீது, ஆசாப் ஆகியோரின் காலத்தில், பாடகர்களுக்குத் தலைவர்கள் நியமிக்கப்பட்டு, இறைவனுக்கு நன்றியும் துதியும் செலுத்திவந்தார்கள்.
46. For H3588 in the days H3117 of David H1732 and Asaph H623 of old H4480 H6924 there were chief H7218 of the singers H7891 , and songs H7892 of praise H8416 and thanksgiving H3034 unto God H430 .
47. ஆகவே செருபாபேல், நெகேமியா ஆகியோரின் நாட்களில் இஸ்ரயேல் மக்கள் யாவரும், பாடகருக்கும், வாசல் காவலர்களுக்கும் அவர்களுடைய அன்றாடத் தேவைகளைக் கொண்டுவந்தார்கள். அவர்கள் மற்ற லேவியர்களுக்கும், அவர்களுக்கான உரிய பங்கை ஒதுக்கிவைத்தார்கள்; லேவியர்கள் அதிலிருந்து ஒரு பங்கை மற்ற ஆரோனின் சந்ததிகளுக்குக் கொடுத்தார்கள். PE
47. And all H3605 Israel H3478 in the days H3117 of Zerubbabel H2216 , and in the days H3117 of Nehemiah H5166 , gave H5414 the portions H4521 of the singers H7891 and the porters H7778 , every day H3117 H3117 his portion H1697 : and they sanctified H6942 holy things unto the Levites H3881 ; and the Levites H3881 sanctified H6942 them unto the children H1121 of Aaron H175 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×