1. {சவுலின் இறப்பைத் தாவீது அறிதல்} PS சவுல் இறந்தபின், அமலேக்கியரைத் தோற்கடித்துத் திரும்புகையில் தாவீது சிக்லாகில் இரண்டு நாள்கள் தங்கினார்.
2. மூன்றாம் நாள், சவுலின் பாசறையினின்று கிழிந்த ஆடைகளோடும், புழுதிபடிந்த தலையோடும் ஒருவன் வந்தான். அவன் தாவீதிடம் வந்ததும், தரையில் வீழ்ந்து வணங்கினான்.
3. “நீ எங்கிருந்து வருகிறாய்?” என்று தாவீது அவனை வினவ, “நான் இஸ்ரயேல் பாசறையினின்று தப்பி வந்துவிட்டேன்” என்று அவன் பதில் கூறினான்.PE
4. PS “என்ன நடந்தது? என்னிடம் சொல்” என்று தாவீது கேட்க, அவன், “வீரர்கள் போரினின்று ஓடிவிட்டனர்; அவர்களுள் பலர் வீழ்ந்து மடிந்து விட்டனர்; சவுலும் அவருடைய மகன் யோனத்தானும் இறந்துவிட்டனர்” என்று கூறினான்.
5. “சவுலும் அவருடைய மகன் யோனத்தானும் இறந்துவிட்டனர் என்று உனக்கு எப்படி தெரியும்?” என்று தன்னிடம் பேசிக்கொண்டிருந்த இளைஞனிடம் தாவீது கேட்டார்.PE
6. PS அதற்கு அந்த இளைஞன், “நான் தற்செயலாக கில்போவா மலையில் இருந்தேன். சவுல் தன் ஈட்டியின்மீது சாய்ந்து கொண்டிருந்தார். அப்போது தேர்களும் குதிரை வீரர்களும் அவரை நெருங்கிக் கொண்டிருந்தனர்.
7. அவர் தம் பின்னால் திரும்பிய போது என்னைப் பார்த்துக் கூப்பிட்டார். ‘இதோ இருக்கிறேன்’ என்று நான் கூறினேன். * 1 சாமு 31:1-6; 1 குறி 10:1-6
8. ‘யார் நீ?’ என்று அவர் என்னை வினவ, ‘நான் ஓர் அமலேக்கியன்’ என்று பதிலளித்தேன். * 1 சாமு 31:1-6; 1 குறி 10:1-6
9. ‘என்மீது நின்று, என்னைக் கொல், ஏனெனில், மரணவேதனையில் நான் சிக்கியுள்ளேன். ஆனால், என் உயிர் இன்னும் ஊசலாடிக்கொண்டிருக்கிறது’ என்று அவர் என்னிடம் கூறினார். * 1 சாமு 31:1-6; 1 குறி 10:1-6
10. நான் அவர்மீது நின்று அவரைக் கொன்றேன். ஏனெனில், விழுந்தபின்பு அவர் உயிர் பிழைக்க மாட்டார் என நான் அறிவேன். அவரது தலையில் இருந்த மகுடத்தையும் கையிலிருந்த காப்பையும் எடுத்துக்கொண்டு, என் தலைவராகிய உம்மிடம் கொண்டு வந்துள்ளேன்” என்று கூறினார். * 1 சாமு 31:1-6; 1 குறி 10:1-6
11. தாவீது தம் ஆடைகளைப் பற்றிக் கிழித்தார். அவரோடு இருந்தவர்களும் அவ்வாறே செய்தனர். * 1 சாமு 31:1-6; 1 குறி 10:1-6
12. சவுலுக்காகவும், அவருடைய மகன் யோனத்தானுக்காகவும், ஆண்டவரின் மக்களுக்காகவும் இஸ்ரயேல் வீட்டாருக்காகவும் அவர்கள் அழுது புலம்பி மாலை வரை நோன்பு இருந்தார்கள். ஏனெனில், அவர்கள் வாளால் மடிந்துவிட்டார்கள்.PE
13. PS தாவீது தமக்குச் செய்தி கொண்டு வந்த இளைஞனிடம், “நீ எங்கிருந்து வருகிறாய்?” என்று மீண்டும் வினவ, “நான் ஒரு வேற்றினத்தான், அமலேக்கியன்” என்று மறுமொழி கூறினான்.PE
14. PS “ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவரைக் கையோங்கிக் கொலை செய்ய நீ அஞ்சாதது ஏன்?” என்று தாவீது அவனைக் கேட்டார்.
15. பின்பு, தாவீது இளைஞன் ஒருவனைக் கூப்பிட்டு, “போ, அவனை வெட்டு” என்றார். அந்த இளைஞன் அவனை வெட்டி வீழ்த்த, அவன் இறந்தான்.
16. “உன் இரத்தம் உன் தலைமேல் இருக்கட்டும். ஏனெனில், ‘ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவரை நான் கொன்றேன்’ என்று உன் வாயே உனக்கு எதிராகச் சான்று சொல்லிவிட்டது” என்று தாவீது அவனை நோக்கிக் கூறினார்.PE
17. {சவுல், யோனத்தான் ஆகியோருக்காக தாவீதின் துயரம்} PS பிறகு, தாவீது சவுலையும் அவருடைய மகன் யோனத்தானையும் குறித்து இரங்கற்பா ஒன்று பாடினார்.
18. “யூதாவின் மக்களுக்கும் இது கற்பிக்கப்பட வேண்டும் என்று யாசாரின் நூலில் எழுதப்பட்டுள்ள ‘வில்லின் பாடல்’:
19. QSSS ‘இஸ்ரயேல்! உனது மாட்சிSESS உன் மலைகளிலே மாண்டுSESS கிடக்கின்றது!SESS மாவீரர் எவ்வாறு மடிந்தனர்! * யோசு 10:13.QE SEQE
20. QSSS காத்தில் இதைச் சொல்ல வேண்டாம்;SESS அஸ்கலோன் வீதிகளில் இதைSESS அறிவிக்க வேண்டாம்;SESS ஏனெனில், பெலிஸ்தியரின்SESS புதல்வியர் அகமகிழக்கூடாது;SESS விருத்தசேதனமற்றோரின்SESS புதல்வியர் ஆர்ப்பரிக்கக் கூடாது.SEQE
21. QSSS கில்போவா மலைகளே!SESS பனியோ மழையோSESS உம்மீது பொழியாதிருப்பதாக!SESS வயல்கள் முதற்கனிகளைத்SESS தராதிருப்பனவாக!SESS ஏனெனில், வீரர்களின் கேடயங்கள்SESS தீட்டுப்பட்டனவே!SESS சவுலின் கேடயமும் எண்ணெயால்SESS இனி மெருகு பெறாதே!SEQE
22. QSSS வீழ்த்தப்பட்டோரின்SESS இரத்தத்தினின்றும்SESS வீரர்களின் கொழுப்பினின்றும்SESS யோனத்தானின் அம்புSESS பின்வாங்கியது இல்லை!SESS சவுலின் வாள் வெறுமையாய்த்SESS திரும்பியதும் இல்லை!SEQE
23. QSSS சவுல்! யோனத்தான்!SESS அன்புடையார், அருளுடையார்!SESS வாழ்விலும் சாவிலும்SESS இணைபிரியார்! கழுகினும்SESS அவர்கள் விரைந்து செல்வர்!SESS அரியினும் அவர்கள்SESS வலிமைமிக்கோர்!SEQE
24. QSSS இஸ்ரயேல் புதல்வியரே!SESS சவுலுக்காக அழுங்கள்!SESS செந்நிற மென்துகிலால் உங்களைSESS உடுத்தியவர் அவரே!SESS பொன்னின் நகைகளினால் உம்SESS உடைகளை ஒளிரச் செய்தாரே!SEQE
25. QSSS போர் முனையில் வீரர் எங்ஙனம்SESS வீழ்ந்துபட்டனர்!SESS உன் மலைகளிலே யோனத்தான்SESS மாண்டு கிடக்கின்றான்!SEQE
26. QSSS சகோதரன் யோனத்தான்! உனக்காகSESS என் உளம் உடைந்து போனது!SESS எனக்கு உவகை அளித்தவன் நீ!SESS என் மீது நீ பொழிந்த பேரன்பைSESS என்னென்பேன்!SESS அது மகளிரின் காதலையும்SESS மிஞ்சியது அன்றோ!SEQE
27. QSSS மாவீரர் எவ்வாறு மடிந்தனர்!SESS போர்க்கலன்கள் எங்ஙனம்SESS அழிந்தன!”SEPE