Bible Books

3
:

1. {ஒவ்வொன்றுக்கும் ஒரு காலமுண்டு} PS QSSS ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரமுண்டு.SESS உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்SESS சிக்கும் ஒரு காலமுண்டு.SEQE
2. QSSS பிறப்புக்கு ஒரு காலம்,SESS இறப்புக்கு ஒரு காலம்;SESS நடவுக்கு ஒரு காலம்,SESS அறுவடைக்கு ஒரு காலம்;SEQE
3. QSSS கொல்லுதலுக்கு ஒரு காலம்,SESS குணப்படுத்தலுக்கு ஒரு காலம்;SEQE
4. QSSS இடித்தலுக்கு ஒரு காலம்,SESS கட்டுதலுக்கு ஒரு காலம்;SESS அழுகைக்கு ஒரு காலம்,SESS சிரிப்புக்கு ஒரு காலம்;SESS துயரப்படுதலுக்கு ஒரு காலம்,SESS துள்ளி மகிழ்தலுக்கு ஒரு காலம்;SEQE
5. QSSS கற்களை எறிய ஒரு காலம்,SESS கற்களைச் சேர்க்க ஒரு காலம்;SESS அரவணைக்க ஒரு காலம்,SESS அரவணையாதிருக்க ஒரு காலம்; * 1 அர 10:23-27; 2 குறி 9:22-27 SEQE
6. QSSS தேடிச் சேர்ப்பதற்கு ஒரு காலம்,SESS இழப்பதற்கு ஒரு காலம்;SESS காக்க ஒரு காலம்,SESS தூக்கியெறிய ஒரு காலம்; * 1 அர 10:23-27; 2 குறி 9:22-27 SEQE
7. QSSS கிழிப்பதற்கு ஒரு காலம்,SESS தைப்பதற்கு ஒரு காலம்;SESS பேசுவதற்கு ஒரு காலம்,SESS பேசாதிருப்பதற்கு ஒரு காலம்; * 1 அர 10:23-27; 2 குறி 9:22-27 SEQE
8. QSSS அன்புக்கு ஒரு காலம்,SESS வெறுப்புக்கு ஒரு காலம்;SESS போருக்கு ஒரு காலம்,SESS அமைதிக்கு ஒரு காலம். * 1 அர 10:23-27; 2 குறி 9:22-27; 1 அர 4:23 SEPEQE
9. PS வருந்தி உழைப்பவர் தம் உழைப்பினால் அடையும் பயன் என்ன? * 1 அர 10:23-27; 2 குறி 9:22-27; 1 அர 10:10, 14-22
10. மனிதர் பாடுபட்டு உழைப்பதற்கெனக் கடவுள் அவர்மீது சுமத்திய வேலை சுமையைக் கண்டேன். * 1 குறி 29:25
11. கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாகச் செய்கிறார்; காலத்தைப் பற்றிய உணர்வை மனிதருக்குத் தந்திருக்கிறார். ஆயினும், கடவுள் தொடக்க முதல் இறுதிவரை செய்துவருவதைக் கண்டறிய மனிதரால் இயலாது.
12. எனவே, மனிதர் தாம் உயிரோடிருக்கும் போது, இன்பம் துய்த்து மகிழ்வதைவிடச் சிறந்தது அவருக்கு வேறொன்றும் இல்லை என அறிந்துகொண்டேன்.
13. உண்டு குடித்து உழைப்பால் வரும் பயனைத் துய்க்கும் இன்பம் எல்லா மனிதருக்கும் கடவுள் அளித்த நன்கொடை.PE
14. PS கடவுள் செய்யும் ஒவ்வொன்றும் எப்போதும் நிலைத்திருக்கும் என்பதை நான் அறிவேன். அதனோடு கூட்டுவதற்கோ அதனின்று குறைப்பதற்கோ எதுவுமில்லை. தமக்கு மனிதர் அஞ்சி நடக்க வேண்டுமென்று கடவுள் எல்லாவற்றையும் செய்திருக்கிறார்.
15. இப்போது நடப்பது ஏற்கெனவே நடந்ததாகும். இனி நடக்கப்போவதும் ஏற்கெனவே நடந்ததாகும். நடந்ததையே கடவுள் மீண்டும் மீண்டும் நடைபெறச் செய்கிறார்.PE
16. {உலகில் காணப்படும் அநீதி} PS வேறொன்றையும் உலகில் கண்டேன். நேர்மையும் நீதியும் இருக்கவேண்டிய இடங்களில் அநீதியே காணப்படுகிறது.
17. ‘கடவுள் நல்லாருக்கும் பொல்லாருக்கும் தீர்ப்புவழங்கப் போகிறார். ஏனெனில், ஒவ்வொரு காரியத்திற்கும் ஒவ்வொரு செயலுக்கும் அவற்றிற்குரிய காலத்தை அவர் குறித்திருக்கிறார்’ என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.
18. “மனிதர் விலங்கைப் போன்றவர் என்பதைக் காட்டுவதற்காகவே கடவுள் அவருக்குச் சோதனைகளை அனுப்புகிறார்” என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன்.
19. மனிதருக்கு நேரிடுவதே விலங்குக்கும் நேரிடுகிறது; மனிதரும் மடிகிறார்; விலங்கும் மடிகிறது. எல்லா உயிர்களுக்கும் இருப்பது ஒரு வகையான மூச்சே. விலங்கைவிட மனிதர் மேலானவர் இல்லை; எல்லாம் வீணே.
20. எல்லா உயிர்களும் இறுதியாகச் செல்லும் இடம் ஒன்றே. எல்லாம் மண்ணின்றே தோன்றின; எல்லாம் மண்ணுக்கே மீளும்.
21. மனிதரின் உயிர்மூச்சு மேலே போகிறது என்றும் விலங்குகளின் உயிர் மூச்சு கீழே தரைக்குள் இறங்குகிறது என்றும் யாரால் சொல்ல இயலும்?
22. ஒருவர் தம் வேலையைச் செய்வதில் இன்பம் காண்பதே அவருக்கு நல்லது என்று கண்டேன். ஏனெனில், அவ்வேலை அவருக்கெனக் குறிக்கப்பட்டுள்ளது. அவர் இறந்தபின் நடப்பதைக் காண அவரைத் திரும்ப யாரும் கொண்டு வரப்போவதில்லை.PE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×