Bible Books

:

1. {கேதுரு மரத்துக்கு ஒப்பான எகிப்து} PS பதினோராம் ஆண்டில், மூன்றாம் மாதத்தின் முதல் நாள் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;
2. மானிடா! எகிப்தின் மன்னன் பார்வோனுக்கும் அவனுடைய மக்கள் திரளுக்கும் சொல்:QSSSமேன்மையில் உனக்கு நிகர் யார்?SEQE
3. QSSS இதோ! லெபனோனின் கேதுரு மரமாகியSESS அசீரியாவைப் பார்!SESS அழகிய கிளைகளுடன்,SESS அடர்ந்த நிழலுடன்,SESS மிகுந்த உயரத்துடன்SESS அது இலங்கிற்று;SESS அதன் உச்சிSESS மேகங்களை ஊடுருவிற்று.SEQE
4. QSSS தண்ணீர் அதனைத்SESS தழைக்கச் செய்தது;SESS ஆழ் ஊற்றுகள் அதனைSESS உயர்ந்து வளரச் செய்தன;SESS அவை தம் அருவிகளாகSESS அதனைச் சுற்றி ஓடிSESS கால்வாய்களாகக்SESS காட்டின் எல்லா மரங்களுக்கும்SESS நீர் பாய்ச்சின.SEQE
5. QSSS காட்டின் எல்லா மரங்களையும் விடSESS அது ஓங்கி வளர்ந்தது;SESS அதன் தளிர்கள் பெருகின;SESS நீர் வளத்தால் கிளைகள் நீண்டன;SESS கொப்புகள் மிகுந்தன.SEQE
6. QSSS வானத்துப் பறவைகள் எல்லாம்SESS அதன் கிளைகளில் கூடுகள் கட்டின;SESS காட்டு விலங்குகள் எல்லாம்SESS கன்றுகள் ஈன்றன;SESS அதன் நிழலில் பெரிய நாடுகள் எல்லாம்SESS வாழ்வு கண்டன.SEQE
7. QSSS மிகுந்த நீரினுள்SESS அதன் வேர்கள் சென்றதால்,SESS கிளைகள் தழைத்துSESS அது அழகுத் தோற்றமிக்கதாய் இருந்தது.SEQE
8. QSSS கடவுளின் சோலையிலிருந்தSESS கேதுரு மரங்களுக்குSESS அதற்குச் சமமான கிளைகள் இல்லை;SESS அர்மோன் மரங்களுக்குSESS அதற்கு இணையானSESS கொப்புகள் இல்லை;SESS கடவுளின் சோலையிலிருந்தSESS எந்த மரமும் அதைப்போன்றுSESS அழகுடன் இருந்ததில்லை.SEQE
9. QSSS அடர்ந்த கிளைகளால்SESS நான் அதனை அழகுபடுத்தினேன்;SESS கடவுளின் சோலையாகியSESS ஏதேன் தோட்டத்தின் மரங்களெல்லாம்SESS அதன்மேல் பொறாமை கொண்டன. * தொநூ 2:9. SEQE
10. QSSS எனவே, தலைவராகிய ஆண்டவர்SESS இவ்வாறு கூறுகிறார்:SESS அது உயர்ந்து வளர்ந்துSESS தன் உச்சியைSESS மேகங்களுக்குள் நுழைத்து,SESS தன் உயரத்தைப் பற்றித்SESS தன் இதயத்தில் செருக்குற்றது.SEPEQE
11. PS எனவே அதனை வேற்றினத்தாருள் வலிமைமிக்க ஒருவனிடம் ஒப்புவிப்பேன். அவன் அதன் தீச்செயலுக்குத் தக்கவாறு அதனை நடத்துவான். நானும் அதனைப் புறம்பாக்குவேன்.
12. மக்களினங்களில் மிகக் கொடியோரான அன்னியர் அதனை வெட்டி வீழ்த்திவிடுவர். மலைகளிலும் அனைத்துப் பள்ளத்தாக்குகளிலும் அதன் கிளைகள் விழுந்து கிடக்கும்; அதன் கொம்புகள் நாடெங்கிலுமுள்ள ஓடைகளில் முறிந்து கிடக்கும். மண்ணின் மக்களெல்லாம் அதன் நிழலை விட்டுப்பிரிந்து அதனைப் புறக்கணிப்பர்.
13. வீழ்ந்து கிடக்கும் அதன் மேல் வானத்துப் பறவைகள் எல்லாம் வந்து அடையும். அதன் கிளைகளுக்கிடையே காட்டு விலங்குகள் யாவும் உலவும்.
14. இதனால் நீர்நிலைகளுக்கருகில் இருக்கும் எம்மரமும் மிகுந்த உயரத்திற்கு வளராது; தன் உச்சியை மேகங்களுக்கிடையில் நுழைக்காது; நீர்க்காலை அடுத்த எம்மரமும் அவற்றை எட்டும் அளவுக்கு உயராது. ஏனெனில் அவையெல்லாம் பாதாளப் படுகுழிக்குச் செல்லும் மானிடருடன் அழிவுக்குக் குறிக்கப்பட்டுள்ளன.
15. எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; அந்த மரம் பாதாளத்திற்கு இறங்குகையில், ஆழ்நிலைகள் இழவின் அடையாளமாக அதனை மூடச் செய்வேன். அதன் ஆறுகளை நிறுத்தி, நீர்த்திரளுக்கு அணைபோடுவேன்; அதனை முன்னிட்டு லெபனோனை இருளால் மூடுவேன். காட்டு மரங்கள் எல்லாம் பட்டுப்போம்.
16. கீழே படுகுழிக்குள் செல்வோருடன் நான் அதனைப் பாதாளத்தினுள் தள்ளும்போது நாடுகள் நடுங்கும். நீர் நடுவே வளரும் ஏதேனின் அனைத்து மரங்களும், லெபனோனின் மேலானவையும் சிறந்தவையுமான மரங்களும் கீழுலகில் ஆறுதல் பெறும்.
17. அதன் நிழலில் வாழ்ந்த கூட்டுநாடுகள் அதனோடு சேர்ந்து வாளால் மடிந்தவர்களுடன் பாதாளத்தில் போய்ச்சேரும்.
18. மேன்மையிலும் பெருமையிலும் ஏதேனின் எந்த மரம் உனக்கு ஒப்பாகும்? ஆயினும், ஏதேனின் மரங்களுடன் சேர்ந்து நீயும் கீழுலகுக்குத் தள்ளப்படுவாய். விருத்தசேதனமில்லார் நடுவே, வாளால் மடிந்தாரோடு நீயும் கிடப்பாய். பார்வோனுக்கும் அவனது மக்கள் திரளுக்கும் நடக்கவிருப்பது இதுவே, என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.PE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×