Bible Books

:

1. {மனிதனின் கீழ்ப்படியாமை} PS ஆண்டவராகிய கடவுள் உருவாக்கிய காட்டு விலங்குகளிலெல்லாம் பாம்பு மிகவும் சூழ்ச்சிமிக்கதாக இருந்தது. அது பெண்ணிடம், “கடவுள் உங்களிடம் தோட்டத்திலுள்ள எல்லா மரங்களிலிருந்தும் உண்ணக்கூடாது என்றது உண்மையா?” என்று கேட்டது.
2. பெண் பாம்பிடம், “தோட்டத்தில் இருக்கும் மரங்களின் பழங்களை நாங்கள் உண்ணலாம்.
3. ஆனால், ‘தோட்டத்தின் நடுவில் உள்ள மரத்தின் கனியை மட்டும் நீங்கள் உண்ணக்கூடாது; அதைத் தொடவும் கூடாது. மீறினால் நீங்கள் சாவீர்கள்’ என்று கடவுள் சொன்னார்,” என்றாள்.
4. பாம்பு பெண்ணிடம், “நீங்கள் சாகவே மாட்டீர்கள்;
5. ஏனெனில், நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் கடவுளைப் போல் நன்மை தீமையை அறிவீர்கள் என்பது கடவுளுக்குத் தெரியும்” என்றது.
6. அந்த மரம் உண்பதற்குச் சுவையானதாகவும் கண்களுக்குக் களிப்பூட்டுவதாகவும் அறிவு பெறுவதற்கு விரும்பத்தக்கதாகவும் இருந்ததைக் கண்டு, பெண் அதன் பழத்தைப் பறித்து உண்டாள். அதைத் தன்னுடனிருந்த தன் கணவனுக்கும் கொடுத்தாள். அவனும் உண்டான்.
7. அப்பொழுது அவர்கள் இருவரின் கண்களும் திறக்கப்பட்டன; அவர்கள் தாங்கள் ஆடையின்றி இருப்பதை அறிந்தனர். ஆகவே, அத்தி இலைகளைத் தைத்துத் தங்களுக்கு ஆடைகளைச் செய்துகொண்டனர்.PE
8. PS மென்காற்று வீசிய பொழுதினிலே, தோட்டத்தில் ஆண்டவராகிய கடவுள் உலவிக்கொண்டிருந்த ஓசை கேட்டு, மனிதனும் அவன் மனைவியும் ஆண்டவராகிய கடவுளின் திருமுன்னிருந்து விலகி, தோட்டத்தின் மரங்களுக்கு இடையே ஒளிந்து கொண்டனர்.
9. ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, “நீ எங்கே இருக்கின்றாய்?” என்று கேட்டார்.
10. “உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன். எனவே, நான் ஒளிந்து கொண்டேன்” என்றான் மனிதன்.
11. “நீ ஆடையின்றி இருக்கின்றாய் என்று உனக்குச் சொன்னது யார்? நீ உண்ணக்கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ?” என்று கேட்டார்.
12. அப்பொழுது அவன், “என்னுடன் இருக்கும்படி நீர் தந்த அந்தப் பெண், மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்; நானும் உண்டேன்” என்றான்.
13. ஆண்டவராகிய கடவுள், “நீ ஏன் இவ்வாறு செய்தாய்?” என்று பெண்ணைக் கேட்க, அதற்குப் பெண், “பாம்பு என்னை ஏமாற்றியது, நானும் உண்டேன்” என்றாள்.PE
14. {கடவுளின் தீர்ப்பும் வாக்குறுதியும்} PS QSSS ஆண்டவராகிய கடவுள் பாம்பிடம், BR “நீ இவ்வாறு செய்ததால்,SESS கால்நடைகள், காட்டுவிலங்குகள்SESS அனைத்திலும் சபிக்கப்பட்டிருப்பாய்.SESS உன் வயிற்றினால் ஊர்ந்துSESS உன் வாழ்நாள் எல்லாம்SESS புழுதியைத் தின்பாய்.SEQE
15. QSSS உனக்கும் பெண்ணுக்கும், BR உன் வித்துக்கும் அவள் வித்துக்கும்SESS பகையை உண்டாக்குவேன்.SESS அவள் வித்து உன் தலையைக்SESS காயப்படுத்தும்.SESS நீ அதன் குதிங்காலைக்SESS காயப்படுத்துவாய்” என்றார்.SEQE
16. QSSS அவர் பெண்ணிடம், BR “உன் மகப்பேற்றின் வேதனையைSESS மிகுதியாக்குவேன்;SESS வேதனையில் நீ குழந்தைகள்SESS பெறுவாய்.SESS ஆயினும் உன் கணவன்மேல்SESS நீ வேட்கைகொள்வாய்;SESS அவனோ உன்னை ஆள்வான்”SESS என்றார்.SEQE
17. QSSS அவர் மனிதனிடம், BR “உன் மனைவியின் சொல்லைக்SESS கேட்டு, உண்ணக்கூடாது என்றுSESS நான் கட்டளையிட்டு விலக்கியSESS மரத்திலிருந்து நீ உண்டதால்SESS உன் பொருட்டு நிலம்SESS சபிக்கப்பட்டுள்ளது;SESS உன் வாழ்நாளெல்லாம் வருந்தி அதன்SESS பயனை உழைத்து நீ உண்பாய்.SEQE
18. QSSS முட்செடியையும் முட்புதரையும்SESS உனக்கு அது முளைப்பிக்கும்.SESS வயல் வெளிப் பயிர்களை நீ உண்பாய்.SEQE
19. QSSS நீ மண்ணிலிருந்துSESS உருவாக்கப்பட்டதால்SESS அதற்குத் திரும்பும்வரைSESS நெற்றி வியர்வை நிலத்தில் விழSESS உழைத்து உன் உணவை உண்பாய்.SESS நீ மண்ணாய் இருக்கிறாய்;SESS மண்ணுக்கே திரும்புவாய்” என்றார்.SEPEQE
20. PS மனிதன் தன் மனைவிக்கு ‘ஏவாள்’ என்று பெயரிட்டான்; ஏனெனில், உயிருள்ளோர் எல்லோருக்கும் அவளே தாய்.
21. ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கும் அவன் மனைவிக்கும் தோல் ஆடைகள் செய்து அவர்கள் அணியச் செய்தார்.PE
22. PS பின்பு, ஆண்டவராகிய கடவுள், “மனிதன் இப்பொழுது நம்முள் ஒருவர் போல் நன்மை தீமை அறிந்தவன் ஆகிவிட்டான். இனி அவன் என்றென்றும் வாழ்வதற்காக, வாழ்வின் மரத்திலிருந்தும் பறித்து உண்ணக் கையை நீட்டிவிடக் கூடாது” என்றார்.
23. எனவே, ஆண்டவராகிய கடவுள் அவன் உருவாக்கப்பட்ட அதே மண்ணைப் பண்படுத்த அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே அனுப்பி விட்டார். * திவெ 22:14.
24. இவ்வாறாக, அவர் மனிதனை வெளியே துரத்திவிட்டார். ஏதேன் தோட்டத்திற்குக் கிழக்கே வாழ்வின் மரத்திற்குச் செல்லும் வழியைக் காப்பதற்குக் கெருபுகளையும் சுற்றிச் சுழலும் சுடரொளி வாளையும் வைத்தார்.PE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×