Bible Books

:

1. {மோசேயின் வெற்றிப்பாடல்} PS அப்போது மோசேயும் இஸ்ரயேல் மக்களும் ஆண்டவரைப் புகழ்ந்தேத்திப் பாடிய பாடல் வருமாறு:QSSSஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்; BR ஏனெனில், அவர் மாட்சியுடன்SESS வெற்றிபெற்றார்;SESS குதிரையையும், குதிரை வீரனையும் BR கடலுக்குள் அமிழ்த்திவிட்டார்.SEQE
2. QSSS ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல்.SESS அவரே என் விடுதலை; என் கடவுள்.SESS அவரை நான் புகழ்ந்தேத்துவேன்.SESS அவரே என் மூதாதையரின் கடவுள்;SESS அவரை நான் ஏத்திப்போற்றுவேன். * திவெ 15:3 SEQE
3. QSSS போரில் வல்லவர் ஆண்டவர்;SESS ‛ஆண்டவர்’ என்பது அவர் பெயராம். * திபா 118:14; எசா 12:2 SEQE
4. QSSS பார்வோனின் தேர்களையும் படையையும்SESS அவர் கடலில் தள்ளிவிட்டார்;SESS அவனுடைய சிறந்த படைத்தலைவர்கள்SESS செங்கடலில் அமிழ்த்தப்பட்டனர்.SEQE
5. QSSS ஆழங்களில் அவர்கள் கல்லைப்போல்SESS மூழ்கிப் போயினர்;SESS ஆழங்கள் அவர்களைSESS மூடிக்கொண்டன.SEQE
6. QSSS ஆண்டவரே, உம் வலக்கைSESS வலிமையில் மாண்புற்றது;SESS ஆண்டவரே, உமது வலக்கைSESS பகைவரைச் சிதறடிக்கின்றது.SEQE
7. QSSS உம் மாபெரும் மாட்சியால் உம்SESS எதிரிகளைத் தகர்த்தெறிந்தீர்;SESS உமது சீற்றக் கனலைக் கக்கித் தாளடிSESS போல் அவர்களை எரித்துவிட்டீர்.SEQE
8. QSSS உம் நாசியின் மூச்சால்SESS நீர்த்திரள்கள் குவிந்தன;SESS பேரலைகள் சுவரென நின்றன;SESS கடல் நடுவில் ஆழங்கள்SESS உறைந்து போயின.SEQE
9. QSSS எதிரி சொன்னான்:SESS ‛துரத்திச் செல்வேன்;SESS முன் சென்று மடக்குவேன்;SESS கொள்ளைப் பொருளைப்SESS பங்கிடுவேன்; என் மனம் இதனால்SESS நிறைவு கொள்ளும்;SESS என் வாளை உருவுவேன்;SESS என் கை அவர்களை அழிக்கும்.’SEQE
10. QSSS நீரோ உமது காற்றை வீசச் செய்தீர்;SESS கடல் அவர்களை மூடிக்கொண்டது;SESS ஆற்றல் மிகு நீர்த்திரளில் அவர்கள்SESS ஈயம் போல் அமிழ்ந்தனர்.SEQE
11. QSSS ஆண்டவரே, தெய்வங்களுள்SESS உமக்கு நிகரானவர் எவர்?SESS தூய்மையில் மேலோங்கியவர்,SESS அஞ்சத்தக்கவர், புகழ்ச்சிக்குரியவர்,SESS அருஞ்செயல் ஆற்றுபவர் ஆகியSESS உமக்கு நிகர் யார்?SEQE
12. QSSS நீர் உமது வலக்கையை நீட்டினீர்.SESS நிலம் அவர்களை விழுங்கி விட்டது.SEQE
13. QSSS நீர் மீட்டுக்கொண்ட மக்களைSESS உம் பேரருளால்SESS வழிநடத்திச் சென்றீர்;SESS உம் ஆற்றலால் அவர்களை உம்SESS புனித உறைவிடம் நோக்கிSESS வழி நடத்திச் சென்றீர்.SEQE
14. QSSS இதைக் கேள்வியுற்ற மக்களினங்கள்SESS அனைவரும் கதிகலங்கினர்;SESS பெலிஸ்தியாவில் குடியிருப்போரைSESS நடுக்கம் ஆட்கொண்டது.SEQE
15. QSSS ஏதோம் தலைவர்கள் அச்சமுற்றனர்;SESS மோவாபு தலைவர்களும்SESS நடுநடுங்கினர்;SESS கானானில் குடியிருப்போர்SESS நிலை குலைந்தனர்.SEQE
16. QSSS அச்சமும் திகிலும் அவர்களைSESS ஆட்கொண்டன; ஆண்டவரே,SESS உம் மக்கள் கடந்து செல்லும் வரை,SESS அதாவது நீர் உடைமையாக்கிக்SESS கொண்ட மக்கள் கடந்து செல்லும்வரை,SESS உம் கைவன்மை கண்டு அவர்கள்SESS கல்போன்று மலைத்து நின்றனர்.SEQE
17. QSSS ஆண்டவரே, எம் தலைவரே!SESS நீர் ஏற்படுத்திய உமது உறைவிடமும்,SESS உம் கைகள் உருவாக்கியSESS திருத்தலமும் அமைந்துள்ள உம்SESS உரிமைச் சொத்தான மலைக்குSESS அவர்களைக் கொண்டு சென்றுSESS நிலைநாட்டினீர்.SEQE
18. QSSS ஆண்டவர் என்றென்றும்SESS அரசாள்வார்.SEPEQE
19. {மிரியாமின் பாடல்} PS பார்வோனின் குதிரைகள், தேர்கள், குதிரைவீரர் அனைவரும் கடலில் சென்று கொண்டிருக்க, ஆண்டவர் அவர்கள்மேல் கடல் நீர்த்திரளைத் திருப்பிவிட்டார். இஸ்ரயேல் மக்களோ கடல்நடுவே உலர்ந்த தரையில் நடந்து சென்றனர்.
20. இறைவாக்கினரும் ஆரோனின் தங்கையுமான மிரியாம் கஞ்சிரா ஒன்றைக் கையில் எடுத்துக்கொண்டாள். பெண்டிர் அனைவரும் கஞ்சிரா கொட்டிக் கொண்டும் நடனமாடிக்கொண்டும் அவள்பின் சென்றனர்.
21. QSSS அப்போது மிரியாம்,SESS “ஆண்டவருக்குப் புகழ்பாடுங்கள்;SESS ஏனெனில், அவர் மாட்சியுடன்SESS வெற்றி பெற்றார்;SESS குதிரையையும் குதிரை வீரனையும்SESS கடலுக்குள் அமிழ்த்திவிட்டார்”SESS என்று பல்லவியாகப் பாடினாள்.SEPEQE
22. {கசப்பு நீர்} PS பின்பு மோசே இஸ்ரயேலரை செங்கடலிலிருந்து புறப்பட்டுப் போகச் செய்தார். அவர்கள் மூன்று நாள்கள் சூர் பாலைநிலத்தில் பயணம் செய்தனர். அங்குத் தண்ணீர் எதுவுமே தென்படவில்லை.
23. பின்னர் அவர்கள் மாராவைச் சென்றடைந்தனர். மாராவிலிருந்த தண்ணீரைப் பருக அவர்களால் இயலவில்லை. அது கசப்பாக இருந்தது. இதனால்தான் அவ்விடத்திற்கு ‛மாரா’* என்ற பெயர் வழங்கியது.
24. ‘நாங்கள் எதைத்தான் குடிப்போம்’ என்று கூறி, மக்கள் மோசேக்கு எதிராக முறுமுறுத்தனர்.
25. அவரும் ஆண்டவரை நோக்கிக் குரல் எழுப்பினார். ஆண்டவர் அவருக்கு ஒரு மரத்துண்டைக் காட்டினார். அதை அவர் தண்ணீரில் எறிய, தண்ணீரும் சுவைபெற்றது. அங்கே சட்டங்களையும் ஒழுங்குகளையும் தந்து ஆண்டவர் அவர்களைச் சோதித்தார்.
26. மேலும் அவர், “உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கு நீ அக்கறையுடன் செவிசாய்த்து, அவர் பார்வையில் நலமாகத் தோன்றுவதைச் செய்து, அவர் கட்டளைகளைப் பின்பற்றி, அவர் சட்டங்கள் அனைத்தையும் கைக்கொண்டால், நான் எகிப்திற்கு வரச்செய்த கொள்ளை நோய்களை உன்மேல் வரவிடமாட்டேன். ஏனெனில் நானே உன்னைக் குணமாக்கும் ஆண்டவர்” என்றார்.PE
27. PS பின்னர் அவர்கள் ஏலிம் சென்றடைந்தனர். அங்கே பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது பேரீச்ச மரங்களும் இருந்தன. தண்ணீருக்கருகில் அவர்கள் பாளையம் இறங்கினர்.PE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×