Bible Books

:

1. சாலொமோனின் நீதிமொழிகள்:
ஞானமுள்ள மகன் தன் தகப்பனுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறான்;
ஆனால் மூடத்தனமுள்ள மகனோ தன் தாய்க்கு துக்கத்தைக் கொடுக்கிறான்.
1. The proverbs H4912 of Solomon H8010 . A wise H2450 son H1121 maketh a glad H8055 father H1 : but a foolish H3684 son H1121 is the heaviness H8424 of his mother H517 .
2. நீதியற்ற வழியில் சம்பாதித்த செல்வம் பயனற்றது,
ஆனால் நீதியோ ஒருவனை மரணத்திலிருந்து விடுவிக்கிறது.
2. Treasures H214 of wickedness H7562 profit H3276 nothing H3808 : but righteousness H6666 delivereth H5337 from death H4480 H4194 .
3. யெகோவா நீதிமான்களைப் பசியாயிருக்க விடுவதில்லை,
ஆனால் கொடியவர்களின் பேராசையை அவர் நிறைவேற்றமாட்டார்.
3. The LORD H3068 will not H3808 suffer the soul H5315 of the righteous H6662 to famish H7456 : but he casteth away H1920 the substance H1942 of the wicked H7563 .
4. சோம்பேறிகளின் கைகள் வறுமையை உண்டாக்கும்,
ஆனால் உழைக்கும் கைகளோ செல்வத்தைக் கொண்டுவரும்.
4. He becometh poor H7326 that dealeth H6213 with a slack H7423 hand H3709 : but the hand H3027 of the diligent H2742 maketh rich H6238 .
5. கோடைகாலத்தில் பயிர்களை சேர்க்கிறவன் விவேகமுள்ள மகன்;
ஆனால் அறுவடைக்காலத்தில் தூங்குகிறவனோ, அவமானத்தைக் கொண்டுவரும் மகன்.
5. He that gathereth H103 in summer H7019 is a wise H7919 son H1121 : but he that sleepeth H7290 in harvest H7105 is a son H1121 that causeth shame H954 .
6. நீதிமான்களின் தலையை ஆசீர்வாதங்கள் முடிசூட்டும்;
ஆனால் கொடியவர்களின் பேச்சோ வன்முறை நிறைந்திருக்கும்.
6. Blessings H1293 are upon the head H7218 of the just H6662 : but violence H2555 covereth H3680 the mouth H6310 of the wicked H7563 .
7. நீதிமான்களைப் பற்றிய நினைவு ஆசீர்வாதமாயிருக்கும்;
ஆனால் கொடியவர்களின் பெயரோ அழிந்துபோகும்.
7. The memory H2143 of the just H6662 is blessed H1293 : but the name H8034 of the wicked H7563 shall rot H7537 .
8. இருதயத்தில் ஞானமுள்ளவர்கள் கட்டளைகளை ஏற்றுக்கொள்கிறார்கள்;
ஆனால் அலட்டுகிற மூடன் அழிந்துபோகிறான்.
8. The wise H2450 in heart H3820 will receive H3947 commandments H4687 : but a prating H8193 fool H191 shall fall H3832 .
9. நேர்மையாய் நடக்கிறவர்கள் பாதுகாப்பாக நடக்கிறார்கள்,
ஆனால் நேர்மையற்ற வழிகளில் நடக்கிறவர்கள் வீழ்ந்து போவார்கள்.
9. He that walketh H1980 uprightly H8537 walketh H1980 surely H983 : but he that perverteth H6140 his ways H1870 shall be known H3045 .
10. தீயநோக்கத்தோடு கண் சிமிட்டுகிறவன் துயரத்தை உண்டாக்குகிறான்;
அலட்டுகிற மூடன் அழிந்துபோகிறான்.
10. He that winketh H7169 with the eye H5869 causeth H5414 sorrow H6094 : but a prating H8193 fool H191 shall fall H3832 .
11. நீதிமான்களின் வாய் வாழ்வின் நீரூற்று,
ஆனால் கொடியவர்களின் பேச்சோ வன்முறை நிறைந்திருக்கும்.
11. The mouth H6310 of a righteous H6662 man is a well H4726 of life H2416 : but violence H2555 covereth H3680 the mouth H6310 of the wicked H7563 .
12. பகைமை பிரிவினையைத் தூண்டிவிடுகிறது;
அன்போ பிழைகளையெல்லாம் மன்னித்து மறக்கிறது.
12. Hatred H8135 stirreth up H5782 strifes H4090 : but love H160 covereth H3680 H5921 all H3605 sins H6588 .
13. பகுத்தறிகிறவர்களின் உதடுகளில் ஞானம் காணப்படுகிறது,
ஆனால் மூடரின் முதுகுக்கு ஏற்றது பிரம்பே.
13. In the lips H8193 of him that hath understanding H995 wisdom H2451 is found H4672 : but a rod H7626 is for the back H1460 of him that is void H2638 of understanding H3820 .
14. ஞானமுள்ளவர்கள் அறிவைச் சேர்த்துவைக்கிறார்கள்;
ஆனால் மூடரின் வாயோ அழிவை அழைக்கிறது.
14. Wise H2450 men lay up H6845 knowledge H1847 : but the mouth H6310 of the foolish H191 is near H7138 destruction H4288 .
15. பணக்காரர்களின் செல்வம் அவர்களுடைய அரணான பட்டணம்;
ஆனால் ஏழையின் வறுமை அவர்களின் அழிவு.
15. The rich man H6223 's wealth H1952 is his strong H5797 city H7151 : the destruction H4288 of the poor H1800 is their poverty H7389 .
16. நீதிமான்களின் கூலி, அவர்களுக்கு வாழ்வு,
ஆனால் கொடியவர்கள் தங்கள் பாவத்திற்கேற்ற தண்டனையை அடைவார்கள்.
16. The labor H6468 of the righteous H6662 tendeth to life H2416 : the fruit H8393 of the wicked H7563 to sin H2403 .
17. நற்கட்டுப்பாட்டை ஏற்றுக்கொள்ளுகிறவன் வாழ்வின் வழியைக் காட்டுகிறான்;
ஆனால் கண்டித்துத் திருத்துவதை அலட்சியம் செய்கிறவனோ, மற்றவர்களையும் வழிதவறப்பண்ணுகிறான்.
17. He is in the way H734 of life H2416 that keepeth H8104 instruction H4148 : but he that refuseth H5800 reproof H8433 erreth H8582 .
18. பகையை மறைப்பவன் பொய்யன்;
அவதூறு பரப்புகிறவன் மூடன்.
18. He that hideth H3680 hatred H8135 with lying H8267 lips H8193 , and he that uttereth H3318 a slander H1681 , is a fool H3684 .
19. அதிக வார்த்தைகள் பேசும் இடத்தில் பாவமில்லாமற்போகாது;
ஆனால் தன் நாவைக் கட்டுப்படுத்துகிறவனோ விவேகமுள்ளவன்.
19. In the multitude H7230 of words H1697 there wanteth H2308 not H3808 sin H6588 : but he that refraineth H2820 his lips H8193 is wise H7919 .
20. நீதிமான்களின் நாவு தரமான வெள்ளி,
ஆனால் கொடியவர்களின் இருதயமோ சொற்பவிலையும் பெறாது.
20. The tongue H3956 of the just H6662 is as choice H977 silver H3701 : the heart H3820 of the wicked H7563 is little worth H4592 .
21. நீதிமான்களின் வார்த்தைகள் அநேகருக்கு ஊட்டம்;
ஆனால் மூடர்கள் மதிகேட்டினால் சாகிறார்கள்.
21. The lips H8193 of the righteous H6662 feed H7462 many H7227 : but fools H191 die H4191 for want H2638 of wisdom H3820 .
22. யெகோவாவின் ஆசீர்வாதம் செல்வத்தைக் கொண்டுவருகிறது;
அதனுடன் அவர் துன்பத்தைச் சேர்க்கமாட்டார்.
22. The blessing H1293 of the LORD H3068 , it H1931 maketh rich H6238 , and he addeth H3254 no H3808 sorrow H6089 with H5973 it.
23. தீங்கு செய்வது மூடர்களுக்கு வேடிக்கையானது;
ஆனால் ஞானம் புரிந்துகொள்ளுதல் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியானது.
23. It is as sport H7814 to a fool H3684 to do H6213 mischief H2154 : but a man H376 of understanding H8394 hath wisdom H2451 .
24. கொடியவர்கள் எதற்குப் பயப்படுகிறார்களோ, அது அவர்களுக்கு நேரிடும்;
நீதிமான்கள் விரும்புவது கொடுக்கப்படும்.
24. The fear H4034 of the wicked H7563 , it H1931 shall come upon H935 him : but the desire H8378 of the righteous H6662 shall be granted H5414 .
25. சுழல் காற்று அடித்துச் செல்லும்போது, கொடியவர்கள் இல்லாமற்போவார்கள்;
ஆனால் நீதிமான்கள் என்றென்றைக்கும் உறுதியாய் நிலைத்து நிற்பார்கள்.
25. As the whirlwind H5492 passeth H5674 , so is the wicked H7563 no H369 more : but the righteous H6662 is an everlasting H5769 foundation H3247 .
26. பற்களுக்குப் புளிப்பும், கண்களுக்கு புகையும் எப்படியோ,
சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு அப்படி இருக்கிறான்.
26. As vinegar H2558 to the teeth H8127 , and as smoke H6227 to the eyes H5869 , so H3651 is the sluggard H6102 to them that send H7971 him.
27. யெகோவாவுக்குப் பயந்து நடப்பது வாழ்நாட்களை நீடிக்கும்,
ஆனால் கொடியவர்களின் வருடங்களோ குறைக்கப்படும்.
27. The fear H3374 of the LORD H3068 prolongeth H3254 days H3117 : but the years H8141 of the wicked H7563 shall be shortened H7114 .
28. நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாயிருக்கும்,
ஆனால் கொடியவர்களின் எதிர்பார்ப்போ ஒன்றுமில்லாமற்போம்.
28. The hope H8431 of the righteous H6662 shall be gladness H8057 : but the expectation H8615 of the wicked H7563 shall perish H6 .
29. யெகோவாவின் வழி நீதிமான்களுக்கு புகலிடம்,
ஆனால் தீமை செய்பவர்களுக்கு அது அழிவு.
29. The way H1870 of the LORD H3068 is strength H4581 to the upright H8537 : but destruction H4288 shall be to the workers H6466 of iniquity H205 .
30. நீதிமான்கள் ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை;
ஆனால் கொடியவர்கள் நாட்டில் நிலைத்திருக்கமாட்டார்கள்.
30. The righteous H6662 shall never H5769 H1077 be removed H4131 : but the wicked H7563 shall not H3808 inhabit H7931 the earth H776 .
31. நீதிமான்களின் பேச்சு ஞானத்தைக் கொடுக்கும்,
ஆனால் வஞ்சகநாவு அழிக்கப்படும்.
31. The mouth H6310 of the just H6662 bringeth forth H5107 wisdom H2451 : but the froward H8419 tongue H3956 shall be cut out H3772 .
32. நீதிமான்களின் உதடுகள் தகுதியானவற்றைப் பேசும்;
ஆனால் கொடியவர்களின் வாயோ வஞ்சகமான வார்த்தைகளைப் பேசும். PE
32. The lips H8193 of the righteous H6662 know H3045 what is acceptable H7522 : but the mouth H6310 of the wicked H7563 speaketh frowardness H8419 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×