1. PS QSSS வானங்களே! நான் பேசுவேன்;SESS செவிகொடுப்பீர்:SESS பூவுலகே! என் சொல்லைSESS உற்றுக்கேள்.SEQE
2. QSSS பெருமழை பைந்தளிர்மீதுSESS பொழிவதுபோல்,SESS மென்சாரல் பசும்புல்மீதுSESS விழுவதுபோல்,SESS என் அறிவுரை மழையெனப்SESS பெய்திடுக! என் சொற்கள்SESS பனியென இறங்கிடுக!SEQE
3. QSSS நான் ஆண்டவரின் பெயரைப்SESS பறைசாற்றுவேன்;SESS நம் கடவுளின் மாட்சியைப்SESS பாராட்டுவேன்.SEQE
4. QSSS அவரே பாறை! அவர் செயல்SESS நிறைவானது!SESS அவர்தம் வழிகள் அனைத்தும்SESS நீதியானவை!SESS வஞ்சகம் அற்ற உண்மைமிகுSESS இறைவன்! அவரே நீதியும்SESS நேர்மையும் உள்ளவர்!SEQE
5. QSSS அவர்தம் கேடுகெட்ட பிள்ளைகள்SESS அவரிடம் பொய்ம்மையாய்SESS நடந்துகொண்டனர்;SESS அவர்கள் நெறிபிறழ்ந்த வஞ்சகம்SESS மிக்க தலைமுறையினர்!SEQE
6. QSSS ஞானமற்ற, மதிகெட்ட மக்களே!SESS ஆண்டவருக்கு நீங்கள் அளிக்கும்SESS கைம்மாறு இதுதானா?SESS உங்களைப் படைத்து, உருவாக்கி,SESS நிலை நிறுத்திய உங்கள் தந்தைSESS அவரல்லவா?SEQE
7. QSSS பண்டைய நாள்களைSESS நினைத்துப்பார்!SESS பலதலைமுறையின் ஆண்டுகளைக்SESS கவனித்துப்பார்!SESS உன் தந்தையிடம் கேள்;SESS அவர் உனக்கு அறிவிப்பார்;SESS பெரியோரிடம் கேள்;SESS அவர்கள் உனக்குச்சொல்வர்.SEQE
8. QSSS உன்னதமானவர் வெவ்வேறுSESS இனங்களுக்குSESS உரிமைச்சொத்துக்களைப்SESS பங்கிட்டபோது,SESS ஆதாமின் பிள்ளைகளைSESS அவர் பிரித்தபோது,SESS இஸ்ரயேல் மக்களின்SESS எண்ணிக்கைக்கு ஏற்பSESS மக்கள் இனங்களின்SESS எல்லைகளையும் திட்டமிட்டார்.SEQE
9. QSSS ஆண்டவரின் பங்குSESS அவர்தம் மக்களே!SESS அவரது உரிமைச் சொத்துSESS யாக்கோபே! * திப 17:26 SEQE
10. QSSS பாழ்வெளியில் அவர் அவனைக்SESS கண்டார்;SESS வெறுமையான ஓலமிடும்SESS பாலையில் அவனைக் கண்டார்;SESS அவர் அவனைப் பாதுகாத்துப்SESS பேணினார்;SESS கண்ணின் மணியென அவனைக்SESS காத்தருளினார்.SEQE
11. QSSS கழுகு தன் கூட்டின்மேல்SESS அசைத்தாடித் தன் குஞ்சுகளின்SESS மேல் படர்ந்து அணைப்பது போலும்,SESS தன் சிறகுகளை விரித்துSESS அவற்றைச் சுமந்து செல்வது போலும்SESS அவற்றைத் தன் சிறகுகளில்SESS சுமப்பது போல்,SEQE
12. QSSS ஆண்டவர் ஒருவரேSESS அவனை வழிநடத்தினார்;SESS வேற்றுத் தெய்வங்கள் அவனோடுSESS இருந்ததில்லை.SEQE
13. QSSS பூவுலகின் முகடுகளில்SESS அவனை வாழச்செய்தார்;SESS வயல்வெளியின் விளைச்சலைSESS அவன் உண்டான்;SESS கன்மலைத் தேனைSESS அவன் சுவைத்தான்;SESS கற்பாறை எண்ணெயைப்SESS பயன்படுத்தினான்.SEQE
14. QSSS பசுவின் வெண்ணெயையும்,SESS ஆட்டின் பாலையும்,SESS பாசானில் மேயும் செம்மறிக்கிடாய்,SESS வெள்ளாட்டுக்கிடாய்SESS இவற்றின் கொழுப்பையும்,SESS கொழுமையான கோதுமையையும்,SESS இரத்தம் போன்ற முந்திரிச் சாற்றையும்SESS அவர்கள் உண்ணும்படிSESS ஆண்டவர் கொடுத்தார்.SEQE
15. QSSS ஆனால், கொழுத்த காளைSESS மார்பிலே பாய்ந்தது;SESS எசுரூன்* கொழுத்துப் பருத்துSESS முரடனானான்;SESS தனைப் படைத்த கடவுளைSESS விட்டு அவன் விலகினான்;SESS தனது மீட்பின் பாறையைSESS எள்ளி நகைத்தான்.SEQE
16. QSSS வேற்றுத் தெய்வங்களால்SESS அவருக்கு எரிச்சலூட்டினர்;SESS அருவருப்புகளால் அவருக்குச்SESS சினமூட்டினர்.SEQE
17. QSSS இறையல்லாத பேய்களுக்குப்SESS பலி செலுத்தினர்;SESS அவர்கள் அறியாத வேற்றுத்SESS தெய்வங்களுக்கு, நேற்று முளைத்தSESS புதிய தெய்வங்களுக்கு,SESS உங்கள் முன்னோர் அஞ்சாதSESS அவற்றிற்குப் பலியிட்டனர்.SEQE
18. QSSS ‘உன்னை ஈன்ற பாறையைப்SESS புறக்கணித்தாய்;SESS உன்னை உருவாக்கிய கடவுளைSESS மறந்து விட்டாய்’. * 1 கொரி 10:20 SEQE
19. QSSS தன் மைந்தரும் தம் மகளிரும்SESS தமக்குச் சினமூட்டியதை,SESS ஆண்டவர் கண்டு அவர்களைSESS இகழ்ந்து ஒதுக்கினார். * திப 17:26 SEQE
20. QSSS அவர் உரைத்தார்;SESS எனது முகத்தை அவர்களிடமிருந்துSESS மறைத்துக் கொள்வேன்;SESS அவர்களது முடிவு என்னவென்றுSESS நான் கவனித்துக் கொள்வேன்;SESS ஏனெனில், அவர்கள்SESS கேடுகெட்ட தலைமுறையினர்;SESS நேர்மை அறவே அற்ற பிள்ளைகள்.SEQE
21. QSSS இல்லாத தெய்வத்தால்SESS எனக்கு எரிச்சலூட்டினர்;SESS அவர்களின் சிலைகளால்SESS எனக்குச் சினமூட்டினர்;SESS ஒன்றுமில்லாத இனத்தால்SESS அவர்களுக்கு எரிச்சலூட்டுவேன்;SESS மதிகெட்ட வேற்றினத்தால்SESS அவர்களுக்குச் சினமூட்டுவேன்.SEQE
22. QSSS எனது சினத்தில்SESS நெருப்புப்பொறி தெறிக்கும்;SESS கீழுலகின் அடிமட்டம்வரைSESS அது எரிக்கும்;SESS பூவுலகையும் அதன்SESS விளைபலன்களையும் அழிக்கும்;SESS மாமலைகளின் அடித்தளமேSESS தீப்பற்றி எரியும். * 1 கொரி 10:22; உரோ 10:19 SEQE
23. QSSS தீங்குகளை அவர்கள்மேல்SESS கொட்டிக் குவிப்பேன்;SESS என் அம்புகளை அவர்கள்மேல்SESS எய்து தீர்ப்பேன்.SEQE
24. QSSS பசியினால் அவர்கள் வாடுவர்;SESS கொள்ளை நோயால் மாய்வர்;SESS கொடிய வாதைகளால் மடிவர்;SESS விலங்குகளின் பற்களுக்குSESS இரையாவர்; புழுதியில் ஊரும்SESS நச்சுப்பூச்சிகளால் மடிவர்.SEQE
25. QSSS வெளியிலே வாள்;SESS உள்ளே பேரச்சம்!SESS இளைஞனும் கன்னிப் பெண்ணும்SESS பால்குடி மறைவாக் குழந்தையும்SESS முடிநரைத்த கிழவனும் அழிவர்.SEQE
26. QSSS நான் சொன்னேன்: அவர்களைSESS எத்திக்கிலும் சிதறடிப்பேன்;SESS அவர்களது நினைவுSESS மனிதரிடமிருந்துSESS அற்றுப் போகச் செய்வேன்.SEQE
27. QSSS ஆயினும், ‘எங்கள் கைகள்SESS வலிமையானவை!SESS இதையெல்லாம் ஆண்டவர்SESS செய்யவில்லை!’ என்றுSESS அவர்களின் பகைவர்SESS திரித்துப் பேசுவர் என்பதாலும்SESS பகைவனின் பழிச் சொல்லுக்குSESS அஞ்சியும் வாளாவிருந்தேன்.SEQE
28. QSSS அவர்கள் புத்தி கெட்ட மக்கள்;SESS அவர்களிடம் விவேகம் சிறிதும்SESS இல்லை.SEQE
29. QSSS அவர்கள் ஞானமடைந்து இதனைSESS உணர்ந்து தங்களுக்குSESS நிகழப்போவதை உய்த்துணர்ந்தால்SESS எத்துணை நலம்!SEQE
30. QSSS ஒரே ஆள்SESS ஆயிரம் பேரைத் துரத்துவதும்SESS இரண்டு பேர்SESS பதினாயிரம் பேரை விரட்டுவதும்SESS அவர்களது பாறை அவர்களைSESS விற்றுவிட்டதாலன்றோ?SESS அவர்களின் கடவுள் அவர்களைக்SESS கைவிட்டதாலன்றோ?SEQE
31. QSSS அவர்களது பாறைSESS நமது பாறை போன்றன்றுSESS என்று நம்முடைய பகைவர்களேSESS ஏற்றுக்கொள்கின்றனர்.SEQE
32. QSSS அவர்களது கொடிமுந்திரிSESS சோதோமிலிருந்து வருவதாகும்;SESS கொமோராவின் வயல்SESS வெளியிலிருந்து வருவதாகும்;SESS அவர்களது திராட்சைகள்SESS நச்சுத் திராட்சைகள்;SESS அவர்களது திராட்சைக்SESS கொத்துக்கள் கசப்பானவை.SEQE
33. QSSS அவர்களது இரசம் பாம்பின்SESS நஞ்சு போன்றது;SESS விரியன் பாம்பின் கொடியSESS நஞ்சு போன்றது.SEQE
34. QSSS இது என்னிடம் சேமிக்கப்பட்டுள்ளதுSESS அன்றோ?SESS என் கருவூலங்களில் முத்திரையிடப்SESS பட்டுள்ளது அன்றோ?SEQE
35. QSSS பழிவாங்குவதும் கைம்மாறளிப்பதும்SESS எனக்கு உரியன;SESS உரிய நாளில் அவர்களின் கால்கள்SESS தள்ளாடும்;SESS அவர்களது அழிவுநாள்SESS அண்மையில் உள்ளது;SESS அவர்களுக்கு வரப்போகும்SESS கொடுமைகள் தீவிரமாகின்றன.SEQE
36. QSSS அவர்கள் ஆற்றல் இழந்துSESS விட்டவர்கள் எனவும்SESS அடிமையோ குடிமகனோSESS எவனுமில்லை எனவும்SESS காணும் போது ஆண்டவரே அவர்SESS மக்களுக்குத் தீர்ப்பிடுவார்;SESS அவர்தம் ஊழியர்களுக்காகSESS அவர் மனமிரங்கிடுவார். * உரோ 12:19; எபி 10:30 SEQE
37. QSSS அப்பொழுது அவர் உரைப்பார்:SESS அவர்களின் தெய்வங்கள் எங்கே?SESS அவர்கள் தஞ்சம் புகுந்த பாறை எங்கே? * திபா 135:14 SEQE
38. QSSS அவர்கள் பலியிட்டவற்றின்SESS கொழுப்பை உண்டவர்கள் எங்கே?SESS நீர்மப்படையல் இரசத்தைக்SESS குடித்தவர்கள் எங்கே?SESS அவர்கள் இப்போது முன்வந்துSESS உனக்கு உதவட்டுமே!SESS அவர்கள் உனது புகலிடம் ஆகட்டுமே!SEQE
39. QSSS நானே இருக்கிறவர்! என்னைத்SESS தவிர வேறு தெய்வங்கள் இல்லைSESS என்பதை இப்பொழுதுSESS உணர்ந்து கொள்ளுங்கள்!SESS கொல்பவரும் நானே;SESS உயிரளிப்பவரும் நானே!SESS காயப்படுத்துபவரும் நானே;SESS குணமாக்குபவரும் நானே!SESS என் கைகளிலிருந்து விடுவிப்பார்SESS எவரும் இரார்.SEQE
40. QSSS ஏனெனில், என் கைகளைSESS வானோக்கி உயர்த்திSESS என்றும் வாழும் என்மீதுSESS ஆணையிட்டு உரைக்கிறேன்.SEQE
41. QSSS மின்னும் என் வாளை நான் தீட்டி,SESS நீதித் தீர்ப்பை என் கையில்SESS எடுக்கும்போதுSESS என் பகைவரைப் பழி வாங்கிSESS என்னைப் பகைப்பவருக்குப்SESS பதிலடி கொடுப்பேன்.SEQE
42. QSSS கொலையுண்டோர், சிறைப்பட்டோரின்SESS இரத்தத்திலும் நீள்முடித்SESS தலைவரின் இரத்தத்திலும் என்SESS அம்புகள் குடிக்கச் செய்வேன்;SESS என் வாள் சதையைSESS உண்ணச் செய்வேன்.SEQE
43. QSSS வேற்றினங்களே! ஆண்டவரின்SESS மக்களோடு மகிழுங்கள்;SESS அவர் தம் ஊழியரின் இரத்தத்திற்குப்SESS பழி வாங்கினார்;SESS அவர் தம் பகைவர்களுக்குப்SESS பதிலடி கொடுத்தார். தம் மக்களின்SESS நாட்டைக் கறைநீக்கம் செய்தார்.SEPEQE
44. PS மோசேயும் நூனின் மகனான யோசுவாவும் வந்து, இந்தப் பாடலின் வார்த்தைகளை மக்கள் கேட்குமாறு எடுத்துரைத்தார்கள். * உரோ 15:10; திவெ 19:2 PE
45. {மோசேயின் இறுதி மொழிகள்} PS இந்த வார்த்தைகளை எல்லாம் இஸ்ரயேலுக்குச் சொல்லி முடித்தபின், மோசே அவர்களுக்குச் சொன்னது;
46. உங்களுக்கு எதிரான சான்றாக நான் இன்று உரைத்த வார்த்தைகள் எல்லாவற்றையும் உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள். அப்போதுதான் இத்திருச்சட்டத்தின் வார்த்தைகள் அனைத்தையும் கருத்தாய்க் கடைப்பிடிக்குமாறு நீங்கள் உங்கள் மக்களுக்குக் கட்டளையிடுவீர்கள்.
47. இத்திருச்சட்டத்தின் எவ்வார்த்தையும் வீணானதல்ல. அதுவே உங்களது வாழ்வு. யோர்தானைக் கடந்து, நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளப்போகும் மண்ணில் இந்த வார்த்தைகளால் நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள்.PE
48. PS அதே நாளில் ஆண்டவர் மோசேயுடன் பேசியது:
49. மோவாபு நாட்டில் எரிகோவுக்கு எதிரேயுள்ள, அபாரிம் மலையில் நெபோ என்னும் மலைமீது ஏறிக் கானான் நாட்டைப் பார். உன் மக்கள் இஸ்ரயேலுக்கு நான் உடைமையாகக் கொடுக்கப்போகும் நாடு அதுவே. * எண் 27:12-14; இச 2:23-27
50. உன் சகோதரன் ஆரோன் ஓர் என்னும் மலையில் இறந்து, உன் மூதாதையருடன் சேர்த்துக் கொள்ளப்பட்டான். அதுபோல நீ ஏறிச் செல்லவிருக்கும் மலையில் நீயும் இறந்து உன் இனத்தாருடன் சேர்த்துக் கொள்ளப்படுவாய். * எண் 27:12-14; இச 2:23-27
51. ஏனெனில், சீன் என்னும் பாலை நிலத்தில், மெரிபத்து-காதேசு எனும் நீர்ச்சுனைக்கு அருகில், இஸ்ரயேல் மக்கள் முன்னிலையில் எனக்குத் துரோகம் செய்தாய். அதனால், இஸ்ரயேல் மக்கள் முன்னிலையில் என்னைப் புனிதப்படுத்தவில்லை. * எண் 27:12-14; இச 2:23-27
52. எனினும், உனக்கு முன்பாக உள்ள நாட்டை நீ பார்ப்பாய். அதையே நான் இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுக்கப் போகிறேன். நீயோ அதனுள் செல்ல மாட்டாய். * எண் 27:12-14; இச 2:23-27 PE