1. {யூதாவின் பாவமும் தண்டனையும்} PS யூதாவின் பாவம் இரும்பு எழுத்தாணியாலும் வைர நுனியாலும் எழுதப்பட்டுள்ளது. அது அவர்கள் இதயப் பலகையிலும் பலிபீடக் கொம்புகளிலும் பொறிக்கப்பட்டுள்ளது.
2. தழைத்த மரங்களின் கீழும், உயர்ந்த குன்றுகளின் மேலும், திறந்த வெளி மலைகள் மீதும் உள்ள அவர்கள் பலிபீடங்களையும் அசேராக் கம்பங்களையும் அவர்களின் பிள்ளைகளே நினைவுகூருகின்றார்கள்.
3. ஆகவே, நாடெங்கும் செய்யப்படும் பாவங்களுக்கு ஈடாக உன் செல்வங்களையும் கருவூலங்களையும் தொழுகைமேடுகளையும் கொள்ளைப்பொருள் ஆக்குவேன்.
4. நான் உனக்கு உரிமைச் சொத்தாகக் கொடுத்துள்ள நாட்டின்மேல் உனக்குள்ள பிடி தளரும். முன்பின் தெரியாத ஒரு நாட்டில், உன் எதிரிகளுக்கு நீ அடிபணியச் செய்வேன். ஏனெனில், நீ என்னில் மூட்டியுள்ள கோபக்கனல் என்றென்றும் கொழுந்துவிட்டு எரியும்.PE
5. {அறிவுரைகள்} PS QSSS ஆண்டவர் கூறுவது இதுவே:SESS மனிதரில் நம்பிக்கை வைப்போரும்SESS வலுவற்ற மனிதரில் தம் வலிமையைக்SESS காண்போரும் சபிக்கப்படுவர்.SEQE
6. QSSS அவர்கள் பாலைநிலத்துப்SESS புதர்ச்செடிக்கு ஒப்பாவர்.SESS பருவ காலத்திலும்SESS அவர்கள் பயனடையார்;SESS பாலை நிலத்தின்SESS வறண்ட பகுதிகளிலும்SESS யாரும் வாழா உவர் நிலத்திலுமேSESS அவர்கள் குடியிருப்பர்.SEQE
7. QSSS ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர்SESS பேறுபெற்றோர்;SESS ஆண்டவரே அவர்களது நம்பிக்கை.SEQE
8. QSSS அவர்கள் நீர் அருகில் நடப்பட்டSESS மரத்துக்கு ஒப்பாவர்;SESS அது நீரோடையை நோக்கிSESS வேர் விடுகின்றது.SESS வெப்பமிகு நேரத்தில்SESS அதற்கு அச்சமில்லை;SESS அதன் இலைகள்SESS பசுமையாய் இருக்கும்;SESS வறட்சிமிகு ஆண்டிலும்SESS அதற்குக் கவலை இராது;SESS அது எப்போதும் கனி கொடுக்கும்.SEQE
9. QSSS இதயமே அனைத்திலும்SESS வஞ்சகம் மிக்கது;SESS அதனை நலமாக்க முடியாது.SESS அதனை யார்தான் புரிந்துகொள்வர்? * திபா 1:3 SEQE
10. QSSS ஆண்டவராகிய நானேSESS இதயச் சிந்தனைகளை ஆய்பவர்;SESS உள்ளுணர்வுகளைச்SESS சோதித்து அறிபவர்.SESS ஒவ்வொருவரின் வழிகளுக்கும்SESS செயல்களின் விளைவுக்கும் ஏற்றவாறுSESS நடத்துபவர்.SEQE
11. QSSS நேர்மையற்ற வழிகளில்SESS செல்வம் சேர்ப்போர்SESS தாம் இடாத முட்டைகளை அடைகாக்கும்SESS கௌதாரி போன்றோர்;SESS தம் வாழ்நாள்களின் நடுவிலேயேSESS அவர்கள் அச்செல்வத்தைSESS இழந்துவிடுவர்;SESS இறுதியில் அவமதிப்புக்கு உள்ளாவர். * திபா 62:12; திவெ 2:23 SEQE
12. QSSS “நம் திருத்தூயகம்SESS தொடக்கத்திலிருந்தேSESS உயர்ந்த இடத்தில் அமைந்த,SESS மாட்சிமிகு அரியணையாய் உள்ளது.”SEQE
13. QSSS ஆண்டவரே!SESS இஸ்ரயேலின் நம்பிக்கையே!SESS உம்மைப் புறக்கணித்தோர் யாவரும்SESS வெட்கமுறுவர்;SESS உம்மைவிட்டு அகன்றோர்SESS தரையில் எழுதப்பட்டோர் ஆவர்;SESS ஏனெனில், அவர்கள்SESS வாழ்வளிக்கும் நீரூற்றாகியSESS ஆண்டவரைப் புறக்கணித்தார்கள்.SEPEQE
14. {எரேமியாவின் மன்றாட்டு} PS QSSS ஆண்டவரே, என்னை நலமாக்கும்;SESS நானும் நலமடைவேன்.SESS என்னை விடுவியும்;SESS நானும் விடுதலை அடைவேன்;SESS ஏனெனில், நீரே என் புகழ்ச்சிக்குரியவர்.SEQE
15. QSSS இதோ அவர்கள் என்னிடம்,SESS “ஆண்டவரின் வாக்கு எங்கே?SESS அது நிறைவேறட்டுமே” என்கிறார்கள்.SEQE
16. QSSS அவர்கள்மேல்SESS தீமையை அனுப்ப வேண்டும் என்றுSESS நான் உம்மை நெருக்கவில்லை;SESS கொடுமையின் நாளைSESS நான் விரும்பவில்லை;SESS நான் கூறியவைதாம்SESS உமக்குத் தெரியமே;SESS அவை உம்முன்தாமே கூறப்பட்டன.SEQE
17. QSSS நீ எனக்குத் திகிலாய் இராதீர்;SESS தீமையின் நாளில் நீரே என் புகலிடம்.SEQE
18. QSSS என்னைத் துன்புறுத்துவோர்SESS வெட்கம் அடையட்டும்;SESS நானோ வெட்கம் அடையாதிருப்பேனாக!SESS அவர்கள் திகிலுறட்டும்;SESS நானோ திகிலுறாதிருப்பேனாக.SESS தீமையின் நாளைSESS அவர்கள்மேல் வரச்செய்யும்;SESS இரட்டிப்பான அழிவுSESS அவர்கள்மேல் வரட்டும்;SESS அவர்கள் அடியோடு ஒழியட்டும்.SEPEQE
19. {ஓய்வுநாளை அனுசரித்தல்} PS ஆண்டவர் கூறியது இதுவே: நீ போய் யூதாவின் அரசர்களின் உள்ளே வருவதற்கும் வெளியே செல்வதற்கும் பயன்படும் பொதுமக்கள் வாயிலிலும் எருசலேமின் வாயில்கள் அனைத்திலும் நின்றுகொள்.PE
20. PS நீ அவர்களுக்கு அறிவிக்க வேண்டியது; இவ்வாயில்கள் வழியாகச் செல்லும் யூதாவின் அரசர்களே, யூதாவின் அனைத்து மக்களே, எருசலேமில் வாழ்வோரே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்.
21. ஆண்டவர் கூறுவது இதுவே; உங்கள் உயிரை முன்னிட்டு ஓய்வுநாளில் சுமை தூக்க வேண்டாம்; அவற்றை எருசலேமின் வாயில்கள் வழியாகக் கொண்டு செல்லவும் வேண்டாம்.
22. ஓய்வுநாளில் உங்கள் வீடுகளிலிருந்தும் சுமைகள் தூக்கிச் செல்லவேண்டாம். அன்று எந்த வேலையும் செய்யவேண்டாம். உங்கள் மூதாதையருக்கு நான் கொடுத்த கட்டளைப்படி ஓய்வுநாளைத் தூய்மையாகக் கடைப்பிடியுங்கள். * நெகே 13:15-22
23. அவர்களோ எனக்குச் செவி சாய்க்கவில்லை; நான் சொன்னதைக் கவனிக்கவில்லை; கேட்டுக் கற்றுக்கொள்ளாதபடி முரட்டுப் பிடிவாதம் செய்தனர். * விப 20:8-10; இச 5:12-14. PE
24. PS ஆண்டவர் கூறுவது; நீங்கள் எனக்குச் செவிகொடுத்து ஓய்வு நாளில் இந்நகரின் வாயில்கள் வழியாகச் சுமை தூக்கிச் செல்லாது, வேலை எதுவும் செய்யாது, ஓய்வுநாளைத் தூய்மையாகக் கடைப்பிடிப்பீர்களாகில்,
25. தாவீதின் அரியணையில் அமரும் அரசர்களும் இளவரசர்களும் இந்நகரின் வாயில் வழியாகச் செல்வார்கள்; குதிரைகளிலும் தேர்களிலும் ஏறிச் செல்வார்கள். அவர்களோடு தலைவர்களும் யூதா நாட்டினரும் எருசலேம்வாழ் மக்களும் செல்வார்கள். இந்நகரில் என்றுமே மக்கள் குடியிருப்பார்கள்.
26. அப்போது யூதாவின் நகர்களிலிருந்தும் எருசலேமின் சுற்றுப்புறங்களிலிருந்தும் பென்யமின் நாட்டிலிருந்தும் செபேலா சமவெளியிலிருந்தும் மலை நாட்டிலிருந்தும் நெகேபிலிருந்தும் வருபவர்கள் எரி பலிகளையும் மற்றப் பலிகளையும் உணவுப் படையலையும் தூபத்தையும் நன்றிப் பலிகளையும் ஆண்டவர் இல்லத்துக்குக் கொண்டுவருவார்கள்.
27. ஆனால், நீங்கள் ஓய்வுநாளைத் தூய்மையாகக் கடைப்பிடிக்கவேண்டும்; அன்று எருசலேமின் வாயில்கள் வழியாகச் சுமை தூக்கிச் செல்லக் கூடாது; எனினும் என்னுடைய சொல்லுக்கு நீங்கள் செவி கொடுக்காமல் இருந்தால், நான் எருசலேமின் வாயில்களில் தீப்பற்றியெரியச் செய்வேன்; அது நகரின் அரண்மனைகளை அழித்துவிடும்; அத்தீயோ அணையாது.PE