1. PS QSSS குறித்த காலத்தை எல்லாம் வல்லவர்SESS ஏன் வெளிப்படுத்தவில்லை?SESS அவரை அறிந்தோரும்SESS ஏன் அவர் தம் நாள்களைக் காணவில்லை?SEQE
2. QSSS தீயோர் எல்லைக்கல்லைSESS எடுத்துப்போடுகின்றனர். மந்தையைக்SESS கொள்ளையிட்டு மேய்கின்றனர்.SEQE
3. QSSS அனாதையின் கழுதையைSESS ஓட்டிச் செல்கின்றனர்.SESS விதவையின் எருதைSESS அடகாய்க் கொள்கின்றனர். * ‘எனது’ என்பது எபிரேய பாடம்.QE SEQE
4. QSSS ஏழையை வழியினின்று தள்ளுகின்றனர்.SESS நாட்டின் வறியோர்SESS ஒன்றாக ஒளிந்து கொள்கின்றனர்.SEQE
5. QSSS ஏழைகள் உணவுதேடும் வேலையாய்க்SESS காட்டுக் கழுதையெனப்SESS பாலைநிலத்தில் அலைகின்றனர்;SESS பாலைநிலத்தில் கிடைப்பதேSESS அவர்கள் பிள்ளைகளுக்கு உணவாகும்.SEQE
6. QSSS கயவரின் கழனியில் அவர்கள்SESS சேகரிக்கின்றனர்;SESS பொல்லாரின் திராட்சைத் தோட்டத்தில்SESS அவர்கள் பொறுக்குகின்றனர்.SEQE
7. QSSS ஆடையின்றி இரவில்SESS வெற்று உடலாய்க் கிடக்கின்றனர்;SESS வாடையில் போர்த்திக் கொள்ளப்SESS போர்வையின்றி இருக்கின்றனர்;SEQE
8. QSSS மலையில் பொழியும் மழையால் நனைகின்றனர்;SESS உறைவிடமின்றிப் பாறையில் ஒண்டுகின்றனர்;SEQE
9. QSSS தந்தையிலாக் குழந்தையைத்SESS தாயினின்று பறிக்கின்றனர்;SESS ஏழையின் குழந்தையை அடகு வைக்கின்றனர்.SEQE
10. QSSS ஆடையின்றி வெற்றுடலாய் அலைகின்றனர்;SESS ஆறாப்பசியுடன் அரிக்கட்டைத் தூக்குகின்றனர்.SEQE
11. QSSS ஒலிவத் தோட்டத்தில்SESS எண்ணெய் ஆட்டுகின்றனர்;SESS திராட்சை பிழிந்தும்SESS தாகத்தோடு இருக்கின்றனர்.SEQE
12. QSSS நகரில் இறப்போர் முனகல் கேட்கின்றது;SESS காயமடைந்தோர் உள்ளம்SESS உதவிக்குக் கதறுகின்றது; கடவுளோSESS அவர்கள் மன்றாட்டைக் கேட்கவில்லை.SEQE
13. QSSS இன்னும் உள்ளனர் ஒளியை எதிர்ப்போர்;SESS இவர்கள் அதன் வழியை அறியார்;SESS இவர்கள் அதன் நெறியில் நில்லார்.SEQE
14. QSSS எழுவான் கொலைஞன் புலரும் முன்பே;SESS ஏழை எளியோரைக் கொன்று குவிக்க;SESS இரவில் திரிவான் திருடன் போல.SEQE
15. QSSS காமுகனின் கண்SESS கருக்கலுக்காய்க் காத்திருக்கும்;SESS கண்ணெதுவும் என்னைக் காணாதுSESS என்றெண்ணி;SESS முகத்தை அவனோ மூடிக் கொள்வான்!SEQE
16. QSSS இருட்டில் வீடுகளில் கன்னம் இடுவர்;SESS பகலில் இவர்கள் பதுங்கிக் கிடப்பர்;SESS ஒளியினை இவர்கள் அறியாதவரே!SEQE
17. QSSS ஏனென்றால் இவர்களுக்கு நிழல்SESS காலைபோன்றது; சாவின் திகில்SESS இவர்களுக்குப் பழக்கமானதே!SEQE
18. QSSS வெள்ளத்தில் விரைந்தோடும்SESS வைக்கோல் அவர்கள்;SESS பார்மேல் அவர்கள் பங்கு சபிக்கப்பட்டது;SESS அவர்தம் திராட்சைத் தோட்டத்தைSESS எவரும் அணுகார்.SEQE
19. QSSS வறட்சியும் வெம்மையும் பனிநீரைத் தீய்க்கும்;SESS தீமை செய்வோரைப் பாதாளம் விழுங்கும்.SEQE
20. QSSS தாங்கிய கருப்பையே அவர்களை மறக்கும்;SESS புழு அவர்களைச் சுவைத்துத் தின்னும்.SESS அவர்கள் கொடுமை மரம்போல் முறிந்துபோம்.SEQE
21. QSSS ஏனெனில், மகவிலா மலடியைSESS இழிவாய் நடத்தினர்; கைம்பெண்ணுக்குSESS நன்மையைக் கருதினாரில்லை.SEQE
22. QSSS இருப்பினும், கடவுள் தம் வலிமையால்SESS வலியோரின் வாழ்வை நீட்டிக்கிறார்;SESS அவர்கள் தம் வாழ்வில்SESS நம்பிக்கையோடு இருந்தாலும்SESS நிலைக்கமாட்டார்கள்.SEQE
23. QSSS அவர் அவர்களைப்SESS பாதுகாப்புடன் வாழவிடுகிறார்;SESS அவர்களும் அதில் ஊன்றி நிற்கிறார்கள்;SESS இருப்பினும் அவரது கண்SESS அவர்கள் நடத்தைமேல் உள்ளது.SEQE
24. QSSS அவர்கள் உயர்த்தப்பட்டனர்;SESS அது ஒரு நொடிப்பொழுதே;SESS அதன்பின் இல்லாமற் போயினர்;SESS எல்லோரையும் போல் தாழ்த்தப்பட்டனர்;SESS கதிர் நுனிபோல் கிள்ளி எறியப்பட்டனர்.SEQE
25. QSSS இப்படி இல்லையெனில்,SESS என்னைப் பொய்யன் என்றோ,SESS என் மொழி தவறு என்றோ,SESS எண்பிப்பவன் எவன்?SEPEQE