1. PS QSSS இப்போது கூப்பிட்டுப்பாரும்!SESS யார் உமக்குப் பதிலுரைப்பார்?SESS எந்தத் தூயவரிடம் துணை தேடுவீர்?SEQE
2. QSSS உண்மையில், அறிவிலியைத்தான்SESS எரிச்சல் கொல்லும்;SESS பேதையைத் தான் பொறாமை சாகடிக்கும்,SEQE
3. QSSS அறிவிலி வேரூன்றுவதைSESS நானே கண்டேன்;SESS ஆனால் உடனே அவன் உறைவிடத்தில்SESS வெம்பழி விழுந்தது,SEQE
4. QSSS அவனுடைய மக்களுக்குப்SESS பாதுகாப்பு இல்லை; ஊர்மன்றத்தில்SESS அவர்கள் நொறுக்கப்படுகின்றனர்;SESS மீட்பார் எவரும் அவர்க்கு இல்லாது போயினர்.SEQE
5. QSSS அவனது அறுவடையைப் பசித்தவர் உண்பர்;SESS முள்ளுக்கு நடுவிலுள்ளதையும்SESS அவர்கள் பறிப்பர்; பேராசைக்காரர்SESS அவன் சொத்துக்காகத் துடிப்பர்.SEQE
6. QSSS ஏனெனில், புழுதியினின்று இடுக்கண் எழாது;SESS மண்ணினின்று இன்னல் விளையாது.SEQE
7. QSSS நெருப்புச்சுடர் மேல்நோக்கி எழுவதுபோல,SESS துன்பத்திற்கென்றே தோன்றினர் மனிதர்.SEQE
8. QSSS ஆனால், நான் கடவுளையே நாடுவேன்;SESS அவரிடம் மட்டுமே என் வாழ்க்கை ஒப்புவிப்பேன்.SEQE
9. QSSS ஆராய முடியாப் பெரியனவற்றையும்SESS எண்ணிலடங்கா வியக்கத்SESS தக்கனவற்றையும் செய்பவர் அவரே.SEQE
10. QSSS மண் முகத்தே மழையைப் பொழிபவரும்SESS வயல் முகத்தே நீரைத் தருபவரும் அவரே.SEQE
11. QSSS அவர் தாழ்ந்தோரைSESS மேலிடத்தில் அமர்த்துகின்றார்;SESS அழுவோரைக் காத்து உயர்த்துகின்றார்.SEQE
12. QSSS வஞ்சகரின் திட்டங்களைத் தகர்க்கின்றார்;SESS அவர்களின் கைளோ ஒன்றையும் சாதிக்கமாட்டா.SEQE
13. QSSS ஞானிகளை அவர்தம் சூழ்ச்சியில்SESS சிக்க வைக்கின்றார்;SESS வஞ்சகரின் திட்டங்கள் வீழ்த்தப்படுகின்றன;SEQE
14. QSSS அவர்கள் பகலில் இருளைக் காண்கின்றனர்;SESS நண்பகலிலும் இரவில்போல்SESS தடுமாறுகின்றனர். * 1 கொரி 3:19 SEQE
15. QSSS அவர் வறியவரை அவர்களின்SESS வாயெனும் வாளினின்று காக்கின்றார்;SESS எளியவரை வலியவரின்SESS கையினின்று மீட்கின்றார்.SEQE
16. QSSS எனவே, நலிந்தவர்க்கு நம்பிக்கை உண்டு;SESS அநீதி தன் வாயைப் பொத்திக்கொள்ளும்.SEQE
17. QSSS இதோ! கடவுள் திருத்தும் மனிதர்SESS பேறு பெற்றோர்; ஆகவே,SESS வல்லவரின் கண்டிப்பை வெறுக்காதீர்.SEQE
18. QSSS காயப்படுத்தினாலும்SESS கட்டுப்போடுபவர் அவரே;SESS அடித்தாலும் ஆற்றுகின்ற கை அவரதே. * நீமொ 3:11; எபி 12:5-6 SEQE
19. QSSS ஆறு வகை அல்லல்களினின்றும்SESS அவர் உம்மை மீட்பார்;SESS ஏழாவதும் உமக்கு இன்னல் தராது. * ஓசே 6:1.QE SEQE
20. QSSS பஞ்சத்தில் சாவினின்றும்SESS சண்டையில் வாள் முனையினின்றும்SESS உம்மை விடுவிப்பார்.SEQE
21. QSSS நாவின் சொல்லடியினின்றும்SESS நீர் மறைக்கப்படுவீர்;SESS நாசமே வந்து விழுந்தாலும் நடுங்கமாட்டீர்.SEQE
22. QSSS அழிவிலும் பஞ்சத்திலும் நீர் நகுவீர்;SESS மண்ணக விலங்குகளுக்கு மருளீர்.SEQE
23. QSSS வயல்வெளிக் கற்களோடுSESS உம் உடன்படிக்கை இருக்கும்;SESS காட்டு விலங்குகளோடும்SESS நீர் அமைதியில் வாழ்வீர்.SEQE
24. QSSS உம் கூடாரத்தில் அமைதியைக் காண்பீர்;SESS உம் மந்தையைச் சென்று காண்கையில்SESS ஒன்றும் குறைவுபடாதிருக்கும்.SEQE
25. QSSS உமது வித்து பெருகுவதையும்,SESS உமது வழிமரபினர் நிலத்துப்SESS புற்களைப் போன்றிருப்பதையும் அறிவீர்.SEQE
26. QSSS பழுத்த வயதில் தளர்வின்றிக்SESS கல்லறை செல்வீர்,SESS பருவத்தே மேலோங்கும் கதிர்மணி போல்.SEQE
27. QSSS இதுவே யாம் கண்டறிந்த உண்மை!SESS செவிகொடுப்பீர்; நீவிரே கண்டுணர்வீர்.SEPE