1. {தூய வழி} PS QSSS பாலைநிலமும் பாழ்வெளியும்SESS அகமகிழும்;SESS பொட்டல் நிலம் அக்களிப்படைந்து,SESS லீலிபோல் பூத்துக் குலுங்கும்.SEQE
2. QSSS அது வளமாய்ப் பூத்துக் குலுங்கிSESS மகிழ்ந்து பாடிக் களிப்படையும்;SESS லெபனோனின் எழில்SESS அதற்கு அளிக்கப்படும்;SESS கர்மேல், சாரோனின் மேன்மைSESS அதில் ஒளிரும்;SESS ஆண்டவர் மாட்சியையும்SESS நம் கடவுளின் பெருமையையும்SESS அவர்கள் காண்பார்கள்.SEQE
3. QSSS தளர்ந்துபோன கைகளைத்SESS திடப்படுத்துங்கள்;SESS தள்ளாடும் முழங்கால்களைSESS உறுதிப்படுத்துங்கள்.SEQE
4. QSSS உள்ளத்தில் உறுதியற்றவர்களை நோக்கி,SESS “திடன் கொள்ளுங்கள்,SESS அஞ்சாதிருங்கள்;SESS இதோ, உங்கள் கடவுள்SESS பழிதீர்க்க வருவார்;SESS அநீதிக்குப் பழிவாங்கும்SESS கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார்.” * எபி 12:12 SEQE
5. QSSS அப்போது பார்வையற்றோரின்SESS கண்கள் பார்க்கும்;SESS காது கேளாதோரின்SESS செவிகள் கேட்கும்.SEQE
6. QSSS அப்பொழுது, காலூனமுற்றோர்SESS மான்போல் துள்ளிக்குதிப்பர்;SESS வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்;SESS பாலைநிலத்தில் நீரூற்றுகள்SESS பீறிட்டு எழும்;SESS வறண்ட நிலத்தில் நீரோடைகள்SESS பாய்ந்தோடும். * மத் 11:5; லூக் 7:22.QE SEQE
7. QSSS கனல் கக்கும் மணல்பரப்புSESS நீர்த் தடாகம் ஆகும்;SESS தாகமுற்ற தரைSESS நீரூற்றுகளால் நிறைந்திருக்கும்;SESS குள்ளநரி தங்கும் வளைகள் எங்கும்SESS கோரையும் நாணலும் முளைத்து நிற்கும். * மத் 11:5; லூக் 7:22.QE SEQE
8. QSSS அங்கே! நெடுஞ்சாலை ஒன்று இருக்கும்;SESS அது ‘தூய வழி’ என்று பெயர் பெறும்.SESS தீட்டுப்பட்டோர் அதன் வழியாய்க்SESS கடந்து செல்லார்;SESS அவ்வழிவரும் பேதையரும்SESS வழி தவறிச் செல்லார்.SEQE
9. QSSS அங்கே சிங்கம் இராது;SESS அவ்வழியில் கொடிய விலங்குகள்SESS செல்வதில்லை, காணப்படுவதுமில்லை;SESS மீட்படைந்தவர்களேSESS அவ்வழியில் நடப்பார்கள்.SEQE
10. QSSS ஆண்டவரால் விடுவிக்கப்பட்டோர்SESS திரும்பி வருவர்;SESS மகிழ்ந்து பாடிக் கொண்டேSESS சீயோனுக்கு வருவர்;SESS அவர்கள் முகம் என்றுமுளSESS மகிழ்ச்சியால் மலர்ந்திருக்கும்;SESS அவர்கள் மகிழ்ச்சியும்SESS பூரிப்பும் அடைவார்கள்;SESS துன்பமும் துயரமும் பறந்தோடும்.SEPE