1. {மக்களினத்தார்க்கு ஆண்டவர் அளிக்கும் தீர்ப்பு} PS QSSS ஆண்டவர் கூறுவது இதுவே:SESS விண்ணகம் என் அரியணை;SESS மண்ணகம் என் கால்மணை;SESS அவ்வாறிருக்க எத்தகைய கோவிலைSESS நீங்கள் எனக்காகக் கட்டவிருக்கிறீர்கள்?SESS எத்தகைய இடத்தில்SESS நான் ஓய்வெடுப்பேன்?SEQE
2. QSSS இவை அனைத்தையும்SESS என் கைகளே உண்டாக்கின;SESS இவை யாவும் என்னால் உருவாகின,SESS என்கிறார் ஆண்டவர்.SESS எளியவரையும்,SESS உள்ளம் வருந்துபவரையும்,SESS என் சொல்லுக்கு அஞ்சுபவரையும்SESS நான் கண்ணோக்குவேன். * மத் 5:34,35; 23:22; திப 7:49-50 SEQE
3. QSSS அவர்களுக்குSESS இளம் காளையை வெட்டிப் பலியிடுவதும்SESS மனிதரைக் கொலைச்செய்வதும்SESS ஒன்றாம்;SESS ஆட்டுக் குட்டியைப்SESS பலியாகக் கொடுப்பதும்SESS நாயின் கழுத்தை முறிப்பதும் ஒன்றாம்;SESS உணவுப் படையலைப் படைப்பதும்,SESS பன்றியின் இரத்தத்தைSESS ஒப்புக் கொடுப்பதும் ஒன்றாம்;SESS நினைவுப் படையலாகியSESS தூபம் காட்டுதலைச் செய்வதும்SESS சிலைகளை வணங்குதலும் ஒன்றாம்;SESS அவர்கள் தங்கள் வழிகளையேSESS தெரிந்தெடுத்துள்ளனர்;SESS தங்கள் அருவருப்புகள் மீதுSESS அவர்கள் உள்ளம் மகிழ்கின்றது. * திப 7:49-50 SEQE
4. QSSS நானும் அவர்களுக்குரியSESS தண்டனையைத் தேர்ந்து கொள்வேன்;SESS அவர்கள் அஞ்சுகின்றவற்றைSESS அவர்கள்மீது வரச்செய்வேன்;SESS ஏனெனில், நான் அழைத்தபோதுSESS எவரும் பதில் தரவில்லை;SESS நான் பேசியபோதுSESS அவர்கள் செவி கொடுக்கவில்லை;SESS என் கண்முன்னேSESS தீயவற்றைச் செய்தார்கள்;SESS நான் விரும்பாதவற்றைத்SESS தெரிந்தெடுத்தார்கள்.SEQE
5. QSSS ஆண்டவரின் வாக்குக்குSESS நடுநடுங்குவோரே, இதைக் கேளுங்கள்;SESS என் பெயர் பொருட்டுSESS உங்களை வெறுத்து ஒதுக்கும்SESS உங்கள் உறவின் முறையார்SESS ‘நாங்கள் உங்கள் மகிழ்ச்சியைக்SESS காணும் பொருட்டுSESS ஆண்டவர் தம் மாட்சியைக்SESS காண்பிக்கட்டும்’ என்கிறார்கள்.SESS ஆனால் அவர்கள்தான்SESS வெட்கம் அடைவார்கள்.SEQE
6. QSSS இதோ, நகரில்SESS பேரொலி கேட்கின்றது!SESS திருக்கோவிலில் பேரோசை எழுகின்றது!SESS ஆண்டவர் தம் பகைவருக்குத்SESS தக்க பதலடி கொடுப்பதால்SESS எழும் இரைச்சலே அது!SEQE
7. QSSS வேதனை வருமுன்னேSESS சீயோன் பிள்ளை பெற்றாள்!SESS பிரசவ நேரம் நெருங்குமுன்னேSESS ஆண்மகவை ஈன்றாள்!SEQE
8. QSSS இத்தகைய நிகழ்ச்சிபற்றிக்SESS கேள்வியுற்றவர் யார்?SESS இதைப் போன்ற ஒன்றைப் பார்த்தவர் யார்?SESS ஒரே நாளில் நாடு ஒன்றுSESS உருவாகிட இயலுமா?SESS ஒரு நொடிப்பொழுதில்SESS மக்களினம் ஒன்று பிறக்கக்கூடுமா?SESS ஆனால் வேதனை ஏற்பட்டவுடனேSESS சீயோன் தன் பிள்ளைகளைப்SESS பெற்றுவிட்டாள். * திவெ 12:5 SEQE
9. QSSS பேறுகாலத்தை ஏற்படுத்திய நான்SESS மகப்பேற்றைத் தடை செய்வேனா?SESS என்கிறார் ஆண்டவர்.SESS மகப்பேற்றுக்குக் காரணமான நான்SESS கருப்பையை அடைத்துவிடுவேனா?SESS என்கிறார் உங்கள் கடவுள்.SEQE
10. QSSS எருசலேமின் மேல்SESS அன்பு கொண்ட அனைவரும்SESS அவளுடன் அகமகிழ்ந்துSESS அவள் பொருட்டு அக்களியுங்கள்;SESS அவளுக்காகப் புலம்பி அழும் எல்லாரும்SESS அவளுடன் சேர்ந்து மகிழ்ந்துSESS கொண்டாடி ஆர்ப்பரியுங்கள்.SEQE
11. QSSS அப்போது அவளின் ஆறுதல் அளிக்கும்SESS முலைகளில் குடித்துSESS நீங்கள் நிறைவடைவீர்கள்;SESS அவள் செல்வப் பெருக்கில்SESS நிறைவாக அருந்தி இன்பம் காண்பீர்கள்.SEQE
12. QSSS ஆண்டவர் கூறுவது இதுவே:SESS ஆறுபோல் நிறைவாழ்வுSESS பாய்ந்தோடச் செய்வேன்;SESS பெருக்கெடுத்த நீரோடைபோல்SESS வேற்றினத்தாரின் செல்வம்SESS விரைந்து வரச் செய்வேன்;SESS நீங்கள் பால் பருகுவீர்கள்;SESS மார்பில் அணைத்துச் சுமக்கப்படுவீர்கள்;SESS மடியில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள்.SEQE
13. QSSS தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல்SESS நான் உங்களைத் தேற்றுவேன்;SESS எருசலேமில் நீங்கள் தேற்றப்படுவீர்கள்.SEQE
14. QSSS இதை நீங்கள் காண்பீர்கள்,SESS உங்கள் இதயம் மகிழ்ச்சி கொள்ளும்,SESS உங்கள் எலும்புகள்SESS பசும்புல்போல் வளரும்;SESS ஆண்டவர் தம் ஆற்றலைத்SESS தம் ஊழியருக்குக் காட்டுவார் என்பதும்SESS அவரது சினம்SESS அவர்தம் பகைவருக்கு எதிராய்SESS மூளும் என்பதும் அறியப்படும்.SEQE
15. QSSS இதோ! ஆண்டவர்SESS நெருப்பென வருவார்;SESS அவர் தேர்கள் புயலென விரையும்;SESS கொழுந்து விட்டெரியும்SESS தம் சினத்தைக் கொட்டுவார்;SESS தீப்பிழம்பெனSESS அவர்தம் கண்டனம் வருகின்றது.SEQE
16. QSSS தம் நெருப்பையும்SESS வாளையும் கொண்டுSESS மானிடர் அனைவர்மீதும்SESS ஆண்டவர் தண்டனைத் தீர்ப்புSESS வழங்குவார்;SESS எண்ணிறந்தோரைSESS ஆண்டவர் கொன்றுவிடுவார்.SEQE
17. தோட்ட வழிபாட்டிற்கெனத் தங்களைத் தூய்மைப்படுத்தித் தீட்டகற்றுவோர், அதற்கு அணி அணியாய்ச் செல்வோர், பன்றி, எலி இவற்றின் இறைச்சி மற்றும் அருவருப்புகளை உண்போர் ஆகிய அனைவரும் ஒருங்கே அழிந்தொழிவர், என்கிறார் ஆண்டவர்.
18. அவர்கள் செயல்களையும் எண்ணங்களையும் நான் அறிவேன்; பிறஇனத்தார், பிறமொழியினர் அனைவரையும் நான் கூட்டிச் சேர்க்க வருவேன்; அவர்களும் கூடிவந்து என் மாட்சியைக் காண்பார்கள்.
19. அவர்களிடையே ஓர் அடையாளத்தை நான் ஏற்படுத்துவேன்; அவர்களுள் எஞ்சியிருப்போரை மக்களினத்தாரிடையே அனுப்பி வைப்பேன்; அவர்கள் தர்சீசு, பூல், வில்வீரர் வாழும் லூது, தூபால், யாவான், தொலையிலுள்ள தீவு நாடுகள் ஆகியவற்றிற்குச் செல்வார்கள். இந்நாட்டினர் என் புகழ்பற்றிக் கேள்விப்படாதவர்; என் மாட்சியைக் கண்டிராதவர்; அவர்களும் என் மாட்சி பற்றி மக்களினத்தாருக்கு எடுத்துரைப்பார்கள்.
20. அவர்கள் உங்கள் உறவின் முறையார் அனைவரையும் அனைத்து மக்களினத்தாரிடையே இருந்து ஆண்டவருக்கு அளிக்கும் படையலாகக் கொண்டு சேர்ப்பார்கள்; இஸ்ரயேல் மக்கள் தூய கலம் ஒன்றில் உணவுப் படையலை ஆண்டவரின் கோவிலுக்கு எடுத்து வருவதுபோல், அவர்களைக் குதிரைகள், தேர்கள், பல்லக்குகள், கழுதைகள், ஒட்டகங்கள் ஆகியவற்றின் மேல் ஏற்றி, எருசலேமிலுள்ள என் திருமலைக்கு அழைத்து வருவார்கள், என்கிறார் ஆண்டவர்.
21. மேலும் அவர்களுள் சிலரைக் குருக்களாகவும் லேவியராகவும் நியமிப்பேன், என்கிறார் ஆண்டவர்.
22. QSSS நான் படைக்கின்றSESS புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும்SESS என் முன்னே நிலைத்திருப்பது போல்,SESS உங்கள் வழித்தோன்றல்களும்SESS உங்கள் பெயரும் நிலைத்திருக்கும்,SESS என்கிறார் ஆண்டவர்.SEQE
23. QSSS அமாவாசைதோறும்SESS ஓய்வுநாள்தோறும்SESS மானிடர் அனைவரும்SESS என்முன் வழிபட வருவர்,SESS என்கிறார் ஆண்டவர். * எசா 65:17; 2 பேது 3:13; திவெ 21:1 SEQE
24. QSSS அவர்கள் புறப்பட்டுச் சென்று,SESS என்னை எதிர்த்துக்SESS கிளர்ச்சி செய்தோரின்SESS பிணங்களைக் காண்பார்கள்;SESS அவர்களை அரிக்கும் புழு சாவதில்லை;SESS அவர்களை எரிக்கும் நெருப்புSESS அணைந்து போவதில்லை;SESS மானிடர் யாவருக்கும்SESS அவர்கள் ஓர் அருவருப்பாக இருப்பார்கள்.SEPE