1. {அடிமைத்தனத்தினின்று திரும்புதல்} PS ஆண்டவர் யாக்கோபின் மீது இரக்கம் காட்டி இஸ்ரயேலை மீண்டும் தேர்ந்து கொள்வார்; அவர்களை அவர்களுடைய நாட்டில் அமைதியுடன் வாழச் செய்வார். வேற்று நாட்ட வரும் அவர்களை நாடி வந்து யாக்கோபின் குடும்பத்தாரோடு சேர்ந்து கொள்வார்கள்.
2. மக்களினங்களை அவர்களை அழைத்து வந்து, அவர்களது சொந்த இடத்திற்கு அவர்களை இட்டுச் செல்வார்கள். அவ் வேற்றுநாட்டாரை ஆண்டவரின் நாட்டில் இஸ்ரயேல் குடும்பத்தார் அடிமைகளாகவும், அடிமைப் பெண்களாகவும் உரிமையாக்கிக் கொள்வர்; தங்களை அடிமைப் படுத்தியவர்களை அடிமையாக்குவார்கள்; அவர்களை ஒடுக்கியவர்கள் மேல் ஆட்சி செலுத்துவார்கள். * :23 எசா 47:1-15; எரே 50:1-51:64 PE
3. {பாபிலோனிய அரசன்மீது வசைப்பாடல்} PS ஆண்டவர் உன்மேல் சுமத்திய துயரையும் இடரையும் கடுமையான அடிமை வாழ்வையும் அகற்றி, அமைதி வாழ்வை உனக்குத் தரும் நாளில், * :23 எசா 47:1-15; எரே 50:1-51:64
4. QSSS பாபிலோன் மன்னனுக்கு எதிராகSESS இந்த ஏளனப் பாடலை எடுத்துக் கூறு:SESS “ஒடுக்கியவன் ஒழிந்தானே!SESS அவன் ஆணவமும் ஓய்ந்ததே! * :23 எசா 47:1-15; எரே 50:1-51:64 SEQE
5. QSSS தீயோரின் கோலையும்SESS ஆட்சியாளரின் செங்கோலையும்SESS ஆண்டவர் முறித்துப் போட்டார். * :23 எசா 47:1-15; எரே 50:1-51:64 SEQE
6. QSSS அவர்கள் கோபத்தால் வெகுண்டுSESS அடிமேல் அடியாக மக்களினங்களைSESS அடித்து நொறுக்கினார்கள்;SESS பிற நாட்டினரைத் தொடர்ந்துSESS கொடுமைப்படுத்திக்SESS கடுமையாய் ஆண்டார்கள். * :23 எசா 47:1-15; எரே 50:1-51:64 SEQE
7. QSSS மண்ணுலகம் முழுவதும் இளைப்பாறிSESS அமைதியில் மூழ்கியிருக்கின்றது;SESS மகிழ்ச்சியால் ஆர்ப்பரித்துSESS ஆரவாரம் செய்கின்றது. * :23 எசா 47:1-15; எரே 50:1-51:64 SEQE
8. QSSS தேவதாரு மரங்களும்SESS லெபனோனின் கேதுரு மரங்களும்SESS உன் வீழ்ச்சியால் களிப்படைகின்றன;SESS ‘நீ வீழ்ந்து கிடக்கும் இந்நேரமுதல்SESS எமை வெட்டி வீழ்த்தSESS எமக்கெதிராய் எழுபவர் எவருமில்லை’SESS எனப் பாடுகின்றன. * :23 எசா 47:1-15; எரே 50:1-51:64 SEQE
9. QSSS நீ வரும்போது உன்னை எதிர்கொள்ளக்SESS கீழுள்ள பாதாளம்SESS மகிழ்ச்சியால் பரபரக்கின்றது;SESS உலகின் இறந்தSESS தலைவர்கள் அனைவரும்SESS உன்னை வரவேற்குமாறுSESS அவர்களை எழுப்புகிறது.SESS வேற்றினத்தாரின் அரசர்கள்SESS அனைவரையும்SESS அவர்தம் அரியணையை விட்டுSESS எழச் செய்கிறது. * :23 எசா 47:1-15; எரே 50:1-51:64 SEQE
10. QSSS அவர்கள் அனைவரும் உன்னை நோக்கி,SESS “நீயும் எங்களைப்போல்SESS வலுவிழந்து போனாயே!SESS எங்களின் கதியை நீயும் அடைந்தாயே! * :23 எசா 47:1-15; எரே 50:1-51:64 SEQE
11. QSSS உன் இறுமாப்பும்SESS உன் வீணைகளின் இசையொலியும்SESS பாதாளம்வரை தாழ்த்தப்பட்டன;SESS புழுக்கள் உனக்குக் கீழ்ப் படுக்கையாகும்!SESS பூச்சிகள் உன் போர்வையாகும்! * :23 எசா 47:1-15; எரே 50:1-51:64 SEQE
12. QSSS வைகறைப் புதல்வனாகியSESS விடி வெள்ளியே!SESS வானத்திலிருந்து நீ வீழ்ந்தாயே!SESS மக்களினங்களைSESS வலிமை குன்றச் செய்தவனே,SESS வெட்டப்பட்டுத் தரையில் விழுந்தாயே! * :23 எசா 47:1-15; எரே 50:1-51:64 SEQE
13. QSSS ‘நான் விண்ணுலகிற்கு ஏறிச் செல்வேன்;SESS இறைவனுடையSESS விண்மீன்களுக்கு மேலாக உயரத்தில்SESS என் அரியணையை ஏற்படுத்துவேன்;SESS வடபுறத்து எல்லைப்பகுதியிலுள்ளSESS பேரவை மலைமேல் வீற்றிருப்பேன். * :23 எசா 47:1-15; எரே 50:1-51:64; திவெ 8:10; 9:1 SEQE
14. QSSS மேகத்திரள்மேல் ஏறி,SESS உன்னதற்கு ஒப்பாவேன்’ என்றுSESS உன் உள்ளத்தில் உரைத்தாயே! * :23 எசா 47:1-15; எரே 50:1-51:64; மத் 11:23; லூக் 10:15 SEQE
15. QSSS ஆனால் நீ பாதாளம் வரைSESS தாழ்த்தப்பட்டாய்;SESS படுகுழியின் அடிமட்டத்திற்குள்SESS தள்ளப்பட்டாயே! * :23 எசா 47:1-15; எரே 50:1-51:64; மத் 11:23; லூக் 10:15 SEQE
16. QSSS உன்னைக் காண்போர்,SESS உற்று நோக்கிக் கூர்ந்து கவனித்து,SESS ‘மண்ணுலகை நடுநடுங்கச் செய்தவனும்,SESS அரசுகளை நிலைகுலையச் செய்தவனும், * மத் 11:23; லூக் 10:15 SEQE
17. QSSS பூவுலகைப் பாலைநிலமாய் ஆக்கி,SESS அதன் நகரங்களை அழித்தவனும்,SESS தன்னிடம் சிறைப்பட்டவர் வீடு திரும்பSESS விடுதலை அளிக்காதிருப்பவனும்SESS இவன் தானோ?’ என்பர்.SEQE
18. QSSS மக்களின மன்னர்கள் அனைவரும்SESS அவரவர் உறைவிடங்களில்SESS மாட்சியுடன் படுத்திருக்கின்றனர்.SEQE
19. QSSS நீயோ, அருவருப்பானSESS அழுகிய இலைபோல,SESS உன் கல்லறையிலிருந்துSESS வெளியே வீசப்பட்டிருக்கிறாய்;SESS வாளால் வெட்டி வீழ்த்தப்பட்டு,SESS நாற்றமெடுத்த பிணம்போலக்SESS கிடக்கின்றாய்.SEQE
20. QSSS கல்லறையில் அவர்களோடுSESS நீ இடம் பெறமாட்டாய்;SESS ஏனெனில், உன் நாட்டைSESS நீ அழித்து விட்டாய்;SESS உன் மக்களைக் கொன்று போட்டாய்;SESS தீங்கிழைப்போரின் வழிமரபுSESS என்றுமே பெயரற்றுப் போகும்.SEQE
21. QSSS மூதாதையரின் தீச்செயல்களைSESS முன்னிட்டுSESS அவர்கள் புதல்வர்களுக்குக்SESS கொலைக் களத்தைத் தயார்ப்படுத்துங்கள்;SESS நாட்டை உரிமையாக்கSESS இனி அவர்கள் தலையெடுக்கக்கூடாது;SESS பூவுலகின் பரப்பை அவர்கள்SESS நகரங்களால் நிரப்பக்கூடாது.”SEPEQE
22. {பாபிலோனுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு} PS QSSS “அவர்களுக்கு எதிராகSESS நான் கிளர்ந்தெழுவேன்” என்கிறார்SESS படைகளின் ஆண்டவர்,SESS “பாபிலோனின் பெயரையும்SESS அங்கே எஞ்சியிருப்போரையும்,SESS வழி மரபினரையும் வழித்தோன்றல்களையும்SESS இல்லாதொழிப்பேன்,”SESS என்கிறார் ஆண்டவர்.SEQE
23. QSSS “அந்நாட்டை முள்ளம்பன்றிகளின்SESS இடமாக்குவேன்;SESS சேறும் சகதியும் நிறைந்தSESS நீர்நிலையாக்குவேன்;SESS அழிவு என்னும் துடைப்பத்தால்SESS முற்றிலும் துடைத்துவிடுவேன்”SESS என்கிறார் படைகளின் ஆண்டவர்.SEQE
24. QSSS படைகளின் ஆண்டவர்SESS ஆணையிட்டுக் கூறுகின்றார்:SESS “நான் எண்ணியவாறு யாவும் நடந்தேறும்;SESS நான் தீட்டிய திட்டமே நிலைத்து நிற்கும்.SEQE
25. QSSS என் நாட்டில் அசீரியனை முறியடிப்பேன்;SESS என் மலைகளின் மேல்SESS அவனை மிதித்துப் போடுவேன்;SESS அப்பொழுது அவனது நுகத்தடிSESS அவர்களைவிட்டு அகலும்;SESS அவன் வைத்த சுமைSESS அவர்கள் தோளிலிருந்து இறங்கும். * எசா 10:5-34; நாகூ 1:1-3:19; செப் 2:13-15 SEQE
26. QSSS மண்ணுலகம் முழுவதையும்பற்றிSESS நான் தீட்டிய திட்டம் இதுவே;SESS பிறஇனத்தார் அனைவருக்கும் எதிராகSESS நான் ஓங்கியுள்ள கையும் இதுவே. * எசா 10:5-34; நாகூ 1:1-3:19; செப் 2:13-15 SEQE
27. QSSS படைகளின் ஆண்டவர்SESS தீட்டிய திட்டத்தைச்SESS சீர்குலைக்க வல்லவன் எவன்?SESS அவர் தம் கையை ஓங்கியிருக்கSESS அதை மடக்கக்கூடியவன் எவன்?” * எசா 10:5-34; நாகூ 1:1-3:19; செப் 2:13-15 SEPEQE
28. {பெலிஸ்தியருக்கு எதிராகத் தண்டனைத் தீர்ப்பு} PS QSSS ஆகாசு அரசன் இறந்த ஆண்டில்SESS இந்தத் திருவாக்கு அருளப்பட்டது. * எசா 10:5-34; நாகூ 1:1-3:19; செப் 2:13-15 SEQE
29. QSSS பெலிஸ்திய நாட்டின்SESS அனைத்து மக்களே,SESS உங்களை அடித்த கோல்SESS முறிந்து விட்டதற்காக அக்களிக்காதீர்;SESS ஏனெனில் பாம்பின் வேரினின்றுSESS கட்டுவிரியன் புறப்பட்டு வரும்;SESS அதன் கனியாகப்SESS பறவைநாகம் வெளிப்படும். * 2 அர 16:20; 2 குறி 28:27 SEQE
30. QSSS ஏழைகளின் தலைப்பிள்ளைகள்SESS உணவு பெறுவார்கள்;SESS வறியவர்கள் அச்சமின்றிSESS இளைப்பாறுவார்கள்;SESS உன் வழிமரபைப்SESS பஞ்சத்தால் நான் மடியச் செய்வேன்,SESS உன்னில் எஞ்சியிருப்போரைSESS நான் கொன்றொழிப்பேன். * எரே 47:1-7; எசே 25:15-17; யோவே 3:4-8; ஆமோ 1:6-8; செப் 2:4-7; செக் 9:5-7.QE SEQE
31. QSSS வாயிலே, வீறிட்டு அழு;SESS நகரே, கதறியழு;SESS எல்லாப் பெலிஸ்திய மக்களே;SESS மனம் பதறுங்கள்,SESS ஏனெனில் வடபுறத்திலிருந்துSESS புகையெனப் படை வருகின்றது.SESS அதன் போர்வீரருள்SESS கோழை எவனும் இல்லை. * எரே 47:1-7; எசே 25:15-17; யோவே 3:4-8; ஆமோ 1:6-8; செப் 2:4-7; செக் 9:5-7.QE SEQE
32. QSSS அந்த நாட்டுத் தூதருக்குSESS என்ன மறுமொழி கூறப்படும்?SESS “சீயோனுக்கு அடித்தளமிட்டவர்SESS ஆண்டவர்;SESS அவர்தம் மக்களுள் துயருறுவோர்SESS அங்கேயே புகலிடம் பெறுவர் என்பதே.” * எரே 47:1-7; எசே 25:15-17; யோவே 3:4-8; ஆமோ 1:6-8; செப் 2:4-7; செக் 9:5-7.QE SEPE