1. {இஸ்ரயேல்மீது ஆண்டவர் கொண்ட அன்பு} PS QSSS பிள்ளை பெறாத மலடியே,SESS மகிழ்ந்து பாடு;SESS பேறுகால வேதனை அறியாதவளே,SESS அக்களித்துப் பாடி முழங்கு;SESS ஏனெனில், கைவிடப்பட்டவளின்SESS பிள்ளைகள்SESS கணவனோடு வாழ்பவளின்SESS பிள்ளைகளைவிட ஏராளமானவர்கள்,SESS என்கிறார் ஆண்டவர்.SEQE
2. QSSS உன் கூடாரத்தின் இடத்தை விரிவாக்கு;SESS உன் குடியிருப்புகளின்SESS தொங்கு திரைகளைப் பரப்பிவிடு;SESS உன் கயிறுகளைத்SESS தாராளமாய் நீட்டி விடு;SESS உன் முளைகளை உறுதிப்படுத்து. * கலா 4:27 SEQE
3. QSSS வலப்புறமும் இடப்புறமும்SESS நீ விரிந்து பரவுவாய்;SESS உன் வழிமரபினர் வேற்றுநாடுகளைSESS உடைமையாக்கிக் கொள்வர்;SESS பாழடைந்து கிடக்கும் நகர்களிலும்SESS அவர்கள் குடியேற்றப்படுவர்.SEQE
4. QSSS அஞ்சாதே,SESS நீ அவமானத்திற்குள்ளாகமாட்டாய்;SESS வெட்கி நாணாதே,SESS இனி நீ இழிவாக நடத்தப்படமாட்டாய்;SESS உன் இளமையின் மானக்கேட்டைSESS நீ மறந்துவிடுவாய்;SESS உன் கைம்மையின் இழிநிலையைSESS இனி நினைக்கமாட்டாய்.SEQE
5. QSSS ஏனெனில், உன்னை உருவாக்கியவரேSESS உன் கணவர்,SESS ‘படைகளின் ஆண்டவர்’ என்பதுSESS அவர்தம் பெயராம்.SESS இஸ்ரயேலின் தூயவரே உன் மீட்பர்;SESS ‘உலக முழுமைக்கும் கடவுள்’ எனSESS அவர் அழைக்கப்படுகின்றார்.SEQE
6. QSSS ஏனெனில், கைவிடப்பட்டுSESS மனமுடைந்துபோன துணைவிபோலும்,SESS தள்ளப்பட்ட இளம் மனைவி போலும்SESS இருக்கும் உன்னைSESS ஆண்டவர் அழைத்துள்ளார்,SESS என்கிறார் உன் கடவுள்.SEQE
7. QSSS நொடிப்பொழுதேSESS நான் உன்னைக் கைவிட்டேன்;SESS ஆயினும் பேரிரக்கத்தால் உன்னைSESS மீண்டும் ஏற்றுக்கொள்வேன்.SEQE
8. QSSS பொங்கியெழும் சீற்றத்தால்SESS இமைப்பொழுதே என்முகத்தைSESS உனக்கு மறைத்தேன்;SESS ஆயினும் என்றுமுள பேரன்பால்SESS உனக்கு இரக்கம் காட்டுவேன்,SESS என்கிறார் ஆண்டவர்.SEQE
9. QSSS எனக்கு இது நோவாவின் நாள்களில்SESS நடந்ததுபோல் உள்ளது;SESS நோவாவின் காலத்துப் பெருவெள்ளம்SESS இனி மண்ணுலகின்மேல்SESS பாய்ந்து வராது என்றுSESS நான் ஆணையிட்டேன்;SESS அவ்வாறே உம்மீதும்SESS சீற்றம் அடையமாட்டேன் என்றும்,SESS உன்னைக் கண்டிக்க மாட்டேன் என்றும்SESS ஆணையிட்டுக் கூறியுள்ளேன்.SEQE
10. QSSS மலைகள் நிலை சாயினும்SESS குன்றுகள் இடம் பெயரினும்SESS உன்மீது நான் கொண்ட பேரன்போSESS நிலை சாயாது;SESS என் சமாதான உடன்படிக்கையோSESS அசைவுறாது, என்கிறார்SESS உனக்கு இரக்கம் காட்டும் ஆண்டவர். * தொநூ 9:8-17 SEQE
11. QSSS துயருற்றவளே, சூறைக்காற்றால்SESS அலைக்கழிக்கப்பட்டவளே,SESS ஆறுதல் பெறாது தவிப்பவளே,SESS இதோ, மாணிக்கக்கற்களால்SESS உன் அடித்தளத்தை அமைப்பேன்,SESS நீலக்கற்களால் உன்SESS நிலைக்களத்தை நிறுவுவேன்.SEQE
12. QSSS உன் கால்மாடங்களைச்SESS சிவப்புக் கற்களாலும்,SESS உன் வாயில்களைப்SESS பளிங்குக் கற்களாலும்SESS உன் மதில்கள் அனைத்தையும்SESS விலையுயர்ந்த கற்களாலும் கட்டுவேன். * திவெ 21:18-21 SEQE
13. QSSS உன் குழந்தைகள் அனைவருக்கும்SESS ஆண்டவர்தாமே கற்றுத்தருவார்;SESS உன் பிள்ளைகள்SESS நிறைவாழ்வு பெற்றுச் சிறப்புறுவர். * திவெ 21:18-21 SEQE
14. QSSS நேர்மையில் நீ நிலைநாட்டப்படுவாய்;SESS ஒடுக்கப்பட்ட நிலைSESS உன்னைவிட்டு அகன்றுபோம்;SESS நீ அஞ்சாதே!SESS திகில் உன்னை அணுகாது. * யோவா 6:45.QE SEQE
15. QSSS எவர்களாவது உன்னைSESS எதிர்த்துக் கூடினால் அவர்கள்SESS என்னிடமிருந்து வந்தவர்கள் அல்லர்;SESS உன்னைத் தாக்கவரும் எவனும்SESS உன் பொருட்டு வீழ்ச்சியுறுவான்.SEQE
16. QSSS இதோ, கரிநெருப்பை ஊதிப்SESS போர்க் கருவியை அதன் பயனுக்கு ஏற்பSESS உருவாக்கும் கொல்லனைப்SESS படைத்தவர் நான்;SESS அதைப் பாழாக்கி அழிப்பவனையும்SESS படைத்தவர் நான்.SEQE
17. QSSS உன்னைத் தாக்குமாறு உருவாக்கப்பட்டSESS எந்தப் போர்க்கருவியும் நிலைத்திராது.SESS உன்மேல் குற்றஞ்சாட்டித்SESS தீர்ப்புச் சொல்ல எழும்SESS எந்த நாவையும் நீ அடக்கிவிடுவாய்;SESS இவையே ஆண்டவரின் ஊழியர்களதுSESS உரிமைச்சொத்தும்,SESS நான் அவர்களுக்கு அளிக்கும்SESS வெற்றியுமாய் இருக்கின்றன,SESS என்கிறார் ஆண்டவர்.SEPE