Bible Books

:
3

1. ஆண்டவரே, நியாமான என் வழக்கைக் கேட்டருளும்; என் கூக்குரலைக் கவனித்தருளும்: வஞ்சகமற்ற உதட்டினின்று எழும் என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்தருளும்.
1. A Prayer H8605 of David H1732 . Hear H8085 the right H6664 , O LORD H3068 attend H7181 unto my cry H7440 , give ear H238 unto my prayer H8605 , that goeth not H3808 out of feigned H4820 lips H8193 .
2. நீரே எனக்கு நீதி வழங்கியருளும்: நேர்மையானது எதுவென்று நீரே பார்க்கின்றீர்.
2. Let my sentence H4941 come forth H3318 from thy presence H4480 H6440 ; let thine eyes H5869 behold H2372 the things that are equal H4339 .
3. என் இதயத்தை நீர் பரிசோதிப்பீராகில், இரவு நேரத்தில் என்னைச் சந்திக்க வருவீராகில், நெருப்பில் என்னைப் புடமிட்டுப் பார்ப்பீராகில் தீமையானது எதையும் என்னிடம் காணமாட்டீர்.
3. Thou hast proved H974 mine heart H3820 ; thou hast visited H6485 me in the night H3915 ; thou hast tried H6884 me, and shalt find H4672 nothing H1077 ; I am purposed H2161 that my mouth H6310 shall not H1077 transgress H5674 .
4. பிறர் செய்வதுபோல் என் நாவு தவறானதைப் பேசவில்லை: உம் உதட்டினின்று எழுந்த வார்த்தையின்படி உம் திருச்சட்டம் காட்டிய வழிகளைப் பின்பற்றினேன்.
4. Concerning the works H6468 of men H120 , by the word H1697 of thy lips H8193 I H589 have kept H8104 me from the paths H734 of the destroyer H6530 .
5. நீர் காட்டிய வழியில் என் காலடிகள் உறுதியாய் நிற்கின்றன: அவ்வழியில் என் நடை பிறழவில்லை.
5. Hold up H8551 my goings H838 in thy paths H4570 , that my footsteps H6471 slip H4131 not H1077 .
6. இறைவா, என் மன்றாட்டைக் கேட்டருள்வீர் என்பதால் நான் உம்மைக் கூவியழைக்கிறேன்: எனக்கு செவிசாய்த்தருளும்; என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்.
6. I H589 have called upon H7121 thee, for H3588 thou wilt hear H6030 me , O God H410 : incline H5186 thine ear H241 unto me , and hear H8085 my speech H565 .
7. வியப்புக்குரிய உமது இரக்கத்தைக் காட்டியருளும்: உம் வலக்கரத்தில் உம்மிடம் அடைக்கலம் புகுவோரை எதிரிகளிடமிருந்து காப்பவர் நீரே.
7. Show thy marvelous lovingkindness H6395 H2617 , O thou that savest H3467 by thy right hand H3225 them which put their trust H2620 in thee from those that rise up H4480 H6965 against them .
8. கண்ணின் மணியைப்போல என்னைக் காத்தருளும்: உம் சிறகுகளின் நிழலில் என்னை மறைத்துக் கொள்ளும்.
8. Keep H8104 me as the apple H380 H1323 of the eye H5869 , hide H5641 me under the shadow H6738 of thy wings H3671 ,
9. என்னை ஒடுக்கப் பார்க்கும் பாவிகளிடமிருந்து என்னைக் காத்தருளும்: என் எதிரிகள் கொதித்தெழுந்து என்னை வளைத்துக் கொள்கிறார்கள்.
9. From H4480 H6440 the wicked H7563 that H2098 oppress H7703 me, from my deadly H5315 enemies H341 , who compass me about H5362 H5921 .
10. அவர்கள் தங்கள் கல்நெஞ்சில் இரக்கம் சுரக்க விடுவதில்லை: அவர்கள் வாயால் செருக்குடன் பேசுகிறார்கள்.
10. They are enclosed in H5462 their own fat H2459 : with their mouth H6310 they speak H1696 proudly H1348 .
11. என்னைப் பின்தொடர்ந்து என்னை வளைத்துக் கொள்கிறார்கள்: என்னைத் தரையில் விழத்தாட்டுவதே அவர்கள் நோக்கமாயிருக்கிறது.
11. They have now H6258 compassed H5437 us in our steps H838 : they have set H7896 their eyes H5869 bowing down H5186 to the earth H776 ;
12. இரை தேடிச் செல்லும் சிங்கத்துக்கு அவர்கள் ஒப்பானவர்கள்: பதுங்கிக் கிடக்கும் சிங்கக் குட்டிக்கு அவர்கள் நிகரானவர்கள்.
12. Like H1825 as a lion H738 that is greedy H3700 of his prey H2963 , and as it were a young lion H3715 lurking H3427 in secret places H4565 .
13. ஆண்டவரே, எழுந்தருளும், எதிரே சென்று அவனை விழத்தாட்டும்: உம் வாளைக்கொண்டு என் உயிரைத் தீயோனிடமிருந்து காத்தருளும்.
13. Arise H6965 , O LORD H3068 , disappoint H6923 H6440 him , cast him down H3766 : deliver H6403 my soul H5315 from the wicked H4480 H7563 , which is thy sword H2719 :
14. ஆண்டவரே, உம் கைவன்மையால் மனிதரிடமிருந்து என்னைக் காத்தருளும்; இவ்வுலகமே சதமென்று கொள்ளும் மக்களிடமிருந்து என்னைக் காத்தருளும்: இம்மை நலன்களால் நீர் அவர்கள் வயிற்றை நிரப்பலாம்! அவர்களுடைய மக்களும் நிறைவடையட்டும்! மீதியாய் இருப்பதைத் தங்கள் மக்களுக்கு விட்டுச் செல்லட்டும்!
14. From men H4480 H4962 which are thy hand H3027 , O LORD H3068 , from men H4480 H4962 of the world H4480 H2465 , which have their portion H2506 in this life H2416 , and whose belly H990 thou fillest H4390 with thy hid H6845 treasure : they are full H7646 of children H1121 , and leave H5117 the rest H3499 of their substance to their babes H5768 .
15. நானோவெனில், நீதியில் நிலைத்து உம் திருமுகத்தைக் காணவே விரும்புகிறேன்: உமது பிரசன்னத்தால் நிறைவுறுவதொன்றையே நான் விழைகிறேன்.
15. As for me H589 , I will behold H2372 thy face H6440 in righteousness H6664 : I shall be satisfied H7646 , when I awake H6974 , with thy likeness H8544 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×