1. {பற்றுறுதியும் நம்பிக்கையும்BR(தாவீதின் கழுவாய்ப் பாடல்)} PS QSSS இறைவா, என்னைக் காத்தருளும்;SESS உம்மிடம் நான் அடைக்கலம்SESS புகுந்துள்ளேன்.SEQE
2. QSSS நான் ஆண்டவரிடம் ‛நீரே என் தலைவர்;SESS உம்மையன்றி வேறு செல்வம்SESS எனக்கு இல்லை’ என்று சொன்னேன்.SEQE
3. QSSS பூவுலகில் உள்ள தூயோர் BR எவ்வளவோ உயர்ந்தோர்!SESS அவர்களோடு இருப்பதே எனக்குப் பேரின்பம்.SEQE
4. QSSS வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றுவோர்SESS தங்கள் துன்பங்களைப்SESS பெருக்கிக்கொள்வர்;SESS அவற்றுக்குச் செலுத்தப்படும்SESS இரத்தப் பலிகளில்SESS நான் கலந்து கொள்ளேன்;SESS அவற்றின் பெயரைக்கூடSESS நாவினால் உச்சரியேன்.SEQE
5. QSSS ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து;SESS அவரே என் கிண்ணம்;SESS எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே;SEQE
6. QSSS இனிமையான நிலங்கள்SESS எனக்குப் பாகமாகக் கிடைத்தன;SESS உண்மையாகவே என் உரிமைச் சொத்துSESS வளமானதே.SEQE
7. QSSS எனக்கு அறிவுரை வழங்கும்SESS ஆண்டவரைப் போற்றுகின்றேன்;SESS இரவில்கூட என் மனச்சான்றுSESS என்னை எச்சரிக்கின்றது.SEQE
8. QSSS ஆண்டவரை எப்போதும்SESS என் கண்முன் வைத்துள்ளேன்;SESS அவர் என் வலப்பக்கம் உள்ளார்;SESS எனவே, நான் அசைவுறேன்.SEQE
9. QSSS என் இதயம் அக்களிக்கின்றது;SESS என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது;SESS என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும். * திப 2:25-28 SEQE
10. QSSS ஏனெனில், என்னைப்SESS பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்;SESS உம் அன்பனைப் படுகுழியைக்SESS காண விடமாட்டீர். * திப 2:25-28 SEQE
11. QSSS வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்;SESS உமது முன்னிலையில் எனக்குSESS நிறைவான மகிழ்ச்சி உண்டு;SESS உமது வலப்பக்கத்தில்SESS எப்போதும் பேரின்பம் உண்டு. * திப 2:25-28; திப 13:35.QE SEPE