1. {உதவிக்காக வேண்டல்BR(தாவீதின் மன்றாட்டு)} PS QSSS ஆண்டவரே! எனக்குச்SESS செவிசாய்த்துப் பதிலளியும்;SESS ஏனெனில், நான் எளியவன்; வறியவன்.SEQE
2. QSSS என் உயிரைக் காத்தருளும்;SESS ஏனெனில், நான் உம்மீது பற்றுடையவன்;SESS உம் ஊழியனைக் காத்தருளும்;SESS நீரே என் கடவுள்! நான் உம்மீதுSESS நம்பிக்கை கொண்டுள்ளேன்.SEQE
3. QSSS என் தலைவரே! என் மேல் இரக்கமாயிரும்;SESS ஏனெனில், நான் முழுவதும்SESS உம்மை நோக்கி மன்றாடுகிறேன்.SEQE
4. QSSS உம் அடியானின் மனத்தை மகிழச் செய்யும்;SESS என் தலைவரே! உம்மை நோக்கிSESS என் உள்ளத்தை உயர்த்துகின்றேன்.SEQE
5. QSSS ஏனெனில் என் தலைவரே!SESS நீர் நல்லவர்; மன்னிப்பவர்;SESS உம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும்SESS பேரன்பு காட்டுபவர்.SEQE
6. QSSS ஆண்டவரே, என் வேண்டுதலுக்குச்SESS செவிகொடும்;SESS உம் உதவியை நாடும்SESS என் குரலைக் கேட்டருளும்.SEQE
7. QSSS என் துன்ப நாளில்SESS உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்;SESS நீரும் எனக்குப் பதிலளிப்பீர்.SEQE
8. QSSS என் தலைவரே! தெய்வங்களுள்SESS உமக்கு நிகரானவர் எவருமில்லை.SESS உமது செயல்களுக்கு ஒப்பானவைSESS எவையுமில்லை.SEQE
9. QSSS என் தலைவரே! நீர் படைத்தSESS மக்களினத்தார் அனைவரும்SESS உம் திருமுன் வந்து உம்மைப் பணிவர்;SESS உமது பெயருக்கு மாட்சி அளிப்பர்.SEQE
10. QSSS ஏனெனில், நீர் மாட்சி மிக்கவர்;SESS வியத்தகு செயல்கள் புரிபவர்;SESS நீர் ஒருவரே கடவுள்! * திவெ 15:4.QE SEQE
11. QSSS ஆண்டவரே, உமது உண்மைக்கேற்பSESS நான் நடக்குமாறுSESS உமது வழியை எனக்குக் கற்பியும்,SESS உமது பெயருக்கு அஞ்சுமாறுSESS என் உள்ளத்தை ஒருமுகப்படுத்தும்.SEQE
12. QSSS என் தலைவரே! என் கடவுளே!SESS என் முழு இதயத்தோடுSESS உம்மைப் புகழ்வேன்;SESS என்றென்றும் உமது பெயருக்கு BR மாட்சி அளிப்பேன்.SEQE
13. QSSS ஏனெனில், நீர் என்மீது காட்டியSESS அன்பு பெரிது!SESS ஆழமிகு பாதாளத்தினின்றுSESS என்னுயிரை விடுவித்தீர்!SEQE
14. QSSS கடவுளே! செருக்குற்றோர்SESS எனக்கெதிராய் எழுந்துள்ளனர்;SESS கொடியோர் கூட்டம்SESS என் உயிரைப் பறிக்கப் பார்க்கின்றது;SESS அவர்களுக்கு உம்மைப்பற்றியSESS நினைவே இல்லை.SEQE
15. QSSS என் தலைவரே!SESS நீரோ இரக்கமிகு இறைவன்;SESS அருள் மிகுந்தவர்;SESS விரைவில் சினமுறாதவர்;SESS பேரன்பும் உண்மையும்SESS பெரிதும் கொண்டவர்.SEQE
16. QSSS என்னைக் கண்ணோக்கிSESS என்மீது இரங்கும்;SESS உம் அடியானுக்கு உம் ஆற்றலைத் தாரும்;SESS உம் அடியாளின் மகனைக் காப்பாற்றும்.SEQE
17. QSSS நன்மைத்தனத்தின் அடையாளம் ஒன்றைSESS எனக்கு அருளும்;SESS என் எதிரிகள் அதைக் கண்டு நாணுவர்;SESS ஏனெனில், ஆண்டவராகிய நீர்தாமேSESS எனக்குத் துணைசெய்துSESS ஆறுதல் அளித்துள்ளீர்.SEPE