1. {பொல்லாரின் தண்டிப்புக்காக வேண்டல்BR(பாடகர் தலைவர்க்கு: ‘அழிக்காதே’ என்ற மெட்டு; தாவீதின் கழுவாய்ப்பாடல்)} PS QSSS ஆட்சியாளரே! நீவிர் வழங்கும் தீர்ப்புSESS உண்மையில் நீதியானதா?SESS மாந்தர்க்கு நேர்மையுடன்SESS தீர்ப்பு வழங்குகின்றீரா?SEQE
2. QSSS இல்லை; அநீதியானவற்றைச் செய்வதற்கேSESS நீங்கள் திட்டமிடுகின்றீர்கள்;SESS நீங்கள் நாட்டில் நடக்கும் அநீதிக்குSESS உடந்தையாய் இருக்கின்றீர்கள். * 56 தலைப்பு: 1 சாமு ; 24:3.QE SEQE
3. QSSS பொல்லார் கருவிலிருந்தேSESS நெறிதவறிச் செல்கின்றனர்;SESS பிறப்பிலிருந்தே பொய் பேசித் திரிகின்றனர்.SEQE
4. QSSS அவர்களது நச்சுத்தன்மைSESS நாகத்தின் நஞ்சு போன்றது;SESS செவிட்டு விரியன் தன் காதைSESS அடைத்துக்கொள்வதுபோல, அவர்களும் தங்களைச்SESS செவிடாக்கிக் கொள்கின்றனர்.SEQE
5. QSSS பாம்பாட்டியின் மகுடியோசைSESS அவ்விரியனின் காதில் விழாது;SESS அவன் திறமையுடன் ஊதினாலும்SESS அதற்குக் கேளாது.SEQE
6. QSSS கடவுளே, அவர்கள் வாயின் பற்களைSESS நொறுக்கிவிடும்;SESS ஆண்டவரே, அந்த இளஞ்சிங்கங்களின்SESS கடைவாய்ப் பற்களை உடைத்துவிடும்.SEQE
7. QSSS காட்டாற்று நீர்போலSESS அவர்கள் மறைந்தொழியட்டும்;SESS அவர்கள் தம் வில்லை நாணேற்றியவுடன்SESS அம்புகள் முறிந்து போகட்டும்!SEQE
8. QSSS ஊர்ந்து ஊர்ந்து தேய்ந்து போகும்SESS நத்தைபோல் ஆகட்டும்;SESS பிறந்தும் கதிரொளி காணாதSESS பெண்வயிற்றுப் பிண்டம்போல் ஆகட்டும்.SEQE
9. QSSS முள் நெருப்பினால்SESS உங்கள் பானை சூடேறுமுன்னே,SESS பச்சையானதையும்SESS வெந்துகொண்டிருப்பதையும்SESS சுழற்காற்றினால் அவர்SESS அடித்துக்கொண்டு போவார்.SEQE
10. QSSS தீயோர் தண்டிக்கப்படுவதைSESS நேர்மையாளர் காணும்போது மகிழ்வர்;SESS அவர்கள் தம் பாதங்களைப்SESS பொல்லாரின் இரத்தத்தில் கழுவுவர்.SEQE
11. QSSS அப்போது மானிடர்,SESS ‘உண்மையிலேயே நேர்மையாளருக்குக்SESS கைம்மாறு உண்டு;SESS மெய்யாகவே பூவுலகில்SESS நீதியுடன் ஆளும் கடவுள் ஒருவர்SESS இருக்கின்றார்’ என்று சொல்வர்.SEPEQE