Bible Books

:

1. {அரசருக்காக மன்றாடல்BR(சாலமோனுக்கு உரியது)} PS QSSS கடவுளே, அரசருக்கு உமதுSESS நீதித்தீர்ப்பை வழங்கும்SESS ஆற்றலை அளியும்;SESS அரச மைந்தரிடம்SESS உமது நீதி விளங்கச் செய்யும்.SEQE
2. QSSS அவர் உம் மக்களைSESS நீதியோடு ஆள்வாராக!SESS உம்முடையவரான எளியோர்க்குSESS நீதித்தீர்ப்பு வழங்குவாராக!SEQE
3. QSSS மலைகள் மக்களுக்குச்SESS சமாதானத்தைக் கொடுக்கட்டும்;SESS குன்றுகள் நீதியை விளைவிக்கட்டும்.SEQE
4. QSSS எளியோரின் மக்களுக்குSESS அவர் நீதி வழங்குவாராக!SESS ஏழைகளின் பிள்ளைகளைக் காப்பாராக;SESS பிறரை ஒடுக்குவோரைSESS நொறுக்கி விடுவாராக!SEQE
5. QSSS கதிரவனும் நிலாவும் உள்ளவரையில்,SESS உம் மக்கள் தலைமுறை தலைமுறையாகSESS உமக்கு அஞ்சி நடப்பார்களாக.SEQE
6. QSSS அவர் புல்வெளியில் பெய்யும்SESS தூறலைப்போல் இருப்பாராக;SESS நிலத்தில் பொழியும் மழையைப் போல்SESS விளங்குவாராக.SEQE
7. QSSS அவர் காலத்தில்SESS நீதி தழைத்தோங்குவதாக;SESS நிலா உள்ள வரையில்SESS மிகுந்த சமாதானம் நிலவுவதாக.SEQE
8. QSSS ஒரு கடலிலிருந்துSESS அடுத்த கடல்வரைக்கும்SESS அவர் ஆட்சி செலுத்துவார்;SESS பேராற்றிலிருந்துSESS உலகின் எல்லை வரைக்கும்SESS அவர் அரசாள்வார்.SEQE
9. QSSS பாலைவெளி வாழ்வோர்SESS அவர்முன் குனிந்து வணங்குவர்;SESS அவர் எதிரிகள் மண்ணை நக்குவார்கள். * செக் 9:10.QE SEQE
10. QSSS தர்சீசு அரசர்களும்SESS தீவுகளின் அரசர்களும்SESS காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்;SESS சேபாவிலும் செபாவிலுமுள்ள அரசர்கள்SESS நன்கொடைகளைக் கொண்டுவருவார்கள்.SEQE
11. QSSS எல்லா அரசர்களும் அவர்முன்SESS தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள்;SESS எல்லா இனத்தவரும்SESS அவருக்கு ஊழியம் செய்வார்கள்.SEQE
12. QSSS தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும்SESS திக்கற்ற எளியோரையும்SESS அவர் விடுவிப்பார்.SEQE
13. QSSS வறியோர்க்கும் ஏழைகட்கும்SESS அவர் இரக்கம் காட்டுவார்;SESS ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார்.SEQE
14. QSSS அவர்கள் உயிரைக் கொடுமையினின்றும்SESS வன்முறையினின்றும் விடுவிப்பார்;SESS அவர்கள் இரத்தம் அவர் பார்வையில்SESS விலைமதிப்பற்றது.SEQE
15. QSSS அவர் நீடுழி வாழ்க! சேபாவின் பொன்SESS அவருக்குக் கொடுக்கப்படும்;SESS அவருக்காக இடையறாதுSESS வேண்டுதல் செய்யப்படுவதாக!SESS அவர்மீது ஆசிகள் வழங்கப்பெறுமாறுSESS நாள் முழுதும் மன்றாடப்படுவதாக!SEQE
16. QSSS நாட்டில் தானியம் மிகுந்திடுக!SESS மலைகளின் உச்சிகளில்SESS பயிர்கள் அசைந்தாடுக!SESS லெபனோனைப்போல்SESS அவை பயன் தருக!SESS வயல்வெளிப் புல்லெனSESS நகரின் மக்கள் பூத்துக் குலுங்குக!SEQE
17. QSSS அவர் பெயர்SESS என்றென்றும் நிலைத்திருப்பதாக!SESS கதிரவன் உள்ளவரையில்SESS அவர் பெயர் நிலைப்பதாக!SESS அவர்மூலம் மனிதர்SESS ஆசிபெற விழைவராக!SESS எல்லா நாட்டினரும் அவரைSESS நற்பேறு பெற்றவரென வாழ்த்துவராக!SEQE
18. QSSS ஆண்டவராகிய கடவுள்,SESS இஸ்ரயேலின் கடவுள் போற்றி! போற்றி!SESS அவர் ஒருவரேSESS வியத்தகு செயல்களைப் புரிகின்றார்!SEQE
19. QSSS மாட்சி பொருந்திய அவரது பெயர்SESS என்றென்றும் புகழப்பெறுவதாக!SESS அவரது மாட்சிSESS உலகெல்லாம் நிறைந்திருப்பதாக!SESS ஆமென், ஆமென்.SEQE
20. QSSS (ஈசாயின் மகனாகிய தாவீதின்SESS மன்றாட்டுகள் நிறைவுற்றன.)SEPE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×