1. {நீதியின் கடவுளுக்கு நன்றி செலுத்துதல்BR(பாடகர் தலைவர்க்கு: ‛மகனுக்காக உயிரைக்கொடு’ என்ற மெட்டு; தாவீதின் புகழ்ப்பா)} PS QSSS ஆண்டவரே, என் முழு இதயத்தாலும்SESS உம்மைப் புகழ்வேன்; வியத்தகு உம்SESS செயல்களையெல்லாம் எடுத்துரைப்பேன்.SEQE
2. QSSS உம்மை முன்னிட்டு மகிழ்ந்து களிகூர்வேன்;SESS உன்னதரே, உமது பெயரைப்SESS போற்றிப் பாடுவேன்.SEQE
3. QSSS என் எதிரிகள் பின்னிட்டுத் திரும்புவார்கள்;SESS உமது முன்னிலையில்SESS இடறிவிழுந்து அழிவார்கள். * மத் 21:16 SEQE
4. QSSS நீர் நீதியுள்ள நடுவராய்SESS அரியணையில் வீற்றிருக்கின்றீர்;SESS என் வழக்கில் எனக்கு நீதி வழங்கினீர்.SEQE
5. QSSS வேற்றினத்தாரைக் கண்டித்தீர்;SESS பொல்லாரை அழித்தீர்;SESS அவர்களது பெயர் இனி இராதபடிSESS அடியோடு ஒழித்துவிட்டீர். * யோபு 7:17-18; திபா 144:3; எபி 2:6-8 SEQE
6. QSSS எதிரிகள் ஒழிந்தார்கள்; என்றும்SESS தலையெடுக்கமுடியாமல் அழிந்தார்கள்.SEQE
7. QSSS அவர்களின் நகர்களைSESS நீர் தரைமட்டம் ஆக்கினீர்;SESS அவர்களைப் பற்றிய நினைவுSESS அற்றுப் போயிற்று.SESS ஆண்டவர் அரியணையில்SESS என்றென்றும் வீற்றிருக்கின்றார்;SESS நீதி வழங்குவதற்கென்றுSESS அவர் தம் அரியணையைSESS அமைத்திருக்கின்றார். * 1 கொரி 15:27; எபே 1:22; எபி 2:8 SEQE
8. QSSS உலகிற்கு அவர்SESS நீதியான தீர்ப்பு வழங்குவார்;SESS மக்களினத்தார்க்குSESS நேர்மையான தீர்ப்புக் கூறுவார்.SEQE
9. QSSS ஒடுக்கப்படுவோருக்குSESS ஆண்டவரே அடைக்கலம்;SESS நெருக்கடியான வேளைகளில்SESS புகலிடம் அவரே.SEQE
10. QSSS உமது பெயரை அறிந்தோர்SESS உம்மில் நம்பிக்கை கொள்வர்;SESS ஆண்டவரே, உம்மை நாடி வருவோரைSESS நீர் கைவிடுவதில்லை.SEQE
11. QSSS சீயோனில் தங்கியிருக்கும்SESS ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்;SESS அவருடைய செயல்களைSESS மக்களினத்தாரிடையே அறிவியுங்கள்;SEQE
12. QSSS ஏனெனில், இரத்தப்பழி வாங்கும் அவர்SESS எளியோரை நினைவில் கொள்கின்றார்;SESS அவர்களின் கதறலைSESS அவர் கேட்க மறவார்.SEQE
13. QSSS ஆண்டவரே, என்மீது இரக்கமாயிரும்;SESS என்னைப் பகைப்போரால்SESS எனக்கு வரும் துன்பத்தைப் பாரும்;SESS சாவின் வாயினின்று என்னை விடுவியும்.SEQE
14. QSSS அப்பொழுது, மகள் சீயோனின் வாயில்களில்SESS உம் புகழ் அனைத்தையும் பாடுவேன்;SESS நீர் அளிக்கும் விடுதலைகுறித்துSESS அகமகிழ்வேன்.SEQE
15. QSSS வேற்றினத்தார் வெட்டின குழியில்SESS அவர்களே விழுந்தனர்;SESS அவர்கள் மறைத்து வைத்திருந்த வலையில்SESS அவர்கள் கால்களே சிக்கிக்கொண்டன.SEQE
16. QSSS ஆண்டவர் நீதியை நிலைநாட்டுவதன் மூலம்SESS தம்மை வெளிப்படுத்தியுள்ளார்;SESS பொல்லார் செய்த செயலில்SESS அவர்களே சிக்கிக்கொண்டனர். (இடை இசை: சேலா)SEQE
17. QSSS பொல்லார் பாதாளத்திற்கே செல்வர்;SESS கடவுளை மறந்திருக்கும்SESS வேற்றினத்தார் யாவரும் அங்கே செல்வர்.SEQE
18. QSSS மாறாக, வறியவர் என்றுமேSESS மறக்கப்படுவதில்லை;SESS எளியோரின் நம்பிக்கைSESS ஒருபோதும் வீண்போகாது.SEQE
19. QSSS ஆண்டவரே, எழுந்தருளும்;SESS மனிதரின் கை ஓங்க விடாதேயும்;SESS வேற்றினத்தார் உமது முன்னிலையில்SESS தீர்ப்புப் பெறுவார்களாக!SEQE
20. QSSS ஆண்டவரே, அவர்களைத்SESS திகிலடையச் செய்யும்;SESS தாம் வெறும் மனிதரே என்பதைSESS வேற்றினத்தார் உணர்வார்களாக! (சேலா)SEPEQE