1. {நோயுற்றவரின் மன்றாட்டுBR(பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா)} PS QSSS எளியோரின் நலனில் அக்கறைSESS கொள்பவர் பேறுபெற்றவர்;SESS துன்ப நாளில் ஆண்டவர்SESS அவரை விடுவிப்பார்.SEQE
2. QSSS ஆண்டவர் அவரைப் பாதுகாப்பார்;SESS நெடுங்காலம் வாழவைப்பார்;SESS நாட்டில் பேறுபெற்றவராய்SESS விளங்கச் செய்வார்;SESS எதிரிகளின் விருப்பத்திற்குSESS அவரைக் கையளிக்க மாட்டார்.SEQE
3. QSSS படுக்கையில் அவர் நோயுற்றுக் கிடக்கையில்SESS ஆண்டவர் அவருக்குத் துணை செய்வார்;SESS நோய் நீங்கிப் படுக்கையினின்றுSESS அவர் எழும்பும்படிச் செய்வார்.SEQE
4. QSSS ‛ஆண்டவரே, எனக்கு இரங்கும்;SESS என்னைக் குணப்படுத்தும்;SESS உமக்கு எதிராகப் பாவம் செய்தேன்’SESS என்று மன்றாடினேன்.SEQE
5. QSSS என் எதிரிகள் என்னைப்பற்றித் தீயது பேசி,SESS ‛அவன் எப்போது சாவான்?SESS அவன் பெயர் எப்போது ஒழியும்?’SESS என்கின்றனர்.SEQE
6. QSSS ஒருவன் என்னைப் பார்க்க வந்தால்,SESS நயவஞ்சகமாகப் பேசுகின்றான்;SESS என்னைப் பற்றிய தவறான செய்திகளைச்SESS சேகரித்துக்கொண்டு,SESS வெளியே போய் அவற்றைப் பரப்புகின்றான்.SEQE
7. QSSS என்னை வெறுப்போர் அனைவரும்SESS ஒன்றுகூடி எனக்கு எதிராய்க்SESS காதோடு காதாய்ப் பேசுகின்றனர்.SESS எனக்குத் தீங்கிழைக்கத்SESS திட்டமிடுகின்றனர்.SEQE
8. QSSS ‛தீயது ஒன்று அவனைSESS உறுதியாய்ப் பற்றிக்கொண்டது;SESS படுக்கையில் கிடக்கின்ற அவன்SESS இனி எழவே மாட்டான்’ என்றுSESS சொல்கின்றனர்.SEQE
9. QSSS என் உற்ற நண்பன்,SESS நான் பெரிதும் நம்பினவன்,SESS என் உணவை உண்டவன்,SESS எனக்கு இரண்டகமாகத்SESS தம் குதிகாலைத் தூக்குகின்றான்.SEQE
10. QSSS ஆண்டவரே! என் மீது இரங்கி,SESS நான் அவர்களுக்குப்SESS பதிலடி கொடுக்கும்படி தூக்கிவிடும். * மத் 26:23; மாற் 14:18; லூக் 22:21; யோவா 13:18 SEQE
11. QSSS என் எதிரி என்னை வென்றுSESS ஆர்ப்பரிக்கப் போவதில்லை;SESS இதனால், நீர் என்னில் மகிழ்வுறுகின்றீர்SESS என்பதை அறிந்து கொள்கின்றேன்.SEQE
12. QSSS நானோ நேர்மையில்SESS உறுதியாய் இருக்கின்றேன்;SESS நீர் எனக்கு ஆதரவளிக்கின்றீர்;SESS உமது முன்னிலையில் என்னைSESS என்றும் நிலைநிற்கச் செய்கின்றீர்.SEQE
13. QSSS இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர்SESS புகழப் பெறுவாராக!SESS ஊழி ஊழியாய்ப் புகழப் பெறுவாராக!SESS ஆமென்! ஆமென்!SEPE