1. {உதவிக்காக வேண்டல்BR(பாடகர் தலைவர்க்கு: ‘லீலிமலர்’ என்ற மெட்டு; தாவீதுக்கு உரியது)} PS QSSS கடவுளே! என்னைக் காப்பாற்றும்;SESS வெள்ளம் கழுத்தளவுSESS வந்துவிட்டது.SEQE
2. QSSS ஆழமிகு நீர்த்திரளுள்SESS அமிழ்ந்திருக்கின்றேன்;SESS நிற்க இடமில்லை;SESS நிலைக்கொள்ளாத நீருக்குள்SESS ஆழ்ந்திருக்கின்றேன்;SESS வெள்ளம் என்மீதுSESS புரண்டோடுகின்றது.SEQE
3. QSSS கத்திக் கத்திக் களைத்துப்போனேன்;SESS தொண்டையும் வறண்டுபோயிற்று;SESS என் கடவுளாம் உமக்காகக் காத்திருந்துSESS என் கண்கள் பூத்துப்போயின;SEQE
4. QSSS காரணமில்லாமல் என்னை வெறுப்போர்SESS என் தலைமுடியைவிடSESS மிகுதியாய் இருக்கின்றனர்;SESS பொய்க்குற்றம் சாட்டிSESS என்னைத் தாக்குவோர் பெருகிவிட்டனர்.SESS நான் திருடாததைSESS எப்படித் திருப்பித் தரமுடியும்?SEQE
5. QSSS கடவுளே! என் மதிகேடு உமக்குத் தெரியும்;SESS என் குற்றங்கள் உமக்குSESS மறைவானவை அல்ல. * திபா 35:19; யோவா 15:25 SEQE
6. QSSS ஆண்டவரே! படைகளின் தலைவரே!SESS உமக்காகக் காத்திருப்போர்SESS என்னால் வெட்கமுறாதபடி செய்யும்;SESS இஸ்ரயேலின் கடவுளே!SESS உம்மை நாடித் தேடுகிறவர்கள்SESS என்பொருட்டு BR மானக்கேடு அடையாதபடி செய்யும்.SEQE
7. QSSS ஏனெனில், உம் பொருட்டேSESS நான் இழிவை ஏற்றேன்;SESS வெட்கக்கேடு என் முகத்தை மூடிவிட்டது.SEQE
8. QSSS என் சகோதரருக்குSESS வேற்று மனிதனானேன்;SESS என் தாயின் பிள்ளைகளுக்குSESS அயலான் ஆனேன்.SEQE
9. QSSS உமது இல்லத்தின்மீதுSESS எனக்குண்டான ஆர்வம்SESS என்னை எரித்துவிட்டது;SESS உம்மைப் பழித்துப் பேசினவர்களின்SESS பழிச்சொற்கள் என்மீது விழுந்தன.SEQE
10. QSSS நோன்பிருந்து நான்SESS நெக்குருகி அழுதேன்;SESS அதுவே எனக்கு இழிவாய் மாறிற்று. * யோவா 2:17; உரோ 15:3 SEQE
11. QSSS சாக்குத் துணியைSESS என் உடையாகக் கொண்டேன்;SESS ஆயினும், அவர்களதுSESS பழிச்சொல்லுக்கு உள்ளானேன்.SEQE
12. QSSS நகர வாயிலில் அமர்வோர்SESS என்னைப் பற்றிப் புறணி பேசுகின்றனர்;SESS குடிகாரர் என்னைப்பற்றிப்SESS பாட்டுக் கட்டுகின்றனர்.SEQE
13. QSSS ஆண்டவரே! நான் தக்க காலத்தில்SESS உம்மை நோக்கிSESS விண்ணப்பம் செய்கின்றேன்;SESS கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால்SESS எனக்குப் பதில்மொழி தாரும்;SESS துணை செய்வதில் நீர் மாறாதவர்.SEQE
14. QSSS சேற்றில் நான் அமிழ்வதிலிருந்துSESS என்னைக் காத்தருளும்;SESS என்னை வெறுப்போரிடமிருந்தும்SESS ஆழ்கடலிலிருந்தும்SESS என்னை விடுவித்தருளும்.SEQE
15. QSSS பெருவெள்ளம் என்னைSESS அடித்துக்கொண்டு போகாதிருப்பதாக!SESS ஆழ்கடல் என்னை விழுங்காதிருப்பதாக!SESS படுகுழி தன்வாய் திறந்துSESS என்னை மூடிக் கொள்ளாதிருப்பதாக!SEQE
16. QSSS ஆண்டவரே! எனக்குப் பதில்மொழி தாரும்;SESS உம் பேரன்பு நன்மை மிக்கது;SESS உமது பேரிரக்கத்தை முன்னிட்டுSESS என்னை நோக்கித் திரும்பும்.SEQE
17. QSSS உமது முகத்தைSESS அடியேனுக்கு மறைக்காதேயும்;SESS நான் நெருக்கடியானSESS நிலையிலிருக்கிறேன்;SESS என் மன்றாட்டுக்குSESS விரைவில் பதில்மொழி தாரும்.SEQE
18. QSSS என்னை நெருங்கி,SESS என்னை விடுவித்தருளும்;SESS என் எதிரிகளிடமிருந்துSESS என்னை மீட்டருளும்.SEQE
19. QSSS என் இழிவும், வெட்கக்கேடும்,SESS மானக்கேடும் உமக்குத் தெரியும்;SESS என் பகைவர் அனைவரும்SESS உம் முன்னிலையில் இருக்கின்றனர்.SEQE
20. QSSS பழிச்சொல் என் இதயத்தைப்SESS பிளந்து விட்டது;SESS நான் மிகவும் வருந்துகிறேன்;SESS ஆறுதல் அளிப்பாருக்காகக்SESS காத்திருந்தேன்;SESS யாரும் வரவில்லை;SESS தேற்றிடுவோருக்காகக் தேடிநின்றேன்;SESS யாரையும் காணவில்லை.SEQE
21. QSSS அவர்கள் என் உணவில்SESS நஞ்சைக் கலந்து கொடுத்தார்கள்;SESS என் தாகத்துக்குக் காடியைக்SESS குடிக்கக் கொடுத்தார்கள்.SEQE
22. QSSS அவர்களுடைய விருந்துகளேSESS அவர்களுக்குக் கண்ணியாகட்டும்!SESS அவர்களுடைய படையல் விருந்துகளேSESS அவர்களுக்குப் பொறியாகட்டும்! * மத் 27:48; மாற் 15:36; லூக் 23:36; யோவா 19:28-29 SEQE
23. QSSS அவர்களின் கண்கள் காணாதவாறுSESS ஒளியிழக்கட்டும்!SESS அவர்களின் இடைகள்SESS இடையறாது தள்ளாடட்டும்! * உரோ 11:9-10 SEQE
24. QSSS உமது கடுஞ்சினத்தைSESS அவர்கள்மேல் கொட்டியருளும்;SESS உமது சினத்தீSESS அவர்களை மடக்கிப் பிடிப்பதாக! * உரோ 11:9-10 SEQE
25. QSSS அவர்களின் பாசறை பாழாவதாக!SESS அவர்களின் கூடாரங்களில்SESS ஒருவனும் குடிபுகாதிருப்பானாக!SEQE
26. QSSS நீர் அடித்தவர்களை அவர்கள் இன்னும்SESS கொடுமைப்படுத்துகின்றார்கள்;SESS நீர் காயப்படுத்தினவர்களின்SESS நோவைப் பற்றித்SESS தூற்றித் திரிகின்றார்கள். * திப 1:20 SEQE
27. QSSS அவர்கள்மீதுSESS குற்றத்தின்மேல் குற்றம் சுமத்தும்!SESS உமது நீதித் தீர்ப்பினின்றுSESS அவர்களைத் தப்ப விடாதேயும்!SEQE
28. QSSS மெய்வாழ்வுக்குரியோரின்SESS அட்டவணையிலிருந்துSESS அவர்களுடைய பெயர்களை நீக்கிவிடும்!SESS அவற்றை நேர்மையாளரின்SESS பெயர்களோடு சேர்க்காதேயும்!SEQE
29. QSSS எளியேன் சிறுமைப்பட்டவன்;SESS காயமுற்றவன்;SESS கடவுளே! நீர் அருளும் மீட்புSESS எனக்குப் பாதுகாப்பாய் இருப்பதாக! * விப 32:32; திவெ 3:5; 13:8; 17:8.QE SEQE
30. QSSS கடவுளின் பெயரைSESS நான் பாடிப் புகழ்வேன்;SESS அவருக்கு நன்றி செலுத்தி,SESS அவரை மாட்சிமைப்படுத்துவேன்;SEQE
31. QSSS காளையை விடSESS இதுவே ஆண்டவருக்கு உகந்தது;SESS கொம்பும் விரிகுளம்பும்SESS உள்ள எருதைவிடSESS இதுவே அவருக்கு உகந்தது.SEQE
32. QSSS எளியோர் இதைக் கண்டுSESS மகிழ்ச்சி அடைவார்கள்;SESS கடவுளை நாடித் தேடுகிறவர்களே,SESS உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக.SEQE
33. QSSS ஆண்டவர்SESS ஏழைகளின் விண்ணப்பத்திற்குச்SESS செவிசாய்க்கின்றார்;SESS சிறைப்பட்ட தம் மக்களைSESS அவர் புறக்கணிப்பதில்லை.SEQE
34. QSSS வானமும் வையமும் கடல்களும்SESS அவற்றில் வாழும் யாவும்SESS அவரைப் புகழட்டும்.SEQE
35. QSSS கடவுள் சீயோனுக்கு மீட்பளிப்பார்;SESS யூதாவின் நகரங்களைக்SESS கட்டி எழுப்புவார்;SESS அப்பொழுது அவர்களுடைய மக்கள்SESS அங்கே குடியிருப்பார்கள்;SESS நாட்டைத் தங்களுக்குச்SESS சொந்தமாக்கிக் கொள்வார்கள்.SEQE
36. QSSS ஆண்டவருடைய அடியாரின் மரபினர்SESS அதைத் தம்SESS உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்;SESS அவரது பெயர்மீது அன்பு கூர்வோர்SESS அதில் குடியிருப்பர்.SEPE