1. {அரசரின் வெற்றிக்காக இறைவனுக்கு நன்றி செலுத்துதல்BR(பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா)} PS QSSS ஆண்டவரே, உமது வல்லமையில்SESS அரசர் பூரிப்படைகின்றார்;SESS நீர் அளித்த வெற்றியில் BR எத்துணையோ அவர் அக்களிக்கின்றார்!SEQE
2. QSSS அவர் உள்ளம் விரும்பியதைSESS நீர் அவருக்குத் தந்தருளினீர்;SESS அவர் வாய்விட்டுக் கேட்டதைSESS நீர் மறுக்கவில்லை. (சேலா)SEQE
3. QSSS உண்மையில் நலமிகு கொடைகள் ஏந்திSESS நீர் அவரை எதிர்கொண்டீர்; BR அவர் தலையில்SESS பசும்பொன்முடி சூட்டினீர்.SEQE
4. QSSS அவர் உம்மிடம் வாழ்வு வேண்டி நின்றார்;SESS நீரும் முடிவில்லா நீண்ட ஆயுளை BR அவருக்கு அளித்தீர்.SEQE
5. QSSS நீர் அவருக்கு வெற்றியளித்ததால்SESS அவரது மாட்சிமை பெரிதாயிற்று;SESS மேன்மையையும் மாண்பையும்SESS அவருக்கு அருளினீர், * உரோ 10:18.QE SEQE
6. QSSS உண்மையாகவே,SESS எந்நாளும் நிலைத்திருக்கும்SESS ஆசிகளை அவர் பெற்றுள்ளார்;SESS உமது முகத்தை அவர் மகிழ்ச்சியுடன்SESS கண்டு களிக்கச் செய்தீர்.SEQE
7. QSSS ஏனெனில், அரசர் ஆண்டவரில்SESS நம்பிக்கை வைக்கின்றார்;SESS உன்னதரின் பேரன்பினால்SESS அவர் அசைவுறாதிருப்பார்.SEQE
8. QSSS உமது கை உம் எதிரிகளையெல்லாம்SESS தேடிப்பிடிக்கும்; உமது வலக்கைSESS உம்மை வெறுப்போரை எட்டிப்பிடிக்கும்.SEQE
9. QSSS நீர் காட்சியளிக்கும்பொழுது,SESS அவர்களை நெருப்புச்சூளை ஆக்குவீர்;SESS ஆண்டவர் சினங்கொண்டுSESS அவர்களை அழிப்பார்;SESS நெருப்பு அவர்களை விழுங்கிவிடும்.SEQE
10. QSSS அவர்கள் தலைமுறையைப்SESS பூவுலகினின்று ஒழித்துவிடுவீர்;SESS அவர்கள் வழிமரபைSESS மனு மக்களிடமிருந்து எடுத்து விடுவீர்.SEQE
11. QSSS உமக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்தாலும்,SESS சதித்திட்டம் தீட்டினாலும்,SESS அவர்களால் வெற்றி பெற இயலாது.SEQE
12. QSSS நீரோ அம்புகளை நாணேற்றிSESS அவர்களது முகத்தில் எய்வீர்;SESS அவர்களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்வீர்.SEQE
13. QSSS ஆண்டவரே, உமது வலிமையோடுSESS எழுந்து வாரும்;SESS நாங்கள் உமது வல்லமையைப்SESS புகழ்ந்து பாடுவோம்.SEPEQE