Bible Versions
Bible Books

Zechariah 9:1 (IRVTA) Indian Revised Version - Tamil

1 {இஸ்ரவேல் தனது எதிரிகளிடமிருந்து பாதுகாக்கப்படுதல்} PS ஆதிராக் தேசத்திற்கு விரோதமானதும், தமஸ்குவின்மேல் வந்து தங்குவதுமான யெகோவாவுடைய வார்த்தையாகிய செய்தி; மனிதர்களின் கண்களும் இஸ்ரவேலுடைய சகல கோத்திரங்களின் கண்களும் யெகோவாவை பார்த்துக்கொண்டிருக்கும்.
2 ஆமாத்தும், மிகவும் ஞானமுள்ள தீருவும், சீதோனும் அதின் எல்லைக்குள்ளாக இருக்கும்.
3 தீரு தனக்கு மதிலைக் கட்டி, தூளைப்போல் வெள்ளியையும், வீதிகளின் சேற்றைப்போல் பசும்பொன்னையும் சேர்த்துவைத்தது.
4 இதோ, ஆண்டவர் அதைத் தள்ளிவிட்டு, சமுத்திரத்தில் அதின் பலத்தை முறித்துப்போடுவார்; அது நெருப்பிற்கு இரையாகும்.
5 அஸ்கலோன் அதைக் கண்டு பயப்படும், காசாவும் அதைக் கண்டு மிகவும் துக்கிக்கும், எக்ரோனும் தன் நம்பிக்கை அற்றுப்போனபடியால் மிகவும் புலம்பும்; காத்சாவில் ராஜா அழிந்துபோவான்; அஸ்கலோன் குடியற்று இருக்கும்.
6 அஸ்தோத்தில் வேசிப்பிள்ளைகள் தங்கியிருப்பார்கள்; நான் பெலிஸ்தரின் கர்வத்தை அழிப்பேன்.
7 அவனுடைய இரத்தத்தை அவன் வாயிலிருந்தும், அவனுடைய அருவருப்புகளை அவன் பற்களின் நடுவிலிருந்தும் நீக்கிப்போடுவேன்; அவனோ நம்முடைய தேவனுக்கென்று மீதியாக வைக்கப்பட்டு, யூதாவிலே பிரபுவைப்போல இருப்பான்; எக்ரோன் எபூசியனைப்போல இருப்பான்.
8 சேனையானது புறப்படும்போதும், திரும்பி வரும்போதும், என் ஆலயம் காக்கப்படுவதற்காக அதைச் சுற்றிலும் முகாமிடுவேன்; இனி ஒடுக்குகிறவன் அவர்களிடத்தில் கடந்துவருவதில்லை; அதை என் கண்களினாலே பார்த்துக்கொண்டிருக்கிறேன். PS
9 {வரப்போகும் இராஜா} PS மகளாகிய சீயோனே, மிகவும் மகிழ்ச்சியாயிரு; மகளாகிய எருசலேமே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் பெண் கழுதைக்குட்டியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார்.
10 எப்பிராயீமிலிருந்து இரதங்களையும், எருசலேமிலிருந்து குதிரைகளையும் அற்றுப்போகச்செய்வேன், யுத்தவில்லும் இல்லாமற்போகும்; அவர் மக்களுக்குச் சமாதானம் கூறுவார்; அவருடைய ஆளுகை ஒரு சமுத்திரம் துவங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதிதுவங்கி பூமியின் எல்லைகள்வரைக்கும் செல்லும்.
11 உனக்கு நான் செய்வது என்னவென்றால், தண்ணீரில்லாத குழியிலே அடைபட்டிருக்கிற உன்னுடையவர்களை நான் உன் உடன்படிக்கையின் இரத்தத்தினாலே விடுதலைசெய்வேன்.
12 நம்பிக்கையுடைய சிறைகளே, பாதுகாப்பிற்குள் திரும்புங்கள்; இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன்.
13 நான் எனக்கென்று யூதாவை நாணேற்றி, எப்பிராயீமிலே வில்லை நிரப்பி, சீயோனே, உன் மக்களைக் கிரேக்க தேசமக்களுக்கு விரோதமாக எழுப்பி, உன்னைப் பராக்கிரமசாலியின் பட்டயத்திற்கு ஒப்பாக்குவேன்.
14 அவர்கள் பக்கம் யெகோவா காணப்படுவார்; அவருடைய அம்பு மின்னலைப்போலப் புறப்படும்; யெகோவாகிய ஆண்டவர் எக்காளம் ஊதி, தென்திசைச் சுழல்காற்றுகளோடே நடந்துவருவார்.
15 சேனைகளின் யெகோவா அவர்களைக் காப்பாற்றுவார்; அவர்கள் அழித்து, கவண்கற்களால் கீழ்ப்படுத்திக்கொள்வார்கள்; அவர்கள் மதுமயக்கத்தினால் ஆரவாரம் செய்வார்கள்; பானபாத்திரங்கள்போலவும், பலிபீடத்தின் கோடிகளைப்போலவும் நிறைந்திருப்பார்கள்.
16 அந்நாளில் அவர்களுடைய தேவனாகிய யெகோவா தம்முடைய ஜனமான மந்தையாகிய அவர்களை இரட்சிப்பார்; அவர்கள் அவருடைய தேசத்தில் ஏற்றப்பட்ட கொடிகளின் கிரீடத்தில் பதிந்திருப்பார்கள்.
17 அவருடைய காருண்யம் எத்தனை பெரியது? அவருடைய சௌந்தரியம் எத்தனை பெரியது? தானியம் வாலிபர்களையும், புது திராட்சைரசம் இளம்பெண்களையும் வளர்க்கும். PE
1 The burden H4853 of the word H1697 NMS of the LORD H3068 EDS in the land H776 B-GFS of Hadrach H2317 , and Damascus H1834 shall be the rest H4496 thereof : when H3588 CONJ the eyes H5869 CMS of man H120 NMS , as of all H3605 W-CMS the tribes H7626 of Israel H3478 LMS , shall be toward the LORD H3068 L-EDS .
2 And Hamath H2574 also H1571 W-CONJ shall border H1379 thereby ; Tyrus H6865 , and Zidon H6721 , though H3588 CONJ it be very H3966 ADV wise H2449 .
3 And Tyrus H6865 did build H1129 herself a stronghold H4692 , and heaped up H6651 silver H3701 NMS as the dust H6083 , and fine gold H2742 as the mire H2916 of the streets H2351 CFP .
4 Behold H2009 IJEC , the Lord H136 EDS will cast her out H3423 , and he will smite H5221 her power H2428 in the sea H3220 ; and she H1931 shall be devoured H398 with fire H784 .
5 Ashkelon H831 shall see H7200 it , and fear H3372 ; Gaza H5804 also shall see it , and be very sorrowful H3966 ADV , and Ekron H6138 ; for H3588 CONJ her expectation H4007 shall be ashamed H954 ; and the king H4428 NMS shall perish H6 from Gaza H5804 , and Ashkelon H831 shall not H3808 NADV be inhabited H3427 .
6 And a bastard H4464 shall dwell H3427 in Ashdod H795 , and I will cut off H3772 the pride H1347 CMS of the Philistines H6430 .
7 And I will take away H5493 his blood H1818 out of his mouth H6310 M-CMS-3MS , and his abominations H8251 from between H996 his teeth H8127 CMD-3MS : but he that remaineth H7604 , even H1571 CONJ he H1931 PPRO-3MS , shall be for our God H430 , and he shall be H1961 W-VQQ3MS as a governor H441 in Judah H3063 , and Ekron H6138 as a Jebusite H2983 .
8 And I will encamp H2583 about mine house H1004 because of the army H4675 , because of him that passeth by , and because of him that returneth H7725 : and no H3808 W-NPAR oppressor H5065 shall pass H5674 through H5921 PREP-3MP them any more H5750 ADV : for H3588 CONJ now H6258 ADV have I seen H7200 VQQ1MS with mine eyes H5869 .
9 Rejoice H1523 greatly H3966 ADV , O daughter H1323 CFS of Zion H6726 ; shout H7321 , O daughter H1323 CFS of Jerusalem H3389 : behold H2009 IJEC , thy King H4428 cometh H935 VQY3MS unto thee : he H1931 PPRO-3MS is just H6662 AMS , and having salvation H3467 ; lowly H6041 AMS , and riding H7392 upon H5921 PREP an ass H2543 CMS , and upon H5921 PREP a colt H5895 the foal H1121 of an ass H860 .
10 And I will cut off H3772 the chariot H7393 from Ephraim H669 , and the horse H5483 from Jerusalem H3389 , and the battle H4421 NFS bow H7198 CFS shall be cut off H3772 : and he shall speak H1696 peace H7965 NMS unto the heathen H1471 LD-NMP : and his dominion H4915 shall be from sea H3220 M-NMS even to H5704 PREP sea H3220 NMS , and from the river H5104 even to H5704 PREP the ends H657 of the earth H776 GFS .
11 As for thee H859 also H1571 CONJ , by the blood H1818 of thy covenant H1285 I have sent forth H7971 thy prisoners H615 out of the pit H953 wherein is no H369 NPAR water H4325 OMD .
12 Turn H7725 you to the stronghold H1225 , ye prisoners H615 of hope H8615 : even H1571 CONJ today H3117 D-AMS do I declare H5046 VHPMS that I will render H7725 double H4932 unto thee ;
13 When H3588 CONJ I have bent H1869 Judah H3063 for me , filled H4390 the bow H7198 CFS with Ephraim H669 , and raised H5782 up thy sons H1121 , O Zion H6726 , against H5921 PREP thy sons H1121 , O Greece H3120 EMS , and made H7760 thee as the sword H2719 of a mighty man H1368 .
14 And the LORD H3068 W-EDS shall be seen H7200 over H5921 PREP-3MP them , and his arrow H2671 shall go forth H3318 as the lightning H1300 : and the Lord H136 GOD H3069 shall blow H8628 the trumpet H7782 , and shall go H1980 with whirlwinds H5591 of the south H8486 .
15 The LORD H3068 EDS of hosts H6635 shall defend H1598 them ; and they shall devour H398 , and subdue H3533 with slingstones H7050 ; and they shall drink H8354 , and make a noise H1993 as through H3644 PREP wine H3196 ; and they shall be filled H4390 like bowls H4219 , and as the corners H2106 of the altar H4196 .
16 And the LORD H3068 EDS their God H430 shall save H3467 them in that H1931 D-PPRO-3MS day H3117 B-AMS as the flock H6629 of his people H5971 : for H3588 CONJ they shall be as the stones H68 CMP of a crown H5145 , lifted up as an ensign H5264 upon H5921 PREP his land H127 .
17 For H3588 CONJ how H4100 IPRO great is his goodness H2898 , and how H4100 IPRO great is his beauty H3308 ! corn H1715 shall make the young men H970 cheerful H5107 , and new wine H8492 the maids H1330 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×